Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #101
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    உண்மை தான் அக்கா ..படிப்பு வேலை என்று இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் வட்டத்திலேயே வாழ்வதால் ..குடும்பம் கடமை எல்லாம் தொல்லைகளாக தெரிய தொடங்கி விட்டன ..

    அடுத்த தலைமுறை வளர்க்கும் பெற்றோர் பாசம் , தனிமனித கடமை , உறுவுகளின் முக்கியத்துவம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் ..

    தலைமுறை வித்யாசம் , மாறுதல்கள் மகன் , மருமகளிடம் மட்டும் இல்லை , பெற்றோர்களிடமும் வந்ததால் தான் இந்த நிலை ...

    இயல்பிலேயே ஒரு மகனுக்கோ அல்லது ஒரு மகளுக்கோ தன தாய் தந்தையிடம் உண்மையான பாசம் இருக்கு பட்சத்தில் அதை மற்றொரு ஆணோ பெண்ணோ மாற்ற முடியாது என்பது என்னுடைய உறுதியான எண்ணம் ..அவர்கள் தங்கள் கடமையை எப்பாடு பட்டாவது செய்வாங்க ..

    பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் விடபடுவதர்க்கு காரணம் மருமகள் - மாமியார் சண்டை என்று மகன்கள் ஒதுங்கி கொள்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .

    20 வயது வரை ஒரு இடத்தில வளர்ந்து பிறகு மற்றொரு புதிய இடத்தில வாழ ஆரம்பிக்கும் பெண்ணிற்கு , அந்த இடத்தில 25 காலம் வாழ்ந்த ஆண் மற்றவர்களை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவனுக்கு அவன் பெற்றோர் எவளோ முக்கியம் என்றும் அவன் பாசத்தையும் அதே சமயம் மனைவியிடம் நேசமும் உண்டு என்றும் புரிய வைக்க வேண்டும் ..

    அதே மாதிரி புதிதாக வந்த பெண்ணிடம் அதிகம் உரிமை கொண்ட ஆண் தன பெற்றோர்களிடமும் அந்த பெண்ணை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவளிடம் குறை இருந்தாலும் அதிகாரத்தை எடுக்காமல் அன்பால் சொல்ல பெற்றோர்ரை கேட்டு கொள்ள வேண்டும் ..

    இதை சொல்வது சுலபம் செய்வது மிக மிக மிக கடினம் தான் ..இதை ஒரு ஆண் செய்தால் மாமியார் -மறுமகள் சண்டை வராமல் இருக்க வாய்ப்பு உண்டு ..குடும்பம் சண்டை இல்லாம் இருக்க ஆணின் பங்கு மிக முக்கியம் என்பது என் எண்ணம் ...

    நான் வளர்ந்தது முழுக்க கூட்டு குடும்பத்தில் தான் என் திருமணம் வரை ..என்னை தாரை வார்த்து கொடுத்து கல்யாணம் செய்தது என் தாத்தா பாட்டி தான் (பெரியவர்கள் என்ற முறையில்)..பிரச்சினையே இல்லை என்று சொல்ல முடியாது ..அது வரும் போகும் ..

    Quote Originally Posted by ponschellam View Post
    சரியாக சொன்னாய் ........ஒரு விழாவில் உள்ள சிரமங்களைவிட ........இவங்க பண்ற அதிகாரம் ........பையன்கள் பண்ணும் பந்தாவே தள்ளி நிறுத்தி விடலாம் ..........அது மட்டுமன்றி இப்ப உள்ள பெண்கள் சிலர் மீடியா தாக்கத்திலா ..........அல்லது வேறு காரணமா .........தன் கணவர் ,பிள்ளைகள் வட்டத்தில் .........மாமனார் ,மாமியாரை இணைப்பதே இல்ல ..........அங்கே தான் பிரச்னை ஆரம்பிக்குது .....இது வருந்தும் விஷயம் தான் ...........ஆனால் சில இடங்களில் நடக்குது ........



    Sponsored Links
    Last edited by repplyuma; 22nd Jul 2015 at 08:41 PM.
    - உமா உதய்

  2. #102
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    உண்மை தான் அக்கா ..படிப்பு வேலை என்று இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் வட்டத்திலேயே வாழ்வதால் ..குடும்பம் கடமை எல்லாம் தொல்லைகளாக தெரிய தொடங்கி விட்டன ..
    இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையை அழகாக சொல்லி விட்டீர்கள்.
    அடுத்த தலைமுறை வளர்க்கும் பெற்றோர் பாசம் , தனிமனித கடமை , உறுவுகளின் முக்கியத்துவம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் ..

    தலைமுறை வித்யாசம் , மாறுதல்கள் மகன் , மருமகளிடம் மட்டும் இல்லை , பெற்றோர்களிடமும் வந்ததால் தான் இந்த நிலை ...

    இயல்பிலேயே ஒரு மகனுக்கோ அல்லது ஒரு மகளுக்கோ தன தாய் தந்தையிடம் உண்மையான பாசம் இருக்கு பட்சத்தில் அதை மற்றொரு ஆணோ பெண்ணோ மாற்ற முடியாது என்பது என்னுடைய உறுதியான எண்ணம் ..அவர்கள் தங்கள் கடமையை எப்பாடு பட்டாவது செய்வாங்க ..

    பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் விடபடுவதர்க்கு காரணம் மருமகள் - மாமியார் சண்டை என்று மகன்கள் ஒதுங்கி கொள்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .

    20 வயது வரை ஒரு இடத்தில வளர்ந்து பிறகு மற்றொரு புதிய இடத்தில வாழ ஆரம்பிக்கும் பெண்ணிற்கு , அந்த இடத்தில 25 காலம் வாழ்ந்த ஆண் மற்றவர்களை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவனுக்கு அவன் பெற்றோர் எவளோ முக்கியம் என்றும் அவன் பாசத்தையும் அதே சமயம் மனைவியிடம் நேசமும் உண்டு என்றும் புரிய வைக்க வேண்டும் ..

    அதே மாதிரி புதிதாக வந்த பெண்ணிடம் அதிகம் உரிமை கொண்ட ஆண் தன பெற்றோர்களிடமும் அந்த பெண்ணை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவளிடம் குறை இருந்தாலும் அதிகாரத்தை எடுக்காமல் அன்பால் சொல்ல பெற்றோர்ரை கேட்டு கொள்ள வேண்டும் ..

    இதை சொல்வது சுலபம் செய்வது மிக மிக மிக கடினம் தான் ..இதை ஒரு ஆண் செய்தால் மாமியார் -மறுமகள் சண்டை வராமல் இருக்க வாய்ப்பு உண்டு ..குடும்பம் சண்டை இல்லாம் இருக்க ஆணின் பங்கு மிக முக்கியம் என்பது என் எண்ணம் ...
    ஹப்பா கை கொடுங்க உமா. என்னை போலவே எண்ணி இருக்கிறீர்கள். இதை தான் நான் ஆரம்பம் முதல் சொல்லி கொண்டிருக்கிறேன். நீங்கள் சுருக்கமாக நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.


    அப்புறம் அந்த வயதானவர்களின் ஹெல்த் பிரச்சனை (வெளிநாட்டில்) ..... அதில் மெடிக்கல் இன்சூரன்ஸ், அதிக பண விரயம், இன்னும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதை எல்லாம் சொன்னால், விவாதம் வேறு திசையில் சென்று விடும், அதனால் தான் அதைப்பற்றி குறிப்பிடவில்லை.


  3. #103
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ஆமா ரதி ..

    அடுத்து இந்த சீரியல்கள் எல்லாம் பேண்ட் செய்ய வேண்டும் ...இது ஸ்லோ poison போல குடும்பங்களை சீர் குலைகிறது..வீட்டுகுள்ளேயே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை விஷமாகிறது என்பது என் எண்ணம் .சீரியல் பார்த்து கொண்டே ஜாட பேசி புது பிரச்சனை உருவாவதை கவனிதிருக்கேன் ..

    அம்மா ,அப்பா , மாமியார் , மாமானார் , நாத்தனார் , கொழுந்தனார் ,ஓரவத்தி, மச்சான் , சகலை இவர்களை வில்லி, வில்லன் போல சித்தரித்து வருட கணக்கில் பார்ப்பது மனநிலைக்கு நல்லதில்லை ..

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சரியா சொன்னீங்க உமா. ஒரு மருமகள் வரும்போதே எல்லோரையும் எதிரியா நினைச்சுகிட்டு வர்ரதில்ல. அவ எப்ப மாறுரான்னு சரியா சொல்லிட்டீங்க. யாராவது அவளையோ அவ பிறந்த வீட்டையோ குறை சொல்லும் போது, எப்படி கணவனும் புகுந்த வீட்டாரும் ரியாக்ட் பண்றாங்களோ அத பொறுத்து தான் தான் அவளும் மாறுறா.


    - உமா உதய்

  4. #104
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    ஆமா ரதி ..

    அடுத்து இந்த சீரியல்கள் எல்லாம் பேண்ட் செய்ய வேண்டும் ...இது ஸ்லோ poison போல குடும்பங்களை சீர் குலைகிறது..வீட்டுகுள்ளேயே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை விஷமாகிறது என்பது என் எண்ணம் .சீரியல் பார்த்து கொண்டே ஜாட பேசி புது பிரச்சனை உருவாவதை கவனிதிருக்கேன் ..

    அம்மா ,அப்பா , மாமியார் , மாமானார் , நாத்தனார் , கொழுந்தனார் ,ஓரவத்தி, மச்சான் , சகலை இவர்களை வில்லி, வில்லன் போல சித்தரித்து வருட கணக்கில் பார்ப்பது மனநிலைக்கு நல்லதில்லை ..
    இதே எண்ணம் எனக்கும் உண்டு உமா ............என்ன சண்டை போட்டாலும் ......என் மருமகள் ,எங்க அண்ணி என்ற உணர்வு உண்டு நமக்கு ..........அதுவே இல்லாதது போலவே .........இந்த சீரியல் காண்பிக்குது .........இதை பார்த்து வளரும் இளைய தலைமுறை என்ன உணருவாங்க .............


  5. #105
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    உண்மை தான் அக்கா ..படிப்பு வேலை என்று இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் வட்டத்திலேயே வாழ்வதால் ..குடும்பம் கடமை எல்லாம் தொல்லைகளாக தெரிய தொடங்கி விட்டன ..

    அடுத்த தலைமுறை வளர்க்கும் பெற்றோர் பாசம் , தனிமனித கடமை , உறுவுகளின் முக்கியத்துவம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் ..

    தலைமுறை வித்யாசம் , மாறுதல்கள் மகன் , மருமகளிடம் மட்டும் இல்லை , பெற்றோர்களிடமும் வந்ததால் தான் இந்த நிலை ...

    இயல்பிலேயே ஒரு மகனுக்கோ அல்லது ஒரு மகளுக்கோ தன தாய் தந்தையிடம் உண்மையான பாசம் இருக்கு பட்சத்தில் அதை மற்றொரு ஆணோ பெண்ணோ மாற்ற முடியாது என்பது என்னுடைய உறுதியான எண்ணம் ..அவர்கள் தங்கள் கடமையை எப்பாடு பட்டாவது செய்வாங்க ..

    பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் விடபடுவதர்க்கு காரணம் மருமகள் - மாமியார் சண்டை என்று மகன்கள் ஒதுங்கி கொள்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .

    20 வயது வரை ஒரு இடத்தில வளர்ந்து பிறகு மற்றொரு புதிய இடத்தில வாழ ஆரம்பிக்கும் பெண்ணிற்கு , அந்த இடத்தில 25 காலம் வாழ்ந்த ஆண் மற்றவர்களை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவனுக்கு அவன் பெற்றோர் எவளோ முக்கியம் என்றும் அவன் பாசத்தையும் அதே சமயம் மனைவியிடம் நேசமும் உண்டு என்றும் புரிய வைக்க வேண்டும் ..

    அதே மாதிரி புதிதாக வந்த பெண்ணிடம் அதிகம் உரிமை கொண்ட ஆண் தன பெற்றோர்களிடமும் அந்த பெண்ணை புரிந்து கொள்ள உதவ வேண்டும் ..அவளிடம் குறை இருந்தாலும் அதிகாரத்தை எடுக்காமல் அன்பால் சொல்ல பெற்றோர்ரை கேட்டு கொள்ள வேண்டும் ..

    இதை சொல்வது சுலபம் செய்வது மிக மிக மிக கடினம் தான் ..இதை ஒரு ஆண் செய்தால் மாமியார் -மறுமகள் சண்டை வராமல் இருக்க வாய்ப்பு உண்டு ..குடும்பம் சண்டை இல்லாம் இருக்க ஆணின் பங்கு மிக முக்கியம் என்பது என் எண்ணம் ...

    நான் வளர்ந்தது முழுக்க கூட்டு குடும்பத்தில் தான் என் திருமணம் வரை ..என்னை தாரை வார்த்து கொடுத்து கல்யாணம் செய்தது என் தாத்தா பாட்டி தான் (பெரியவர்கள் என்ற முறையில்)..பிரச்சினையே இல்லை என்று சொல்ல முடியாது ..அது வரும் போகும் ..
    அழகாக சொல்லி இருக்கிற உமா ..........
    ஆண் நினைத்தால் கண்டிப்பாக ..........கடமையில் இருந்து தப்பிக்கவோ ,தவிர்க்க முடியாது .......இதை ஏற்கிறேன் .........

    Last edited by ponschellam; 22nd Jul 2015 at 09:40 PM.

  6. #106
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    தேனு, பிள்ளைய கன்ட்ரோல் ச்விட்சா நினைச்சீங்கன்னா, அங்கயே பிரெச்சனை தொடங்கிருச்சு . நான் சொல்ல வந்தது பிள்ளையிடம் உள்ள கன்ட்ரோல் ச்விட்ச். பிள்ளை மற்றவர் ஆட்டுவிக்கும் பொம்மையாக இல்லாமல்(லகான் எப்பவும் அவர் கைல இருக்கணும்) சமயோசிதமா, ரெண்டு பக்கமும் சமாளிச்சு, நடந்தா ப்ரெச்சனை இல்லாம அழகா குடும்பத்த நடத்திடலாம்.


    ஆச்சர்யமாக இருக்கிறது ,தேனு. முதல் தடவையாக ( இப்பிரச்சனையின் ) நம் பார்வை வேறுபட்டு இருக்கிறது. கடந்து வந்த பாதையில், நாம் இருவர் கண்ட உலகமும் வெவ்வேறாக இருந்திருக்கிறது.




    அதைத்தான் ரதி, நானும் சொல்லுறேன்..... பிள்ளையின் கையில் கன்ட்ரோல் ஸ்விட்ச் இருந்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது... இப்போ அவனே ஒரு சுவிட்ச் மாதிரி தான்... எந்த பக்கம் on பண்ணுறாங்களோ.., அந்த பக்கம் ஒளி கொடுப்பான்..!!

    என்னைப் பொறுத்த வரைக்கும்..., ஒருபக்கம் சாயாமல்..., நடுநிலையாக நின்று , இருபக்கமும் விஷயங்களை காத்து கொடுத்து கேட்டு... அதன்பிறகு முடிவெடுத்தால் பாதி பிரச்சனைகள் ஒழியும்...! அதைவிட்டு, ஒருபக்க காதே கேட்காமல் போனால்...??

    ஆமா ரதி.... நிறைய பிரச்சனைகளில் ஒரே கருத்துடைய நாம்..., இதில் வேறுபடுகிறோம்... ஏன்னா நான் பார்த்த விஷயங்கள் அப்படி...!! அதன் விளைவே தான் இந்த பதிவும் கூட...!!


  7. #107
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    தேனு, முதியோர் இல்லங்கள் கண்டிப்பா தேவைதான்...யாருமே இல்லாமல் இருப்பவர்கள் எங்கு போவார்கள்?? பிள்ளைகள் இருந்தும் போறதுதான் கொடுமை..இதில் யார் பக்கம் தவறுகள் இருக்கு? பணம் கையில் இருந்தால் யார் தயவும் தேவையில்லை..இல்லத்தில் பணத்தை கொடுத்தால் அவர்களே நன்கு பார்த்து கொள்கிறார்கள்..பணம் இல்லாதவங்க பாடுதான்....சிரமம். பணத்துக்கு முக்கியம் கொடுக்கும் பிள்ளைகள் இருந்தால் பெத்தவங்களை சுமையா நினைக்கும் பிள்ளைகளாக இருந்தால், வயதான் காலத்தில் அவர்களுடன் இருந்து முதுமை சிரமங்களுடன், சண்டையும் போட்டு ....தேவையா அவங்களுக்கு...

    பெரியவங்களும் ஒன்னை நினைத்து பாக்கணும். எங்கேயோ ஒரு இல்லத்தில் இருந்து யாரையோ அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்கும் போது நம் பிள்ளைகள்தானே, கொஞ்சம் பொறுத்து கொள்ளலாமே....பிள்ளைகள் கண்டிப்பா பெற்றவங்களை தன்னோடு வைத்து பராமரிக்கணும் என்று உறுதியா இருக்கணும்..அதை பார்த்துதான் அவர்கள் பிள்ளைகள் வளர்கிறார்கள் என்று உணரனும்..எப்போவும் பெற பிள்ளைகள் தாத்தா பாட்டி உறவு அன்பால் ஆனது...அதை நாமே கெடுத்துட கூடாது...

    ஒய்வு பத்தி சொன்னிங்க தேனு...சரிதான்....முடிந்த உதவி செய்யலாமே....டிரஸ் மாத்தி விடலாம், உணவு ஊட்டி விடலாம், படிப்பு சொல்லி கொடுக்கலாம்...அப்போதானே குடும்பத்தில் ஒரு பற்று இருக்கும்...



    நீங்க சொல்லுற மாதிரி உறவும் இல்லாமல்... பணமும் இல்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு இல்லம் தேவை தான் அக்கா.... நான் அதை ஒத்துக்குறேன்.... ஆனா எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவர்கள் போல..., இல்லங்களில் இருப்பவரின் நிலைமை கொடுமை க்கா... அதுதான் வேண்டாம்னு சொல்லுறேன்...!


    பெரியவங்களும் ஒன்னை நினைத்து பாக்கணும். எங்கேயோ ஒரு இல்லத்தில் இருந்து யாரையோ அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்கும் போது நம் பிள்ளைகள்தானே, கொஞ்சம் பொறுத்து கொள்ளலாமே

    இது சூப்பர்..... நம் பெரியவர்களும் இப்படித்தான் இருக்காங்க... வீட்டிற்கு வெளியில் இருப்பவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடியும் அவர்களால்..., வீட்டில் இருப்பவர்களை அட்ஜஸ்ட் செய்ய மனம் வருவதில்லை.... அது ஏன்னு புரியலை...!

    சிறுசிறு உதவிகள் செய்வது தப்பில்லை க்கா... ஆனா அவர்களை ஒரு வேலைக்காரி/காரன் போல நடத்தக் கூடாது என்று தான சொல்றேன்... அவர்களாக விருப்பப்பட்டு செய்வது வேறு.... கட்டாய சூழ்நிலையில் செய்வது வேறு...!! அங்கு பற்று வராது.... பற்று அற்று போய்விடும்...!


  8. #108
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    சரியா சொன்ன தேனு....

    திருமண நிகழ்ச்சியிலேயே மாப்பிளை வீட்டார் பெண் வீட்டாரை விரட்ட , இது அந்த பெண் மனதில் முதலிலேயே ஒரு விரிசலை உண்டு பண்ண காரணம் ஆயிடும் ...பெண் சரியா சீர் எடுத்து வராவிட்டால் மாமியார் சொல்லி கண்பிக்க அது மனதில் பதிந்துவிடும் ...அப்புறம் முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடுகிறது ..

    ஒரு பெண் தன்னை திட்டுவதை கூட பொறுத்து கொள்வாள் ..ஆனா தன பிறந்த வீட்டு மனிதர்களை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்து கொள்ள மாட்டாள் ..இதுவும் அவள் மனதில் விரிசலை உண்டாக்க காரனாயிடும் ..



    சரியா சொன்னீங்க உமா.... "முதல் கோணல் முற்றிலும் கோணல்" கதை தான் நிறைய வீடுகளில்....!!

    தனக்கு நேரும் அவமானத்தை கூட தன்னை பெற்றவர்களுக்காக பொறுத்துக் கொள்ளும் பெண்கள....,அவர்களுக்கே ஒரு அவமதிப்பு நேரும்போது பொங்கி எழுவது இயற்கை தானே...!!

    ஆண்களுக்கு மட்டும் தான் பெற்றோரின் மேல் பாசம் இருக்குமா...?? பெண்களுக்கு இருக்க கூடாதா...?


  9. #109
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by ponschellam View Post
    தேனு ,
    தேவையில்லை என்றாலும் கூட ..........இது காலத்தின் கட்டாயம் .
    முன்பு ஹாலில் படுத்த நாம் ............இன்று தனி அறை வேண்டும் என்று வந்துவிட்டோமே ...........அது போல தான் இதுவும் .........இதிலும் உள்ள நன்மைகளை எண்ணி மகிழலாம் ..........ஒரே போல் மனிதர்கள் கிடைக்கலாம் .........தோழமை கிடைக்கும் ............ஜி சொல்லி இருக்கிறாங்களே ..........ஒன்றுமில்லை .......முன்பு இறந்த வீடு வந்தால் ..........எவ்வளவு உதவுவாங்க தெரியுமா ?......இப்ப தீட்டு என்று தொடுவது கூட கிடையாது யாரும் .......அது போல முதியோரை தனி நபராக கவனிப்பது கடினம் ........அப்பெல்லாம் உறவினர்கள்,அருகில் உள்ளவங்க உதவுவாங்க ,குளிக்க வைக்க,உடை உடுத்த ......எல்லோரும் இணைந்தால் தான் பார்க்க முடியும் .......எங்கப்பா வை என்னால் புரட்ட கூட முடியலை ...இந்த வேக உலகில் சாத்தியமா ............ஆரோக்கியமாக முதியோர் உறவுகள் போற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்



    நீங்க சொல்வது எல்லாம் சரிதான் அக்கா....
    ஆனாலும் என்னால் இந்த இல்லங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...! ஒருவேளை காலப்போக்கில் நானும் ... எனது எண்ணங்களும் மாறலாமோ என்னவோ...! தெரியவில்லை...!!


  10. #110
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    ரதி சொல்வது போல் வெளிநாடு அழைத்து வந்தால் அவர்களால் இங்கே சந்தோசமாக இருக்க முடிகிறதா என்றால் எனக்கு தெரிந்த வரை இல்லை என்று சொல்ல வேண்டும் ...இங்கே எங்கள் நண்பர்கள் ,நானும் அழைத்து வந்துள்ளோம் டூர் போல வந்து போக விருப்ப படுகிறார்கள் ஆனால் இங்கே தங்க விருப்பம் கொள்வதில்லை ..இங்கத்திய வாழ்க்கை தங்க கூண்டு போல தான்..

    நாலு சுவர் குள்ள தான் இருக்க வேண்டும் ..வெளியே செல்வது என்பது சனி ஞாயிறுகளில் weather நன்றாக இருந்தால் சாத்திய படும் ..இரண்டு பேரும் வேலைக்கு செல்வது என்றால் இன்னும் கொடுமை.. தனிமை தான் ..இங்கே இருப்பது mechanic லைப் தான் ..போன் , டிவி, இன்டர்நெட் என்ற ஜன்னலின் வழியாக தான் உலகத்தை பார்க்க முடியும் ..இதற்க்கு பக்குவ பட்டால் தான் இங்கே இருக்க முடியும்..

    இன்னொரு விஷயம் மருத்துவ வசதி ..அதை பற்றி இங்கே யாரும் குறிப்பிட வில்லை ...என் friend delivery-kku துணைக்கு அவங்க அம்மா அப்பா வந்தாங்க ...அந்த பெண்ணிற்கு ஒன்பது மாதம் ...அவர்கள் ஊரில் மெடிக்கல் செக் up முடித்து கொண்டு தான் வந்தாங்க ..வந்த அன்றே இரவு தலை வலி என்று சொன்னாங்க..மாத்திரை எடுத்தும் மறு நாளும் குணம் ஆகவில்லை ..மருத்துவ மனை சென்று டெஸ்ட் எடுத்து சோடியம் லெவல் கம்மி என்று வயித்தியம் செய்து அட்மிட் செய்தாங்க ..அந்த பெண் pregnant என்பதால் மருத்துவ மனையில் தங்க முடியாது. மற்ற உதவி எல்லாம் நண்பர்கள் தான் செய்தோம் ..

    மூன்று நாள் பிறகு அவங்களுக்கு அவர்கள் மகள், மருமகனையே அடையாளம் தெரியவில்லை ..என் கணவரை அவர்கள் மகன் என்று கூறி பேசி கொண்டு இருந்தாங்க ..என்ன பிரச்சனை என்று புரியவில்லை ..ஒரு மாதம் பார்த்து இங்கே dr சமாளித்து அந்த மருமகன் போய் அவர்களை ஊரில் விட்டு வந்தார் ..அதுவரை அந்த பெண்ணிற்கு நண்பர்கள் தான் துணை இருந்தோம் ..ஏர்போர்ட் இருந்து நேரே dr சென்று பார்த்த போது அவர்களுக்கு mild stroke வந்து இருக்கு , உடனே treatment செய்யாததால் memory damage ஆகி விட்டது என்று சொன்னார்கள் ..அதன் பிறகு சில வருடம் அவர்கள் நினைவு திரும்ப வில்லை ..

    அந்த பெண் நல்ல வேளையில் இருந்தால் ..நன்றாக சம்பாதித்தால் ..அவள் என்ன இருந்து என்ன என் அம்மாவிற்கு என்னால் வைத்தியம் செய்ய முடிவில்லை என்று மிகவும் கஷ்ட பட்டால் ..இதில் கொடுமை அவங்க அம்மாவிற்கு போகும் வரை அவளை மட்டும் தன மகள் என்று அடையாளம் தெரியவில்லை ...இது என் மனதை பாதித்த விஷயம் ..

    நான்வேலை செய்த இடத்தில கேள்வி பட்டது , மற்றொருவர் அவருடைய மாமியார் அழைத்து வந்த பொழுது அன்று இரவே தலை வலி என்று சொல்லி இருக்காங்க ,மருத்துவ மனை அழைத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்கள் ..இறந்த உடலை திரும்ப ஊருக்கு எடுத்து போக மிக மிக சிரம பட்டார்கள் ..நிறைய procedures..

    இங்கே சம்பாதித்து ஊரில் நல்ல வைத்தியம் செய்ய முடியும் ..ஆனால் இங்கே அழைத்து வந்து அதை செய்ய முடியுமா என்பது தெரியவில்லை ..அவர்கள் என்ன விசாவில் வந்தார்கள் என்பது எல்லாம் சமந்த பட்டது ..

    நான் பார்த்த கேள்விப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்..இதற்க்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை .



    உமா

    நீங்க சொல்லுற இந்த மெடிக்கல் விஷயம் எந்த ஊரில் இருந்தாலும் நடப்பது தான்.... நம்ம ஊரில் இதே போல என் மாமியாருக்கு ஒரு பிரச்சனைன்னு ஹாஸ்பிட்டல் கொண்டு போயும் காப்பாற்ற முடியவில்லை...! எல்லாம் நம் நேரம்... விதிப்பயன்...!! எங்கு இருந்தாலும் நடப்பது நடந்து தான் ஆகும்...!!

    இன்னொன்று இங்கு வருபவர்களுக்கு என்றே..., Travel Insurance இருக்கே... அதில் best coverage பார்த்து எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.... இங்கு என்னோட பிரெண்ட் அப்பா கிட்டத்தட்ட 75 வயது.... அழகா வந்தார்.... ஊர் சுற்றி பார்த்தார்... எங்களோட சேர்ந்து ஆட்டம் போட்டார்.... வந்த அழகோடு ஊருக்கு திரும்ப போனார்... திரும்ப வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்கார்...!

    இங்கோ... அங்கோ.... எங்கிருந்தாலும் வைத்தியம் என்பது ஒன்று தான்.... என்னைக் கேட்டால், இங்கு பெஸ்ட் என்று தான் சொல்வேன்...! கையில் பணமிருந்தும் எங்கள் வீட்டில் ஒரு உயிரை காப்பாற்ற முடியாத காயம் இன்னும் எங்கள் மனதில் இருக்கிறது...! அதற்கு ஒரு வகையில் நம் ஊர் மருத்துவர்களின் அலட்சியமும் காரணம்...! தீபாவளிக்கு அடுத்தநாள்... யாரை கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க... அவங்க ஜாலியாக இருக்க ஒரு உயிர் போனது தான் மிச்சம்...!! ஆனா அதுவே இங்கு என்றால்... உயிரின் மதிப்பு தெரிந்து நடந்துக் கொள்வார்கள்...!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter