Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree507Likes

உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ


Discussions on "உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ" in "Parents" forum.


 1. #81
  jv_66's Avatar
  jv_66 is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,205

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by Penmai View Post
  உண்மை தான் நிதா... இன்றைய வாழ்கை சூழ்நிலையில் உங்களைப்போல தாத்தா பாட்டியுடன் வாழும் சூழல் பலருக்கு வாய்பதில்லை. எதிர்பார்ப்பற்ற அன்பு அவர்களிடம் தான் முழுமையாக கிடைக்கும். எங்களுக்கு இவர்களோடு வாழும் சூழ்நிலை அமைந்ததே ஒரு பெரும் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் எந்த அளவிற்கு தாத்தா, பாட்டி மற்ற உறவுகளுடன் ஒன்றாக இருந்தோமோ அதேபோன்று என் மகனால் இருப்பது சற்று கடினம் தான், ஆனால் முடிந்தவரை, விடுமுறை நாட்கள் மற்றும் ஒரு சில பண்டிகையின் போது அவர்களுடன் தான் இருப்போம்.

  இன்றைக்கும் வாழ்கையில் எடுக்கும் பல முடிவுகள், தாத்தா, பாட்டி, அத்தை எடுத்தால் எப்படி தீர்கமா இருக்குமோ அப்படிதான் இருக்கணும்னு நினைப்போம். அந்த அளவிற்கு எங்கள் வாழ்வோடு ஒன்றிவிட்டது அவர்கள் வாழ்கை முறை. அவர்கள் சமாதியில் அனைவருக்கும் கோவில் கட்டி வழிபாடு செய்கிறோம். அப்பாவுக்கு அந்த சமாதியில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும், எந்த வேலையாக இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிடுவார். வெளியூர் பயணங்கள் கூட முடிந்தவரை தவிர்த்துவிட்டு இதை செய்வார், அப்படி செல்ல நேர்ந்தாலும் வீட்டில் யாராவது ஒருவர் அங்கிருந்து விளக்கேற்ற சொல்வார்.

  பெரியவர்களுடன் பழகியதாலயே , உங்களுக்கு அவர்கள் முடிவு எடுக்கும் திறனோடு, ஒத்துப் போய், இப்போதும் செயல் படத் தோன்றுகிறது . இது இந்த காலக் குழந்தைகள் பலருக்கும் வாய்ப்பதில்லை . அதனாலேயே, சில சமயம், வாழ்க்கை நிலை பலவற்றில் அவர்கள் தடுமாற நேர்கிறது .

  உங்கள் அப்பாவின் இந்த விளக்கேற்றும் அணுகுமுறை , அவர் பெரிவர்களிடத்தில் வைத்திருக்கும் பெருமதிப்பைக் காட்டுகிறது . இதை பார்க்கும் சிறியவர்களும் , இதைக் கடைபிடிப்பது திண்ணம் .  Sponsored Links
  Penmai likes this.

 2. #82
  jv_66's Avatar
  jv_66 is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,205

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by sujibenzic View Post
  மிகவும் அழகான, ஆழமான திரியை ஆரம்பித்து இருக்கிறீர்கள் ஜெயந்தி அக்கா..
  ஒவ்வொருவரின் பகிர்விலும் பல நல்ல சிந்தனைகளும், உண்மைகளையும் கற்று கொள்ளலாம்.


  உங்கள் தாயாரிடம் நீங்கள் கற்று கொண்ட துணிவு மிகவும் அருமை. உங்கள் மாமியார் கூறியதாக நீங்கள் எழுதியுள்ள வார்த்தைகள் உண்மையிலும்,உண்மை.


  சுதா அக்கா, உங்கள் பகிர்வில் மனம் கொஞ்சம் திகிலுற்றது..நீங்களும், உங்கள் தந்தை, தாயாரும், குழந்தைகளும் அதிலிருந்து மீண்டு வந்த விதமும், உங்களுக்கு உதவிய அனைத்து உறவினர்களின் உதவியையும் நினைத்து மனம் நிறைகின்றது.


  ஸ்ரீமதி சகோதரி, உங்கள் பகிர்வில் இருந்த யதார்த்தமும், பாட்டியின் அனுபவ வைத்திய முறையும் அருமை. கூட்டுக்குடும்பத்தின் சிறப்பையும், அதற்கு தேவைப்படும் குணாதிசயங்களையும் நல்ல முறையில் எடுத்து கூறியமைக்கு நன்றி.


  தேனு,உங்கள் தாயாரின் பொறுமை ஆச்சரிய பட வைக்கிறது. உங்கள் தந்தை மற்றும் கணவரின் தாராள குணம் உங்கள் குடும்பத்திற்கு புண்ணியம் தேடி தரும் நிச்சயமாக.என் தந்தையும், என் கணவரும் கூட இதே போல் தான். இதை வாசித்ததும், அந்த ஞாபகம் வந்து விட்டது.எனக்கு


  பிரியா,உங்கள் தந்தையின் பொறுமை பாராட்ட பட வேண்டியது. நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான்.


  நானும் அந்த காரணத்திற்காக தான் தற்போது வேலைக்கு செல்லவில்லை. என் தாயார் உயர்படிப்பு படித்திருந்தும், என் தந்தையின் வேலை நிமித்தம்( அடிக்கடி இட மாற்றங்கள் உண்டு) எனக்காக வேலைக்கு செல்லாமல் என்னை நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். படிப்பிலிருந்து, கலைகள் முதல் அனைத்து விஷயங்களிலும் எனக்கு ஊக்கமும், தைரியமும் அளித்து, என் கூச்ச சுபாவத்தை களைந்து தன்னம்பிக்கை ஊட்டி என்னை ஆளாக்கியவர்கள். நேர்மை, இது நான் அவர்களிடம் கற்ற மிக முக்கியமான விஷயம்.


  உங்கள் அம்மம்மாவை பற்றி நீங்கள் குறிப்பிட்டதும், எனக்கும் என் பாட்டியின் நினைவு வந்து விட்டது.. எனக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களிடமிருந்து கற்றது அதீத பொறுமையும்,நிதானமும். இன்று வரை அதை நினைத்து வியப்பதுண்டு. நகைச்சுவையாக பேசி மற்றவர்களை மகிழ்விப்பவ்ரகள். எப்போதும் எனக்கு நல்ல விஷயங்களை கூறி, நல்ல கதைகள் மூலம் நற்பண்புகளை கற்று தந்தவர். மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். இப்போது இவ்வுலகில் இல்லாவிட்டாலும், இன்றும் எனக்கு எதாவது துன்பம் என்றால் நான் நினைப்பது அவர்களை தான். அவர்களும் எனக்கு தெய்வமாக இருந்து உதவி, அந்த துன்பத்தை போக்கி விடுவார்கள்..இது விந்தையாக இருந்தாலும், உண்மை.


  இளவரசி மேடம், உங்கள் பகிர்வு மிகவும் அருமை. ஒவ்வொருத்தரின் நற்பண்புகளையும் தெளிவாக கூறியுள்ளீர்கள். இறுதியாக நீங்கள் கூறிய அந்த புராதான வீடுகள் பற்றிய விஷயங்களும், உங்கள் உணர்வு பிணைப்பும், முத்தைய்பாக உங்கள் முடிவுரை மிகவும் அழகு.
  பகிர்விற்கு நன்றி.


  நிதா, நீங்கள் உங்கள் பாட்டி, தாத்தாவுடன் வளர முடியாததை நினைத்து வருந்த வேண்டாம்..அவர்கள் ஆசிர் எப்போதும் உங்களுடன் இருக்கும்.. அந்த மனிகூடை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பது நெஞ்சை தொடுகின்றது.. நானும் கூட என் பாட்டியின் திருமண பட்டின் ஒரு பகுதி இன்றும் வைத்துள்ளேன்..அதில் ஒரு மகிழ்ச்சி.

  சுஜனா,

  நீங்கள் உங்கள் அம்மாவிடமிருந்தும் , பாட்டியிடமிருந்தும் கற்றதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .

  இவர்களே நமக்கு சிறந்த ரோல் மாடல் களாக இருப்பது நாம் செய்த பாக்கியம் .

  thenuraj likes this.

 3. #83
  jv_66's Avatar
  jv_66 is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,205

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by nlakshmi View Post
  மிகவும் அருமையான தலைப்பு..

  நான் திருமணதிற்கு பின்பு என் மாமியாரிடம் கற்று கொண்டது மிகவும் அதிகம். திருமணமாகி வந்த உடன் அவர் முதல் சொன்ன வார்த்தை "ஏன் மாமியார் என்னை மகள் போன்று தான் பார்த்து கொண்டார்கள். அதே போல் தான் நானும் இருப்பேன் என்று". இன்று வரை அந்த வார்த்தை மாறவில்லை. அவரிடம் இருந்து ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நன்றாக கற்றுக்கொண்டேன். அதன் நெளிவு சுழிவுகள். இன்னும் கற்றுகொண்டே இருக்கிறேன். அவர் ஒரு ஆசிரியர். இதுவரை ஒரு கேட்ட வார்த்தை சொல்லி திட்டி பார்த்ததில்லை எவரையும். எப்பொழுதுமே தன பிள்ளையின் மேல் உரிமை எடுத்துகொள்ள மாட்டார். அவரிடம் இருந்து மனிதர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். உறவுகள் என்றால் மனஸ்தாபம் வர தான் செய்யும். அனால் அப்படி மனஸ்தாபம் வரும்பொழுது அவர் செய்த நல்ல வற்றை நினைத்து கொண்டால், அந்த மனகஷ்டம் ரொம்ப சின்னதாக தெஇர்யும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.


  என் மாமியாரின் அம்மா. அவர்களை ஒரு இரும்பு மனிஷி என்று தான் கூறவேண்டும். அவர்களிடம் இருந்து அக்கறை என்பது என்ன என்று கற்று கொண்டேன். ஒரு நாள் பேச்சு வாக்கில் நம்ம ஊரில் ச்வீட் பன் எஎன்று பேக்கரி யில் விற்பார்கள் அது பிடிக்கும் என்று சொன்னதுக்கு நாங்கள் ஊரில் இருக்கும் பொது எல்லாம் மதியம் 3/4 மணி வெயிலில் சென்று வாங்கி வருவார்கள்.அவர் சேர்த்து வாய்த்த காசில். அவரின் வயது 70 அப்பொழுது.
  அதை பார்த்து இதைவிட சக மனிதர்களை ,அவர் சின்னவரோ பெரியவரோ கவுரவ படுத்த முடியாது !அன்பு செலுத்த முடியாது !என்று தான் எனக்கு தோணும்...


  இவர்களிடம் கற்றதை நான் பிறருக்கோ அல்லது அவர்களுக்கே செய்யும் பொழுது வரும் நிறைவு அதை வர்ணிக்க முடியாது...


  லக்ஷ்மி ,


  உங்கள் மாமியார் உங்களை "மகளாக " நினைத்தது மிகவும் பெருமைக்கு உரிய விஷயமாகும் . இது எல்லா பெண்களுக்கும் அமைந்து விடக் கூடிய வாய்ப்பில்லை .

  அதே போல் அவரின் சிறந்த குணங்களும் , அவரின் அம்மாவின் சிறந்த அன்பு , பாசம் ஆகியவையும் , உங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகிறது என்பது வியக்க வைக்கின்றன .

  nlakshmi likes this.

 4. #84
  jv_66's Avatar
  jv_66 is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,205

  Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

  Quote Originally Posted by dania View Post
  ஜெயாக்கா,

  மிகவும் அருமையான தலைப்பு.....

  அதற்காய் முதலில் உங்களுக்கு மிக்க நன்றி!

  நான் என்னுடைய அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டவை நிறைய உண்டு.
  என்னுடன் எப்போதும் குடியிருக்கும் ஒரு விடயம் தைரியம்.எங்கேயும் எப்போதும் எதற்காகவும் நான் பயந்தது கிடையாது.அதனை எனக்கு புகட்டியவர் என்னுடைய தாயார்.

  அதனைப்போலவே என்ன சொல்ல அல்லது செய்ய நினைக்கின்றேனோ அதனை தயங்காது துணிவுடன் செய்யும் இயல்பையும் எனக்குள் புகுத்தியவரும் அவரே!

  அதேபோல எதனையும் செயல் மூலம் செய்து எங்களையும் பின்பற்ற வைப்பவர்.

  என்னுடைய அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது,
  மனதின் திடம்.என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கை.ஆமாம்...என்னுடைய தந்தைக்கு இப்போது 65 வயது.அவருடைய 40 வது வயதிலேயே கண் பார்வை மங்கியவர்.தன்னருகில் ஒருவர் நடந்து சென்றால்,ஒரு மனிதர் நடக்கின்றார் என்ற அளவில் மட்டுமே தெரியும்...கதைத்தால் தான் அவர் யார் என்பதை அவரின் குரலின் மூலம் உணர்ந்து கொள்வார்.

  அப்படிப்பட்ட என் தந்தை இன்றுவரை உழைத்து உண்ணும் ஒரு மனிதர்.நாங்கள் 3 பெண்பிள்ளைகளும் வெளி நாட்டில் வசித்த போதும் இன்றுவரை ஒரு ருபாய் கூட எங்களிடம் கேட்டதும் இல்லை.எங்கள் பணத்தில் வாழ்ந்ததும் இல்லை.சுயகௌரவம் மிக்கவர்.

  இந்த உலகில் நான் நேசிக்கும் மதிக்கும் இன்றுவரை வியந்து நோக்கும் ஒரு நபர் என்னுடைய தந்தை.

  என்னுடைய பெற்றோரை பார்த்து நான் கற்றுக்கொண்டது,

  அவர்களுக்குள் இருக்கும் அந்த அன்பு, புரிதல், பாசம் அல்லது காதல்....

  மிகவும் அருமையானது.என்னுடைய பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள்.அம்மாவின் பெற்றோர் மறுக்க அப்பா அவர்களிடம் நேரவே சொல்லிவிட்டு அழைத்து சென்று இருக்கின்றார்.

  அப்போது தொழில் தொடங்க பணம் இல்லாமல் அம்மாவின் காதில் இருந்த தோட்டை 25 ரூபாய்க்கு விற்று அந்த பணத்தில் தான் தொழில் தொடங்கியுள்ளார்.

  அதன் பிறகு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் அம்மாவுக்கு தோடு வாங்கி கொடுத்து இருக்கின்றார்.இன்றுவரை என்னுடைய அம்மாவிடம் எத்தனையோ தோடுகள் இருந்தாலும் அதனை காதில் இருந்து கழட்டுவது இல்லை.

  அந்த தோடு அவர்களின் காதலை சொல்லும்.அவ்வளவு அழகானது.ஒரு கம்பி வலயத்தில் ஒரு தாமரை பூ பூத்திருக்க அதிலே இரண்டு தாராக்கள் ஒன்றில் ஒன்று அணைவாய் இருப்பதாய் இருக்கும்.

  எனக்கு இன்றுவரை அதனை காண கண்கள் இரண்டு போதாது.அவ்வளவு அழகானது.

  வாழ்ந்தால் அவர்களைப்போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.உண்மை அன்பை வாழ்ந்து நிருபித்தவர்கள்.குடும்பம் என்றால் என்ன என்பதை வாய் வழி அல்லாமல் வாழ்ந்து உணர்த்திக்கொண்டு இருப்பவர்கள்.

  நிதா,

  உங்கள் அம்மாவின் துணிவும் , அப்பாவின் மனோதிடமும் வியக்க வைக்கின்றன .

  அவர்களின் காதல் எல்லாருக்கும் ஒரு எடுத்துக்காட்டு .


  அதேபோல எதனையும் செயல் மூலம் செய்து எங்களையும் பின்பற்ற வைப்பவர்.

  இதைப் போல ஒவ்வொரு பெற்றோரும் இருத்தல் வேண்டும் .


  இந்த வயதிலும் உங்கள் தந்தை தன் காலில் தான் நிற்க வேண்டும் என்ற உறுதியோடு இருப்பது மிகவும் பெருமைக்கு உரியது


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->