Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ


Discussions on "உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ" in "Parents" forum.


  1. #11
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    very nice thread jv ka..........



    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #12
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    ஒரு ஆறு வருடங்களுக்கு முன் அதாவது 2007 -ல் நாங்கள் டோஹவிளிருந்து இந்தியாவிற்கு விடுமுறைக்கு சென்றிந்தோம் .என் கணவர் விடுமுறை முடிந்து தோஹா திரும்பிவிட்டார் .நானும் குழந்தைகளும் என் பெற்றோருடன் என் பாட்டியை பார்க்க ஊருக்கு தனியார் பேருந்தில் இரவு பத்து மணிக்கு கிளம்பினோம் .அந்த தனியார் பேருந்து தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம்.அந்த பயணத்தை தீடீர் என்று முடிவு செய்ததால் டிக்கெட் எல்லாம் முடிந்து முன் வரிசையில்தான் கிடைத்தது.அதாவது கதவுக்கு பக்கத்தில் என் அப்பாவிற்கும் அதே நேர் வரிசையில் எங்களுக்கும் கிடைத்தது.இரு டிரைவர்கள் இருந்தார்கள் .என் சின்னபெண் மடியில் படுத்து உறங்கிவிட்டாள் .நான் திண்டிவனம் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்திருந்தேன் .என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் லோக்கல் பஸ்சில் ஏறினால் கூட நன்கு உறங்கிவிடுவார்கள் .அன்றும் அப்படித்தான் .திண்டிவனத்தில் இறங்கி முதலில் ஒட்டிய டிரைவர் மாறி இன்னொருவர் ஓட்ட ஆரம்பித்தார் .நானும் உறங்க ஆரம்பித்தேன் .தீடீர் என்று ஒரு சத்தம் யாரோ ஐயோ என்று கத்துவது போல் இருந்தது நான் உடனே என் மடியில் படுத்திருந்த பெண்ணை மறந்து எழுந்திருத்து பார்த்தேன் .

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  3. #13
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    ஒரு ஆறு வருடங்களுக்கு முன் அதாவது 2007 -ல் நாங்கள் டோஹவிளிருந்து இந்தியாவிற்கு விடுமுறைக்கு சென்றிந்தோம் .என் கணவர் விடுமுறை முடிந்து தோஹா திரும்பிவிட்டார் .நானும் குழந்தைகளும் என் பெற்றோருடன் என் பாட்டியை பார்க்க ஊருக்கு தனியார் பேருந்தில் இரவு பத்து மணிக்கு கிளம்பினோம் .அந்த தனியார் பேருந்து தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம்.அந்த பயணத்தை தீடீர் என்று முடிவு செய்ததால் டிக்கெட் எல்லாம் முடிந்து முன் வரிசையில்தான் கிடைத்தது.அதாவது கதவுக்கு பக்கத்தில் என் அப்பாவிற்கும் அதே நேர் வரிசையில் எங்களுக்கும் கிடைத்தது.இரு டிரைவர்கள் இருந்தார்கள் .என் சின்னபெண் மடியில் படுத்து உறங்கிவிட்டாள் .நான் திண்டிவனம் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்திருந்தேன் .என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் லோக்கல் பஸ்சில் ஏறினால் கூட நன்கு உறங்கிவிடுவார்கள் .அன்றும் அப்படித்தான் .திண்டிவனத்தில் இறங்கி முதலில் ஒட்டிய டிரைவர் மாறி இன்னொருவர் ஓட்ட ஆரம்பித்தார் .நானும் உறங்க ஆரம்பித்தேன் .தீடீர் என்று ஒரு சத்தம் யாரோ ஐயோ என்று கத்துவது போல் இருந்தது நான் உடனே என் மடியில் படுத்திருந்த பெண்ணை மறந்து எழுந்திருத்து பார்த்தேன் .
    Hi kavitha, is anything missing here.



  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by lakshkani View Post
    really i like this one...soon i ll share everything here.. actually i had learnt nothing..my life just went away and going on..am only shaping my life..but after my marriage my husband started to shape my life..so none gives me chance..

    Very happy to note that your husband is shaping your life....so he has given you the chance....isn't it.....eagerly waiting for your experiences.....please share with us....

    Jayanthy





  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Thanks Sakthi and Subha

    Jayanthy





  6. #16
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    பஸ் வேகமாக மோதிய சத்தம் கேட்டது பின் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை .வேகமாக ஓடிய வண்டி தலைகீழாக எதிலோ மோதி விழுந்து விட்டது .நானும் மயங்கிவிட்டேன் .சிறிது நேரத்திலேயே என் மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஒரே அழுகை குரல்களும் முனகல்களும் கேட்டது .அப்போதுதான் எனக்கு தெரிந்தது வண்டி ஆசிடென்ட் ஆகி இருப்பது .உடனே என் குழந்தைகளை தேடினேன் சிறிய பெண் சீட்டுக்கு அடியில் விழுந்திருந்தாள் .என் பெரிய பெண்ணோ சீட்டிலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல் அப்படியே உட்கந்திருந்தாள் .என் அம்மாவோ கிழே விழுந்து உதடுகள் கிழிந்து ரத்தத்துடன் அம்மா அப்பா கதறிய வண்ணம் அமர்ந்திருந்தார்கள் .இது நடந்தது இரவு ஒரு மணிக்கு .பிறகு என் அப்பாவை பார்த்தேன் சீட்டு காலியாக இருந்தது .பஸ்ஸின் முன் பக்கம் சுத்தமாக ஜாம் ஆகி இருந்தது .என் அப்பா எங்கே என்று தெரியவில்லை அம்மா வேறு அழ ஆரம்பித்து விட்டார்கள் .என் பெரிய பெண்ணின் சீட்டுக்கு அடியில் இரு கால்கள் தெரிந்தது .நான் உடனே குனித்து பார்த்து அப்பா தான் என்று செய்து கொண்டு மூச்சு இருகிறதா என்று நெஞ்சில் கை வைத்து பார்த்து தெரிந்து கொண்டு முகத்தை பார்த்தேன் முகம் முழுவதும் ரத்தம் .அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியவில்லை.அதற்குள் முதலில் வண்டி ஒட்டிய டிரைவரும் மற்றவர்களும் சேர்ந்து பஸ்ஸின் சைடு கண்ணாடியை உடைத்து அனைவரையும் வெளியேற்றினார்கள் .நாங்கள் எல்லோரும் வெளியே குதித்து விட்டோம் .பிறகு அந்த டிரைவரும் மற்றவர்களும் சேர்ந்து அப்பாவை வெளியே கொண்டு வந்தார்கள் .அப்போது அப்பாவிற்கு நில்லோருக்கும் னைவு வந்துவிட்டது .ஆனால் முகம் முழுவதும் ஜாம் ஆகிவிட்டது ரத்தம் நிற்காமல் கொட்டிகொண்டே இருந்தது .நான் அம்மாவையும் ,குழந்தைகளையும் அப்பாவை பார்க்கவேண்டாம் என்று கூறி வேறு இடத்தில் அமர வைத்துவிட்டேன் .பின் அந்த வழியே சென்ற பேருந்துகளின் மூலமாக விஷயம் அறிந்து ஆம்புலன்ஸ் ,போலீஸ் என்று எல்லோரும் வந்து விட்டார்கள் .வடலூர் என்ற இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனை இருந்தது அங்கு கொண்டு சென்றார்கள் .அங்கிருந்த டாக்டர் வந்து உடனே எல்லோருக்கும் டிரிட்மெண்ட் ஆரம்பித்தார் .அப்பாவை தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் சீரியசான காயங்கள் எதுவும் இல்லை .அதனால் அவர்கள் கிளம்பி விட்டார்கள் .நான் என் பெரியப்பாவிற்கு விஷயத்தை போன் பண்ணி சொன்னேன் .அங்கிருந்த டாக்டர் முகம் முழுவதும் டோட்டல் damage ஆகி இருப்பதால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டார் .அதுவரை கலங்கி இருந்த அம்மா உடனே எங்களுக்கு தெரிந்த மிகப்பெரிய மருத்துவர் ஒருவரின் பெயரை சொல்லி அவருக்கு போன் பண்ணி இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் .அவர் நீங்கள் அப்படியே வந்துவிட முடியாது கடலூரில் ஒரு மருத்துவமனை இருக்கிறது அங்கு சென்று emergency ட்ரீட்மென்ட் முடித்துக்கொண்டு அந்த மருத்துவரிடம் நிலைமையை நான் தெரிந்து கொண்ட பிறகு சென்னையில் எந்த மருத்துவமனைக்கு வரலாம் என்று சொல்லிவிட்டார்கள் .அதற்குள் அப்பாவும் எங்களை பார்த்து பயபடாதீர்கள் நான் நன்றாகதான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் .பின் அக்கம் பக்கத்திலிருந்த உறவினர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் .தீடீர் அப்பா ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் .அங்கிருந்த டாக்டர்களும் எவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்கிறேர்களோ அவ்வளவு நல்லது என்று சொல்லிவிட்டார்கள் .வந்திருந்த உறவினர்கள் யார் யாரோ அவர்களிடம் வீட்டிலிருந்த பணத்தை என்னிடம் கொடுத்து சென்றார்கள் அப்போது அம்மா என்னை கூப்பிட்டு அனைத்தையும் கணக்கில் வைத்துகொள் எதையும் மறக்காமல் சிறு செலவையும் எழுதி வை என்று சொன்னார்கள்.பிறகு கடலூர் வந்து ட்ரீட்மென்ட் முடித்து ஆம்புலன்சில் சென்னைக்கு கிளம்பினோம் .எங்களுடன் என் அத்தை பையன் ஆம்புலன்ஸில் துனனைக்கு வந்தார்கள் .அந்த ஆம்புலன்சில் ட்ரிப்ஸ் மாட்டுவதற்கான ஸ்டான்ட் இல்லாததால் அத்தை பையனே 31/2மணிநேரமும் கையில் சுமந்து கொண்டே வந்தார்கள் .சென்னையில் வந்து இறங்கியவுடன் அந்த டாக்டர் அங்கிள் ஏற்பாட்டின்படி மருத்துவமனை தயார் நிலையில் இருந்தது.சென்னையில் உள்ள உறவினர் அனைவரும் வந்து பெண்கள் அம்மாவையும் ,குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பை எடுத்து கொண்டனர் .ஆண்கள் மருத்துவமனை பொறுப்புகளை என்னுடன் பார்த்துகொண்டனர்.பின் இரு நாட்களுக்கு பிறகு பிளாஸ்டிக் surgery நடந்தது .சுமார் நான்கு மணி நேரம் நடந்தது.ஊரிலிருந்த உறவினர்களும் வந்து மருத்துவமனைக்கு போய் வருவதற்கும் சாப்பாடு கொண்டு செல்வதற்கும் டாக்டரை பார்த்து பேசுவதற்கும் உதவியாய் இருந்தனர் .பின் இருபது நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்தோம் .ஆக்சிடெண்ட் ஆன அந்த நிமிடத்தில் இருந்து ஆபரேஷன் வரை அப்பா டாக்டரிடத்தில் i am alright doctor ,nothing to worry என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் .அவர்களிடம் இருந்த மனோபலம் தான் அவர்களை காப்பற்றியது .அதுபோல வீட்டிற்கு வந்தவுடன் நான் எழுதி வைத்திருந்த கணக்குளை பார்த்து அவரவர்க்கு சேரவேண்டியவற்றை கொடுத்தார்கள் .அன்று என் அம்மாவிடம் அந்த சூழ்நிலையிலும் இருந்த தெளிவும் ,நிதானமும் தான் நான் அவர்களிடம் கற்றுகொண்டது .என் தந்தையின் willpower என்று சொல்வார்களே அதை நினைத்து ஆச்சர்யபடாத நாளே இல்லை .இவர்கள் இருவரும் உறவுகளை அனுசரித்து ,விட்டுகொடுத்து சென்றதனால் அன்று அத்தனை உறவுகளும் என் துணை நின்று என்னை சோர்ந்து போகவிடாமல் தாங்கின .இவைதான் உறவுகளால் நான் அடைந்த நன்மை .இன்று அப்பாவிற்கு 70yrs ஆகிறது பழைய முகம் அப்படியே திரும்பிவிட்டது .பெண்மையிலும் மெம்பரா இருக்காங்க அப்பப்ப கவிதைகள் எழதுவது drawing போடுவது என்று கலக்கிட்டு இருகாங்க .

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    ஒரு ஆறு வருடங்களுக்கு முன் அதாவது 2007 -ல் நாங்கள் டோஹவிளிருந்து இந்தியாவிற்கு விடுமுறைக்கு சென்றிந்தோம் .என் கணவர் விடுமுறை முடிந்து தோஹா திரும்பிவிட்டார் .நானும் குழந்தைகளும் என் பெற்றோருடன் என் பாட்டியை பார்க்க ஊருக்கு தனியார் பேருந்தில் இரவு பத்து மணிக்கு கிளம்பினோம் .அந்த தனியார் பேருந்து தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம்.அந்த பயணத்தை தீடீர் என்று முடிவு செய்ததால் டிக்கெட் எல்லாம் முடிந்து முன் வரிசையில்தான் கிடைத்தது.அதாவது கதவுக்கு பக்கத்தில் என் அப்பாவிற்கும் அதே நேர் வரிசையில் எங்களுக்கும் கிடைத்தது.இரு டிரைவர்கள் இருந்தார்கள் .என் சின்னபெண் மடியில் படுத்து உறங்கிவிட்டாள் .நான் திண்டிவனம் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்திருந்தேன் .என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் லோக்கல் பஸ்சில் ஏறினால் கூட நன்கு உறங்கிவிடுவார்கள் .அன்றும் அப்படித்தான் .திண்டிவனத்தில் இறங்கி முதலில் ஒட்டிய டிரைவர் மாறி இன்னொருவர் ஓட்ட ஆரம்பித்தார் .நானும் உறங்க ஆரம்பித்தேன் .தீடீர் என்று ஒரு சத்தம் யாரோ ஐயோ என்று கத்துவது போல் இருந்தது நான் உடனே என் மடியில் படுத்திருந்த பெண்ணை மறந்து எழுந்திருத்து பார்த்தேன் .


    அட......என்னாச்சு சுதா.....பயங்கர suspense ல நிறுத்திடீங்க....அப்புறம் என்னாச்சு......இங்க இந்தியா மாதிரி அங்கயும் கரண்ட் எதாவது கட் ஆகிடுச்சா .......

    ஆவலா காத்திட்டு இருக்கோம் பா.....

    Jayanthy





  8. #18
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by Parasakthi View Post


    Hi kavitha, is anything missing here.
    Hi sakthi,
    post pannumbodhu pathi erase ayiduch.so second postla potu irukken.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  9. #19
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by jv_66 View Post
    அட......என்னாச்சு சுதா.....பயங்கர suspense ல நிறுத்திடீங்க....அப்புறம் என்னாச்சு......இங்க இந்தியா மாதிரி அங்கயும் கரண்ட் எதாவது கட் ஆகிடுச்சா .......

    ஆவலா காத்திட்டு இருக்கோம் பா.....
    current cut illa akka net problem agi ellam erase agiduchu athanala marupadiyum post panninen.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    பஸ் வேகமாக மோதிய சத்தம் கேட்டது பின் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை .வேகமாக ஓடிய வண்டி தலைகீழாக எதிலோ மோதி விழுந்து விட்டது .நானும் மயங்கிவிட்டேன் .சிறிது நேரத்திலேயே என் மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஒரே அழுகை குரல்களும் முனகல்களும் கேட்டது .அப்போதுதான் எனக்கு தெரிந்தது வண்டி ஆசிடென்ட் ஆகி இருப்பது .உடனே என் குழந்தைகளை தேடினேன் சிறிய பெண் சீட்டுக்கு அடியில் விழுந்திருந்தாள் .என் பெரிய பெண்ணோ சீட்டிலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல் அப்படியே உட்கந்திருந்தாள் .என் அம்மாவோ கிழே விழுந்து உதடுகள் கிழிந்து ரத்தத்துடன் அம்மா அப்பா கதறிய வண்ணம் அமர்ந்திருந்தார்கள் .இது நடந்தது இரவு ஒரு மணிக்கு .பிறகு என் அப்பாவை பார்த்தேன் சீட்டு காலியாக இருந்தது .பஸ்ஸின் முன் பக்கம் சுத்தமாக ஜாம் ஆகி இருந்தது .என் அப்பா எங்கே என்று தெரியவில்லை அம்மா வேறு அழ ஆரம்பித்து விட்டார்கள் .என் பெரிய பெண்ணின் சீட்டுக்கு அடியில் இரு கால்கள் தெரிந்தது .நான் உடனே குனித்து பார்த்து அப்பா தான் என்று செய்து கொண்டு மூச்சு இருகிறதா என்று நெஞ்சில் கை வைத்து பார்த்து தெரிந்து கொண்டு முகத்தை பார்த்தேன் முகம் முழுவதும் ரத்தம் .அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியவில்லை.அதற்குள் முதலில் வண்டி ஒட்டிய டிரைவரும் மற்றவர்களும் சேர்ந்து பஸ்ஸின் சைடு கண்ணாடியை உடைத்து அனைவரையும் வெளியேற்றினார்கள் .நாங்கள் எல்லோரும் வெளியே குதித்து விட்டோம் .பிறகு அந்த டிரைவரும் மற்றவர்களும் சேர்ந்து அப்பாவை வெளியே கொண்டு வந்தார்கள் .அப்போது அப்பாவிற்கு நில்லோருக்கும் னைவு வந்துவிட்டது .ஆனால் முகம் முழுவதும் ஜாம் ஆகிவிட்டது ரத்தம் நிற்காமல் கொட்டிகொண்டே இருந்தது .நான் அம்மாவையும் ,குழந்தைகளையும் அப்பாவை பார்க்கவேண்டாம் என்று கூறி வேறு இடத்தில் அமர வைத்துவிட்டேன் .பின் அந்த வழியே சென்ற பேருந்துகளின் மூலமாக விஷயம் அறிந்து ஆம்புலன்ஸ் ,போலீஸ் என்று எல்லோரும் வந்து விட்டார்கள் .வடலூர் என்ற இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனை இருந்தது அங்கு கொண்டு சென்றார்கள் .அங்கிருந்த டாக்டர் வந்து உடனே எல்லோருக்கும் டிரிட்மெண்ட் ஆரம்பித்தார் .அப்பாவை தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் சீரியசான காயங்கள் எதுவும் இல்லை .அதனால் அவர்கள் கிளம்பி விட்டார்கள் .நான் என் பெரியப்பாவிற்கு விஷயத்தை போன் பண்ணி சொன்னேன் .அங்கிருந்த டாக்டர் முகம் முழுவதும் டோட்டல் damage ஆகி இருப்பதால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டார் .அதுவரை கலங்கி இருந்த அம்மா உடனே எங்களுக்கு தெரிந்த மிகப்பெரிய மருத்துவர் ஒருவரின் பெயரை சொல்லி அவருக்கு போன் பண்ணி இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் .அவர் நீங்கள் அப்படியே வந்துவிட முடியாது கடலூரில் ஒரு மருத்துவமனை இருக்கிறது அங்கு சென்று emergency ட்ரீட்மென்ட் முடித்துக்கொண்டு அந்த மருத்துவரிடம் நிலைமையை நான் தெரிந்து கொண்ட பிறகு சென்னையில் எந்த மருத்துவமனைக்கு வரலாம் என்று சொல்லிவிட்டார்கள் .அதற்குள் அப்பாவும் எங்களை பார்த்து பயபடாதீர்கள் நான் நன்றாகதான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் .பின் அக்கம் பக்கத்திலிருந்த உறவினர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் .தீடீர் அப்பா ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் .அங்கிருந்த டாக்டர்களும் எவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்கிறேர்களோ அவ்வளவு நல்லது என்று சொல்லிவிட்டார்கள் .வந்திருந்த உறவினர்கள் யார் யாரோ அவர்களிடம் வீட்டிலிருந்த பணத்தை என்னிடம் கொடுத்து சென்றார்கள் அப்போது அம்மா என்னை கூப்பிட்டு அனைத்தையும் கணக்கில் வைத்துகொள் எதையும் மறக்காமல் சிறு செலவையும் எழுதி வை என்று சொன்னார்கள்.பிறகு கடலூர் வந்து ட்ரீட்மென்ட் முடித்து ஆம்புலன்சில் சென்னைக்கு கிளம்பினோம் .எங்களுடன் என் அத்தை பையன் ஆம்புலன்ஸில் துனனைக்கு வந்தார்கள் .அந்த ஆம்புலன்சில் ட்ரிப்ஸ் மாட்டுவதற்கான ஸ்டான்ட் இல்லாததால் அத்தை பையனே 31/2மணிநேரமும் கையில் சுமந்து கொண்டே வந்தார்கள் .சென்னையில் வந்து இறங்கியவுடன் அந்த டாக்டர் அங்கிள் ஏற்பாட்டின்படி மருத்துவமனை தயார் நிலையில் இருந்தது.சென்னையில் உள்ள உறவினர் அனைவரும் வந்து பெண்கள் அம்மாவையும் ,குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பை எடுத்து கொண்டனர் .ஆண்கள் மருத்துவமனை பொறுப்புகளை என்னுடன் பார்த்துகொண்டனர்.பின் இரு நாட்களுக்கு பிறகு பிளாஸ்டிக் surgery நடந்தது .சுமார் நான்கு மணி நேரம் நடந்தது.ஊரிலிருந்த உறவினர்களும் வந்து மருத்துவமனைக்கு போய் வருவதற்கும் சாப்பாடு கொண்டு செல்வதற்கும் டாக்டரை பார்த்து பேசுவதற்கும் உதவியாய் இருந்தனர் .பின் இருபது நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்தோம் .ஆக்சிடெண்ட் ஆன அந்த நிமிடத்தில் இருந்து ஆபரேஷன் வரை அப்பா டாக்டரிடத்தில் i am alright doctor ,nothing to worry என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் .அவர்களிடம் இருந்த மனோபலம் தான் அவர்களை காப்பற்றியது .அதுபோல வீட்டிற்கு வந்தவுடன் நான் எழுதி வைத்திருந்த கணக்குளை பார்த்து அவரவர்க்கு சேரவேண்டியவற்றை கொடுத்தார்கள் .அன்று என் அம்மாவிடம் அந்த சூழ்நிலையிலும் இருந்த தெளிவும் ,நிதானமும் தான் நான் அவர்களிடம் கற்றுகொண்டது .என் தந்தையின் willpower என்று சொல்வார்களே அதை நினைத்து ஆச்சர்யபடாத நாளே இல்லை .இவர்கள் இருவரும் உறவுகளை அனுசரித்து ,விட்டுகொடுத்து சென்றதனால் அன்று அத்தனை உறவுகளும் என் துணை நின்று என்னை சோர்ந்து போகவிடாமல் தாங்கின .இவைதான் உறவுகளால் நான் அடைந்த நன்மை .இன்று அப்பாவிற்கு 70yrs ஆகிறது பழைய முகம் அப்படியே திரும்பிவிட்டது .பெண்மையிலும் மெம்பரா இருக்காங்க அப்பப்ப கவிதைகள் எழதுவது drawing போடுவது என்று கலக்கிட்டு இருகாங்க .

    எப்படிப்பட்ட அனுபவம் சுதா .......எப்பேர்பட்ட இக்கட்டிலிருந்து , மனோதைரியத்தால் மட்டுமே , இதிலிருந்து மீண்டு உள்ள உங்கள் அப்பாவை வணங்க இரு கைகள் போதாது .....சமயத்தில் உங்கள் அம்மாவும் சமயோசிதமாகச் செயல் பட்டு , நல்ல படியாக மீட்டு உள்ளார்கள் ......

    ஒ ....இங்கு உங்கள் அப்பாவும் மெம்பெர் ஆ ......மிக்க சந்தோஷம் .....

    நல்ல ஒரு படிப்பினை நம் எல்லாருக்கும்......

    இக்கட்டான சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எல்லாரும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சுதா.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter