Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 7 Post By silentsounds
  • 1 Post By Mary Daisy
  • 1 Post By sumathisrini

சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை


Discussions on "சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை" in "Parents" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை



    சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை



    பொதுவாக பெண் குழந்தைகள் பிறந்தால், தாய்மார்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால் அந்த கவலை, குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டதே என்பதற்காக அல்ல… இந்த சமுதாயத்தில் நாம் பட்ட பாட்டை நம் குழந்தையும் பட வேண்டுமே என்ற எண்ணத்தில்தான்.


    இந்த கவலையில் இருந்து பெண்ணைப் பெற்ற தாய்மார்கள் விடுபட வேண்டும் என்றால், ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் சில முக்கியக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது.


    இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும். இந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.


    சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது.


    இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம். ஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான்.


    இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.


    சிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.

    -vanisri sivakumar
    (dinamani)



    Sponsored Links
    Last edited by silentsounds; 13th Dec 2013 at 09:16 AM.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை

    thanks for sharing...

    silentsounds likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை

    Well said Guna sir, this is called positive thinking.

    shansun70 likes this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை

    பகிர்வுக்கு நன்றி

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter