Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes

How to deal with an adamant child? - பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் க


Discussions on "How to deal with an adamant child? - பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் க" in "Parenting" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  How to deal with an adamant child? - பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் க

  பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

  'நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்பது அந்தக் காலப் பிரசாரம். அதற்குப் பிறகு, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது சுருங்கியது. ஆனால், அரசு கூறுகிறதோ இல்லையோ, பொதுவாகவே இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடி,
  பள்ளியில் இடம் கிடைக்கப் போராடும் அவலம்,


  கல்லூரிக் கட்டணங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், திருமணச் செலவுகள்... என்று குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு செலவழிக்க வேண்டிய தொகையின் கூட்டல் பூதாகரமாக எழுந்து நிற்பதால், 'நமக்கு ஒரு பிள்ளை போதும்’ என்று ஏக மனதாகத் திட்டமிட்டுவிடுகிறார்கள் பல தம்பதியர். ஆனால், அந்த 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ இருக்கிறதே... அதை வளர்ப்பதற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடுகிறது பலருக்கு.

  அதிஅற்புதமான ஐ.க்யூ., அருமையான கற்பனைத்திறன், புத்திசாலித்தனம்... இவற்றுடன் அளவு கடந்த சேட்டை, அதிமேதாவித்தனம், எடுத்ததற்கெல்லாம் கோபம், பிடிவாதம் என்ற கலவையாகத்தான் இருக்கிறது இன்றைய சுட்டிகளின் சாம்ராஜ்யம். எதற்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கும், அடம்பிடிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலாகவே உருவாகி இருக்கிறது. அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டியது பெற்றோர்கள்தான்.

  ஒரே குழந்தையாக இருப்பதால் விட்டுக்கொடுத்தல், பகிர்தல் எதுவுமே இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்காக சில வழிமுறைகளைச் சொல்கிறார் மூத்த உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.

  ''ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சரியா, தவறா என்பது தனிமனிதரைப் பொருத்த விஷயம். ஆனால், அது குழந்தைகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்பதற்கான வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளன.

  பல வன்முறைச் சம்பவங்களில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது, இதுபோல பால்யத்தில் தனிமை, பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காமல்போதல் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனால், ஒரு குழந்தை என்றாலும் அதைத் தனிமையில்விடாமல் அரவணைத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.


  எந்தக் குழந்தையும் பிறந்து, வளர்ந்து வரும்போதே 'நான் மட்டும்தான்... எனக்கு மட்டும்தான்’ என்று சொல்வது இல்லை. 'தான் மட்டும்’ என்ற அந்த மனோபாவத்தைக் குழந்தைக்கு ஊட்டுவதும் பெற்றோர்கள்தான். என்ன வாங்கி வந்தாலும், 'இது எல்லாமே உனக்குத்தாண்டா செல்லம்’ என்று சொல்லிச் சொல்லியே, அப்படி ஒரு மனோபாவத்தைச் சிறுவயது முதலே வளர்த்துவிடுகிறோம். எனவே, குழந்தைகளிடம் நமது அணுகுமுறை கவனமாக இருக்கவேண்டும்.

  இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில், தங்களுடைய 'இல்லாமையை’ சமரசம் செய்வதற்காகவே, குழந்தை என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிவிட்டால், அதைவிடக் கொஞ்சம் விலை உயர்ந்ததாக தன் பிள்ளைக்கு வாங்கித் தருவது நிகழ்கிறது. இதனால் குழந்தைக்கு அந்தப் பொருளின் மதிப்பே தெரியாமல் போய்விடும். இது எல்லாமேதான், பூமராங் போல பின்னாளில் அவர்களையே நோக்கித் திரும்பி வருகிறது.

  குழந்தைகள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது, மிகக் கடுமையாக எதிர்க்கவும் கூடாது. அதேசமயம், 'என்கிட்ட காசே இல்ல'' என்று அன்னக்காவடி போலப் புலம்பவும் கூடாது. 'ஏன் அந்தப் பொருள் அப்போதைக்கு வேண்டாம்’ என்பதை யதார்த்தமாக எடுத்துச் சொல்லி, வேறு ஏதாவது பொருளை வாங்கித் தரலாம். என்னதான் அழுது அடம்பிடித்தாலும், அதற்கு இடம்கொடுக்காமல் உறுதியாக இருந்து பழகிவிட்டால், பிறகு, உங்களிடம் 'பாச்சா பலிக்காது’ என்று தெரிந்து, அவர்களே வழிக்கு வருவார்கள். பிள்ளைகளிடம் கோபப்படுவதோ, எரிச்சல்படுவதோ இல்லாமல், உண்மையான அக்கறையோடு செய்ய வேண்டும். இதற்கு நிறையப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை.  ஒற்றைக் குழந்தையாக இருக்கும்போது, அதற்கு பிரைவேட் - ஹோம் டியூஷன் என்றெல்லாம் ஏற்பாடு செய்யக் கூடாது. குழுவினரோடு பழகுவதுபோல, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு அனுப்பவேண்டும். விளையாட்டுகளிலும், பாஸ்கெட் பால், ஃபுட்பால் போன்ற குழு விளையாட்டுகளில் சேர்த்துவிடவேண்டும். பாட்டு, நடன வகுப்புகளுக்குப் போகும்போது, மற்றவர்களுடன் கலந்து பழகவும், சூழ்நிலையை அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும் குழந்தை பழகும்' என்றவரிடம், ''வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், டிவி என்று நவீன 'காட்ஜெட்ஸ்’ உடன் வளரும் குழந்தைக்கு மனதளவில் உண்டாகும் பாதிப்புகள் என்ன? அதை எப்படிச் சரிசெய்வது?'' என்று கேட்டோம்.

  ''அது, அந்த சாதனங்களைக் குழந்தைகள் எந்த அளவுக்கு உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. எந்த ஒரு விஷயமுமே அளவோடு இருக்கும்போது தீங்கு தராது. அளவுக்கு அதிகமாகி அதில் மூழ்கும்போது, அவர்கள் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். தங்களின் தனி உலகத்தில்தான் மட்டுமே பயணிப்பார்கள். இதைத் தடுக்க, கம்ப்யூட்டர், டி.வி, வீடியோ கேம்ஸ் எல்லாவற்றுக்குமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிட வேண்டும். ''நீ சமத்தா படிச்சு முடிச்சேன்னா, இன்னிக்கு போனஸா ஒரு மணி நேரம் நீ கேம்ஸ் விளையாடலாம்’ என்று சொன்னால், குழந்தை படிக்கவும் செய்யும். விளையாட்டில் கட்டுப்பாடும் வரும். இது போல நேர எல்லையை வகுத்து, அதன்படி சீராகப் பராமரித்தாலே போதும்; அவர்களே அந்த ஒழுங்குக்கு வந்து விடுவார்கள். அதிக நேரம் அதில் உட்கார்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லி, அதன் விளைவுகளையும் அவசியம் புரியவைக்க வேண்டும்'' என்றார்.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 14th May 2015 at 02:49 PM.
  jv_66 and kkmathy like this.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டு&a

  ''ஒற்றைக் குழந்தை வைத்துள்ள பெற்றோர்களுக்கு டிப்ஸ்...!''

  3 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி குழந்தைகள் சிறப்பு நிபுணர் ஜனனி ஷங்கர் பேசியபோது, அவருடைய விரலும் பெற்றோர்களை நோக்கித்தான் நீண்டது.

  ''பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைக்காகக் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். இரண்டு பேருமே பிஸி என்றால், ஒருவர் இல்லாதபோது இன்னொருவர் வீட்டில் இருப்பது போல மாற்றிக்கொள்ளலாம்.

  சனிக்கிழமை ஒருவர் இருந்தால், ஞாயிற்றுக்கிழமை இன்னொருவர் இருக்கலாம். ஒருவர் ஆபீஸ் போனால், மற்றவர் வீட்டில் இருந்து பணி செய்யலாம். இது போன்ற திட்டமிடலில் ஆரம்பித்து, எல்லாவற்றிலுமே குழந்தையை முதன்மைப்படுத்திச் செய்யவேண்டும்.

  தனிக்குடித்தனமாக இருந்தாலும் யாராவது பெரியவர்களை உடன் வைத்துக்கொள்வது நல்லது. நம் அப்பா, அம்மா, மாமியார் போன்ற சொந்தங்களிடம் விட்டுச் செல்லும்போது குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களும் வரும். சுத்தமான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும்.
  மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டிப்பாக கிரெச்சில் விடக் கூடாது. 3
  - 4 வயதுக்குள்தான் ஒரு குழந்தையிடம் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு உருவாகிறது. அதற்கு முன்பே காப்பகத்தில் விடும்போது, மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில், எல்லா வகையான நோய்த்தொற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்தது, 3 வயது வரையிலுமாவது குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது அதன் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. கிரச்சில் உள்ள கேர்டேக்கர்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நமக்குத் தெரியாது.

  அது அப்படியே குழந்தைக்கு வரலாம். பெற்றோர் இல்லாத தனிமை, கோபம் எல்லாம் சேர்ந்து, குழந்தைக்கு மனதினுள் புதைந்த கோபமாக இருக்கும். அது வளர்ந்து பெரிதாகும்போது, அந்தக் கோபம் வெடிக்கும். ''என் ஃப்ரெண்ட் ஆகாஷ் அம்மா எல்லாம் எப்படி அவனைப் பார்த்துக்கிட்டாங்க? நீ என்னைப் பார்த்துகிட்டியா?'' என்று ஒப்பிடச் சொல்லும்.

  குழந்தையும் நன்றாக வளரவேண்டும், சம்பாதிக்கவும் வேண்டும் என்றால், சிற்சில சமரசங்களைச் செய்துகொண்டு, உறவினர்களையே வீட்டில் வைத்துக்கொள்ளலாமே! இல்லையெனில், உடல்ரீதியாக, மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, போதிய ஊட்டச்சத்தும் இல்லாமல் போகும். குழந்தையின் எதிர்காலம் ஆரோக்கியமான அமையவேண்டுமென்றால், அதற்குத் தேவை பணத்தைத் தாண்டி, உங்கள் அருகாமையும் அன்பான அரவணைப்பும்தான்!''

  Last edited by chan; 14th May 2015 at 02:52 PM.
  jv_66 and kkmathy like this.

 3. #3
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டு&a

  Very good info, Latchmy.
  Useful for moms.

  chan likes this.

 4. #4
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

  முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!
  ‘பி டிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..


  ‘எ
  ங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

  இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!

  தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’

  - என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.  ‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வி யுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.

  ‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டி னார்.
  ‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக் கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.  ‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை..

  செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.

  மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

  எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய

  முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.

  ‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.  சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..

  ‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.

  உஷார் மம்மீஸ் உஷார்!

  Last edited by chan; 18th May 2015 at 02:23 PM.
  jv_66 likes this.

 5. #5
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!  வழத் துவங்கி இருக்கிற என் மகள், பென்சில் முதல் மண் உட்பட எதைப் பார்த்தாலும் எடுத்து வாயில் வைத்து விடுகிறாள். இப்படி செய்யாமல் அவளை எப்படி தடுப்பது?’’

  டாக்டர் கே.வி. பாலசுப்ரமணியம், குழந்தை நல நிபுணர், சென்னை:
  ‘‘இ து குழந்தைகளின் இயல்பு. இதைத் தடுக்க முடியாது. நீங்கள்தான் குழந்தையை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை தவழும் இடங்களை தினமும் சுத்தமான தண்ணீரால் கழுவியோ, துடைத்தோ விடுங்கள். பொதுவாக, பருப்பு, எரிந்த கொசுவர்த்தி சுருளின் துண்டு, தீக்குச்சி, காசு போன்ற பொருட்கள் அவர்கள் தவழும் எல்லைக்குள் இருக்கவே கூடாது. இது போன்றவை தொண்டைக்குள் சிக்கிக் கொண் டால், சுவாசத் திணறல், வாந்தி ஏற்படும். தொண்டைக்குள் காசு நுழைந்துவிட்டால் குழந்தையை குப்புற படுக்க வைத்து, முதுகில் தட்டிக் கொடுங்கள். காசு வெளியில் வந்து விடும். பிற பொருட்கள் சிக்கிக் கொண்டால், நிறைய தண்ணீர் கொடுங்கள். அவை, எளிதாக வயிற்றுக்குள் சென்று விடும்.  குழந்தை கொசுவர்த்தி சுருள், கொசுவர்த்தி ‘மேட்’ போன்றவற்றை எடுத்து வாயில் வைத்து விட்டால், அதன் வாயை நன்கு கழுவி விட்டு, உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். விளையாட தரும் பொம்மைகளில், ‘நான்-டாக்ஸிக்’ குறியீடு இருக்கிறதா என்று பார்த்து, ‘ப்ராண்டட்’ பொம்மைகளாக வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி அவற்றை சுத்தமாகக் கழுவுங்கள்.

  பல் முளைக்கும் பருவத்தில், எதையாவது கடிக்கிற குழந்தைகளுக்கு ‘டீத்தர்’ (வாயில் வைத்துக் கடிக்கிற விளையாட்டு சாமான்) வாங்கி வாயில் வைத்து விடலாம். ஆனால், அதை மண்ணில் புரட்டி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பேனா, பென்சில் போன்றவற்றை குழந்தைக்கு எட்டும் உயரத்தில் வைக்காதீர்கள். குழந்தை விழித்திருக்கும் நேரத்தில், அவள், உங்களுடைய கண் பார்வையிலேயே இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.’’

  பிடிவாத குழந்தையா? பிடியுங்கள் டிப்ஸ்..

  கு
  ழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..

  குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.


  குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.

  குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.

  குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!

  சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.


  Last edited by chan; 18th May 2015 at 02:25 PM.
  jv_66 likes this.

 6. #6
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: How to deal with an adamant child? - பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் க

  Thanks for the useful tips.

  chan likes this.
  Jayanthy

 7. #7
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  How to deal with an adamant child? - பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்ப

  பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?

  பேரன்டிங் கைடு!
  கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், ஒரு வீட்டில் ஆறேழு குழந்தைகள் இருப்பார்கள். தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, பெரியக்கா, சின்னக்கா, கடைசித் தம்பி என எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைத்தன. மொபைல், தொலைக்காட்சி இல்லை என்பதால், தன்னைவிடவும் பெரிய, சின்ன மற்றும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து விளையாட நேரம் இருந்தது. ஆனால், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இல்லை. கவனித்துக்கொள்ள தாத்தா, பாட்டியும் இல்லை.

  இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பெற்றோருக்கோ நேரமும் இல்லை. அவசர அவசரமாக குழந்தையைத் தயாராக்கி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் கிளம்பிப் போய், மாலை சோர்வாய் வீட்டுக்குத் திரும்பி, இன்று நாள் முழுவதும் குழந்தை என்ன செய்தது, பள்ளியில் என்ன நடந்தது என எதையும் பொறுமையாகக் கேட்க நேரமின்றி, “மதியம் லஞ்ச் சாப்பிட்டியா? ஹோம் வொர்க் செஞ்சியா?” என டெம்ப்ளேட்டாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, இரவு உணவைத் தந்துவிட்டு உறங்கி, மறுபடியும் மறுநாள் எழுந்து ஓடும் இயந்திர வாழ்வு. ஒருபுறம் படி... படி... என நச்சரிக்கும் பள்ளிகள். மறுபுறம் இயந்திரகதியில் இயங்கும் பெற்றோர். இதனால், கவனிக்க ஆளின்றி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு மனஉளைச்சல்.

  இப்படி, தனிமையில் உழலும் குழந்தைகளை வளர்ப்பதுதான் எத்தனை பெரிய சவால். பெற்றோர் குரலை உயர்த்திப் பேசினாலே, கோபக் கனல் வீசும் இன்றையக் குழந்தைகளை சமாதானப்படுத்த, ஃப்ரைட் சிக்கன், பீட்சா, நூடுல்ஸ் தொடங்கி ஐபேட், ஸ்மார்ட் போன் வரை கிப்ஃட் என்ற பெயரில் லஞ்சம் தரவும் தயாராக இருக்கின்றனர் பெற்றோர். இது கொதிப்பதற்குப் பயந்து அடுப்பில் குதிப்பதைப் போல மோசமானது. இந்த டிஜிட்டல் பொருட்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் மிகமிக ஆபத்தானவை.

  குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே போய் நல்வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமா? அடித்தல், திட்டுதல், கேட்டதையெல்லாம் வாங்கித் தருதல் இவையெல்லாம் சரிதானா? எது குழந்தைக்குத் தேவை? எது தேவை இல்லை? பெற்றோர் செய்யும் தவறுதான் என்ன?

  குழந்தை வளர்ப்பின் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் போதும். அவர்களின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

  அதீதக் கவனிப்புகளைக் குறையுங்கள்
  குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறேன் என, அவர்களைத் தரையில் விளையாடக்கூட விடுவது இல்லை. பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடவோ, பழகவோ அனுமதிப்பது இல்லை. அப்படியே அனுப்பினாலும், சின்னக் காயம் ஏற்பட்டால்கூட, அடுத்த முறை விளையாட அனுப்புவது இல்லை. இந்த அதீதக் கவனிப்புதான் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறது.

  பெற்றோரின் நேரமே குழந்தைகளின் பரிசு
  அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குழந்தையுடன் நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, வீடு முழுவதும் நிரப்பிவிடுகின்றனர்.
  ஐ-போன், ஐ-பாட், லேப்டாப்பைவிட, குழந்தையுடன் செலவழிக்கும் நேரமே குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு, புரிதலை மேம்படுத்தும். நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளின் நண்பராக மாறுங்கள். குழந்தை அழுதால் டி.வி போட்டுவிடுவது, ரைம்ஸ் வீடியோ போடுவது போன்றவை தவறான பழக்கங்கள். குழந்தை தாயின் உதட்டு அசைவைப் பார்த்துதான் பேசப் பழகும்.

  ஓடி விளையாடட்டும் பாப்பா
  அதிகாலை சூரிய உதயத்தின்போது படிப்பதோ, மாலை சூரியன் மறையும் வேளையில் விளையாடுவதோ சுத்தமாக இல்லை. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள், கேண்டி க்ரஷ், ஃபார்ம் ஹவுஸ், டெம்பிள் ரன் என மொபைல் கேம்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், அதீத இயக்கம் (Aggressive behaviour) கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். அன்பு மறைந்து வன்முறை குடியேறுகிறது.

  குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துங்கள். பாண்டி, கோகோ, ஏழு கல், கபடி, கால்பந்து, டென்னிஸ், கொக்கோ, ரன்னிங் என உடலை உறுதியாக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஊக்குவியுங்கள். குழந்தைப் பருவம்தான், மிக முக்கியமான காலகட்டம். அந்தப் பருவத்தில் ஓடியாடி விளையாடும்போது படைப்பாற்றல், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன், குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை மேம்படும். எலும்புகள் வலுப்பெறும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு உதவும்.

  தவறுகளை அன்பால் திருத்துங்கள்

  குழந்தை சேட்டை செய்து, அதனால் மற்றவர்கள் கடிந்துகொள்வார்களோ என்ற பயத்தில் பக்கத்து வீட்டுக்குகூட குழந்தைகளை அனுப்புவது இல்லை. இந்த வளர்ப்பு முறையை பர்மிசீவ் பேரன்டிங் (Permissive parenting) எனச் சொல்லலாம். குழந்தைகளிடம் கோபப்படுவதோ, திட்டுவதோ, அடிப்பதோ தவறானது. அதற்கு பதிலாக, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அன்போடு திருத்தலாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் நிறைந்த கதைகளைச் சொல்லி, அவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைக்கலாம்.

  அமைதியான சூழலை உருவாக்குங்கள்

  குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும். சங்கடங்கள், சண்டை, சச்சரவுகளைக் குழந்தை முன்பு கொட்டாதீர்கள். குழந்தைகள் முன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

  நிஜ உலகில் நீந்தவிடுங்கள்
  வெளிமனித அனுபவம் குழந்தைகளுக்கு இருந்தால்தான் சமூகப்பண்பு, மற்றவருடன் பேசும் உறவு, மற்றவர் கருத்தை மதித்தல், சிந்திக்கும் திறன் போன்றவை வளரும். குழந்தையை பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா எனச் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் உறவாடவிடுங்கள். சில சமயங்களில் உங்களிடம் சொல்லத் தயங்குவதைகூட, ஒட்டும் உறவுகளிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என உங்களுக்குத் தெரியவரும். சுதந்திரமான குழந்தைகளே ஆரோக்கியமான, சுமுகமான சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள்.  குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும்.

  குழந்தைகள் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும். எனவே, இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்பாவோ அம்மாவோ வேலையிலிருந்து வர தாமதம் ஆனாலும், அவர்கள் வரும் வரை காத்திருக்காமல், தூங்கச் செல்வது அவசியம். இரவில் டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சீரான தூக்கம் அன்று படித்த பாடங்களைப் பதியவைக்கும். மறுநாளைக்குப் படிக்கவேண்டிய பாடங்களை மனதில் ஏற்க உதவும்.

  குழந்தைகளுக்குக் காலை உணவைச் சமச்சீராகச் சாப்பிடக் கொடுங்கள். பிரெட் ஜாம், ஆயத்த பவுடரால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துப் பானங்களைத் தரக் கூடாது. புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து கலந்த காலை உணவே சிறந்தது.

  செல்ஃப் ஹைஜீன் என்பது பெற்றோரிடமிருந்து வரும் பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவும் பழக்கத்தைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். சாப்பிட்டதும் கைகளை டிஷ்யூ, துண்டால் துடைக்கலாமே தவிர, அணிந்திருக்கும் உடையில் துடைப்பது கூடாது. பெற்றோரின் இந்தச் செயலை குழந்தை கவனிக்கிறது என்ற புரிதல் அவசியம்.

  வீட்டுக்கு அருகில் இருப்பவரிடம் பேசுங்கள். வணக்கம், குட் மார்னிங், நலம் விசாரிப்பது போன்ற நல்ல பழக்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். தன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களை பார்த்துப் பேசிப் பழகட்டும்.


  Last edited by chan; 17th Jul 2015 at 05:08 AM.
  jv_66 likes this.

 8. #8
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,567

  Re: How to deal with an adamant child? - பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்&a

  இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான தெளிவான வழிகாட்டுதலை அளிக்கும் அருமையான பதிவு. நன்றி லக்ஷ்மி.


 9. #9
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: How to deal with an adamant child? - பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்&a

  Worth Sharing Lakshmi


 10. #10
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: How to deal with an adamant child? - பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்&a

  Very useful suggestions.

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter