Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree22Likes
 • 8 Post By kirthika99
 • 4 Post By kirthika99
 • 2 Post By lashmi
 • 3 Post By thenuraj
 • 2 Post By kirthika99
 • 1 Post By sumitra
 • 1 Post By thenuraj
 • 1 Post By saranyaraj

''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகனா&


Discussions on "''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகனா&" in "Parents" forum.


 1. #1
  kirthika99's Avatar
  kirthika99 is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  karkuzhali shanmugam
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  saudi arabia
  Posts
  5,062
  Blog Entries
  19

  ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகனா&

  I just read this article in vikatan.com & like to share with you all. Gud one.

  ''வியாழனில் 4,331 நாட்கள் ஒரு வருடம், செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம், பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம், வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம், புதனில் 88 நாட்கள் ஒரு வருடம், என் அருமை மகளே... நீ விடுப்பில் வருவது மூன்றே மூன்று நாட்கள். அதுதான் எனக்கு ஒரு வருடம்'' -இது எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தன் மகளுக்காக எழுதிய கவிதை.


  என்னதான் மகன்கள் இருந்தாலும், ஒரு தந்தைக்கு தன் மகள்தான் பிரியமானவளாக இருக்கிறாள். கவிஞர் அம்பை எழுதிய ஒரு கவிதையில், ''நான் பிறந்தபோது அம்மா பூரிப்படைந்தாள். அப்பா நீயோ அடுத்த நொடியில் இருந்து உனக்கான வாழ்வை விட்டுவிட்டு, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாய்'' என்று குறிப்பிடுகிறார். அதுதானே உண்மை. என் பொண்ணுக்கு அதுதான் பிடிக்கும் என்று, பிடித்தப் பொருளை வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது தந்தையின் கடமை. அதற்குப் பிறகு, எல்லாவற்றுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யத் தொடங்குகிறார் தந்தை.


  ''அவனுக்கு ரெண்டு பொண்ணுப்பா'' என்று உறவுகளும் நட்பும் சொல்லும்போதே அது எவ்வளவு பெரிய பொறுப்பை தந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. பல இடங்களில் பெண் பெற்றவர் என்பது முன்னுரிமைக்கு வழிசெய்கிறது. காரணம் மகள் என்பவள் பாசத்துக்குரியவள்; மகள் என்பவள் குடும்பத்தின் பாதுகாவலி; மகள்தான் குடும்பத்தின் கௌவரம். இதுதான் உலகெங்கும் உள்ள பாசவலை. அந்த பாசம்தான் தன்னை மீறி காதல் கொண்ட மகளை கடைசி காலம் வரை முகத்தில் முழிக்காத வைராக்கியத்தையும், சில இடங்களில் கௌரவக் கொலைகளுக்கும் காரணமாக ஆகிவிடுகிறது.


  ஆசைக்கு ஒரு மகள்; ஆஸ்திக்கு ஒரு மகன் என்பது நாட்டுப்புறத்தில் வழங்கிவரும் பழமொழி. தந்தையிடமும் தாயிடமும் ஆசையாய் இருப்பது, நேசத்தோடு வாழ்வது மகள் என்ற உறவுதான். தந்தையின் சொத்துக்களைப் பராமரிப்பதுதான் மகனின் வேலையாம். தன்னைப் பார்த்து பார்த்து வளர்த்த தந்தையிடம் தன் ஆயுட்காலம் வரை அன்பு குறைவது இல்லை மகளிடம். ''அப்பா, என்னை மலை தாண்டியுள்ள ஊரில் கட்டிக் கொடுக்க வேண்டாம். கடல் தாண்டிய ஊரில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். பாதையில்லா ஊரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டாம். நான் நினைத்தால் காலையில் கிளம்பி உன்னை வந்து பார்த்துவிட்டு மாலையில் புகுந்த வீடு திரும்பும்படியான தூரத்தில் மாப்பிள்ளை பார்'' என்று கவிதையாய் சொல்கிறாள் ஒரு மகள். அதுதான் மகளின் தந்தைப் பாசத்துக்கு இலக்கணம்.
  தாய் இறந்து போய்விட்ட குடும்பங்களில் உள்ள மகள்தான் அதற்குப் பிறகு அனைவருக்கும் தாயாகிறாள். திருமணத்தை நினைத்துக்கூட பார்க்காமல் தன் தந்தைக்கும் தம்பி தங்கைகளுக்கு தாயாகி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மகளுக்குப் பொருத்தமானவன் என்று தந்தை ஊர் ஊராக சல்லடை போட்டு சலித்து மாப்பிள்ளைத் தேடி நிச்சயம் செய்வதும், திருமணத்துக்கு முன்பே அந்த மாப்பிள்ளையைப் பார்த்து என் சம்பளத்தில் பாதியை தந்தைக்கு அனுப்புவேன் அதற்கு சம்மதமா என்று அந்த மகள் இரைஞ்சுவதும் எத்தனை பெரிய பாச வலை. இந்த உணர்ச்சியும் நேசமும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே மட்டும் நிலவும் பிரத்யேக உலகம்.


  தமிழச்சி தங்கப்பாண்டியன் தன் தந்தையைப் பற்றி நினைவுகூரும்போது ஒன்றைச் சொல்வார். சிறு வயதில் பள்ளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் போட்டாராம். அன்று அவரது தந்தையால் வர முடியவில்லையாம். தான் வேடமிட்டத்தையும் நடித்ததையும் தந்தை பார்க்க வரவில்லையே என்று கடும் கோபத்துடன் வீட்டுக்கு வந்தாராம். அங்கே அவரது தந்தை கட்டபொம்மன் போலவே வேடமிட்டு தமிழச்சியை வரவேற்றாராம். அதனை கண்டதும் உணர்ச்சி மேலிட தந்தையைக் கட்டித் தழுவியிருக்கிறார்.


  கூரை வீட்டில் செல்லமாய் வளர்ந்த தன் மகளை மாடி வீட்டில் கட்டிக் கொடுத்த ஒரு தந்தை, அங்கே வியர்வையில் மகள் கஷ்டப்படுகிறாள் என்றதும் தன் இரண்டு மாத பென்ஷன் பணத்தைச் சேர்த்து அவளுக்கு ஏசி வாங்கி கொடுத்தார். அந்த இரண்டு மாதங்களும் ரேஷன் அரிசியில் கஞ்சி வைத்து குடித்து காலத்தை ஓட்டினார். இப்படி மகளின் ஆசாபாசாங்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் தந்தைகளால் ஆனது மகள்களின் உலகம்.
  சிறு வயதிலேயே மகளுக்கான முக்கியத்துவம் தந்தையிடம் ஆரம்பித்துவிடுகிறது. இருப்பதில் அழகான ஆடை, உயர்வான அணிகலன், சிறப்பான கல்வி என்று தேடித் தேடி சேர்க்க ஆரம்பிக்கிறார் தந்தை. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குண்டுமணி குண்டுமணியாக தங்கத்தையும் வாங்கி சேர்க்கிறார். கணவன் வீட்டில் மகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக அத்தனை வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்கி கொடுக்கிறார். மகளின் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது செய்கிறார். அவர்களைத் தோளில் தூக்கி கொஞ்சி அதில் சுகம் காண்கிறார். இப்படி எத்தனையோ அவதாரம் எடுத்து மகளிடம் அன்பு வளர்க்கிறார்.
  அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன் என்கிறது கண்ணதாசனின் பாடல் வரிகள். அப்படி தன் மகளுக்கு மகனாகும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறார் ஒவ்வொரு தந்தையும். நம் பண்டைத் தமிழ் மன்னர்கள் மகளை அண்டை தேசத்துடனான உறவுக்கு பாலமாக நினைத்தனர். எதிரி மன்னனை தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து நட்பு நாடாக ஆக்கிக்கொண்ட ராஜ தந்திரிகளாக விளங்கினர். இன்று ஒரு குடும்பத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த மகள், அன்று ஒரு தேசத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறாள்.

  என்னதான் கணவன் வீட்டில் ராஜபோகமாக வாழ்ந்தாலும், தன் தந்தையின் நினைவும் பிறந்த வீட்டின் பற்றும் இல்லாத பெண்கள் உண்டா. தாய் வீட்டுக்கு போய்வரும் நாளைத்தான் அவள் வாழ்நாள் முழுவதும் நினைத்து அசைபோடுகிறாள். தந்தை மேலுள்ள ஈர்ப்புதான் அவளை கணவனிடம் தந்தையைத் தேடவைக்கிறது. பொதுவாகவே தாயிடம் மகனும் தந்தையிடம் மகளும் பாசமாக இருப்பார்கள் என்கிறது உளவியல். அதற்குப் பாலின ஈர்ப்புதான் காரணம் என்றும் விளக்கம் சொல்கிறது. ஆனால், அதையும் தாண்டி தகப்பன் மீது மகள் வைக்கும் பாசமும் மகள் மீது தந்தை வளர்க்கும் பாசமும் எந்த உளவியல் கோட்பாடுகளிலும் அடங்காது. அங்கே காரண காரியங்களைத் தாண்டிய அன்பும் பாசமும் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

  - கரு.முத்து

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by kirthika99; 16th Jun 2013 at 10:06 AM.

  Regards,
  Kirthika

  A smile is a curve but it makes everything straight

 2. #2
  kirthika99's Avatar
  kirthika99 is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  karkuzhali shanmugam
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  saudi arabia
  Posts
  5,062
  Blog Entries
  19

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன

  Father's Day Message From Director Ram  jv_66, saranyaraj, sumitra and 1 others like this.

  Regards,
  Kirthika

  A smile is a curve but it makes everything straight

 3. #3
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன

  unami inmai kuzhali

  kirthika99 and sumitra like this.
  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .


  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் 4. #4
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன

  தந்தை - மகள் பாசத்தை ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க குழலி....
  அதிலும் அந்த தலைப்பே சூப்பர்...., அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன்.... இந்த ஒரு வரியே போதும்...... அருமை.....
  நீங்க சொன்ன மாதிரி என்னதான் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வந்தாலும், அப்பா-பெண் பாசம் மறக்க முடியாதது ....யாராலும் பிரிக்க முடியாதது....

  kirthika99, saranyaraj and sumitra like this.

 5. #5
  kirthika99's Avatar
  kirthika99 is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  karkuzhali shanmugam
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  saudi arabia
  Posts
  5,062
  Blog Entries
  19

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன&

  Quote Originally Posted by thenuraj View Post
  தந்தை - மகள் பாசத்தை ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க குழலி....
  அதிலும் அந்த தலைப்பே சூப்பர்...., அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன்.... இந்த ஒரு வரியே போதும்...... அருமை.....
  நீங்க சொன்ன மாதிரி என்னதான் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வந்தாலும், அப்பா-பெண் பாசம் மறக்க முடியாதது ....யாராலும் பிரிக்க முடியாதது....
  s thenu , but ithu en article illa pa, vikatan.com la padichan, romba pidichirnthuchi, athan share pannan, ithula solirkara ovvoru points m valid aanthu la!!

  thenuraj and sumitra like this.

  Regards,
  Kirthika

  A smile is a curve but it makes everything straight

 6. #6
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன

  Dear Kirthika, super post. really wonderful narration regarding noble relationship of father-daughter. thank you

  kirthika99 likes this.

 7. #7
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன&

  Quote Originally Posted by kirthika99 View Post
  s thenu , but ithu en article illa pa, vikatan.com la padichan, romba pidichirnthuchi, athan share pannan, ithula solirkara ovvoru points m valid aanthu la!!
  நீங்க படிச்சதை எங்களுக்கும் கொடுத்ததற்கு நன்றி....
  அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..... இது போல இன்னும் நல்ல விசயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் குழலி......

  kirthika99 likes this.

 8. #8
  saranyaraj's Avatar
  saranyaraj is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  saranya
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  chennai
  Posts
  7,626
  Blog Entries
  74

  Re: ''அவள் எனக்கு மகளானாள்... நான் அவளுக்கு மகன

  hi kuzhali..

  superb..romba arumaiya irunthathu..athuvum first quote.. tats really true..!!!!!

  usually diwaliku veeetuku pogum pothu antha oru vaaram appa nan enge irukarenu ange irupar..
  naan enga poganum appdinalum, kudave vanthu...mmm always dad is dad thaan..
  thanks for sharing dear..
  after seeing tis am missing my dad more

  kirthika99 likes this.
  lovingly,
  SaranyaRaju....


  The Future would endup finding out the truth about past

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter