Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 4 Post By jayakalaiselvi
  • 1 Post By RathideviDeva
  • 1 Post By jayakalaiselvi
  • 1 Post By jv_66
  • 1 Post By deepikarani

How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எப&#


Discussions on "How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எப&#" in "Parenting" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எப&#

    பெற்றோர்களின் பங்கு:

    குழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதை எப்போதும் செயல்படுத்த முடியவில்லை என்பதும் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அவர்கள், சுய பாதுகாப்பு நடத்தையை வளர்த்துக் கொள்ளத் தேவையான தகவல்களையும் திறன்களையும் நீங்கள் அவர்களுக்கு வழங்கமுடியும்.

    உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்குத் தேவையான மிக முக்கியக் காரணியானது, ஒரு வலிமையான தன்னைத் தானே உயர்வாக மதிக்கும் குணம் ஆகும். இதை நீங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் உங்களோடு பேச விரும்பும்போது அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். சிக்கலான, மற்றும் கடினமான கேள்விகளை அவர்கள் கேட்கும்போது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதில் கூறுங்கள். எப்போதும் உங்கள் குழந்தை சொல்வதையே நம்புங்கள் - அது நம்பமுடியாததாகவும் நம்புவதற்குக் கடினமாகவும் இருந்தாலும் கூட.

    குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி உங்கள் குழந்தையோடு பேசுவது என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதைவிட மிகவும் மோசமானவை. அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம். யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவிக்கலாம்.

    குழந்தையிடம் குழந்தை பாலியல் கொடுமை பற்றி உண்மையில் பேசுவது கடினம். எனவே அதைப் பற்றி உங்கள் குழந்தையிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்பது ஒரு சிக்கலான செயலாக இருக்கலாம்.

    அதற்கு இதோ, சில ஆலோசனைகள் :

    ஆண்-பெண் பாலியல் உறவு என்பது ஒரு இயல்பான விஷயம் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொண்டு, உங்களிடம் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துங்கள். குழந்தையிடம் பேச ஆரம்பிக்கும் முன்னர் தகவல்களை நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

    பொதுவான, மற்றும் சுய பாதுகாப்பு விதிமுறைகளை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுங்கள் எடுத்துக்காட்டாக, சாலையைக் கடக்கும்போது இரண்டு புறமும் பார்க்கவேண்டும் அல்லது தீக்குச்சியை வைத்து விளையாடக்கூடாது என்பது போன்ற பாதுகாப்பு விதிகளைக் கற்றுக் கொடுங்கள். இவற்றோடு கூடவே சுய பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக் கொடுங்கள்.

    இயல்பாகவே குழந்தை ஆவலுடன் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். “குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன?” அல்லது “பாலியல் உறவு என்றால் என்ன?” போன்ற கேள்விகளைத் தவிர்க்காதீர்கள். கேள்விகளுக்கு விடைகூறி குழந்தையின் இயல்பான ஆவலுக்கு மதிப்பளியுங்கள். இல்லையெனில், ஆவலைத் தீர்த்துக்கொள்ள, முறையற்ற வேறு வழிகளை அவள்/ன் நாடக்கூடும்.

    “ஒரு வேளை அப்படி நடந்தால்”......... விளையாட்டைக் குழந்தையுடன் விளையாடவும். எடுத்துக்காட்டாக, “ஒரு வேளை கடைத்தெருவில், நாம் பிரிந்துபோய் உன்னால் என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீ என்ன செய்வாய்? “

    “ஒரு வேளை உன் தனிப்பட்ட உடல் உறுப்புகளை எவரேனும் தொட முயன்றால், நீ என்ன செய்வாய்?” என்றெல்லாம் குழந்தையைக் கேளுங்கள்.

    குழந்தைக்குத் தொடர்புடைய, பழக்கமான சூழலைப் பயன்படுத்துங்கள். சரியான விடை சொல்ல குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.

    கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்த குழந்தைகள் பற்றியும் அவர்கள் எப்படி அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தார்கள் என்பது பற்றியும் உள்ள கதைகளைக் குழந்தைகளுக்குப் படித்துக் காண்பியுங்கள். இந்தக் கதைகளைப் படிப்பது மூலம் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி நம்பிக்கையூட்டும் எண்ணத்தைக் குழந்தையிடம் ஏற்படுத்த முடியும். குழந்தை சந்திக்கும் பிரச்சினைகள், அதற்குத் தேவையான உதவி போன்றவற்றைப்பற்றி உங்களிடம் குழந்தை பேச இது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்கச் சில குறிப்புகள்.

    குடும்பப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குங்கள் .

    உங்கள் குழந்தை எப்போதும் எங்கேயும் யார் யாருடன் தனியாக இருக்க அனுமதிப்பீர்கள் என்று பட்டியல் இடுங்கள். (நீங்கள் கூறும் பெயர்களுக்கு உங்கள் குழந்தையின் பதில் என்ன என்பதைக் கவனமாகக் கேளுங்கள்).

    தங்களைப் பற்றிய சொந்த விவரங்களை மற்றவர்களிடம் சொல்வதை ஊக்கப்படுத்தாதீர்கள்.

    தொடுதல் குறித்த சுய பாதுகாப்பு விதிகள்.

    தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கும் சரியான சொற்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தாருங்கள்.

    சிறிய குழந்தை என்றால் பேசும் மொழியைப் பயன்படுத்தலாம். உறுப்புகளுக்கான பெயர்களை பயன்படுத்துங்கள். வேறு ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களைத் தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தாதீர்கள். (பூ, பாம்பு போன்ற சொற்கள்).

    நம் எல்லோரைப் போலவும் குழந்தைகளுக்கும் தனிப்பட்ட இடப்பரப்பை பெறும் உரிமை உண்டு. அதற்குள் யாரை அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கும் உரிமையும் உண்டு.

    இது பற்றிய விதிகளைக் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள். அவர்களுடைய தனிப்பட்ட இடப்பரப்பை யாரேனும் ஆக்கிரமிக்க முயன்றால் தமது உரிமையை நிலைநாட்டுவது எப்படி என்று கற்றுத் தாருங்கள்.

    குழந்தையின் உணர்வுகளை வலியுறுத்துங்கள்.

    தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் கற்றுக்கொடுங்கள் மரியாதையோடு, “வேண்டாம்”, “இல்லை”, முடியாது என்று அவர்களால் கூற முடியும்.

    இரகசியங்களைப் பாதுகாப்பது சரியல்ல என்று கற்றுத் தாருங்கள், முக்கியமாகக் குடும்பப் பாதுகாப்பு விதிகளை மீறும் செயல்பாடுகளை இரகசியமாக பாதுகாத்தல் சரியில்லை என்று உணர்துங்கள்.

    குழந்தையின் சுயமதிப்பை வளர்க்க உதவுங்கள்.

    பாலியல் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நடந்தவற்றை உங்களிடம் கூறவும் அவர்களுக்கு வலிமையான சுயமதிப்பு தேவை.

    பிரச்சினை ஏற்பட்டால் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் தொடர்பு கொள்ளக் கற்றுத் தாருங்கள். தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் கூட வேதனை எற்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடும் என்பதைக் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும். மனிதர்களைப் பார்ப்பதைவிட குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் செயல்களையும் பார்ப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தாருங்கள்.

    குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணியில் உள்ளவர்களின் பின்னணியையும் அத்தாட்சியையும் கவனமாகப் பரிசீலனை செய்யவும். (ஆயா, டிரைவர், சமையல்காரர் போன்றவர்கள்).

    உங்கள் குழந்தை பாலியல் கொடுமையை அனுபவித்து உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்? குழந்தை உங்களிடம் அதை நேரடியாகக் கூறச்செய்வதே சிறந்த வழி. எனினும், கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் கூறுவது கஷ்டமான செயல். உங்களிடம் நேரடியாகச் சொல்லமுடியாத பிரச்சினைகளை குழந்தைகள் தமது நடத்தை மூலம் வெளிப்படுத்துகிறார்கள். உடலியல் அறிகுறிகள் கொடுமை நிகழ்ந்ததை எடுத்துக்காட்டலாம்.

    குழந்தை தொடுதல் பிரச்சினையைப் பெற்றோரான நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

    குழந்தைகள் தமது சொற்கள், மற்றும் நடத்தை மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். பெரியவர்களாகிய நாம் அவர்கள் பேசும்போது கவனமாகக் கேட்கவேண்டும், அவர்களுடைய குறிகளும் நடத்தையும் என்ன சொல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகள் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் பேசவில்லை என்றால், நாம் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்காததோ அல்லது தேவையான போது உடன் இல்லாமல் போவதோ அதற்கு காரணமாக இருக்கக்கூடும். பெற்றோரான நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பிலும் அவர்கள் கொடுமைக்கு ஆளானால் மீண்டு வருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். நடந்ததைத் தெரிவிக்கும்போது நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது உங்கள் குழந்தையின் மற்றும் உங்களின் நலனுக்கு மிகவும் முக்கியம். கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் குழந்தை தெரிவிக்கும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி, அவநம்பிக்கை, மறுப்பு, தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொள்வது, கோபம், குழப்பம் மற்றும் அல்லது சந்தேகம் ஏற்படுவது இயல்பு.



    பின்வரும் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் :

    குழந்தையை நம்புங்கள்.

    அமைதியாக இருங்கள்.

    குழந்தையின் உணர்வுகளை ஆமோதியுங்கள்

    அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று குழந்தைக்குத் தெரிவியுங்கள்.

    குழந்தையை ஆதரியுங்கள்.

    கொடுமையை வெளியே தெரிவித்து உதவியை நாடுங்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: குழந்தை பாலியல் கொடுமை-awareness

    அருமையான தகவல் ஜெய். ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


    பெற்றோர்கள் பிள்ளைகளின் நம்பிக்கை பெறுதல் அவசியம். இருவரும் வெளிப்படையாக பேசி, தோழமையுடன் பழக வேண்டும். குழந்தைகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையில் நம் செய்கைகள் இருக்க வேண்டும்.

    sumathisrini likes this.

  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: குழந்தை பாலியல் கொடுமை-awareness

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அருமையான தகவல் ஜெய். ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


    பெற்றோர்கள் பிள்ளைகளின் நம்பிக்கை பெறுதல் அவசியம். இருவரும் வெளிப்படையாக பேசி, தோழமையுடன் பழக வேண்டும். குழந்தைகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையில் நம் செய்கைகள் இருக்க வேண்டும்.
    thank u sis.....
    neenga solradhu 100% correct sis.....

    RathideviDeva likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எĪ

    இன்றைய தேதிக்கு மிகவும் அவசியமான பகிர்வு .

    jayakalaiselvi likes this.
    Jayanthy





  5. #5
    deepikarani's Avatar
    deepikarani is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    kanyakumari
    Posts
    5,042
    Blog Entries
    3

    Re: How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எĪ

    thevaiyana thagaval Jay

    jayakalaiselvi likes this.

  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எ&

    Quote Originally Posted by jv_66 View Post
    இன்றைய தேதிக்கு மிகவும் அவசியமான பகிர்வு .
    Thank u aunty....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: How to Talk to your Children about Sexual Harassment ?-குழந்தை பாலியல் கொடுமை பற்றி எ&

    Quote Originally Posted by deepikarani View Post
    thevaiyana thagaval Jay
    Thank u sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter