Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #31
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..




    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #32
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    தேனு மிக நல்ல பதிவு .. எல்லோரும் அவங்க கருத்தை நல்லா சொல்லி இருக்காங்க ..

    ரதி (@RathideviDeva) மிக அழகா திருமணம் முன் மற்றும் பின் மனநிலையை சொல்லி இருக்கீங்க ..

    எனக்கு தோன்றுவது அனுசரிப்பு , அன்பு செய்வது என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டும் ...ஒருத்தர் மட்டும் அனுசரித்து ஒருத்தர் விட்டுகொடுக்க வேண்டும் என்றால் கஷ்டம் தான் ...

    மாமியார் - மருமகள் பாசம் மற்றும் உரிமை போராட்டம் கால காலமா நடக்குது ....ஒரு மகனுக்கு தன பெற்றோரை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் தடுத்தாலும் அவர் தன கடமையை நிறைவேற்றுவார் (இதை நான் நிறைய பார்த்திருக்கிறேன் )..அந்த மகனுக்கு மனமிருந்தால் உறுதியாக செய்ய முடியும் ..

    மகள் இதை செய்ய முடியுமா என்பது தெரியவில்லை ??? ஒரு பெண் சம்பாதித்தால் சாத்தியம் ..இல்லை என்றால் கேள்வி குறி தான் ...

    பெற்றோரருக்கு ஆண் பிள்ளை இல்லை மகள் மட்டும் என்றால் அவர்களின் நிலை ? அந்த பெற்றோர்கள் நிலையை எந்த இடத்திலும் விவாதித்தும் நான் பார்த்ததில்லை...

    Last edited by repplyuma; 18th Jul 2015 at 12:26 AM.
    - உமா உதய்

  3. #33
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    கொஞ்சம் படபடன்னு பேசும் உறவினர் எனில் பெரியவங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க மா ........ஆனால் பாசமானவங்க விட்டுடு என்று ...........எங்கம்மா ,அப்பா சொல்லி வளர்த்தாங்க ...........ஆனால் என் பொண்ணு ட்ட .........இதை சொன்னால் ,நான் ஏமாளியா மா ..........எதுக்கு என்னை சொல்லணும் என்று கேட்கிறாள்
    @ponschellam அக்கா நானும், அப்படி சிறுவயது முதலே சொல்லி வளர்க்கப்படாததால், உங்கள் மகளின் மன நிலையே எனக்கும். அதோடு என் வாழ்க்கை சூழல்களும் அப்படியே அமைந்துவிட்டன. இப்போது என் பிள்ளைகளுக்கு என்ன சொல்லி வளர்ப்பது என்றே எனக்கு தெரியவில்லை.


    அதனால் "உன் சுய மரியாதைக்கு பங்கம் வந்தால், உன் உணர்வுகளை அடுத்தவர் மனம் நோகாமல் உணர்த்த உனக்கு எல்லா உரிமையும் உள்ளது" என்று சொல்லலாம் என்று தோன்றும். ஆனால் அது கூட "விட்டுக்கொடுக்காதே" என்று தவறாக புரிந்து கொள்ளப்படுமோ என்று பயமாக இருக்கிறது.


  4. #34
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அதைத்தான் நானும் சொல்கிறேன், Shanmugam Sir. கணவன் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், மனைவியால் தொல்லைகள் மட்டுமே தர முடியும்... முழுமையாக தடுத்து விட முடியாது.


    நீங்கள் உங்கள் மனைவிக்கு தெரியாமல் செய்தேன் என்று சொல்வது கூட உங்களையும் உங்கள் மனைவியையும் தாழ்த்தி கூறுவது போல் உள்ளது. தயவு செய்து இனி அப்படி சொல்லாதீர்கள்.
    மனைவியை தாழ்த்தி கூறுவது என்பதைவிட பெற்றோர்களை கவனித்து கொள்ளுவது முக்கியம் என்பதிற்காக இதை கூறினேன்.


  5. #35
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Hello RDD,
    சரிங்கோ நீங்க சொல்வது உண்மைதாங்கோ.

    ஓகே, நான் ஒரு கேள்வி கேக்கலாமா?
    அயல்நாட்டில் இருக்கும் நம் இந்திய தம்பதினர்கள், தங்களுடைய பெற்றோர்களை, ஏன் தங்களுடன் இருக்க அனுமதிக்க கூடாது?
    GN, c u tmrw.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #36
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Hello RDD,
    சரிங்கோ நீங்க சொல்வது உண்மைதாங்கோ.

    ஓகே, நான் ஒரு கேள்வி கேக்கலாமா?
    அயல்நாட்டில் இருக்கும் நம் இந்திய தம்பதினர்கள், தங்களுடைய பெற்றோர்களை, ஏன் தங்களுடன் இருக்க அனுமதிக்க கூடாது?
    GN, c u tmrw.

    GOOD Question?


  7. #37
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    அயல்நாட்டில் இருக்கும் நம் இந்திய தம்பதினர்கள், தங்களுடைய பெற்றோர்களை, ஏன் தங்களுடன் இருக்க அனுமதிக்க கூடாது?
    சரியான கேள்வி தான் @Sriramajayam @shansun70.

    இதில் "பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்" என்பதை விட "எங்கு அவர்கள் நிம்மதி இருக்கிறது" என்பது தான் முக்கியம்.


    சரி வெளிப்படையாகவே பேசுவோமே.
    நாம் சகல வசதிகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறோமென்று , நாம் பெற்றோரை இங்கு நம்மோடு இருக்க செய்கிறோம் என்று வைத்துகொள்வோம். சில நாட்கள் அவர்களால் இருக்க முடியும். ஒரு மாதத்திற்கு பிறகு கேளுங்கள், "லேசா ஊர் ஞாபகம் வந்திருச்சு " என்று சொல்வார்கள். சரி அதை மறக்கடிக்க நீங்கள் வெளியே கூட்டி செல்வது, ஊரில் உள்ளவர்களோடு பேச வைப்பது, பொழுது போக்க தமிழ் சானல் , தமிழ் படங்கள், அவ்வப்போது நண்பர்கள் வீட்டுக்கு செல்வது என்று முயல்வீர்கள். இப்படி இன்னொரு மாதம் ஓடிய பிறகு, திரும்பவும் அவர்கள் "ஊர் ஞாபகம்" என்று சொல்வார்கள். மிஞ்சி போனால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அதற்கு மேல் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. காரணம் அவர்களின் வேர் அங்கு இல்லை. என்னதான் தன் பிள்ளை , பேரப்பிள்ளைகள் என்று இருந்தாலும், ஏதோ ஒன்று குறைவதுபோல் தங்களால் முழுதுமாக ஒன்ற முடியாது.


    "தன்னுடைய இடம் அதுவல்ல, தான் அங்கே வெறும் விருந்தினர் தான்" என்று எண்ணுபவர்களை நம் திருப்திக்காக அடைத்து வைத்தால் (ஆம் இது அடைத்து வைப்பதற்கு சமம்) கடைசியில் இருப்பக்கத்திலுமே மன நிம்மதி போய்விடும். நமக்கு " இவ்ளோ செய்தும் அவர்களை திருப்தி படுத்த முடியவில்லையே" என்றும் , அவர்களுக்கு "நம் பிள்ளை நம்மக்காக இவ்வளவு பார்த்து செய்கிறானே, அப்படியும் நமக்கு ஊருக்கு போகணும்னு சொன்னா அவன் மனசு சங்கட படுமே" என்றும் இருக்கும்.


    இதற்கு ஒரே வழி, மகனும் தன் வேர் அதுவல்ல என்று தாய்நாடு திரும்ப வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தன்னையும் தன் குடும்பத்தையும் தயார் படுத்தி இருக்க வேண்டும். இதற்கும் வழி இல்லை என்றால், இரு பக்கமும் சேர்ந்து பேசி பெற்றோர்களுக்கு சௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.


    வயதானவர்கள் (யாராக இருப்பினும்) விரும்புவது தங்கள் சொந்த பந்தங்களுடன்/ நலம் விரும்பிகளுடன் கூடிய தனிமையற்ற வாழ்க்கை. தங்களுடன் பேசி சிரிக்க, பொழுதை போக்க, கொஞ்சம் சுதந்திரமாக, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்பது நிதர்சனத்தில் அவர்களின் நியாயமான ஆசை. அதை ஏற்படுத்தி தருவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

    @ponschellam சொன்னது போல், கூட இருந்து தான் உறவை பேண வேண்டும் என்பது இல்லை. கொஞ்சம் விலகி இருந்து ஒருவர் நலனுக்காக மற்றவர் அக்கறை செலுத்துவதே போதும். அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போதாவது பேரப்பிள்ளைகள் கேட்கும் "எப்படி இருக்கீங்க தாத்தா/ பாட்டி?"என்ற நலன் விசாரிப்பு தரும் சந்தோஷத்தை நாம் எத்தகைய வசதி ஏற்படுத்தி கொடுத்தாலும் தராது. நம் மீது அன்பு செலுத்த ஆள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விட சொர்க்கம் அவர்களுக்கு வேறில்லை.

    பொறுமையாக யோசித்தால் நான் சொல்வதில் உள்ள நிதர்சனம் புரியும் !!

    Last edited by RathideviDeva; 18th Jul 2015 at 02:45 AM.

  8. #38
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ஹலோ ஆர்.டி.டி, மதிய வணக்கம்.


    நீங்கள் சொல்வது இருக்கலாம், சில பெற்றோர்கள் சில நாட்டில் தட்ப வெட்பநிலை ஒத்து வராது. சில பெற்றோர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க முடியாமல் இருப்பது கொஞ்ச சங்கடம் உண்டு. சில பெற்றோர்கள் தினசரி வாழ்க்கை மாறி இருப்பதால், தங்களின் ஊருக்கு போகணும் நினைப்பது உண்டு.


    ஆனால், அயல்நாட்டில் இருக்கும் இந்திய தம்பதினர்கள் என்ன செய்யணும், தங்களுடைய பெற்றோர்களை, அயல்நாட்டில் தங்களின் பெற்றோரின் விருப்பம்படி ஊரில் இருக்கிற தினசரி வாழ்க்கை போல நடந்து கொள்ள வேண்டும். உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா, சில பெற்றோர்கள், அயல்நாட்டில் தங்கள் பிள்ளைகள் வீட்டில், வேலை செய்வார்கள். உதாரணமாக சொன்னால், அப்பா, தோட்ட மற்றும் வீடு சுத்தம் செய்வார்கள். அம்மா, சமையல் செய்வார்கள். இது மட்டுமல்ல, தந்தையாரும் தாயாரும் கடைக்கு சென்று காய் கனிகள் வாங்கிவருவார்கள். இதை சில மருமகள்கள் அன்பான உத்தரவு போடுவார்கள். இதை நான் நேரில் பார்த்து உள்ளேன் (ஆஸ்திரேலியாவில்). எனக்கு நிறைய அயல் நாட்டின் நண்பர்கள் உண்டு. இதில் பல நண்பர்கள், யாரும் பெற்றோர்களை தங்களுடன் வசிக்க அனுமதிக்கவில்லை. இதில் ஒரே ஒரு லண்டன் நண்பி (என் வகுப்பு தோழி), அவர் சுமார் 1992 ஆம் ஆண்டில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார், லண்டனுக்கு அழைத்து தங்கள் கூட வசிக்க செய்தார். இன்று வரை எந்த குறை இல்லாமல் பார்த்து கொண்டார். FYI

    இன்று காலை ஒரு நண்பரிடம் (அரசு அதிகாரி, தமிழக சமூக துறை) பேசினேன். அவரிடம் கேட்டேன், 'ஏன் பெற்றோர்களை, என்ன காரணத்தினால் முதியோர் இல்லத்திற்கு சேர்கிறார்கள் என்று கேட்டேன்.


    அவர் சொன்னார்,


    பெரும்பாலும், பெற்றோரின் பிள்ளைகள்தான் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வருவார்கள். கூடவே பிள்ளைகளின் மனைவிகளும் வருவார்கள். முதியோர் இல்லத்தின் அதிகாரி அவர்கள், சில கேள்விகள் கேட்பார், 'ஏன் நீங்கள் இங்கு உங்க பெற்றோர்கள் சேர்க்க விரும்பிறங்க', என்று கேட்பார். ஆனால், அங்கு வரும் மருமகள் தான் பதில் சொல்லுவார், 'நாங்கள் வெளி நாட்டுக்கு குடியேற போறோம்' என்று சொல்வார்கள். சில பிள்ளைகள், 'எங்க வீட்டில் என் மனைவிக்கு என் அம்மாக்கும் சண்டை நடைபெறுவதால், முதியோர் இல்லத்திற்கு சேர்க்க வந்தேன்' என்று சொல்கிறார்கள். 'சில நேரத்தில் யாரும் இல்லாததால், சில பெற்றோர்கள் சேருகிறார்கள்' என்று சொன்னார். சுருக்கமா சொன்னால், பெருபாலும் முதியோர் இல்லத்திற்கு சேர்க்க இரண்டு விதமான காரணங்கள். அவைகளில் ஒன்று, தாங்கள் (மகன் மற்றும் மருமகள்) வெளிநாட்டுக்கு போவது, இரண்டாவது மருமகளும் மாமியாரும் சண்டை நடை பெறுவதால் என்று எனது நண்பர் சொன்னார்.


    மேல சொன்ன வார்த்தையில் யார் மனது மனம் நோகும்படி இருந்தால் அடியேனை மன்னிக்கவும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #39
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    தள்ளாடும் .... முதுமை.
    By
    ஆர். கே. குரு வலைபதிவு


    சமுகம் சார்ந்த முதுமை:


    தள்ளாடும் வயதிலே தவிக்கும் முதுமைகள் ஆதரவற்று அனாதைகளாகப்படுகின்றன. இந்த முதுமை அனாதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோர் சமூகத்தில் அதிகம் பேர் இருந்தாலும் முதுமைகளின் அவலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. இதற்கு யார் காரணம்.? எவை காரணம்.? என்று நம் உள்ளம் ஒரு நாளேனும் ஆராய்ந்ததுண்டா... காரணம் கேட்டால் சமூகம் என்று கூறி அதன் மேல் பழிபோட்டு தப்பித்துகொள்கிறோம். நாம்தான் இந்த சமுகம். இதற்கு நாம் யாவரும் பொறுப்பாளிகள். முதுமையை எள்ளி நகையாடும் இந்த இளம் உறவுகளுக்கு தெரியாது நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம். ஒரு நாள் வீழ்வோம் என்று அறியாமல் இருக்கும். "இளம் விழுது காய்ந்த விழுதை பார்த்து சிரித்ததாம்" இதை பழமொழியாய் சொல்வார்கள். ஆனால் முதுமையை, உற்றஉறவுகளால் துரத்தியடிக்கும்போது இதை காண்பவர் நெஞ்சம் பதறும் "ஐயோ படுபாவி பெத்த அப்பன்னுகுட பார்காம பொண்டாடிகுட சேர்ந்து இப்படி திட்டறானே இவனுன்ங்களா உருபடுவான்களா" என்று அழாத குறையாய் வருத்தபடுவாங்க..அப்படி அவர்கள் வருத்தபடுவது வெளியில் உள்ள முதியவர்களுக்கு மட்டும்தான். தன் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு இது பொருந்தாது என்றே நினைப்பார்கள். இது எப்படி இருக்கும் என்றால் மெகா சீரியல்கள் பார்க்கும் பல வீட்டு மாமியார்கள் தன் மருமகள் மேல் காரணம் இல்லாமல் ஒரு வித காழ்புணர்வு கொண்டிருப்பாள். அம்மருமகள் நல்லவளாக இருந்தாலும் ஒரு மாதிரி வெறுப்பது போலதான் இருக்கும். (மாமியார், மருமகள் உறவில் உள்ள உரசல், விரிசல் ஏற்படுவது எல்லாம் இப்படிதான். இது உண்மையும் கூட) அதே அந்த மாமியார் சிரியல்ல வர மாமியார், மருமகளை கொடுமைபடுத்துவதை பார்த்து ரொம்ப வருத்தபடுவார். இது போல மாமியார்களுக்கு சிரியல்லதான் வருத்தம் இருக்கும். நிஜ வாழ்கையில் இருக்காது. இந்த சமுக அவலங்களும் இப்படிதான் இருக்கின்றன. ஒரு கொடுமை நம்ம பக்கத்தில் நடந்தால் அது பெரிதாக தெரியாது. அதுவே பத்திரிகையில் வரும்போது ரொம்ப பதற்றம் அடைவோம். ஏனென்றால் நம்மில் பலபேருக்கு சுயநலமாய் இருந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் என்ற கணக்கில்தான் வாழ்க்கை ஓடிகொண்டு இருக்கிறது.


    முதியோரை பாதுகாக்கும் நடைமுறைகள்:


    தமிழகத்தில் முதியோரை பாதுகாக்கும் சட்டம் 2007 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் முதன்முதலில் சென்னையை சேர்ந்த ஒருவன் தன் தந்தையை கவனிக்காமல், புறக்கனித்ததால் கைது செய்யப்பட்டான். 2007 ஆண்டு வந்த சட்டம் 2010 -ம் ஆண்டுதான் தண்டனை சட்டமாக ஆனது. அதுவரைக்கும் யாருக்கும் அரசின் தெரியாத சட்டமாகத்தான் இருந்தது. பிள்ளைகளால் ஆதரவற்ற பல முதியவர்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் பயனில்லை ஏனென்றால் பிள்ளை பாசம் உள்ள தகப்பன்கள் இங்கு அதிகம் அவர்கள் முதியோர் இல்லங்களை தான் நாடிசெல்கின்றனர். இதே தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுற்றி உள்ள வட்டாரத்தில் நோய்வாய்ப்பட்ட, கவனிக்க முடியாத முதியவர்களை விஷஊசி போட்டு சாகடிக்கின்றனர். இவை இப்போதுதான் செய்தி ஊடகம் (Media) மூலம் வெளிவந்திருக்கின்றது. இதே போன்று இராமநாதபுரம் மாவட்டத்திலும் முதியவர்களை வேறுவிதமாக கொள்கிறார்கள். மிகவும் வயதானவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டு இளநீர் தருகிறார்களாம் அப்படி கொடுத்தால் ஜன்னி வந்து இயற்கை மரணமாய் இருக்குமாம். இதை அங்கு "தலைக்ஊற்றுதல்" என்று சொல்வார்களாம். இப்படி தெரிந்தே முதியவர்கள் சாகடிக்கபடுகிறார்கள். தெரியாமல் இன்னும் எவ்வளவு கொடுமை நடக்கிறதோ...இவை எல்லாம் கேட்கும்போது, படிக்கும்போதும் சராசரி மனிதனின் மனம் கொலைவெறி பிடித்ததாகத்தான் இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் மூலம் இவைகளை களையவேண்டும். முதியோர் பாதுகாப்பு சட்டம் தீவரமாக நடைமுறைபடுத்தபட வேண்டும்.


    பெற்றோர்களுக்கு, பிள்ளைகளால் உண்டாகும் கவனிப்பு:


    முதியோர்களை கவனித்துகொள்வது பிள்ளைகளின் கடமை மற்றும் பொறுப்பும்கூட ஆனால் இதில் பல பிள்ளைகளின் பொருளாதாரம் பெற்றோர்களை கவனிக்கபடாத சூழ்நிலையில்தான் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு 40 வயதுமேல்தான் பெற்றோர்களை பாதுகாக்கும் நிலை உண்டாகுகிறது. அப்போது பிள்ளைகளுக்கே ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று பல வியாதிகளை கொண்டுள்ளனர். இதில் பெற்றோர்களை கவனிக்கும் பட்சத்தில் பொறுப்புகள் அதிகமாகிறது. இதில் பலபேர் நன்கு படித்துவிட்டு வெளிநாட்டில் வசிக்கிறார்கள். தங்களுடைய பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். அந்த காலத்தில் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றார்கள் ஒரு பிள்ளை பார்கவில்லை என்றால் இன்னொரு பிள்ளை வீட்டில் பெற்றோர்கள் இருக்கலாம். ஆனால் 30 - 40 வருடங்களில் 80% மக்களுக்கு 2 குழந்தைகளே போதும் என்ற நிலை வந்துவிட்டது இது வரவேர்ககுடியதுதான் அதேவேளையில் முதியோர்களையும் ஒதுக்கமுடியாது, இதில் அவர்கள் நலன் முக்கியமாக இருக்கின்றது. இதுபோன்ற பிரச்சனைகளை மக்களால் விவாதத்திற்கு எடுத்துகொள்ளபடவேண்டும். அப்போது இதில் பல தீர்வுகள் உண்டாகும் என்றே நினைக்கிறேன்.


    முதுமையின் மறுபக்கம்:


    முதுமையும், சாவும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இணைந்து வருகிறது. மனிதனுக்கு 60 வயது மேல் முதுமை தொடர்வதாக நினைக்கவைக்கபடுகிறது. அது அவர்களுக்கு உண்டாகும் மரண பயம், ஆதரவற்ற நிலை, மறதியின்மையை ஏற்படுத்துகிறது. இதில் தானாகவே சிறுநீர் போகுதல், மலம் கழித்தல் பெண்களுக்கு கருப்பை கிழ்யிருங்குதல், எலும்பு தேய்மானம், புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ரத்த அழுத்தம், மற்றும் உணவு உட்கொள்ளாமை இப்பிரச்சனைகள் யாவும் முதுமையில் பல பேருக்கு தொடர்வதாக இருக்கின்றன. இப்போது எல்லோருக்கும் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மனிதர்கள் எல்லோரும் 125 வயதுமேல் வாழ்ந்ததாக இல்லை. உலகத்தில் உள்ள மக்கள் தொகை 1999 வருடம் வரை 6 பில்லியனாக இருந்தது. இப்போது அதை தாண்டி செல்கிறது. இவை 2020 ஆண்டு 7.6 பில்லியன் தாண்டும் என்று மக்கள்தொகை புள்ளியல் ஆய்வு கணித்திருக்கின்றது. இவற்றில் கால்பாகம் (23%) 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களாக இருப்பார்கள். அப்போது முதியவர்கள் வாழ்வு இன்னும் கேள்விகுறியாக்கபடும்.



    பிரபலமான ஆதரவற்ற முதியவர்கள்:


    இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன் அவர்கள் பெற்ற பிள்ளைகள் எதுவும் இல்லாமல் தன் உறவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாமல் தன் மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார். மற்றொருவர் 1973 ஆண்டு சாகித்ய ஆகாடமி விருது பெற்ற பெண்மணி ராஜம் கிருஷ்ணன். இவர் தமிழகத்தின் மிகசிறந்த எழுத்தாளர் இடதுசாரி சிந்தனை உள்ளவர். 1950 ஆண்டு நியுயார்க் ஹெரால்ட் டிரிபியுன் சர்வதேச விருது பெற்ற தமிழக எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பு தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய "வேருக்கு நீர்தான்" என்ற புத்தகத்திற்காக சாகித்ய ஆகாடமி விருது கிடைத்தது. அவ்வாறு பலவிருதுகள் பெற்ற பெண்மணி உறவுகளால் ஏமாற்றபட்டு அனாதை விடுதியில் அடைக்கலமானார்.




    முதியோர் புனர்வாழ்வு:


    வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் பொறுப்பான வேளைகளில் இருப்பார்கள். ஆலோசனை, அறிவுரை சொல்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு 60 வயது கடந்தால் சமுகத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒதுக்கப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள். இவை மக்களால் விவாதம் பண்ணவேண்டிய பிரச்சனைகளையும் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. முதியவர்களுக்கு சுகாதாரம், மருத்துவ வசதி, பாதுகாப்பு இருப்பிடம் இது போன்ற தேவைகளை ஆளும் அரசுதான் கவனத்தில் கொள்ளவேண்டும், நிறைவேற்றியும் தரவேண்டும். பின் மக்களுக்கும் உறவுகளின் முதுமை எனபது என்றும் பாரமாக இல்லாமல் இருக்கவேண்டும். இதை நல்ல உள்ளங்களும் ஏற்பார்கள்...என்றே நினைக்கிறேன்.


    FYI


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #40
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    இல்லம் தேடி அல்லாடும் ஏழை முதியோர்
    By
    பிபிசி தமிழ்


    தமிழ்நாட்டில் சொந்தக்குடும்பத்துடன் வாழ முடியாத ஏழை முதியவர்களுக்கு இருக்கும் ஒரே வழி இலவச முதியோர் இல்லங்கள். ஆனால் அப்படியான இலவச முதியோர் இல்லங்களில் இடம் கிடைப்பதே இன்றைக்கு குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது.


    காரணம் இன்றைய நிலையில், தமிழ்நாட்டின் இலவச முதியோர் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த அளவுக்கு எல்லா இலவச முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன. மதுரையில் அதிகபட்சம் 50 பேர் வரை தங்க முடியும் ஒரு இலவச முதியோர் இல்லத்துக்கு தினந்தோறும் குறைந்தது 50 பேர் வரை தங்களை சேர்த்துக்கொள்ளும்படி கோரி முதியவர்கள் வந்து திரும்பிச் செல்வதாக கூறுகிறார் அந்த இலவச முதியோர் இல்லத்தின் காப்பாளர் ஷர்மிளா.


    கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பணியில் இருக்கும் ஷர்மிளா, தான் பணியில் சேர்ந்த புதிதில் இத்தனைபேர் தங்கள் இல்லத்தை நாடி வரவில்லை என்கிறார். ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது ஒரு முதியவராவது இருக்கிறார். ஒவ்வொரு வீடும் அவரை வீட்டை விட்டு விரட்டியடிக்கும்போது அவர்கள் நேராக செல்வது இலவச முதியோர் இல்லங்களே என்கிறார் ஷர்மிளா.


    இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது சென்னையில் இருக்கும் பிரபல முதியோர் இல்லத்தில் இருக்கும் சுப்புலட்சுமியின் கதை. 73 வயதில் தன் ஒரே மகளுடன் வசிக்கவே அவருக்கு விருப்பம். ஆனால் அவரது மகளோ சமையல் வேலைக்கு போய் தன் இரண்டு பெண்குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நிலைமையில் இருக்கும் சூழலில் அவருக்கு பாரமாக இருக்கத் தான் விரும்பவில்லை என்பதால் இந்த இலவச முதியோர் இல்லத்தில் வந்து தங்கியிருப்பதாக கூறுகிறார் சுப்புலட்சுமி.


    சென்னையில் இருக்கும் இரண்டு பெரும்புள்ளிகள் வீட்டில் தலா 25 ஆண்டுகளுக்கும் மேல் சமையல் வேலை செய்துவிட்டு தள்ளாத வயதில் மகளுடனும் இருக்க முடியாத நிலையில் தனக்கு இடமளித்து பராமரிக்கும் இலவச முதியோர் இல்லத்தில் தான் மகிழ்ச்சியாகவே இருப்பதாக கூறுகிறார் சுப்புலட்சுமி.


    ஆனாலும் அவர் உள்ளிட்ட முதியோர் இல்லவாசிகளுக்கு குடும்பத்தவருடன் வாழவே விருப்பம். ஆனால் குடும்பத்தவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்கிற யதார்த்தம் உறுத்தும் நிலையில் முதியோர் இல்லங்களே அவர்களின் ஒரே புகலிடமாக இருக்கின்றன.


    இதில் போய்ச் சேரும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, அதற்கான காரணங்களும் அதிகரித்துவருகின்றன. ஏழைக் குடும்பங்களில் குழந்தைகளின் கல்வி, உணவு, வீட்டு வாடகை மற்றும் மருத்துவ செலவுக்கே குடும்ப வருமானம் போதாது என்னும்போது வீட்டில் இருக்கும் முதியவர் தேவையற்ற சுமையாக பார்க்கப்படுவதும் நடத்தப்படுவதும் இயல்பாகி வருகிறது. இத்தகைய ஒதுக்குதலை, அவமானத்தை தாங்க முடியாத முதியவர்கள் நாடிச்செல்வது இலவச முதியோர் இல்லங்களை.


    ஒருபக்கம் அரசு சார்பில் மேலதிக முதியோர் இல்லங்கள் கட்டுவதாக அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பதில் சந்தேகங்கள் நிலவுகின்றன.


    இப்படியான ஏழை முதியோர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலில் இலவச முதியோர் இல்லங்களைத் துவக்கியவை கிறித்தவ தொண்டு நிறுவனங்கள். இன்றும் கூட கணிசமான இலவச முதியோர் இல்லங்களை கிறித்தவ தொண்டுநிறுவனங்கள் நடத்துகின்றன என்றாலும் இன்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இலவச முதியோர் இல்லங்களை நடத்துகிறார்கள்.


    முதியோர் இல்லங்கள் அதிகரித்திருக்கும் அளவுக்கு அவற்றின் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. காரணம் இலவச முதியோர் இல்லங்களில் ஏழை முதியவர்கள் நடத்தப்படும் விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.


    ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பான்மையான இலவச முதியோர் இல்லங்கள் ஒரு வித கொட்டில்களைப் போல நடத்தப்படுகின்றன. அறைகளின் அளவு முதல் அளிக்கப்படும் உணவு வரை எல்லாமே பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. முதியோருக்குத் தேவைப்படும் சிறப்பு உணவு முதல் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் வரை பெரும்பாலான முதியோர் இல்லங்களில் இருப்பதில்லை.


    பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் தன்னிடம் கருத்துமாறுபாடு காரணமாக சிலநாட்கள் ஒரு பிரபல முதியோர் இல்லத்தில் கட்டணம் கட்டித் தங்கிய தனது தந்தையாருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார்.


    சரியாக வேகவைக்கப்படாத காலை உணவு முதல் சுகாதாரமற்ற அறைகள் வரை பல்வேறு காரணிகளால் சாவித்திரி கண்ணனின் தந்தையார் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக்க் கூறுகிறார் சாவித்திரி கண்ணன்.


    சாவித்திரி கண்ணனின் தந்தைக்கு மட்டும் இத்தகைய கசப்பான அனுபவம் நடக்கவில்லை. பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனது முதுமையில் சென்னையில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் தான் சென்று தங்கினார். ஆனால் அவரால் அந்த முதியோர் இல்லத்தில் நீடித்து இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் அங்கே முதியோர் நடத்தப்பட்ட விதம் தனக்குப்பிடிக்கவில்லை என்று தன்னிடம் ராஜம் கிருஷ்ணன் தெரிவித்ததாக கூறினார் சாவித்திரி கண்ணன்.


    முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வளர்ந்த அளவுக்கு அவற்றின் தரம் மேம்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்கிறார் சாவித்திரி கண்ணன். இது அவரது கருத்து மட்டுமல்ல, மற்ற பலரின் கருத்தும் அதுவே.


    FYI


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter