Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree35Likes

How to protect Children from Sexual Harassment & legally - பாலியல் தொல்லையிலிருந்து குழ&am


Discussions on "How to protect Children from Sexual Harassment & legally - பாலியல் தொல்லையிலிருந்து குழ&am" in "Parenting" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    How to protect Children from Sexual Harassment & legally - பாலியல் தொல்லையிலிருந்து குழ&am

    மூன்று வயதுக் குழந்தையாக இருந்தாலும் சரி 60 வயதைத் தாண்டிய கிழவியாக இருந்தாலும் சரி பாலியல் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை என்பது கசப்பான உண்மை. பள்ளிச் சிறுவனும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான் பல் போன தாத்தாக்கள் சிலரும் இந்தப் பாதகத்தை செய்கின்றனர்.


    பள்ளிகளில் வீடுகளில் அலுவலகங்களில், பேருந்துகளில் என்று பல இடங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக பள்ளி மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறல், வேன் டிரைவர் சில்மிஷம் என்பன போன்ற செய்திகளை படிக்கும்போதெல்லாம் மனம் பதைக்கத்தான் செய்கிறது.


    நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது, பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில் அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.



    பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளை தனியே விட்டு செல்ல நேரிடுகிறது. பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் நெடு நேரம் தனியாக வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலோ இருக்க வேண்டி இருக்கிறது. அப்போது இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.



    எங்கேயோ எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.




    ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும் பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத எண்ணங்களோடு தொடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.



    தொடுகையின் நோக்கம் குழந்தைகளுக்கு தெரியாது. ஆனால் தொடுதலின் வித்தியாசத்தை உணரமுடியும். Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும். கீழ்க்கண்ட தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.




    தொடுதலின் வகைகள்:


    1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
    2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
    3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.





    குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது என்னென்ன?

    தொடுதல் விதி

    எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.


    கட்டியணைப்பது


    உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும்


    பரிசு

    சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.


    ரகசியம்

    தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும்
    வேண்டாம்னு சொல்லணும்:

    தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும்
    சொல்லிவிடு

    உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு



    உன்மீது தவறு இல்லை:

    தொடுதல் விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது சொல்லலாம்.
    மேற்கூறிய அனைத்தையும் குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.


    அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே!



    இந்த தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.


    இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டு கடுமையான தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம்

    இக்குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை என்ன? இதை தடுக்கும் வழிகள் உண்டா? பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்....!


    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine July 2015. You Can download & Read the magazines HERE.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 26th Aug 2015 at 10:47 PM.
    jv_66, repplyuma, chan and 4 others like this.

  2. #2
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    ரொம்ப அவசியமான தகவல் தேனு... Tfs...

    Priya


  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    சட்டம் சொல்வது என்ன?


    18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதா வது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக் கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற வற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக் கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சி யம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத் துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது.


    சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதார ணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படை யினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர் கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.



    மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அவளின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பி னர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங் கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.


    குழந்தையின் நலனே பிரதானம்


    சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப் பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தக வல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தை களின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது.


    உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய் வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”



    காவல் நிலையம் என்றால் பெரியவர்களே அலறி ஓடும் போது, பாதிக்கப் பட்ட குழந்தை கள் அங்கு வந்து, மீசையும் மிடுக்குமாய் இருக் கும் ஆணிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்த்தாலே கொடுமையாய் இருக்கிறது. இப்பிரிவு சற்று ஆறுதலாய் உள்ளது. பெண் காவலர்கள் எல்லோருமே அனுசரணையாய் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. பாலியல் பிரச் சனை என்று சொல்லும் போது, பெண்களாக இருந்தால், குழந்தைக்குப் பகிர்வது சற்று சுலபமாக இருக்கும்.


    இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.


    குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.



    மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற் றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண் டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்து வர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிற போது, மருத்துவர் கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத் தரவைக் கோரக் கூடாது. (அது வந்தால் தான் சிகிச்சை அளிப்போம் என்று சொல்பவர்கள் உண்டு)



    வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.



    விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வ ற்புறுத்தக் கூடாது.



    குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத் தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட் கக் கூடாது.



    குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்


    இச்சட்டத்தில் சில முக்கிய பிரிவுகள் உள்ளன. அதாவது, குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத் துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்ற வாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப் பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்ட னையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.



    மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற் றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்ற வாளி தான், தான் குற்றம் செய்ய வில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது.



    குற்றம் நடந்தால் புகார் கொடுக்க இன் றைக்கும் பெற்றோர் மத்தியில் தயக்கம் நிலவு கிறது. ஊரும், பெயரும் பகிரங்கப்படுத்தப் படும். அது பெரும் சங்கடத்தை விளைவிக்கும் என்று அஞ்சுகிறார்கள். தில்லி மாணவிக்கு நேர்ந்த கொடுமையில் தான், மாணவி பெயர் கடைசி வரை வெளியிடப் படவில்லை. அனு மதியில்லாமல் இந்த விவரங்கள் கொடுக்கப் படக் கூடாது என்பது தான் சரியானது. இச் சட்டம் இந்தப் பிரச்சனையைக் கணக்கில் எடுக்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடை யாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி யில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.



    இழப்பீடு/நிவாரணம்


    சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படை யிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்ற வாளியை அடையாளம் காண முடியாவிட் டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.


    மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக் கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந் தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட் டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.



    இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக் குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர் களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.



    தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அம லாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இது வரை மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையமே அமைக்கப்படவில்லை. இது முதலுக்கே மோசமான நிலை அல்லவா?



    எனவே, தமிழக அரசு, உடனடியாகக் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். மேற்கூறிய சட்டத்தை அமலாக்கக் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதுமான காவலர்கள், அரசு அதிகாரிகளை நியமனம் செய்ய வேண் டும். இது குறித்து விளம்பரப் படுத்த வேண் டும். முறையாக விசாரிக்காத, சட்டப் படி நடந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.



    இதர கோரிக்கைகளுடன், இச்சட்டம் குறித்த ஸ்தூலமான அம்சங்களையும் இணைத்து, தமிழகமெங்கும் பாலியல் வன்முறைக்கு எதிராகக் கனல் மூட்டுவோம்....!!



  4. #4
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    good share ரேணு.... படிக்க படிக்க வயிற்றை கலக்குது...


  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்&

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ரொம்ப அவசியமான தகவல் தேனு... Tfs...



    இப்போ நடக்குறது எல்லாம் அப்படித்தானே இருக்கு பிரியா....
    பெண் குழந்தைகள் இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    repplyuma and PriyagauthamH like this.

  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்&

    Quote Originally Posted by gloria View Post
    good share ரேணு.... படிக்க படிக்க வயிற்றை கலக்குது...


    ஆமா Glo... இதுக்கு ஒரு முடிவே இல்லை.... மனித மனம் அவ்வளவு வக்கிரமாக மாறிடுச்சு...!!

    repplyuma likes this.

  7. #7
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    இவ்ளோ சட்டம் இருந்து என்ன பயன்...? கூடவே பாதிக்க பாட்ட குழந்தைங்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை மற்றும் சப்போர்ட் கொடுக்க வேணும்...

    repplyuma and thenuraj like this.
    Priya


  8. #8
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்&

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    இவ்ளோ சட்டம் இருந்து என்ன பயன்...? கூடவே பாதிக்க பாட்ட குழந்தைங்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை மற்றும் சப்போர்ட் கொடுக்க வேணும்...


    அதுவும் ஒருபக்கம் நடக்குது பிரியா.... இருந்தாலும் நடந்த கொடுமையை மறக்க.., சிலகாலம் ஆகும் தானே....!!

    repplyuma and PriyagauthamH like this.

  9. #9
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    padikavea kashtama irukku .... intha mathiri samayathula kudumbam thaan muthal aala aravanaikanum...

    thenuraj likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #10
    vidhu_amu's Avatar
    vidhu_amu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    coimbatore
    Posts
    1,201

    Re: பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்Ī

    Rombavum avasiyamana thagaval then.... Pen kulanthaikal padum avaisthaiku oru mudivu epa than varumo

    thenuraj likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter