பெண் குழந்தையை எப்படி போற்றி பாதுகாத்து நேர்பட வளர்க்க வேண்டும்

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே! தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே! சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!

பாரதிதாசனின் வரிகள் பெண் குழந்தையை எப்படி போற்றி பாதுகாத்து நேர்பட வளர்க்க வேண்டும் என்று சமூகத்துக்குக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கையாள்வது என இப்போது சிந்திப்போம்...குழந்தை புரிந்துகொள்வதை விட பெற்றோர் புரிந்து கொள்வது மிக முக்கியம். எந்தக் குழந்தையும் தானாக விரும்பி இந்தச் செயலுக்குள் சிக்குவதில்லை. குழந்தையின் தவறென ஒரு சதவிகிதம் கூட கிடையாது. இதை நினைவில் கொண்டே பேசத் தொடங்க வேண்டும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை...

சவுகரியமாக உணர்தல்: குழந்தைகள் பேசத் தொடங்கும் முன் சவுகரியமாக உணர்தல் மிக அவசியம். தனிமையான, குழந்தைக்கு விருப்பமான, பழகிய இடமாக இருத்தல் நல்லது.
உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது:

எக்காரணம் கொண்டும் அதிர்ச்சி, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை குழந்தைகளிடம் வெளிப்படுத்தவே கூடாது. அது அவர்கள் பேச வரும் விஷயத்தை மறைக்கவோ, மாற்றவோ, தயங்கவோ வழிவகுக்கும்.கட்டாயப்படுத்தக் கூடாது: குழந்தையை பேசும்படியும், மீண்டும் மீண்டும் உடலில் எங்கேனும் காயம் இருந்தால் காட்டச் சொல்லியும், நடந்த நிகழ்வை அடிக்கடி நினைவு படுத்தவும் கட்டாயப்படுத்தக் கூடாது.

குழந்தைகளுக்கு தெரிந்த மொழியில் பேசுதல்: அதிக டெக்னிக்கலான, குழப்பும் வார்த்தைகள் இல்லாமல், இயல்பான, குழந்தைகளுக்கு புரியும்படியான வார்த்தைகள் கொண்ட உரையாடலாக இருக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை...

பேட்டி எடுக்க வேண்டாம்: கேள்விகளால் குழந்தை களை காயப்படுத்துதல் கூடாது.தேவையற்ற கேள்விகள் வேண்டாம்: இந்த விஷயம் தவிர்த்த அனாவசிய கேள்விகளும் வேண்டாம்.

ஏன்: ஏன் ஏன் என்று திரும்பத் திரும்ப கேட்பது நல்லதல்ல. அதிக கேள்விகள் குழந்தைகளை அனாவசியமாக பயமுறுத்தும்.புதிய வார்த்தைகள் / கருத்துகள்: குழந்தைகள் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் உங்களுக்கு தோன்றும் புதிய கருத்துகளையும் சொற்களையும் சொல்லி அவர்களை குழப்பக் கூடாது.

குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது... தெரிந்து கொள்ளுங்கள்: உங்கள் குழந்தை உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது, வீட்டில் தனியாக விடக் கூடாது, அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது போன்ற பல சந்தேகங்கள் குழந்தைகளின் மனதில் இருக்கும். அதனை தெளிவுபடுத்த வேண்டியது உங்கள் கடமை. எனவே, குழந்தையின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.உண்மையாக இருங்கள்: குழந்தைக்கு மேற்கூறிய சந்தேகங்கள் இருக்கும்போது அதனை உண்மையாக தெளிவுபடுத்துங்கள். பொய்யான எந்த ஒரு வாக்குறுதியும் வேண்டாம்.

உதாரணமாக, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறினாலும், பிறகு உங்கள் நெருங்கிய உறவினரிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். குழந்தை அதை அறிய நேரிடும் போது, இன்னும் அதன் மனது வேதனை அடையும். உங்கள் மேல் இருந்த நம்பகத்தன்மையும் குறையும். உங்களால் தனியாக இதை கையாள முடியுமா அல்லது இதற்கு நீங்கள் அடுத்து செய்யப் போவது என்ன என்பதை குழந்தையிடம் புரியும்படி விளக்கிவிட வேண்டும்.குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்: சில குழந்தைகள் அதிக கோபம், எரிச்சலில் இருப்பார்கள். அவையெல்லாம் மிகச் சாதாரணமானது என்று எடுத்துக் கூறுங்கள்.

எப்போதும் பக்கபலமாக இருங்கள்: இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டாலே பெற்றோர் ஒதுக்குவார்கள் என்று சில குழந்தைகள் பயப்படலாம். அப்படியெல்லாம் இல்லை... நீ கூறியது நல்லதுதான்...

உன் மீது எந்தத் தவறும் இல்லை, பக்கபலமாக நான் இருப்பேன் என்று தைரியம் அளிக்க வேண்டியது அவசியம்.குழந்தைகளையே குற்றம் சாட்டுதல், நீ அதிக குறும்பு பண்ணினதால் கடவுள் கொடுத்த தண்டனை போன்ற பேச்சுகள், நான் சொன்னதைக் கேட்டிருக்கலாம் போன்ற அறிவுரைகள் இந்த நேரத்தில் உதவாது. எதிர்பாரா நிகழ்வுக்கான பொறுப்பை குழந்தையின் மீது சுமத்துவதை விட அதிலிருந்து குழந்தையை காப்பதே பெற்றோர் கடமை.

நீ கூறியது நல்லதுதான்... உன் மீது எந்தத் தவறும் இல்லை, பக்கபலமாக நான் இருப்பேன் என்று தைரியம் அளிக்க வேண்டியது அவசியம்.


Similar Threads: