Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ


Discussions on "உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ" in "Parents" forum.


  1. #71
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by penmai View Post
    மனிதனாக பிறந்த எல்லோரிடமும் நல்ல குணமும் உண்டு தீய குணமும் உண்டு. இதோ நான் வியந்த நற்குணங்கள் சில உறவுகளிடமிருந்து.

    முதலில் நான் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசை படுவது அப்பாவின் அப்பாவை (தாத்தா) பற்றி. அவருடைய வீரமும், விவசாயத்தை எவ்வளவு உயிராக நேசித்தார் என்றும் எங்களுக்கு தெரியும், சைவத்தின் மேன்மையை அறிந்த அவர் தினமும் சிவ வழிபாட்டை மேற்கொண்டார். சிறந்த தீர்க்கதரிசியும் கூட. அவர் இறந்து கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்றும் எங்கள் வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் அவர் ஏற்கனவே சொல்லியபடி நடக்கும். எதிர்காலத்தை அவ்வளவு தீர்க்கமாக யூகித்து சொல்வார்.

    தாத்தாவும் அவர்களுக்கு முன் தலைமுறையினரும் கோவில்களுக்கு செய்த தானம் தர்மங்கள் நிறைய உண்டு. ஆனால் தாத்தாவோ இதைப்பற்றி வெளியில் எதுவுமே சொல்ல கூட மாட்டார். கடவுளுக்கு இதை செய்தேன் என்று சொல்வது கூட பாவம் என்பார். கடைசிவரை திருவண்ணாமலை மலையை சுற்றி வந்தது அவருடைய கால்கள்.

    அடுத்து எங்கள் பாட்டி, அந்த காலத்திலே மெத்த படித்தவர், ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும் அவரை பற்றி அவரின் எண்ணம் என்னவென்று சரியாக கிரகித்து கொண்டு, நல்லவராக இருந்தால் பழுகுவார், தீயவராக இருந்தால் அவரிடம் இருந்து அழகாக விலகி இருப்பார். குழந்தை வளர்ப்பை பற்றி சொல்லிக்கொடுப்பதில் அவர் ஒரு பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். வீண் அரட்டை பேச்சுக்கள் எதுவுமே இருக்காது, என் நேரமும் குடும்பத்தை பார்த்துக்கொள்வது இறைவழிபாடு இதில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். சிவபுராணம் ஒதாத நாளே இல்லை என்று சொல்லலாம், அவ்வளவு பக்தி.

    அடுத்து எங்கள் அத்தை, தாத்தாவின் தங்கை, சிறு வயதிலேயே தன் கணவனை இழந்தவர், ஆனால் அவரின் அண்ணன் குழந்தைகளை தன் குழந்தையாக வளர்த்தவர். மிக மிக தைரியசாலி, வைராக்கியத்துடன் வாழ்ந்தவர். எப்போதுமே நீதி நியாயதிற்கு மிகவும் கட்டுபட்டவர். சைவ நெறியை பிறழாது பின்பற்றியவர், நெற்றியில் திருநீறு இன்றி அவரை நாங்கள் கண்டதே இல்லை. இவரது கணவன் வாழ்ந்த வீட்டில் தான் தன் கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று வாழ்ந்தார். அத்தை அவரின் கடைசி ஆசையாக சொன்னது அவர் உடல் தன் கணவனின் சமாதிக்கு அருகே புதைக்கவேண்டும் என்று, அதேப்போல் நிலத்தில் உள்ள மாமாவின் சமாதிக்கு அருகே அவர் உடலும் அடக்கம் செய்தனர்.
    இவருடைய மாமனார் அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து அந்தக்காலத்தில் எங்கள் ஊருக்கு அருகில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் அணையை கட்டினார். ஆங்கிலேயே அரசின் எதிர்ப்புக்கு சற்றும் அஞ்சாமல், இந்த அணை கட்டினால் தான் இதை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயம் தழைக்கும், முப்போகம் நெல் விளையும் என்று மிக தைரியமாக கட்டினார். அதனை பாராட்டி அப்போது அங்கு வந்த ஆஷ் கலெக்டர் ஒரு பெரிய மர பீரோ ஒன்றை பரிசாக கொடுத்தாராம், இப்போதும் அந்த பீரோ வீட்டில் இருக்கின்றது.

    அடுத்து என்னை பெரிதும் கவர்ந்தவர் அம்மாவழி தாத்தா, அவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார் ஆனால் எல்லோரிடமும் அன்பாகவும் மிகவும் எளிமையாகவும் இருப்பார். விவசாயம் தான் அங்கும் பிரதானமான தொழில், வீட்டிலும், நிலத்திலும் வேலை செய்ய கிட்டத்தட்ட 60-70பேர் இருந்தாலும், அவர் துணியை கூட அவர் தான் துவைப்பார். சாப்பாட்டினை அளவாக தான் உண்பார், சாப்பிடும் போது வயிற்றில் துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு தான் சாப்பிடுவார் ஏன் என்றால் உணவு ருசியாக இருந்து அதிகம் சாப்பிட்டு விட கூடாது என்று. எப்போதும் மிதிவண்டியை மட்டுமே உபயோகிப்பார், கிட்டத்தட்ட ஒருநாளைக்கு 30-50 கிமீ வரை மிதிவண்டியிலே பயணம் செய்வார். வள்ளலாரின் தீவிர அடியவர். அவர் போகாத கோவில்கள் இல்லை எனலாம், அந்த அளவிற்கு எப்போதுமே கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டே இருப்பார்.

    அடுத்து எங்கள் பெரியம்மா, வீட்டிற்கு மூத்த மருமகள். சிரித்த முகமே அவரது அழகு, எவ்வளவு பிரச்னை என்றாலும் சிரித்த முகத்துடனே எதிர்நோக்குவார். அவர் முகம் சுளித்து நான் ஒரு முறைகூட பார்த்ததில்லை. விருந்தோம்பல் என்றால் என்னவென்று அவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு வீட்டிற்கு வருபவரை அன்போடு உபசரிப்பார். மிகவும் பொறுமைசாலி, குழந்தைகளை மிகவும் அன்போடு கவனித்து கொள்வார்.

    இப்போது நான் மேலே சொன்னவர்கள் யாரும் உயிருடன் இல்லை. இவர்கள் அனைவருடனும் இன்னும் சற்று காலம் வாழ்ந்திருக்கலாம் என்று மனதிற்கு தோன்றும். நாங்கள் அனைவருமே கூட்டுக்குடும்பமாக தான் வாழ்ந்தோம். ஆனால் இவர்களின் மறைவுக்கு பிறகு, பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை போன்ற காரணத்தினால் இன்று தனிக் குடும்பங்களாக ஆகிவிட்டது.

    இந்த உறவுகளைப் போல் நான் அடுத்ததா நேசித்தது ஒரு உயிரற்ற பொருள் ஆனால் என்னைப்பொறுத்த வரை ஓர் உயிருள்ள இவர்கள் அனைவரும் வாழ்ந்த வீடு. அப்பாவோட வீடும் சரி அம்மா வீடும் சரி பெரிய வீடு. அப்பாவீடு செட்டிநாடு மாடலில் கட்டப்பட்ட வீடு, கிட்டத்தட்ட 150வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றும் மாறாமல் அதே பழமையோடு இருக்கும். அம்மாவின் அப்பாவீடு கேரளா மாடலில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 100வருடங்கள் ஆகிறது. இரண்டு வீட்டிலும், வீட்டின் முன் பக்கம் பெரிய திண்ணைகள், நிலைவாயில்கள், நடை, தாழ்வாரம் முழுவதும் பெரிய அலங்காரத் தூண்கள், வாசல், முன்கட்டு, பின்கட்டு, முற்றம், வீட்டின் பின் பெரிய தோட்டம் என்று அழகாக இருக்கும். அந்த இரண்டு வீடுமே பல புண்ணிய ஜீவன்கள் வாழ்ந்தது போல் எனக்கு ஒரு உணர்வு. இன்றும் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது என்னையும் அறியாமல் ஓர் இனம் புரியாத உணர்வுப் பிடியில் சிக்கிக் கொள்வேன். இவர்கள் எல்லோரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, இயற்கையை நேசிப்பது, நம் வருமானத்தில் ஒரு சிறு பகுதியாவது தானம், தர்மம் செய்வது, மாதம் ஒருமுறை ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வது, எளிமையாக வாழ்வது என்று நிறைய உண்டு!!!


    பிரமிக்க வைக்கிறது இளவரசி , உங்கள் உறவுகளின் மேன்மைகள் .

    பிறருக்கு உதவி செய்வதை வெளியில் கூட சொல்லாத தாத்தாவின் குணம் ஒரு பெரிய அதிசயம்


    பார்த்தவுடன் ஒருவரை கணிக்கும் பாட்டியின் குணம் வியக்கக் கூடியது .

    உங்கள் அத்தையின் குணமும் மேன்மையானது .

    அவரின் மாமனாரின் , பிறருக்கு உதவும் குணம், அதுவும் சமுதாயத்துக்கே ஒரு பெரிய நன்மை செய்யக் கூடிய குணத்தை என்னென்பது......கையெடுத்துக் கும்பிட வேண்டும் அவரை .

    தாத்தா , பெரியம்மாவின் குணங்களும் அருமை .

    உங்கள் வீடு வேறு உங்களை அவ்வளவு வசப்படுத்துகிறதா .....கேட்பதற்க்கே, இனிமையாக இருக்கிறது.


    இவர்கள் எல்லோரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, இயற்கையை நேசிப்பது, நம் வருமானத்தில் ஒரு சிறு பகுதியாவது தானம், தர்மம் செய்வது, மாதம் ஒருமுறை ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வது, எளிமையாக வாழ்வது என்று நிறைய உண்டு


    எல்லாவற்றிற்கும் சிகரம் வைப்பதே இதுதான் .....உங்களின் இந்த குணம் சொற்களுக்கு அப்பாற்பட்டது .

    மிக்க நன்றி இளவரசி, பகிர்ந்தமைக்கு .



    Sponsored Links
    Last edited by jv_66; 1st Jul 2013 at 02:00 PM.
    Penmai, Parasakthi, dania and 4 others like this.
    Jayanthy





  2. #72
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    என் மகன் சிறு குழந்தையாக பள்ளிக்கு செல்லும்போது , நான் சில சமயம் , அவன் கிளம்பும் சமயத்தில் , ஏதாவது திட்டிக் கொண்டு இருப்பேன், ஏதாவது சரியாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால்.

    அப்போது ஒரு நாள் என் மாமியார் , என்னிடம் , " யார் வெளியில் கிளம்பினாலும் , அவர்களை எதுவும் எதிர்மறையாகச் சொல்லாதே .....அவர்கள் தெருவில் செல்லும் போது, கவனம் சிதறி, விபத்தில் சிக்க வாய்ப்பு உண்டு ....நாள் முழுவதும் கூட மனதில் அதே ரீங்கரிக்கும்" என்று சொன்னார் .

    எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை. அன்றிலிருந்து இதை சிரமேற்கொண்டு கடைபிடித்து வருகிறேன்


    Jayanthy





  3. #73
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    இவர்களை பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அக்கா... ஆனால் அவை இந்த தலைப்பிற்கு தொடர்பில்லாமல் போகிவிடும்...

    நல்லாரைக் காண்பதுவும் நன்று நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்று என்பார்கள், அதுபோல் நல்ல மனம்கொண்டவர்களோடு வாழ்ந்தேன் என்று நினைப்பதே மன நிறைவைத் தரும்...


    jv_66, dania, thenuraj and 4 others like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #74
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    இளாக்கா,

    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றே சொல்ல வேண்டும்....

    அவர்களுடன் வாழ்ந்த காலம் போதாது என்று சொன்னீர்கள்....

    ஆனாலும் அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் விலை மதிப்பற்ற வைரத்துளிகள் என்றே சொல்ல வேண்டும்...

    கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்ததுக்காய்....


    ஏனெனில் என்னுடைய அம்மாவின் பெற்றோராகட்டும் அப்பாவின் பெற்றோர் ஆகட்டும்...புகைப்பட வாயிலாக மட்டுமே அவர்களை நானறிவேன்....

    அவர்கள் உயிருடன் இருந்த காலங்களில் கூட நான் ஓர் ஊரிலும் அவர்கள் ஓர் ஊரிலுமாகதான் இருந்தோம்....

    ஆனாலும் என்னுடைய அம்மம்மா நான் அம்மாவிடம் கேட்டு அழுதேன் என்று எனக்காய் கொடுத்து விட்ட ஒரு கை மணிக்கூடு இன்றுவரை அவர்களால் எனக்கு கிடைத்த பொக்கிசமாய் பாதுகாக்கிறேன்...

    அதனுடன் வாழும் பாக்கியமாவது எனக்கு இருக்க வேண்டும் என்பதற்காய்....

    மனத்தார சொல்கிறேன் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்....

    மிக்க மகிழ்ச்சி!!!!

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #75
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    உண்மை தான் நிதா... இன்றைய வாழ்கை சூழ்நிலையில் உங்களைப்போல தாத்தா பாட்டியுடன் வாழும் சூழல் பலருக்கு வாய்பதில்லை. எதிர்பார்ப்பற்ற அன்பு அவர்களிடம் தான் முழுமையாக கிடைக்கும். எங்களுக்கு இவர்களோடு வாழும் சூழ்நிலை அமைந்ததே ஒரு பெரும் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் எந்த அளவிற்கு தாத்தா, பாட்டி மற்ற உறவுகளுடன் ஒன்றாக இருந்தோமோ அதேபோன்று என் மகனால் இருப்பது சற்று கடினம் தான், ஆனால் முடிந்தவரை, விடுமுறை நாட்கள் மற்றும் ஒரு சில பண்டிகையின் போது அவர்களுடன் தான் இருப்போம்.

    இன்றைக்கும் வாழ்கையில் எடுக்கும் பல முடிவுகள், தாத்தா, பாட்டி, அத்தை எடுத்தால் எப்படி தீர்கமா இருக்குமோ அப்படிதான் இருக்கணும்னு நினைப்போம். அந்த அளவிற்கு எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்டது அவர்கள் வாழ்கை முறை. அவர்கள் சமாதியில் அனைவருக்கும் கோவில் கட்டி வழிபாடு செய்கிறோம். அப்பாவுக்கு அந்த சமாதியில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும், எந்த வேலையாக இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிடுவார். வெளியூர் பயணங்கள் கூட முடிந்தவரை தவிர்த்துவிட்டு இதை செய்வார், அப்படி செல்ல நேர்ந்தாலும் வீட்டில் யாராவது ஒருவர் அங்கிருந்து விளக்கேற்ற சொல்வார்.


    sintu lingam, jv_66, dania and 3 others like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #76
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    மிகவும் அழகான, ஆழமான திரியை ஆரம்பித்து இருக்கிறீர்கள் ஜெயந்தி அக்கா..
    ஒவ்வொருவரின் பகிர்விலும் பல நல்ல சிந்தனைகளும், உண்மைகளையும் கற்று கொள்ளலாம்.


    உங்கள் தாயாரிடம் நீங்கள் கற்று கொண்ட துணிவு மிகவும் அருமை. உங்கள் மாமியார் கூறியதாக நீங்கள் எழுதியுள்ள வார்த்தைகள் உண்மையிலும்,உண்மை.


    சுதா அக்கா, உங்கள் பகிர்வில் மனம் கொஞ்சம் திகிலுற்றது..நீங்களும், உங்கள் தந்தை, தாயாரும், குழந்தைகளும் அதிலிருந்து மீண்டு வந்த விதமும், உங்களுக்கு உதவிய அனைத்து உறவினர்களின் உதவியையும் நினைத்து மனம் நிறைகின்றது.


    ஸ்ரீமதி சகோதரி, உங்கள் பகிர்வில் இருந்த யதார்த்தமும், பாட்டியின் அனுபவ வைத்திய முறையும் அருமை. கூட்டுக்குடும்பத்தின் சிறப்பையும், அதற்கு தேவைப்படும் குணாதிசயங்களையும் நல்ல முறையில் எடுத்து கூறியமைக்கு நன்றி.


    தேனு,உங்கள் தாயாரின் பொறுமை ஆச்சரிய பட வைக்கிறது. உங்கள் தந்தை மற்றும் கணவரின் தாராள குணம் உங்கள் குடும்பத்திற்கு புண்ணியம் தேடி தரும் நிச்சயமாக.என் தந்தையும், என் கணவரும் கூட இதே போல் தான். இதை வாசித்ததும், அந்த ஞாபகம் வந்து விட்டது.எனக்கு


    பிரியா,உங்கள் தந்தையின் பொறுமை பாராட்ட பட வேண்டியது. நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான்.


    நானும் அந்த காரணத்திற்காக தான் தற்போது வேலைக்கு செல்லவில்லை. என் தாயார் உயர்படிப்பு படித்திருந்தும், என் தந்தையின் வேலை நிமித்தம்( அடிக்கடி இட மாற்றங்கள் உண்டு) எனக்காக வேலைக்கு செல்லாமல் என்னை நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். படிப்பிலிருந்து, கலைகள் முதல் அனைத்து விஷயங்களிலும் எனக்கு ஊக்கமும், தைரியமும் அளித்து, என் கூச்ச சுபாவத்தை களைந்து தன்னம்பிக்கை ஊட்டி என்னை ஆளாக்கியவர்கள். நேர்மை, இது நான் அவர்களிடம் கற்ற மிக முக்கியமான விஷயம்.


    உங்கள் அம்மம்மாவை பற்றி நீங்கள் குறிப்பிட்டதும், எனக்கும் என் பாட்டியின் நினைவு வந்து விட்டது.. எனக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களிடமிருந்து கற்றது அதீத பொறுமையும்,நிதானமும். இன்று வரை அதை நினைத்து வியப்பதுண்டு. நகைச்சுவையாக பேசி மற்றவர்களை மகிழ்விப்பவ்ரகள். எப்போதும் எனக்கு நல்ல விஷயங்களை கூறி, நல்ல கதைகள் மூலம் நற்பண்புகளை கற்று தந்தவர். மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். இப்போது இவ்வுலகில் இல்லாவிட்டாலும், இன்றும் எனக்கு எதாவது துன்பம் என்றால் நான் நினைப்பது அவர்களை தான். அவர்களும் எனக்கு தெய்வமாக இருந்து உதவி, அந்த துன்பத்தை போக்கி விடுவார்கள்..இது விந்தையாக இருந்தாலும், உண்மை.


    இளவரசி மேடம், உங்கள் பகிர்வு மிகவும் அருமை. ஒவ்வொருத்தரின் நற்பண்புகளையும் தெளிவாக கூறியுள்ளீர்கள். இறுதியாக நீங்கள் கூறிய அந்த புராதான வீடுகள் பற்றிய விஷயங்களும், உங்கள் உணர்வு பிணைப்பும், முத்தைய்பாக உங்கள் முடிவுரை மிகவும் அழகு.
    பகிர்விற்கு நன்றி.


    நிதா, நீங்கள் உங்கள் பாட்டி, தாத்தாவுடன் வளர முடியாததை நினைத்து வருந்த வேண்டாம்..அவர்கள் ஆசிர் எப்போதும் உங்களுடன் இருக்கும்.. அந்த மனிகூடை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பது நெஞ்சை தொடுகின்றது.. நானும் கூட என் பாட்டியின் திருமண பட்டின் ஒரு பகுதி இன்றும் வைத்துள்ளேன்..அதில் ஒரு மகிழ்ச்சி.

    Last edited by sujibenzic; 2nd Jul 2013 at 01:10 AM.

  7. #77
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    மிகவும் அருமையான தலைப்பு..

    நான் திருமணதிற்கு பின்பு என் மாமியாரிடம் கற்று கொண்டது மிகவும் அதிகம். திருமணமாகி வந்த உடன் அவர் முதல் சொன்ன வார்த்தை "ஏன் மாமியார் என்னை மகள் போன்று தான் பார்த்து கொண்டார்கள். அதே போல் தான் நானும் இருப்பேன் என்று". இன்று வரை அந்த வார்த்தை மாறவில்லை. அவரிடம் இருந்து ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நன்றாக கற்றுக்கொண்டேன். அதன் நெளிவு சுழிவுகள். இன்னும் கற்றுகொண்டே இருக்கிறேன். அவர் ஒரு ஆசிரியர். இதுவரை ஒரு கேட்ட வார்த்தை சொல்லி திட்டி பார்த்ததில்லை எவரையும். எப்பொழுதுமே தன பிள்ளையின் மேல் உரிமை எடுத்துகொள்ள மாட்டார். அவரிடம் இருந்து மனிதர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். உறவுகள் என்றால் மனஸ்தாபம் வர தான் செய்யும். அனால் அப்படி மனஸ்தாபம் வரும்பொழுது அவர் செய்த நல்ல வற்றை நினைத்து கொண்டால், அந்த மனகஷ்டம் ரொம்ப சின்னதாக தெஇர்யும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.


    என் மாமியாரின் அம்மா. அவர்களை ஒரு இரும்பு மனிஷி என்று தான் கூறவேண்டும். அவர்களிடம் இருந்து அக்கறை என்பது என்ன என்று கற்று கொண்டேன். ஒரு நாள் பேச்சு வாக்கில் நம்ம ஊரில் ச்வீட் பன் எஎன்று பேக்கரி யில் விற்பார்கள் அது பிடிக்கும் என்று சொன்னதுக்கு நாங்கள் ஊரில் இருக்கும் பொது எல்லாம் மதியம் 3/4 மணி வெயிலில் சென்று வாங்கி வருவார்கள்.அவர் சேர்த்து வாய்த்த காசில். அவரின் வயது 70 அப்பொழுது.
    அதை பார்த்து இதைவிட சக மனிதர்களை ,அவர் சின்னவரோ பெரியவரோ கவுரவ படுத்த முடியாது !அன்பு செலுத்த முடியாது !என்று தான் எனக்கு தோணும்...


    இவர்களிடம் கற்றதை நான் பிறருக்கோ அல்லது அவர்களுக்கே செய்யும் பொழுது வரும் நிறைவு அதை வர்ணிக்க முடியாது...


  8. #78
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by Penmai View Post
    உண்மை தான் நிதா... இன்றைய வாழ்கை சூழ்நிலையில் உங்களைப்போல தாத்தா பாட்டியுடன் வாழும் சூழல் பலருக்கு வாய்பதில்லை. எதிர்பார்ப்பற்ற அன்பு அவர்களிடம் தான் முழுமையாக கிடைக்கும். எங்களுக்கு இவர்களோடு வாழும் சூழ்நிலை அமைந்ததே ஒரு பெரும் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் எந்த அளவிற்கு தாத்தா, பாட்டி மற்ற உறவுகளுடன் ஒன்றாக இருந்தோமோ அதேபோன்று என் மகனால் இருப்பது சற்று கடினம் தான், ஆனால் முடிந்தவரை, விடுமுறை நாட்கள் மற்றும் ஒரு சில பண்டிகையின் போது அவர்களுடன் தான் இருப்போம்.

    இன்றைக்கும் வாழ்கையில் எடுக்கும் பல முடிவுகள், தாத்தா, பாட்டி, அத்தை எடுத்தால் எப்படி தீர்கமா இருக்குமோ அப்படிதான் இருக்கணும்னு நினைப்போம். அந்த அளவிற்கு எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்டது அவர்கள் வாழ்கை முறை. அவர்கள் சமாதியில் அனைவருக்கும் கோவில் கட்டி வழிபாடு செய்கிறோம். அப்பாவுக்கு அந்த சமாதியில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும், எந்த வேலையாக இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிடுவார். வெளியூர் பயணங்கள் கூட முடிந்தவரை தவிர்த்துவிட்டு இதை செய்வார், அப்படி செல்ல நேர்ந்தாலும் வீட்டில் யாராவது ஒருவர் அங்கிருந்து விளக்கேற்ற சொல்வார்.

    ஆமாம் அக்கா,

    பெரியவர்கள் தெய்வமாய் இருந்து நம்மை வழி நடத்துபவர்கள்.

    கண்ணால் கண்டறியாத கடவுளை விட நம்மை வழிப்படுத்திய பெரியவர்களே நாம் கண் கண்ட தெய்வங்கள்.

    தினம்தோறும் தவறாது விளக்கேற்றும் உங்கள் தந்தைக்கு என்னுடைய வந்தனங்கள்!!!

    அருமை...வேறென்ன சொல்வது......மிகவும் பெருமையாகவும் இருக்கின்றது.

    Penmai, jv_66, sujibenzic and 1 others like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #79
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by sujibenzic View Post

    நிதா, நீங்கள் உங்கள் பாட்டி, தாத்தாவுடன் வளர முடியாததை நினைத்து வருந்த வேண்டாம்..அவர்கள் ஆசிர் எப்போதும் உங்களுடன் இருக்கும்.. அந்த மனிகூடை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பது நெஞ்சை தொடுகின்றது.. நானும் கூட என் பாட்டியின் திருமண பட்டின் ஒரு பகுதி இன்றும் வைத்துள்ளேன்..அதில் ஒரு மகிழ்ச்சி.
    உண்மைதான் சுஜா,

    அவர்களை கண்ணால் காணாவிட்டாலும் கதை கதையாய் என் பெற்றோர் சொல்லி கேட்ட்ட்டதனால் அவர்களுடன் வாழ்ந்த ஒரு உணர்வு எனக்கு உண்டு.

    இன்றுவரை எத்தனையோ விதங்களில் அவர்கள்தான் கடவுளாய் இருந்து எங்களை காத்திருக்கின்றார்கள்....

    எங்கள் பெரியவர்களின் நினைவுகளை சுமக்கும் எந்த ஒரு பொருளானாலும் அதன் மதிப்பு சொல்லில் அடங்காதது.....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #80
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    ஜெயாக்கா,

    மிகவும் அருமையான தலைப்பு.....

    அதற்காய் முதலில் உங்களுக்கு மிக்க நன்றி!

    நான் என்னுடைய அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டவை நிறைய உண்டு.
    என்னுடன் எப்போதும் குடியிருக்கும் ஒரு விடயம் தைரியம்.எங்கேயும் எப்போதும் எதற்காகவும் நான் பயந்தது கிடையாது.அதனை எனக்கு புகட்டியவர் என்னுடைய தாயார்.

    அதனைப்போலவே என்ன சொல்ல அல்லது செய்ய நினைக்கின்றேனோ அதனை தயங்காது துணிவுடன் செய்யும் இயல்பையும் எனக்குள் புகுத்தியவரும் அவரே!

    அதேபோல எதனையும் செயல் மூலம் செய்து எங்களையும் பின்பற்ற வைப்பவர்.

    என்னுடைய அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது,
    மனதின் திடம்.என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கை.ஆமாம்...என்னுடைய தந்தைக்கு இப்போது 65 வயது.அவருடைய 40 வது வயதிலேயே கண் பார்வை மங்கியவர்.தன்னருகில் ஒருவர் நடந்து சென்றால்,ஒரு மனிதர் நடக்கின்றார் என்ற அளவில் மட்டுமே தெரியும்...கதைத்தால் தான் அவர் யார் என்பதை அவரின் குரலின் மூலம் உணர்ந்து கொள்வார்.

    அப்படிப்பட்ட என் தந்தை இன்றுவரை உழைத்து உண்ணும் ஒரு மனிதர்.நாங்கள் 3 பெண்பிள்ளைகளும் வெளி நாட்டில் வசித்த போதும் இன்றுவரை ஒரு ருபாய் கூட எங்களிடம் கேட்டதும் இல்லை.எங்கள் பணத்தில் வாழ்ந்ததும் இல்லை.சுயகௌரவம் மிக்கவர்.

    இந்த உலகில் நான் நேசிக்கும் மதிக்கும் இன்றுவரை வியந்து நோக்கும் ஒரு நபர் என்னுடைய தந்தை.

    என்னுடைய பெற்றோரை பார்த்து நான் கற்றுக்கொண்டது,

    அவர்களுக்குள் இருக்கும் அந்த அன்பு, புரிதல், பாசம் அல்லது காதல்....

    மிகவும் அருமையானது.என்னுடைய பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள்.அம்மாவின் பெற்றோர் மறுக்க அப்பா அவர்களிடம் நேரவே சொல்லிவிட்டு அழைத்து சென்று இருக்கின்றார்.

    அப்போது தொழில் தொடங்க பணம் இல்லாமல் அம்மாவின் காதில் இருந்த தோட்டை 25 ரூபாய்க்கு விற்று அந்த பணத்தில் தான் தொழில் தொடங்கியுள்ளார்.

    அதன் பிறகு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் அம்மாவுக்கு தோடு வாங்கி கொடுத்து இருக்கின்றார்.இன்றுவரை என்னுடைய அம்மாவிடம் எத்தனையோ தோடுகள் இருந்தாலும் அதனை காதில் இருந்து கழட்டுவது இல்லை.

    அந்த தோடு அவர்களின் காதலை சொல்லும்.அவ்வளவு அழகானது.ஒரு கம்பி வலயத்தில் ஒரு தாமரை பூ பூத்திருக்க அதிலே இரண்டு தாராக்கள் ஒன்றில் ஒன்று அணைவாய் இருப்பதாய் இருக்கும்.

    எனக்கு இன்றுவரை அதனை காண கண்கள் இரண்டு போதாது.அவ்வளவு அழகானது.

    வாழ்ந்தால் அவர்களைப்போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.உண்மை அன்பை வாழ்ந்து நிருபித்தவர்கள்.குடும்பம் என்றால் என்ன என்பதை வாய் வழி அல்லாமல் வாழ்ந்து உணர்த்திக்கொண்டு இருப்பவர்கள்.

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter