User Tag List

Like Tree507Likes

உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ

Discussions on "உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ" in "Parents" forum.

 1. #61
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,727
  Blog Entries
  13

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by PriyagauthamH View Post
  Hi Thenu , unga life super aa irukum.... enn theriyumma panam kaasai vida manitharkai nesikarranga... anbhu , pasam ku mukiyathuvam kodukarathu unga children ku kooda avanga appa vai parthu intha nalla gunam varum....
  yes.... athethan naanum ninaikiren........ sothu panam serthu vaikkalainnalum punniyathai serthu vachi irukkomnu solluvangale, athu en appavum, husbandum than........ naamathan ithai perumaiya pesikirom, naama sonthangal enna solluranga theriyuma, " Illichavayan", "pozhaikka theriyathavan" ithuthan avanga rendu perukkum kidaitha patta peyarkal......

  Sponsored Links

 2. #62
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by thenuraj View Post
  என் அம்மாவிடம் இருந்து நான் கற்று கொண்டது----பொறுமை....குடும்பத்துல யார் என்ன தப்பா பேசினாலும் பொறுமையாக ஒதுங்கி போறதால நாம ஒன்னும் கெட்டு போய்ட மாட்டோம்னு சொல்லி சொல்லியே என்னையையும் எங்க அக்காவையும் வளர்த்தாங்க.. அதுக்கு அவங்களே ஒரு உதாரணமா இருந்தாங்க.. அதனால இப்ப எங்க கல்யாணத்துக்கு பிறகு எங்கள் மாமியார் வீட்டில் எல்லாரையும் அனுசரித்து பொறுமையாக இருப்பதன் மூலம் எங்களால் நல்ல பெயர் எடுக்க முடிந்தது.....

  அதே மாதிரி, எங்க அப்பாவிடம் இருந்து கற்றுகொண்டது----- உழைப்பு....உழைப்பு..... உழைப்பு.... அப்புறம் பேராசை கிடையாது, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அடிக்கடி சொல்லுபவர்...., தன்னுடைய சொத்தையும் கூட பிறந்தவர்களுக்காக விட்டு கொடுத்ததுன்னு நிறைய சொல்லலாம்.....
  ஏற்கனவே சுதா அவங்க அப்பா பற்றி சொல்லி இருந்த மாதிரி, 2 முறை ரொம்ப கவலைக்கிடமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் மன உறுதியினால் பிழைத்த வந்தவர் எங்க அப்பா...... எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல்,இந்த 70 வயதிலும் தானே உழைத்து சாப்பிடும் மனிதர்......அதே மாதிரி நாங்களும் இருக்க ஆசைபடுகிறோம்......

  ரொம்ப சந்தோஷமா இருக்கு தேனு ....உங்க அம்மா தானும் பொறுமையின் சிகரமா இருந்து , உங்க ரெண்டு பேரையும் அப்படியே வளர்த்து, புகுந்த வீட்ல நல்ல பேர் வாங்க வச்சு இருக்காங்களே.....அதை ரொம்ப ரொம்ப பாராட்டணும்....

  உங்க அப்பாவோட குணம் ரொம்ப அரியதா இருக்கு. ஆச்சரியமா இருக்கு

  Jayanthy

 3. #63
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by thenuraj View Post
  ithula enna jokena.... ennoda husbandkittayum athe gunam, innum ozhunga lifela settle aagatha thanoda thamikkaka engalukku varum sotthukkalai vittu tharennu sollittanga....... ithu eppadi irukku...... naan enna seiya mudiyum sollunga...........

  என்னப்பா இது .....இப்படி ஒரு அதிசியம் ....ஆச்சரியம் .....like father....like son இப்டிதானே சொல்வாங்க .....ஆனா இங்க like FIL....like SIL....இதை பொறுத்து போறதுக்கு நமக்கு ரொம்ப கஷ்டம்தான்

  Jayanthy

 4. #64
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,925
  Blog Entries
  1

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Good thread ka...

  Nice to know the positives & notable characters of persons even in the hard situations of their life. And the values of grannies, who is always precious.

  Glad to see that two generations (Dad & Daughter) in Penmai!!!

  Will pen my thoughts too here soon.

  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

 5. #65
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by Penmai View Post
  Good thread ka...

  Nice to know the positives & notable characters of persons even in the hard situations of their life. And the values of grannies, who is always precious.

  Glad to see that two generations (Dad & Daughter) in Penmai!!!

  Will pen my thoughts too here soon.

  Thanks Ilavarasi.....

  Yes....we can learn a lot from the experiences of others..

  Waiting for your experiences also.

  Jayanthy

 6. #66
  kirthika99's Avatar
  kirthika99 is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  karkuzhali shanmugam
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  saudi arabia
  Posts
  5,062
  Blog Entries
  19

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Super thread Jayanthi!!!
  appaaaa evlo vishayangal!!!!!!

  arumaiyana thread pa, & inga ellarum kathukitta vishayngalum super,
  Thanks!!!

  Regards,
  Kirthika

  A smile is a curve but it makes everything straight

 7. #67
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by kirthika99 View Post
  Super thread Jayanthi!!!
  appaaaa evlo vishayangal!!!!!!

  arumaiyana thread pa, & inga ellarum kathukitta vishayngalum super,
  Thanks!!!

  Thanks Krithika.

  Jayanthy

 8. #68
  kavitha_rishi's Avatar
  kavitha_rishi is offline Commander's of Penmai
  Real Name
  sudha
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  doha
  Posts
  1,902

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by thenuraj View Post
  என் அம்மாவிடம் இருந்து நான் கற்று கொண்டது----பொறுமை....குடும்பத்துல யார் என்ன தப்பா பேசினாலும் பொறுமையாக ஒதுங்கி போறதால நாம ஒன்னும் கெட்டு போய்ட மாட்டோம்னு சொல்லி சொல்லியே என்னையையும் எங்க அக்காவையும் வளர்த்தாங்க.. அதுக்கு அவங்களே ஒரு உதாரணமா இருந்தாங்க.. அதனால இப்ப எங்க கல்யாணத்துக்கு பிறகு எங்கள் மாமியார் வீட்டில் எல்லாரையும் அனுசரித்து பொறுமையாக இருப்பதன் மூலம் எங்களால் நல்ல பெயர் எடுக்க முடிந்தது.....

  அதே மாதிரி, எங்க அப்பாவிடம் இருந்து கற்றுகொண்டது----- உழைப்பு....உழைப்பு..... உழைப்பு.... அப்புறம் பேராசை கிடையாது, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அடிக்கடி சொல்லுபவர்...., தன்னுடைய சொத்தையும் கூட பிறந்தவர்களுக்காக விட்டு கொடுத்ததுன்னு நிறைய சொல்லலாம்.....
  ஏற்கனவே சுதா அவங்க அப்பா பற்றி சொல்லி இருந்த மாதிரி, 2 முறை ரொம்ப கவலைக்கிடமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் மன உறுதியினால் பிழைத்த வந்தவர் எங்க அப்பா...... எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல்,இந்த 70 வயதிலும் தானே உழைத்து சாப்பிடும் மனிதர்......அதே மாதிரி நாங்களும் இருக்க ஆசைபடுகிறோம்......
  Hi Thenu,
  arumaya ezhuthi irukeengha.antha kalathu periyavanghala niraya per ippadithan mana thayiriyathodum,nalla manthodum irukangha.

  என் கிறுக்கல்கள்

  என் கிறுக்கல்கள்-comments

 9. #69
  kavitha_rishi's Avatar
  kavitha_rishi is offline Commander's of Penmai
  Real Name
  sudha
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  doha
  Posts
  1,902

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  hi...................

  jv_66 likes this.
  என் கிறுக்கல்கள்

  என் கிறுக்கல்கள்-comments

 10. #70
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,925
  Blog Entries
  1

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  மனிதனாக பிறந்த எல்லோரிடமும் நல்ல குணமும் உண்டு தீய குணமும் உண்டு. இதோ நான் வியந்த நற்குணங்கள் சில உறவுகளிடமிருந்து.

  முதலில் நான் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசை படுவது அப்பாவின் அப்பாவை (தாத்தா) பற்றி. அவருடைய வீரமும், விவசாயத்தை எவ்வளவு உயிராக நேசித்தார் என்றும் எங்களுக்கு தெரியும், சைவத்தின் மேன்மையை அறிந்த அவர் தினமும் சிவ வழிபாட்டை மேற்கொண்டார். சிறந்த தீர்க்கதரிசியும் கூட. அவர் இறந்து கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்றும் எங்கள் வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் அவர் ஏற்கனவே சொல்லியபடி நடக்கும். எதிர்காலத்தை அவ்வளவு தீர்க்கமாக யூகித்து சொல்வார்.

  தாத்தாவும் அவர்களுக்கு முன் தலைமுறையினரும் கோவில்களுக்கு செய்த தானம் தர்மங்கள் நிறைய உண்டு. ஆனால் தாத்தாவோ இதைப்பற்றி வெளியில் எதுவுமே சொல்ல கூட மாட்டார். கடவுளுக்கு இதை செய்தேன் என்று சொல்வது கூட பாவம் என்பார். கடைசிவரை திருவண்ணாமலை மலையை சுற்றி வந்தது அவருடைய கால்கள்.

  அடுத்து எங்கள் பாட்டி, அந்த காலத்திலே மெத்த படித்தவர், ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும் அவரை பற்றி அவரின் எண்ணம் என்னவென்று சரியாக கிரகித்து கொண்டு, நல்லவராக இருந்தால் பழுகுவார், தீயவராக இருந்தால் அவரிடம் இருந்து அழகாக விலகி இருப்பார். குழந்தை வளர்ப்பை பற்றி சொல்லிக்கொடுப்பதில் அவர் ஒரு பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். வீண் அரட்டை பேச்சுக்கள் எதுவுமே இருக்காது, என் நேரமும் குடும்பத்தை பார்த்துக்கொள்வது இறைவழிபாடு இதில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். சிவபுராணம் ஒதாத நாளே இல்லை என்று சொல்லலாம், அவ்வளவு பக்தி.

  அடுத்து எங்கள் அத்தை, தாத்தாவின் தங்கை, சிறு வயதிலேயே தன் கணவனை இழந்தவர், ஆனால் அவரின் அண்ணன் குழந்தைகளை தன் குழந்தையாக வளர்த்தவர். மிக மிக தைரியசாலி, வைராக்கியத்துடன் வாழ்ந்தவர். எப்போதுமே நீதி நியாயதிற்கு மிகவும் கட்டுபட்டவர். சைவ நெறியை பிறழாது பின்பற்றியவர், நெற்றியில் திருநீறு இன்றி அவரை நாங்கள் கண்டதே இல்லை. இவரது கணவன் வாழ்ந்த வீட்டில் தான் தன் கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று வாழ்ந்தார். அத்தை அவரின் கடைசி ஆசையாக சொன்னது அவர் உடல் தன் கணவனின் சமாதிக்கு அருகே புதைக்கவேண்டும் என்று, அதேப்போல் நிலத்தில் உள்ள மாமாவின் சமாதிக்கு அருகே அவர் உடலும் அடக்கம் செய்தனர்.
  இவருடைய மாமனார் அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து அந்தக்காலத்தில் எங்கள் ஊருக்கு அருகில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் அணையை கட்டினார். ஆங்கிலேயே அரசின் எதிர்ப்புக்கு சற்றும் அஞ்சாமல், இந்த அணை கட்டினால் தான் இதை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயம் தழைக்கும், முப்போகம் நெல் விளையும் என்று மிக தைரியமாக கட்டினார். அதனை பாராட்டி அப்போது அங்கு வந்த ஆஷ் கலெக்டர் ஒரு பெரிய மர பீரோ ஒன்றை பரிசாக கொடுத்தாராம், இப்போதும் அந்த பீரோ வீட்டில் இருக்கின்றது.

  அடுத்து என்னை பெரிதும் கவர்ந்தவர் அம்மாவழி தாத்தா, அவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார் ஆனால் எல்லோரிடமும் அன்பாகவும் மிகவும் எளிமையாகவும் இருப்பார். விவசாயம் தான் அங்கும் பிரதானமான தொழில், வீட்டிலும், நிலத்திலும் வேலை செய்ய கிட்டத்தட்ட 60-70பேர் இருந்தாலும், அவர் துணியை கூட அவர் தான் துவைப்பார். சாப்பாட்டினை அளவாக தான் உண்பார், சாப்பிடும் போது வயிற்றில் துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு தான் சாப்பிடுவார் ஏன் என்றால் உணவு ருசியாக இருந்து அதிகம் சாப்பிட்டு விட கூடாது என்று. எப்போதும் மிதிவண்டியை மட்டுமே உபயோகிப்பார், கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 30-50 கிமீ வரை மிதிவண்டியிலே பயணம் செய்வார். வள்ளலாரின் தீவிர அடியவர். அவர் போகாத கோவில்கள் இல்லை எனலாம், அந்த அளவிற்கு எப்போதுமே கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டே இருப்பார்.

  அடுத்து எங்கள் பெரியம்மா, வீட்டிற்கு மூத்த மருமகள். சிரித்த முகமே அவரது அழகு, எவ்வளவு பிரச்னை என்றாலும் சிரித்த முகத்துடனே எதிர்நோக்குவார். அவர் முகம் சுளித்து நான் ஒரு முறைகூட பார்த்ததில்லை. விருந்தோம்பல் என்றால் என்னவென்று அவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு வீட்டிற்கு வருபவரை அன்போடு உபசரிப்பார். மிகவும் பொறுமைசாலி, குழந்தைகளை மிகவும் அன்போடு கவனித்து கொள்வார்.

  இப்போது நான் மேலே சொன்னவர்கள் யாரும் உயிருடன் இல்லை. இவர்கள் அனைவருடனும் இன்னும் சற்று காலம் வாழ்ந்திருக்கலாம் என்று மனதிற்கு தோன்றும். நாங்கள் அனைவருமே கூட்டுக்குடும்பமாக தான் வாழ்ந்தோம். ஆனால் இவர்களின் மறைவுக்கு பிறகு, பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை போன்ற காரணத்தினால் இன்று தனிக் குடும்பங்களாக ஆகிவிட்டது.

  இந்த உறவுகளைப் போல் நான் அடுத்ததா நேசித்தது ஒரு உயிரற்ற பொருள் ஆனால் என்னைப்பொறுத்த வரை ஓர் உயிருள்ள இவர்கள் அனைவரும் வாழ்ந்த வீடு. அப்பாவோட வீடும் சரி அம்மா வீடும் சரி பெரிய வீடு. அப்பாவீடு செட்டிநாடு மாடலில் கட்டப்பட்ட வீடு, கிட்டத்தட்ட 150வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றும் மாறாமல் அதே பழமையோடு இருக்கும். அம்மாவின் அப்பாவீடு கேரளா மாடலில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 100வருடங்கள் ஆகிறது. இரண்டு வீட்டிலும், வீட்டின் முன் பக்கம் பெரிய திண்ணைகள், நிலைவாயில்கள், நடை, தாழ்வாரம் முழுவதும் பெரிய அலங்காரத் தூண்கள், வாசல், முன்கட்டு, பின்கட்டு, முற்றம், வீட்டின் பின் பெரிய தோட்டம் என்று அழகாக இருக்கும். அந்த இரண்டு வீடுமே பல புண்ணிய ஜீவன்கள் வாழ்ந்தது போல் எனக்கு ஒரு உணர்வு. இன்றும் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது என்னையும் அறியாமல் ஓர் இனம் புரியாத உணர்வுப் பிடியில் சிக்கிக் கொள்வேன். இவர்கள் எல்லோரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, இயற்கையை நேசிப்பது, நம் வருமானத்தில் ஒரு சிறு பகுதியாவது தானம், தர்மம் செய்வது, மாதம் ஒருமுறை ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வது, எளிமையாக வாழ்வது என்று நிறைய உண்டு!!!

  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter