Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #11
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by thenuraj View Post

    என்ன விதைத்தார்களோ.... அதைத்தான் அறுக்க முடியும் என்பது உண்மை தான்... ஆனால் இது எல்லாருக்கும் பொருந்தாது.... எத்தனையோ பேர் நல்ல விதைகளை தான் விதைக்கிறார்கள்.... ஆனால் வளர்வது என்னவோ வெறும் களைகள் தான்...!! இதற்கு யார் பொறுப்பு...?
    என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உங்கள் பார்வையில், நீங்கள் பார்த்த உலகத்தில் அப்படி இருக்கலாம். ஆனால் என் பார்வையில், நான் கடந்து வந்த பாதையில் கண்டது , நல்ல விதை களையாக போவதில்லை. சொத்தையாக போகலாம், ஆனால் மீண்டும் உயிர்ப்பிப்பது சிரமம் இல்லை.


    என்னை வைத்து தான் இதை கூறுகிறேன். என்னோட நேர்மறை + எதிர்மறை குணங்களுக்கு நான் வாழ்ந்த சூழ்நிலையே காரணம். அதை சொல்லி நான் தப்பிக்க நினைக்கவில்லை, ஏனென்றால் இன்னும் எனக்கு போதிய காலமும் வாய்ப்பும் இருக்கிறது.
    எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோரை தான் எடுத்து வெளியில் வீசி விடுகிறார்களே.... பிறகென்ன செய்ய முடியும்...?? இங்கு எல்லாமே சுயநலம் தான்.... நான் நன்றாக வாழ்ந்தால் போதும்...., அடுத்தவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என போகும் சமுதாயத்தில் தான் நாம் வாழ்கிறோம்...! என்று ஒரு மனிதனை சுயநலமும், பேராசையும் பிடித்து விட்டதோ..., அதன்பிறகு எத்தனை புத்தர் வந்தாலும் திருத்த முடியாது..!!


    ஆசையை விட ஆசைப்பட வேண்டும்...!!

    என்னடா லூசு மாதிரி பேசுறேன்னு பார்க்குறீங்களா...?
    ஆசைப்படுவதை விடுவதற்கு ஆசைப்பட வேண்டும்...! எல்லாம் எனக்கே..., நானே எதிலும், எங்கும்... எனக்கு போக மீதி தான் அடுத்தவருக்கு என்ற எண்ணம் இருக்கும் வரையில் இந்த நிலை மாறாது...!! மகன் தனக்கு மட்டுமே என்று பெற்றோரும்.... கணவன் தனக்கு மட்டுமே என மனைவியும் நினைக்கும் வரையில் நோ சேன்ஜ்...!!

    என்னை பொருத்தவரை நிதர்சனத்தில் சுயநலமும் தப்பில்லை , ஆசைப்படுவதும் தப்பில்லை. ஆனால் அது வரம்புக்குள் இருக்க வேண்டும். பெற்றோர்களை விரட்டுவது சுயநலம் மட்டும் இல்லை அது மனிதாபிமானமற்ற செயல். ஒருவன் சூழ்நிலைக்கேற்ப சுயநலமாக மாறலாம். ஆனால் மனிதாபிமானம் என்பது அவனுக்குள் விதைக்கப்பட்ட விதை. அது மாறவே மாறாது.



    மகன் தனித்திருக்கும் போது தெரியாத புரியாத அனைத்தும் அப்போத்தான் புரியும்...! அன்பு, பாசம் எல்லாம் பொங்கும்...! ஏன்னா அவர்களின் பாசத்தை பங்கு போட இன்னொருத்தி வந்துவிட்டதால் தான்...! உரிமைப் போராட்டம் தான்...!



    இந்த போராட்டம் தான் கடைசி வரைக்கும் தொடர்ந்து.... இறுதியில் முதியோர் இல்லத்தில் போய் முடிகிறது...! இதில் யாரை குறை சொல்வது...?? இருவரின் மேலும் தப்பில்லை தான்னு தோணுது...!!
    விஜய் டிவி நீயா நானாவில் ஒரு தடவை மாமியார் மருமகளை பற்றியது. அந்த வயதில் மூத்தவர்கள் பலர், என்னவோ தாங்கள் தான் பெரியவர்கள் போலவும் மருமகள் தன சொல் பேச்சை கேட்க வேண்டும் என்று கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். அவர்களின் அடக்குமுறை குணம் எனக்கு எரிச்சலை தான் தந்தது. அதிலும் சில பேர் படித்து வேலைக்கு செல்பவர்கள். அது என்னவோ நல்ல மாமியாராக இருப்பதற்கு படிப்பு, சமூக அந்தஸ்து, அனுபவம்... எதுவும் சம்மந்தமில்லை போல. அங்கே, பொருளாதாரத்தில் நிலையில் தாழ்ந்து இருந்து ஒரு பெண்(மாமியார்) தான் அந்த அடக்குமறை மாமியார்களை வாய் அடைக்க வைத்தார். அடக்குமுறை ரொம்ப நாள் வேலைக்கு ஆகாது என்று நறுக்கு தெரித்தார் போல் சொன்னார்.

    அது மட்டுமில்லை இங்கே பெண்மை கேள்வி பதில் பகுதியில் பாருங்கள் இன்னும் மாமியார் அடக்குமுறை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில அடக்கு முறை அளவுக்கு அதிகமாக, கர்பத்தை கலைப்பது வரை(ஒரு வாசிகியின் குமுறல்). இப்படிப்பட்ட மாமியார்களை குண்டர் சட்டத்தில் அடைத்தால் கூட தப்பில்லை.

    புரிதல் இருந்தால் உரிமை போராட்டத்துக்கு இடமே இல்லை. இது மாமியார் + மருமகள் இருவருக்குமே பொருந்தும்.


    Sponsored Links
    Last edited by RathideviDeva; 17th Jul 2015 at 02:51 AM.

  2. #12
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ரொம்ப அருமையான பதிவு ரேணு... உன்னோட ஆதங்கத்தை அழகா வெளி படுத்தி இருக்கே... மாதா பிதா பாவம் பிள்ளைகள் தலையில் என்று சொல்லுவாங்க.. நம் செய்யும் பாவம் பதினாறு தலைமுறைக்கு தொடரும் என்றும் சொல்லுவங்க...

    இப்படி முதியோர்களை நிற்கதியா நிக்க வச்சா நாம் அடுத்த தலைமுறை அடுத்த ஜென்மம் எல்லாம் காத்து இருக்க வேண்டாம் இந்த ஜென்மத்திலே அனுபவிப்போம்...

    இப்படி செய்றவங்க ஒரு நிமிடம் நமக்கும் வயசு ஆகும் என்ற பயம் இருந்தா முதியோர் இல்லத்துக்கு வேலை இருக்காது ....


  3. #13
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உங்கள் பார்வையில், நீங்கள் பார்த்த உலகத்தில் அப்படி இருக்கலாம். ஆனால் என் பார்வையில், நான் கடந்து வந்த பாதையில் கண்டது , நல்ல விதை களையாக போவதில்லை. சொத்தையாக போகலாம், ஆனால் மீண்டும் உயிர்ப்பிப்பது சிரமம் இல்லை.


    என்னை வைத்து தான் இதை கூறுகிறேன். என்னோட நேர்மறை + எதிர்மறை குணங்களுக்கு நான் வாழ்ந்த சூழ்நிலையே காரணம். அதை சொல்லி நான் தப்பிக்க நினைக்கவில்லை, ஏனென்றால் இன்னும் எனக்கு போதிய காலமும் வாய்ப்பும் இருக்கிறது.



    என்னை பொருத்தவரை நிதர்சனத்தில் சுயநலமும் தப்பில்லை , ஆசைப்படுவதும் தப்பில்லை. ஆனால் அது வரம்புக்குள் இருக்க வேண்டும். பெற்றோர்களை விரட்டுவது சுயநலம் மட்டும் இல்லை அது மனிதாபிமானமற்ற செயல். ஒருவன் சூழ்நிலைக்கேற்ப சுயநலமாக மாறலாம். ஆனால் மனிதாபிமானம் என்பது அவனுக்குள் விதைக்கப்பட்ட விதை. அது மாறவே மாறாது.



    விஜய் டிவி நீயா நானாவில் ஒரு தடவை மாமியார் மருமகளை பற்றியது. அந்த வயதில் மூத்தவர்கள் பலர், என்னவோ தாங்கள் தான் பெரியவர்கள் போலவும் மருமகள் தன சொல் பேச்சை கேட்க வேண்டும் என்று கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். அவர்களின் அடக்குமுறை குணம் எனக்கு எரிச்சலை தான் தந்தது. அதிலும் சில பேர் படித்து வேலைக்கு செல்பவர்கள். அது என்னவோ நல்ல மாமியாராக இருப்பதற்கு படிப்பு, சமூக அந்தஸ்து எதுவும் சம்மந்தமில்லை போல. அங்கே, பொருளாதாரத்தில் நிலையில் தாழ்ந்து இருந்து ஒரு பெண்(மாமியார்) தான் அந்த அடக்குமறை மாமியார்களை வாய் அடைக்க வைத்தார். அடக்குமுறை ரொம்ப நாள் வேலைக்கு ஆகாது என்று நறுக்கு தெரித்தார் போல் சொன்னார்.


    புரிதல் இருந்தால் உரிமை போராட்டத்துக்கு இடமே இல்லை. இது மாமியார் + மருமகள் இருவருக்குமே பொருந்தும்.

    ரதி மாமியார் மருமகள் என்று வரும் போதுதான் இந்த ஈகோ நிறைய வருது.. மாமியாரும் ஒரு பெண் தான்.. அவங்களும் விட்டு கொடுத்தால்... பொறுமை எல்லா விஷயங்களும் தாண்டி தான் வந்து இருப்பாங்க ...

    அதே வீட்டுக்கு மருமகள் என்று ஒருத்தி வரும்போது... அவங்களுக்கு பயனம் வருது.. இவ நேத்து வந்தவ இவளுக்கும் நான் ஏன் விட்டு கொடுக்கணும்?...என்ற எண்ணம் அவங்களை தட்டி வைக்க சொல்லுது அவள் தன் மகனை பிரித்து விடுவாளோ என்ற பயம் வார்த்தைகளை யோசிக்காம பேச வைக்குது...

    இன்றைய பெண்களும் திருமணம் என்றவுடன் நான் கணவன் பிள்ளை என்று தங்கள் எண்ணங்களை ரொம்ப சுருக்கி கொண்டு விடுறாங்க.. பெரியவங்க ஒரு வார்த்தை சொன்ன இவங்க கோபத்தை பலமடங்கு கட்டுறாங்க பதிலுக்கு அவங்க இவங்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரொம்பவும் கிழ் இறங்குறாங்க...

    பதிலுக்கு இவங்க அவங்களை ஒதுக்க நினைக்கிறாங்க.. மொத்தத்தில் புரிதல் கம்மியாக போகுது...


  4. #14
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உங்கள் பார்வையில், நீங்கள் பார்த்த உலகத்தில் அப்படி இருக்கலாம். ஆனால் என் பார்வையில், நான் கடந்து வந்த பாதையில் கண்டது , நல்ல விதை களையாக போவதில்லை. சொத்தையாக போகலாம், ஆனால் மீண்டும் உயிர்ப்பிப்பது சிரமம் இல்லை.


    என்னை வைத்து தான் இதை கூறுகிறேன். என்னோட நேர்மறை + எதிர்மறை குணங்களுக்கு நான் வாழ்ந்த சூழ்நிலையே காரணம். அதை சொல்லி நான் தப்பிக்க நினைக்கவில்லை, ஏனென்றால் இன்னும் எனக்கு போதிய காலமும் வாய்ப்பும் இருக்கிறது.




    உண்மைதான் ரதி.... என் கண்ணோட்டத்தில் நான் பார்த்ததை வைத்து சொன்னேன்... ஒவ்வொருவருக்கும் பாரக்கும் பார்வை வேறுபாடும்..., ஆனால் நான் பார்த்த வரையில்...., விட்டுக்கொடுத்தல், அட்ஜஸ்ட் செய்தல், அன்பு, பாசம், பொறுமை என உலகத்தில் இருக்கும் அனைத்து நல்ல குணங்களையும் ஊட்டி ஊட்டி வளர்த்த பெற்றோருக்கு பிறந்த மகன், காய்கனி பூத்து குலுங்கும் நல்ல மரமாக வளராமல்.... களையாக போனதை என் கண் முன்னாடி பார்த்து இருக்கேன்... ஒரு பாவமும் அறியாத பெற்றோர் இன்று தனிமையில்....!!

    நீங்கள் சொல்வது உண்மை தான்.... நமக்கு இன்னும் காலம் இருக்கிறது....!



    என்னை பொருத்தவரை நிதர்சனத்தில் சுயநலமும் தப்பில்லை , ஆசைப்படுவதும் தப்பில்லை. ஆனால் அது வரம்புக்குள் இருக்க வேண்டும். பெற்றோர்களை விரட்டுவது சுயநலம் மட்டும் இல்லை அது மனிதாபிமானமற்ற செயல். ஒருவன் சூழ்நிலைக்கேற்ப சுயநலமாக மாறலாம். ஆனால் மனிதாபிமானம் என்பது அவனுக்குள் விதைக்கப்பட்ட விதை. அது மாறவே மாறாது.


    சுயநலம் தப்பில்லை.... ஆனால் அது மற்றவரை பாதிக்காத வரையில்...!! ஆனால் நம் சுயநலம் நம்மை தாண்டி, அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது, அதில் எங்கே நல்லது இருக்கிறது...?

    என்னைப் பொறுத்தவரையில் எங்கே சுயநலம் இருக்கிறதோ.... அங்கே மனிதாபிமானம் அடிப்பட்டு போகும்...! மனிதனுக்கு அது மரத்து போய் வெகுநாட்களாகி விட்டது...!


    நீங்க சொல்லுற நீயா நானா நிகழ்ச்சி நானும் பார்த்தேன்.... அதில் பேசிய ஒவ்வொரு மாமியாரை பார்த்து கோபம் தான் வந்துச்சு.... நம்மால் என்ன செய்துவிட முடியும்....?? மனதிற்குள் தோன்றிய கோபத்தை அங்கேயே போட்டு புதைத்துவிட்டு, நம் வேலையை பார்க்க வேண்டியது தான்...!!

    அதேபோல Ask Questions பகுதியும்.... நானும் நிறைய பார்ப்பேன்... சில விஷயங்களை படிக்கும்போதே கஷ்டமாக இருக்கும்...! எல்லாம் விதி என்று இருக்க வேண்டியது தான்...! இல்லையென்றால் நிஜமாகவே குண்டர் சட்டம் வந்தாலும் தப்பில்லை...!! ஆனா அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தவும் கூடாது இல்லையா...??

    புரிதல் இருந்தால் நன்றாக தான் இருக்கும்...!! ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது இல்லையே...! கணவன் - மனைவிக்கு இடையேயே புரிதல் இல்லாத போது, மாமியார் - மருமகளிடம் எதிர்பார்ப்பது சரியா....??


  5. #15
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by gloria View Post
    ரொம்ப அருமையான பதிவு ரேணு... உன்னோட ஆதங்கத்தை அழகா வெளி படுத்தி இருக்கே... மாதா பிதா பாவம் பிள்ளைகள் தலையில் என்று சொல்லுவாங்க.. நம் செய்யும் பாவம் பதினாறு தலைமுறைக்கு தொடரும் என்றும் சொல்லுவங்க...

    இப்படி முதியோர்களை நிற்கதியா நிக்க வச்சா நாம் அடுத்த தலைமுறை அடுத்த ஜென்மம் எல்லாம் காத்து இருக்க வேண்டாம் இந்த ஜென்மத்திலே அனுபவிப்போம்...

    இப்படி செய்றவங்க ஒரு நிமிடம் நமக்கும் வயசு ஆகும் என்ற பயம் இருந்தா முதியோர் இல்லத்துக்கு வேலை இருக்காது ....



    உண்மைதான் Glo....
    இது நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த ஆதங்கம் தான்.... சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியவில்லை...!

    பாவம் /புண்ணியம் , சொர்க்கம் / நரகம் இதெல்லாம் இருக்கா என்ன....?? ஏன் கேட்கிறேன்னா, பாவம் செய்யுறவங்க தான் இந்த காலத்துல ரொம்ப நல்லா இருக்காங்க...! இதைக் கேட்டா, எங்க அம்மா சொல்லுற பதில்..., எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கிட்டு தான் இருப்பார், அவரவருக்கு கிடைக்க வேண்டிய கூலி கண்டிப்பா கிடைக்கும்... கிடைக்காம போகாது.... அவன் செய்த பாவம் பிள்ளைகளுக்கு.... அதுவும் இல்லேன்னா, இந்த ஜென்மத்துல இல்லைன்னா..., அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா அவனுக்கு உரிய தண்டனை கிடைக்கும்னு சொல்வாங்க...!

    இந்த ஜென்மத்துல பாவத்தை பண்ணிட்டு அவன் சொகுசா போய்டுவான்.... ஆனா அவன் செய்த பாவத்தின் விளைவை ஒரு பாவமும் அறியாத அவன் பிள்ளைகள் அனுபவிக்கணுமா...??

    இந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் , யாருக்கும் பயம் கிடையாது Glo....


  6. #16
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    (என்னுடைய முதல் பதிவின் தொடர்ச்சி......)


    மருமகள் செய்யும் தவறுகள் :
    - இவர்களும் திருமண வாழ்க்கைக்கு சரியாக மனதளவில் தயாராக இருப்பதில்லை
    - இவர்களின் மாமியாரைப்போல் தான் கண்டதை கேட்டதை வைத்து எதிர் மறை எண்ணங்களுடனே வருகிறார்கள். இதனாலே சிலசமயம் ஒருவரோ அல்லது இருவருமே ஓர் போர்க்களத்தில் அடி எடுத்துவைக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களின் இலக்கு எதிரியை (அடுத்தவரை) தோற்கடிப்பது மட்டுமே
    - புகுந்த வீட்டில் அந்த சூழ்நிலைக்கு பழகி கொள்ளும் வரை கொஞ்சம் அதிகமாகவே பொறுமை தேவை. எல்லாவற்றையும் அடக்குமுறை செய்கிறார்களோ என்ற கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது.
    - தன் கணவராக இருந்த போதும் அவரும் அவர் பெற்றோரும் இருக்கும் தனிப்பட்ட space க்கு மரியாதை செலுத்தி கொஞ்சம் ஒதுங்கி இருக்க வேண்டும். தன் புகுந்த வீட்டின் பிரச்னையை பிறந்த வீட்டில் கோள் சொல்லக்கூடாது. இக்காலத்தில் பெரும்பாலான பெண்ணின் பெற்றோர்கள் கூட சரியாக வழி நடுத்துவதில்லை
    - மாமியாருக்கு இருக்கும் அதே ஈகோ, possessiveness, lack of empathy (தன் அம்மாவை இப்படி மருமகள் நடத்தினால் தனக்கு எப்படி இருக்கும் என்பதை நினைப்பது)


    இதில் பெரும்பானவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் அளவுக்கு மாறுவதில்லை. தனிக்குடுத்தனம் அளவுக்கு மட்டுமே தள்ளும் அல்லது குடும்பத்தின் அமைதி போகும். அதனால் மருமகளின் பங்கு ரொம்ப கம்மியே.(நானும் மருமகள் அளவிலே இருப்பதால் எனக்கும் அதற்க்கு மேல் தெரியவில்லை. என் சுற்றத்தில் பெற்றோரை ஒதுக்கி வாழும் பிள்ளைகளை இதுவரை கண்டதில்லை. ரொம்ப நன்றி ஆண்டவா!!!)


    இவர்கள் (பெற்றோர், மருமகள்) தவறினாலும் emergency shutoff system போல் final control பிள்ளையிடம் தான் உள்ளது. இவர் மட்டுமே சரியாக இருந்தால் கூட, குடும்பம் உடைவதை தடுத்து விடலாம்.
    - மாமியார் மருமகள் பிரச்சனைசகஜம் என்பதை உணர்ந்து (எல்லை மீறாதவரை) அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறேன் பேர்வளி என்று நடுவில் நுழைந்து சிக்கி சின்னாபின்னமாக கூடாது. முடிந்தவரை அமைதியாக அவர்களின் புலம்பலை கேட்டாலே போதும்.
    - ஒருவரை பற்றி மற்றவரிடம் குறை கூறுவதும் தவறு. ஓவராக புகழ்வதும் தவறு.
    - இவர்களில் யார் தவறு செய்திருந்தாலும் தனிமையில் தான் சொல்லி திருத்த வேண்டும். ஒருவரின் தவறை மற்றவரிடம் அவரின் சார்பாக தன்மையாக மன்னிப்பு கேட்கலாம். (மனைவி தவறு செய்திருந்தால் தன் பெற்றோரிடம் "அவள் சின்ன பெண் உங்களின் வழிகாட்டுதல் இருந்தால் சீக்கிரத்தில் கற்றுக்கொள்வாள்" என்றும் இதே போல் தன் மனைவியிடம் ஏதாவது தன் பெற்றோர் சார்பாக சமாதானம் செய்ய வேண்டும். இதற்காக கொஞ்சம் பிட்டு போட்டு சில பொய்கள் சொன்னால் கூட தவறில்லை. வள்ளுவரே சொல்லிட்டாரே ). இதெல்லாம் ஆரம்ப காலத்தில் தன் மனைவி வீட்டில் பொருந்தி போகும் வரை தான். அதுவரை பொறுமையாக இருந்து சுமூகமான நிலையை தொடர்ந்தால் பின்னாடி பெரும் பிரச்சனை வருவதை தடுத்து விடலாம்.
    - மனைவிக்கும் சரி, பெற்றோருக்கும் சரி அவரவர் மற்றவர் எல்லைக்குள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இவரின் பொறுப்பு.
    - மொத்தத்தில் இருவருக்குமே பாதுகாப்புணர்வை தர வேண்டும்.


    இவர் மட்டும் சாமர்த்தியமாக இருந்துவிட்டால் இரண்டு பக்கமும் இருந்து அன்பை , பாசத்தை அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் மத்தலத்தை போல் இரண்டு பக்கமும் அடி வாங்க வேண்டியது தான்.

    என்னிலை வந்த போதும் தன் பெற்றோரை கை விடுவது தன் ஆண்மைக்கே இழுக்கு என்பதை மனதில் ஆழமாக இருத்திக்கொள்ள வேண்டும். அந்த பொறுப்பை சுமையாக எண்ணாமல் தன் பிறவிக்ககடமையாக நினைத்து மேலே சொன்னதை போல் சாமர்த்தியமாக இருந்தால் ஒரு கூட்டு முயற்சியாக எல்லோருடைய ஒத்துழைப்போடும் சுலபமாக இக்கடமையை நிறைவேற்றி விடலாம்.

    Last edited by RathideviDeva; 17th Jul 2015 at 07:38 AM.

  7. #17
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    இதை எழுதி முடிக்கும் போது தோன்றியது.... நம் நிலையை விட குடும்பத்தின் அமைதிக்கு உண்மையாக போராடும் கணவர்களின் நிலைமை ரொம்ப கொடுமை.
    ஆண்களே சரியாக படிங்கள் .... நான் சொன்னது "அமைதிக்கு உண்மையாக போராடும்" கணவர்களை.......மாமியார் மருமகள் இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கும் கணவர்களை அல்ல....

    Last edited by RathideviDeva; 17th Jul 2015 at 08:04 AM.

  8. #18
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ஹாய் தேனு,

    ரொம்பவும் நல்ல ஒரு பதிவு இது... நீங்க எல்லாரும் இப்படி ஒரு நிலை இருக்கேன்னு ஒரு கவலையோட வருத்தத்தோட உங்க கருத்தை பதிவு செய்யறீங்க... இது சரியா தப்பான்னு எனக்கு வாதம் செய்யவோ விவாதம் செய்யவோ தெரியலை... எனக்கு தோன்றிய சில விஷயங்களை நான் பகிர்ந்துக்கறேன்...

    இது போன்ற இல்லங்கள் ஏன் ஆரம்பித்தது எதனால் என்பது எல்லாம் மீறி இப்போது அது அதிகமாகி வருவதற்கு காரணம் என்ன?

    நீங்களும் ரதியுமா சேர்ந்து மாமியார் மருமகள் சண்டை என்று காரணத்தை பிட்டுபிட்டு வைத்து விட்டீர்கள்...

    எனக்கு தோன்றியது இது மாமியார் மருமகள் சண்டையினால் ஆரம்பித்து இருக்கலாம் என்ற போதும் இப்போது அது அதிகம் பெருகியதற்கு காரணம் வயோதிகம், முதுமை மற்றும் வீட்டில் இருப்பவர்களால் அவர்களை கவனித்து கொள்வதற்கு நேரமின்மையும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது...

    அவர்களை கவனித்து கொள்ள முடியாமல் வீட்டில் இருப்பவர்கள் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்... முதியோர் இல்லங்கள் பெருகிய அளவிற்கு குழந்தைகள் காப்பகமும் பெருகி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா... வேலைக்கு செல்லும் கணவனும் மனைவியும் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வயோதிகர்களை இல்லங்களில் விட்டுவிட்டு பொருளீட்ட ஓடுகிறார்கள்...

    சற்றே சிந்தித்தால் ஒன்று புரியும்... இன்று குழந்தையை காப்பகத்தில் நாம் விடுகிறோம் நாளை நம்மை நம் குழந்தை முதியோர் காப்பகத்தில் இது போல தான் விடுவான் என்பதை நினைக்க நாம் தவறுகிறோம்... ஏன்

    நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பொருளீட்ட நிம்மதியை தொலைத்துவிட்டு நிம்மதியை தேடி ஓடுகிறோம்... இதனால் குழந்தையும் தன் நலம் மட்டுமே பார்க்க ஆரம்பித்து விடுகிறது...

    நாளை நம் பிள்ளை நம்மை விட்டு விலகினால் நாம் அவனையும் அவன் மனைவியையுமே குறை கூறுகிறோம்... குழந்தைகாக என்று ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவனுக்கு கொடுக்க தவறியது அன்பு, பாசம், பற்று, தாத்தா பாட்டியின் அரவணைப்பு இதெல்லாம் தான்...

    ஆனால் நம் குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நம் மீது பாசமாக இல்லை என்று நாமே அவனை குறை கூறுகிறோம்... கொடுத்தால் தானே கிடைக்கும்... அன்பு கொடுத்தால் தான் அது பலமடங்காகி திரும்பி வரும் என்பதை மறந்து விடுகிறோம்...

    தவறு மருமகள் மீது மட்டும் என்று குறை கூறுவது தவறு, மகனுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் உணர முடியும்...

    வீட்டிற்கு வரும் மருமகள் மாமியாரில் தன் அன்னையையும்... மாமியார் மருமகளில் மகளையும் பார்த்தாலே போதும்... எல்லாவற்றையும் விட, விட்டுக் கொடுத்தாலே போதும் எல்லாமே சுமூகமாக இருக்கும்... விட்டுக் கொடுக்க வேண்டியது ஈகோவை...

    Last edited by saveetha1982; 17th Jul 2015 at 11:37 AM.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  9. #19
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    வயதாகி விட்டால் பெரியவர்கள் குழந்தையாய் ஆகிவிடுவார்கள் என்பது எவ்வளவு உண்மை...

    பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்கும் அந்நேரம் நமக்கு தோன்றுவது எல்லாம் சலிப்பும் எரிச்சலும் தான் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்கள் இன்னமும் அடம் பிடிப்பதை பார்... சின்ன குழந்தை என்று நினைப்பு என்ற எண்ணமே முதலில் வரும்... சற்றே சிந்தித்தால் அவர்கள் மீண்டும் குழந்தையாகி விட்டார்கள் என்று நமக்கு புரியவரும்...

    ஆனால் நாம் தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறோம்... வயதான பெற்றோரின் கவலை என்ன... என்னை யாருமே கவனிப்பது இல்லை... சாப்பிட்டியா என்று கேட்பதில்லை...

    எதையுமே என்னிடம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று சிறுகுழந்தையாய் மாறி அவர்கள் கோபித்துக் கொள்ளும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்து பதிலுக்கு மல்லுக்கு நிற்கிறோம்...

    அவர்களை புரிந்து கொள்ளாமையின் விளைவு அவர்கள் முதியோர் இல்லத்தில்...

    சிறு குழந்தை அடம் பிடிப்பது, வீம்பு செய்வது போல் தானே அவர்களும் செய்கிறார்கள்... ஆனால் சிறுகுழந்தையை புரிந்து கொள்ளும் நாம் அவர்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்... நாளை நமக்கும் இது தான் என்பது புரிந்தாலே இதை தவிர்க்கலாம்...

    Last edited by saveetha1982; 17th Jul 2015 at 11:48 AM.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  10. #20
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by saveetha1982 View Post
    எனக்கு தோன்றியது இது மாமியார் மருமகள் சண்டையினால் ஆரம்பித்து இருக்கலாம் என்ற போதும் இப்போது அது அதிகம் பெருகியதற்கு காரணம் வயோதிகம், முதுமை மற்றும் வீட்டில் இருப்பவர்களால் அவர்களை கவனித்து கொள்வதற்கு நேரமின்மையும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது...

    அவர்களை கவனித்து கொள்ள முடியாமல் வீட்டில் இருப்பவர்கள் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்... முதியோர் இல்லங்கள் பெருகிய அளவிற்கு குழந்தைகள் காப்பகமும் பெருகி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா... வேலைக்கு செல்லும் கணவனும் மனைவியும் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வயோதிகர்களை இல்லங்களில் விட்டுவிட்டு பொருளீட்ட ஓடுகிறார்கள்...

    சற்றே சிந்தித்தால் ஒன்று புரியும்... இன்று குழந்தையை காப்பகத்தில் நாம் விடுகிறோம் நாளை நம்மை நம் குழந்தை முதியோர் காப்பகத்தில் இது போல தான் விடுவான் என்பதை நினைக்க நாம் தவறுகிறோம்... ஏன்

    நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பொருளீட்ட நிம்மதியை தொலைத்துவிட்டு நிம்மதியை தேடி ஓடுகிறோம்... இதனால் குழந்தையும் தன் நலம் மட்டுமே பார்க்க ஆரம்பித்து விடுகிறது...

    நாளை நம் பிள்ளை நம்மை விட்டு விலகினால் நாம் அவனையும் அவன் மனைவியையுமே குறை கூறுகிறோம்... குழந்தைகாக என்று ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவனுக்கு கொடுக்க தவறியது அன்பு, பாசம், பற்று, தாத்தா பாட்டியின் அரவணைப்பு இதெல்லாம் தான்...

    ஆனால் நம் குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நம் மீது பாசமாக இல்லை என்று நாமே அவனை குறை கூறுகிறோம்... கொடுத்தால் தானே கிடைக்கும்... அன்பு கொடுத்தால் தான் அது பலமடங்காகி திரும்பி வரும் என்பதை மறந்து விடுகிறோம்...
    இன்றைய அவசர உலகத்தில் மாநகரங்களில் அன்றாட வாழ்க்கையில் பொருளுக்கும் தேவைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்களின் வசதிக்காக வந்ததாக நீங்கள் சொல்லும் காரணமும் நிதரசனத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    இப்படியே போனால் நாமே தானாக முதியோர் இல்லத்தில் சென்று சேரும் நிலை வந்தாலும் வரலாம். ஏனென்றால் மகன் மருமகள், பொருளீட்ட அலுவலகம் சென்றுவிட, பேரப்பிள்ளைகள் பிள்ளைகள் படிப்பு, டிவி , வீடியோ கேம்ஸ், டேப்களில் மூழ்கி இருப்பதால் , பெரியவர்களுக்கே இத்தனிமை வாழ்க்கை அலுக்க ஆரம்பித்து விடும். தங்களுடன் பேச, பொழுதை போக்க, கொஞ்சம் சுதந்திரமாக, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இந்த புதியமுறை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை வரலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter