Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #41
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Old Age Homes


    There are 728 Old Age Homes in India today. Detailed information of 547 homes is available. Out of these, 325 homes are free of cost while 95 old age homes are on pay & stay basis, 116 homes have both free as well as pay & stay facilities and 11 homes have no information. A total of 278 old age homes all over the country are available for the sick and 101 homes are exclusively for women. Kerala has 124 old age homes which is maximum in any state.


    FYI

    (Ref: Directory of Old Age Homes in India, HelpAge India, 1998)



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #42
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    30 வருடங்கள் ஒரு குடும்பத்தில் தலைவனாகவும், தலைவியாகவும் இருந்தவர்களை மருமகள் வந்தவுடனே விட்டுக் கொடுத்து ஒதுங்கி விடுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. மாமியார் விட்டுக் கொடுத்தால் என்னவென்று மருமகளும், மருமகள் தன் பேச்சை மதித்து நடக்க வேண்டும் என்று மாமியாரும் எதிர்பார்ப்பார்கள்.


    ஒரு பெண் புகுந்த வீடு போகிறாள் என்றவுடனே, அவளின் தாயும், பெண் உறவினர்களும் முதலில் கூறும் அறிவுரை, கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, தனிக் குடித்தனம் போய் விடு என்பது தான். வீடு வாசல் என்று இருந்தால், மாமனார் மாமியாரை துரத்தி விடு என்பதாகத்தான் இருக்கும்.


    தன் மகளுக்கு இதுபோல அறிவுரை சொல்லும் ஒரு தாய், தனக்கு வரும் மருமகள் மட்டும் அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். மருமகளும் தன்னுடைய மகள் போலதான் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.


    முதலில் தாய் மகளுக்கு புகுந்த வீட்டில் மாமனார், மாமியாரை தாய் தந்தையாக மதித்து நடக்க அறிவுறுத்த வேண்டும். அவரும் தன் மாமியாரை மதித்து நடப்பதை ஒரு முன் உதாரணமாக கொண்டு இருந்தால், வீட்டில் இருக்கும் மகள்கள் தாயின் குணத்தை அப்படியே கொண்டு வளருவார்கள்.


    அதுபோலவே மாமியாரும் மருமகளை, மகள் போல நடத்த வேண்டும். இரு பாலருமே கொஞ்சம் விட்டுக் கொடுத்தால், குடும்பத்தில் பூசல்கள் வருவதை தடுக்க முடியும்.


    மகன்களும் தன் பெற்றோரை ஆதரித்து, அரவணைக்க வேண்டும். மனைவியை கெஞ்சியோ, கொஞ்சியோ சமாளிக்க சாமர்த்தியம் உள்ளவர்களாக இருப்பது மிக்க அவசியம். தனித் தனியே வசித்தாலும், தன் பெற்றோரின் நலத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும்.


  3. #43
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    நீங்கள் சொல்வது இருக்கலாம், சில பெற்றோர்கள் சில நாட்டில் தட்ப வெட்பநிலை ஒத்து வராது. சில பெற்றோர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க முடியாமல் இருப்பது கொஞ்ச சங்கடம் உண்டு. சில பெற்றோர்கள் தினசரி வாழ்க்கை மாறி இருப்பதால், தங்களின் ஊருக்கு போகணும் நினைப்பது உண்டு.
    இது வெளிநாடு என்று இல்லை உள்நாட்டிலேயே நடக்கிறது. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் பல பெரியவர்கள் அடுத்தவர்களை(அது பிள்ளையாக இருந்தாலும்) சார்ந்து வாழும் வாழ்க்கையை விரும்புவதில்லை. இது, நான் என் சுற்றத்தில் கண்டது .

    ஆனால், அயல்நாட்டில் இருக்கும் இந்திய தம்பதினர்கள் என்ன செய்யணும், தங்களுடைய பெற்றோர்களை, அயல்நாட்டில் தங்களின் பெற்றோரின் விருப்பம்படி ஊரில் இருக்கிற தினசரி வாழ்க்கை போல நடந்து கொள்ள வேண்டும்.
    நண்பரே இது நிதர்சனத்தில் சாத்தியமில்லை. ஓரளவுக்கு மா(ற்)றி அடுத்தவருக்கு திருப்தி அளிக்கலாம். அதன்பிறகு இரு பக்கமும் கொஞ்சம் புரிந்து அனுசரித்து நடந்தால் மட்டுமே பிரச்சனை வராது.

    உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா, சில பெற்றோர்கள், அயல்நாட்டில் தங்கள் பிள்ளைகள் வீட்டில், வேலை செய்வார்கள். உதாரணமாக சொன்னால், அப்பா, தோட்ட மற்றும் வீடு சுத்தம் செய்வார்கள். அம்மா, சமையல் செய்வார்கள். இது மட்டுமல்ல, தந்தையாரும் தாயாரும் கடைக்கு சென்று காய் கனிகள் வாங்கிவருவார்கள். இதை சில மருமகள்கள் அன்பான உத்தரவு போடுவார்கள். இதை நான் நேரில் பார்த்து உள்ளேன் (ஆஸ்திரேலியாவில்). எனக்கு நிறைய அயல் நாட்டின் நண்பர்கள் உண்டு. இதில் பல நண்பர்கள், யாரும் பெற்றோர்களை தங்களுடன் வசிக்க அனுமதிக்கவில்லை.
    இது பார்ப்பவர் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. "என்னை பிள்ளை வீட்டில் வேலைக்காரர்கள் போல் நடுத்துகிறார்கள்" என்றும் நினைக்கலாம். "என்னை ஒதுக்கி வைக்காமல் என்னையும் இணைத்து குடும்பத்துக்கு உதவியாக சுறுசுறுப்பாக இயல்பாக இயங்க வைக்கிறார்கள்" என்றும் நினைக்கலாம். ofcourse அதற்கேற்றவாறு மகன் மருமகள் நடவடிக்கையும் இருப்பது அவசியம். குறை காணும் குணம் இருந்தால் என்ன செய்தாலும் திருப்தி வராது. இது இருபக்கமும் பொருந்தும். அதை தான் நம் முன்னோர்கள் "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு சொல்லிவிட்டர்களே.

    இதில் ஒரே ஒரு லண்டன் நண்பி (என் வகுப்பு தோழி), அவர் சுமார் 1992 ஆம் ஆண்டில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார், லண்டனுக்கு அழைத்து தங்கள் கூட வசிக்க செய்தார். இன்று வரை எந்த குறை இல்லாமல் பார்த்து கொண்டார். FYI
    இது அவர்கள் நால்வரின் கூட்டு முயற்சியின் வெற்றி. மகனின் அன்பான நன்னடத்தையால் தான் மருமகள் கணவரின் கடமையில் தன் முழு ஒத்துழைப்பை கொடுத்திருப்பார். அது மட்டுமல்ல பெரியவர்களும் தங்கள் மகன் மருமகளை நன்றாக அன்பாக நடத்தி இருப்பார்கள். அதே போல் மகன் மருமகளும் அவர்கள் அன்பு செலுத்துமளவுக்கு தாங்களும் நடந்திருப்பார்கள். இது இல்லாவிட்டால் இத்தனை வருடங்கள் குடும்பம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை.

    சுருக்கமா சொன்னால், பெருபாலும் முதியோர் இல்லத்திற்கு சேர்க்க இரண்டு விதமான காரணங்கள். அவைகளில் ஒன்று, தாங்கள் (மகன் மற்றும் மருமகள்) வெளிநாட்டுக்கு போவது, இரண்டாவது மருமகளும் மாமியாரும் சண்டை நடை பெறுவதால் என்று எனது நண்பர் சொன்னார்.
    முதல் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. சரி இரண்டாவது காரணம் ...... மாமியார் மருமகள் சுமுகமாக இல்லாத வீடுகளே பெரும்பாலும் உள்ளன. அப்படியென்றால் முதியோர் இல்லங்கள் பெருகி இருக்க வேண்டுமே. அப்படி நடக்காதற்கு காரணம், பலர் குடும்பத்தில் வரும் சிறு சச்சரவுகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு, சாமர்த்தியமாக சமாளித்து தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

    Last edited by RathideviDeva; 20th Jul 2015 at 02:00 AM.

  4. #44
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    இந்த, முதியோர் இல்லம், என்பது மாறிவரும் இன்றைய வாழ்க்கைமுறையின் ஒரு பிரதிபலிப்பே. மக்களுக்கு பொறுமை, அனுசரிப்பு, விட்டுகொடுத்தல், நிதானம், compassion, empathy.... என்பவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இது தான் பல பிரச்சனைகளுக்கு (பெற்றோரை கைவிடுவது, விவாகரத்து,.....) மூல காரணம். இன்னும் என்னென்ன வரப்போகிறதென்று காலம் உணர்த்தும்.

    இதற்கு யார் காரணம், என்று ஆராய்வதை விட்டு, இதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டால் நல்லது. வெறும் அறிவுரை மட்டும் போதாது.

    இங்கே எழுதியதை என் வீட்டுக்காரர் படித்தால், "நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது......"ன்னு அவர் பாட, என் பிள்ளைகள் ஒத்து ஊதுவார்கள்(என் கொடுமைகளை நேரடியாக அனுபவிப்பவர்கள் ஆயிற்றே). என்ன செய்வது... நமக்கு வாய் கிழிய பேசத்தான்/ கை ஓடிய எழுதத்தான் தெரியும். காரியம்னு வரும்போது நாயகன் ஸ்டைல்ல " அவன திருந்த சொல், நான் திருந்துறேன். இவன திருந்த சொல் நான் திருந்துறேன்"ன்னு ஆகிடுது.

    Last edited by RathideviDeva; 20th Jul 2015 at 02:49 AM.

  5. #45
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இது வெளிநாடு என்று இல்லை உள்நாட்டிலேயே நடக்கிறது. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் பல பெரியவர்கள் அடுத்தவர்களை(அது பிள்ளையாக இருந்தாலும்) சார்ந்து வாழும் வாழ்க்கையை விரும்புவதில்லை. இது, நான் என் சுற்றத்தில் கண்டது .

    சரிங்கோ, நீங்க சொல்வது. ஆனால், இந்த பிரச்னை பெரும்பாலும் அயல்நாட்டிற்கு தானே.

    நண்பரே இது நிதர்சனத்தில் சாத்தியமில்லை. ஓரளவுக்கு மா(ற்)றி அடுத்தவருக்கு திருப்தி அளிக்கலாம். அதன்பிறகு இரு பக்கமும் கொஞ்சம் புரிந்து அனுசரித்து நடந்தால் மட்டுமே பிரச்சனை வராது.

    ஏன் சாத்தியமில்லை, அயல்நாட்டில் இருக்கும் இந்திய தம்பதினர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று என்னுடைய கருத்து.

    இது பார்ப்பவர் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. "என்னை பிள்ளை வீட்டில் வேலைக்காரர்கள் போல் நடுத்துகிறார்கள்" என்றும் நினைக்கலாம். "என்னை ஒதுக்கி வைக்காமல் என்னையும் இணைத்து குடும்பத்துக்கு உதவியாக சுறுசுறுப்பாக இயல்பாக இயங்க வைக்கிறார்கள்" என்றும் நினைக்கலாம். ofcourse அதற்கேற்றவாறு மகன் மருமகள் நடவடிக்கையும் இருப்பது அவசியம். குறை காணும் குணம் இருந்தால் என்ன செய்தாலும் திருப்தி வராது. இது இருபக்கமும் பொருந்தும். அதை தான் நம் முன்னோர்கள் "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு சொல்லிவிட்டர்களே.

    இந்த விஷயத்தில், தாங்களே சரி சொல்லிவிட்டீர்கள்.

    இது அவர்கள் நால்வரின் கூட்டு முயற்சியின் வெற்றி. மகனின் அன்பான நன்னடத்தையால் தான் மருமகள் கணவரின் கடமையில் தன் முழு ஒத்துழைப்பை கொடுத்திருப்பார். அது மட்டுமல்ல பெரியவர்களும் தங்கள் மகன் மருமகளை நன்றாக அன்பாக நடத்தி இருப்பார்கள். அதே போல் மகன் மருமகளும் அவர்கள் அன்பு செலுத்துமளவுக்கு தாங்களும் நடந்திருப்பார்கள். இது இல்லாவிட்டால் இத்தனை வருடங்கள் குடும்பம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை.

    நன்றிங்கோ, இதைப்போல பல இந்திய தம்பதினர் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

    முதல் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. சரி இரண்டாவது காரணம் ...... மாமியார் மருமகள் சுமுகமாக இல்லாத வீடுகளே பெரும்பாலும் உள்ளன. அப்படியென்றால் முதியோர் இல்லங்கள் பெருகி இருக்க வேண்டுமே. அப்படி நடக்காதற்கு காரணம், பலர் குடும்பத்தில் வரும் சிறு சச்சரவுகளை இயல்பாக ஏற்றுக்கொண்டு, சாமர்த்தியமாக சமாளித்து தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

    நீங்களே முதல் காரணத்தை ஓகே சொல்லிவிட்டீர்கள். இரண்டாவது காரணத்தில் நீங்க சொல்வது இருக்கலாம் அல்லது இருக்காது.







    (See my reply in red color)


    Last edited by Sriramajayam; 20th Jul 2015 at 01:14 PM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #46
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    படித்து கண் கலங்கியது..!!

    அன்பு மகனுக்கு.. அப்பா எழுதுவது..!!
    வசதியாக தான் இருக்கிறது மகனே..
    நீ கொண்டு வந்து சேர்த்த.. முதியோர் இல்லம்..!!
    பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு சலனமின்றி.. நீ வெளியேறிய போது..
    முன்பு நானும்
    இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு.. விட்டு செல்லும் போது.. என் முதுகுக்கு பின்னால் நீ கதறக்.. கதற அழும்போது
    என் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது..!!
    தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் கூட..
    அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி.. எதுவென்று ஓடி அலைந்ததை..
    ஒப்பீடு செய்கிறேன்..!!
    இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க.. நீ வராமல் போனாலும்
    என் பராமரிப்பிற்கான.. மாதத் தொகையை மறக்காமல்.. அனுப்பி வைப்பதற்காக..
    மனம் மகிழ்ச்சி அடைகிறது..!!
    நீ விடுதியில் தங்கி படித்த காலத்தில்.. உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்..
    உன் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததின் எதிர் வினையே இதுவென்று
    இப்போது அறிகிறேன்..!!
    இளம் வயதில்.. நீ சிறுகச்.. சிறுக சேமித்த அனுபவத்தை..
    என் முதுமை பருவத்தில்.. மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்...
    ஆயினும் உனக்கும்.. எனக்கும் ஒரு சிறு வேறுபாடு...
    நான் கற்றுக் கொடுத்தேன்.. உனக்கு வாழ்க்கை இதுவென்று..
    நீ கற்றுக் கொடுக்கிறாய்.. எனக்கு உறவுகள் இதுவென்று..!!




    FB



    Attached Thumbnails Attached Thumbnails முதியோர்  இல்லம் - Old Age Home!-image.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #47
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    @Sriramajayam
    சரிங்கோ, நீங்க சொல்வது. ஆனால், இந்த பிரச்னை பெரும்பாலும் அயல்நாட்டிற்கு தானே.
    நான் சொன்னது போல் உள்நாட்டிலே தான் அதிகம் இருக்கிறது. வெளிநாடு என்றால் முன்னவே அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.

    என் நெருங்கிய சுற்றத்தில் தந்தை இறந்தவுடன் தாயின் உடல் நிலையை கருதி வட இந்திய கூட்டி சென்றார் மகன். அங்கு அந்த வயதானவரால் 6 மாதத்திற்கு மேல் குளிர் காரணமாக தாக்கு பிடிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் மகன் திரும்ப தன் தாயை அவர் சொந்த இடத்திலே விட்டு விட்டார். ஆனால் அவர் தனியாக பெரிய வீட்டில் இருப்பது சரிவராது என்று தன் அக்கா வாழும் அடுக்கு மாடி குடியிருப்பின் பக்கத்திலேயே ஒரு ஆளை உதவிக்கு போட்டு தங்க வைத்துவிட்டார். இதுவரை அவரை போல் பாசமான மகனை, எங்கள் தலைமுறையில், நான் பார்த்ததில்லை. அவர் தாயை வைத்துக்கொள்ளவில்லை என்றால் அவர் சூழ்நிலை தான் காரணம்.


    என் தாய் வழிப்பாட்டி, தன் கணவர் இறந்தபிறகு, ஐந்து மகள்கள் அழைத்தும், தன்னால் இயன்ற வரை தன் ஊரிலேயே இருந்து கொள்வதாக சொல்லி விட்டார். அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ததால் நடப்பது மட்டும் சிரமம். ஆனால் அவரால் தனியாக இயங்க முடிகிறது. அதுமட்டுமல்ல அக்கம் பக்கம் பலர் உதவிக்கு இருப்பதால், மகள்களும் அவரை புரிந்து கொண்டு விட்டுவிட்டார்கள்.


    ஏன் சாத்தியமில்லை, அயல்நாட்டில் இருக்கும் இந்திய தம்பதினர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று என்னுடைய கருத்து.
    நன்றிங்கோ, இதைப்போல பல இந்திய தம்பதினர் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
    என்னை பொருத்தவரை நடைமுறையில் சாத்தியமில்லை. நான் இதை இன்னும் விரிவாக சொன்னால் உங்களுக்கு சாக்கு போக்கு சொல்வது போல் தோன்றலாம். நான் சொல்வதை விட, @thenuraj @gloria @malbha @PriyaGautham @repplyuma @kkmathy @chan இவர்களின் கருத்தையும் கேட்கலாம்.

    Last edited by RathideviDeva; 21st Jul 2015 at 07:11 AM.

  8. #48
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Just wanted to add that reacting to this issue, emotionally is not enough. The elders dont need sympathy, they need respect and support from us. The solution needs to be practical, and acceptable on both sides without any regrets / guilt / blame, keeping in mind that what we do now is what we get from our kids.

    Since this issue is at the starting stage our generation will be in a much worse old age situation, as our generation is more self centered, digitally socialized, emotionally disconnected in this fast paced technology driven world. Hence the solution should be a long term one, to cover the future generations too.

    Last edited by RathideviDeva; 21st Jul 2015 at 09:25 AM.

  9. #49
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    நண்பர்களே ....
    என் கருத்துக்களுடன் நானும் வந்து விட்டேன். முதியோர் இல்லங்கள் இன்று பெருகி விட்டன.எல்லோரும் நம் அறிந்த காரணங்களை சொல்கிறோம்..பொருள் ஈட்டும் நோக்குடன் வெளிநாடு செல்பவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...நிறைய பெரியவர்கள் சொந்த ஊரை விட்டு வர விரும்ப மாட்டார்கள்.எதிர்கால தேவைகளுக்காக செல்பவர்களை குற்றம் சொல்ல மாட்டார்கள். எங்கிருந்தாலும் பெற்றோர் தேவைகளை குறைவின்றி பிள்ளைகள் கவனிக்கும் போது தனிமையில் இருக்கும் பெரியவர்கள் சற்று அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.

    திருட்டு பயம், முதுமை காரணமாக இப்படிப் பட்ட இல்லங்கள் பெருகுவதும் ஒரு காரணம்..உள்ளூரில் இருந்து ஒத்து வராது என்று சொல்பவர்களை பற்றிதான் நாம் பேச வேண்டியுள்ளது...நான் சொல்வது கொஞ்சம் ஆச்சரியமா கூட இருக்கலாம், இப்போ உள்ள பெரியவர்கள் தன பிள்ளைகள் கூட இருப்பதை தவிர்க்கிறார்கள். பேரன் பேத்தி வளர்க்க என்னால் முடியாது, நான் இப்போதான் ரெஸ்ட் எடுக்கும் வயது, இனிதான் ப்ரீயா இருக்கணும் அப்படின்னு சொல்றவங்களை நான் பார்க்கிறேன்...ஒரு விதத்தில் அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும், நம் பிள்ளைகளுக்கு நாம் உதவி செய்யளைன்னால் எப்படி?? முடிந்த உதவிகள் செய்யலாமே, இப்போது எல்லாம் இரண்டு பெரும் வேலைக்கு செல்லும் நிலைதான் அநேகம் வீடுகளில் உள்ளது. அவர்களும் யாரை நம்பி வெளியே செல்வார்கள்??


    அதே நேரம் பிள்ளைகளும் வேலைக்கு மட்டும் பெற்றோர் என்று எண்ணத்தை வளர்க்க கூடாது, அவர்களுக்கு உரிய மதிப்பு அளித்து கொஞ்சம் விட்டு கொடுத்து போனால் ஏன் முதியோர் இல்லங்கள் வருகிறது?? இப்போ எல்லாம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான் எல்லோருக்கும்...அவர்களோடும் சுமுகமா இல்லாமல் என்ன சாதிக்க போறோம்?? 20 வருடங்களுக்கு முன்னர் எந்த பெற்றோரும் தனியா இருந்ததே இல்லை..பிள்ளைகலோடுதானே இருந்தார்கள்??? வீட்டில் இருக்கும் பெண்கள் , மாமியார், மருமகள் உறவை நன்கு சுமுகமா வைத்து இருந்தாலே பிரிவுகள் குறைவா இருக்கும்...இந்த தலை முறை மாமியார்கள் நிறைய மாறியிருக்கிறார்கள்.மருமகளை அன்பா பார்த்துக்கிட்டா நம் மகன் நம்மை நல்லா பார்த்துக்குவான்!!!! இதுதான் சூட்சுமம்!!! என் அனுபவமுங்கோ!!!!


  10. #50
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    உங்கள் பதிவுக்காக தான் காத்திருந்தேன் செல்வி சிஸ் @selvipandiyan . ஒரு மாமியாரின் பார்வையில் என்ன சொல்ல போகிறீர்கள் என இருந்தேன்.
    மருமகளை அன்பா பார்த்துக்கிட்டா நம் மகன் நம்மை நல்லா பார்த்துக்குவான்!!!! இதுதான் சூட்சுமம்!!!
    சரியாக சொன்னீர்கள்.

    இன்னொரு சூட்சுமம்.... மனைவியை நல்லா பார்த்திக்கிட்டா அவ கணவரின் பெற்றோரை நல்லா பார்த்துக்குவா. எங்களுக்கு(மருமகள்) ரெண்டு சைடும் நல்லா பார்த்துகிட்டா நாங்க ஹாப்பியோ ஹாப்பி !!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter