Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #71
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by saveetha1982 View Post
    வயதாகி விட்டால் பெரியவர்கள் குழந்தையாய் ஆகிவிடுவார்கள் என்பது எவ்வளவு உண்மை...

    பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்கும் அந்நேரம் நமக்கு தோன்றுவது எல்லாம் சலிப்பும் எரிச்சலும் தான் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்கள் இன்னமும் அடம் பிடிப்பதை பார்... சின்ன குழந்தை என்று நினைப்பு என்ற எண்ணமே முதலில் வரும்... சற்றே சிந்தித்தால் அவர்கள் மீண்டும் குழந்தையாகி விட்டார்கள் என்று நமக்கு புரியவரும்...

    ஆனால் நாம் தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறோம்... வயதான பெற்றோரின் கவலை என்ன... என்னை யாருமே கவனிப்பது இல்லை... சாப்பிட்டியா என்று கேட்பதில்லை...

    எதையுமே என்னிடம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று சிறுகுழந்தையாய் மாறி அவர்கள் கோபித்துக் கொள்ளும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்து பதிலுக்கு மல்லுக்கு நிற்கிறோம்...

    அவர்களை புரிந்து கொள்ளாமையின் விளைவு அவர்கள் முதியோர் இல்லத்தில்...

    சிறு குழந்தை அடம் பிடிப்பது, வீம்பு செய்வது போல் தானே அவர்களும் செய்கிறார்கள்... ஆனால் சிறுகுழந்தையை புரிந்து கொள்ளும் நாம் அவர்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்... நாளை நமக்கும் இது தான் என்பது புரிந்தாலே இதை தவிர்க்கலாம்...



    நீங்கள் சொல்வது உண்மைதான் சவீதா....
    நம் குழந்தையை பொறுமையாக கையாளும் நம்மால்..., நம்மை பெற்ற குழந்தையை கவனிக்க முடியவில்லை...!! அதற்கு பொறுமையும், நேரமும், சகிப்புத்தன்மையும் இல்லை...!!


    Sponsored Links

  2. #72
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் தேனு ,
    நல்ல ஆழமான கருத்துக்கள் ,விவாதங்கள் ........
    @RathideviDeva..........பார்ட் பார்ட் ஆக பிச்சு உதறிட்டாங்க ........


    என் கருத்தையும் பதிகிறேன் ..........யாரையும் குறிப்பிட்டு சொல்லல ........என்னையுமே இணைத்தே சொல்றேன்.

    1. முதலில் குழந்தைகளை இன்று குழந்தைகளாக வளர்க்கல ......பந்தய குதிரையாக வளர்க்கிறோமோ ?காசே பிரதானம் நம் வாழ்வில் ............முன்பு நம் பெரியவர்கள் கொடுத்த பாதுகாப்பான வாழ்வை கொடுக்கல .............பணத்தைக் கொடுத்து .........நாம் நம்மை மட்டுமல்ல ...........நம் பிந்தைய தலைமுறையை ஏமாற்றி வருகிறோம் .........விட்டுக்கொடுத்தல் ,வெற்றி தோல்வியை சமமாக பாவித்தல் ........அன்பு காட்டுதல் எதுவும் செய்யல .........கற்றும் கொடுக்கல ............தப்பா நினைக்காதீங்க .........கொஞ்சம் படபடன்னு பேசும் உறவினர் எனில் பெரியவங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க மா ........ஆனால் பாசமானவங்க விட்டுடு என்று ...........எங்கம்மா ,அப்பா சொல்லி வளர்த்தாங்க ...........ஆனால் என் பொண்ணு ட்ட .........இதை சொன்னால் ,நான் ஏமாளியா மா ..........எதுக்கு என்னை சொல்லணும் என்று கேட்கிறாள் ..........அது போக என் மனமே நம்ம பிள்ளையை திட்ட இவங்க யாருன்னு என்று என்ன வைக்குது .......தூர விலக்கியும் நிறுத்திவிடுது .......இது ஆரம்பம் .இப்படி பட்ட சிறு விதையே விருட்சமாக உறவை ........விலக்குவதை எந்த வித குற்றஉணர்வு இன்றி செய்ய வைக்குது .

    2.இப்ப சிலர் பெரியவர்களும் பிடிவாதம் தான் .எங்க ஆச்சி ,அப்பா,தாத்தா எல்லாம் செம பிடிவாதம் .........சரியான வைத்தியத்திற்கே ஒத்துழைக்க வில்லை தெரியுமா ?.தங்களையும் வருத்தி ,.........
    நான் அம்மா ,அப்பா கூட தான் இருந்தேன் ..........தேனு சொன்னது போல தனி டிவி தான் ...........அங்கேயும் போய் என் பொண்ணு உட்கார்ந்து வம்பு பண்ணுவாளே ..........ரிமோட்டை எடுத்து ஒளிச்சு வச்சுடுவா ........sunmusic போட்டு ...........எங்கப்பா ..........பாப்பா என்ற சத்தம் கொடுத்தால் ஓடி வந்துடுவா ...........இதே மாமியார் வீட்டில் என்றால் செய்ய முடியாதே ..........சிலசமயம் எங்கப்பாவும் சேர்ந்து பார்க்கட்டும் பாப்பா என்று ..........அவள் பக்கமே பேசுவாங்க .....இங்கே இருவருக்கும் டோஸ் கொடுத்து .........off பண்ணி போடுவேன் ...........இது மாமியார் ட்ட செய்தால் .........அவ்வளவுதான் .............எங்கப்பாவே நிறைய முறை நாங்க கிராமத்து வீட்டுக்கு போறோம்னு சொல்லுவாங்க ........நான் எல்லோரும் ஓடும் உலகில் என் பொண்ணு ஓடா விட்டால் பின் தங்கி விடுவாள் ...........படிப்பில் no excuse என்று சொல்லுவேன் .ஆனால் எங்கம்மா கூட சேர்ந்து ............ரெண்டுபேரும் சத்தமில்லாமல் வைத்து டிவி பார்த்து பிடி பட்டாங்க .எல்லா நாடகமும் பார்ப்பாள் அவங்க கூட சேர்ந்து ........பின்ன என்ன செய்ய ............கேபிள் கட் ..........


    3. பாரபட்சம் ......சிலர் மருமகள்களுக்கிடையே பாரபட்சமாக நடந்தும் அவங்களே குடும்ப விரிசலுக்கு காரணம் ஆகிடுறாங்க .........கேட்டுக் கொள்ளும் மருமகள் மேலேயே சவாரி செய்து .........வெறுக்க வச்சுடுறாங்க ....இதை நானே நேரில் பார்த்தது ..........சிலர் பிள்ளைகள் இடையே கூட பாகுபாடு பார்ப்பாங்க .........எங்க வீட்டிலேயே நடந்து இருக்கு ............எங்க மூன்றாவது சித்தப்பாக்கு சலுகை அதிகம் உண்டே ...........ஆனால் எங்க சித்தப்பாக்கு எங்கப்பாவிடம் ரெம்ப மதிப்பு உண்டு ........அதனால் சரியா போச்சு ........இதே சிலர் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டே .

    4.இந்த கருத்தில் நிறைய பேருக்கு .........மாற்றுக் கருத்து இருக்கலாம் ...........மறுபடியும் சொல்றேன் .........என்னையும் சேர்த்தே சொல்றேன் ..........பொதுவான என் கருத்தே ..........

    வீட்டுக்கு வரும் மருமகள் விட்டு கொடுத்தும்,அன்புடன் நம் குடும்பம் இணைந்து இருக்க வேண்டும் எண்ணும் எண்ணம் கொண்ட மருமகள்கள் வந்தால் அந்த குடும்பம் தப்பிச்சுடும் ............சிலர் தன் கணவர்,பிள்ளைகள் தவிர வேற யோசிக்கவோ .............இணையவோ தயாராக இருப்பதில்லை ............அங்கே தான் தோற்றுப் போயிடுவோம்.


    5.எப்பிடி குழந்தைகளை காப்பகத்தில் விட்டு விட்டு உழைக்க செல்வதில் தவறு இல்லையோ ...........அதை விவாதிக்கிறோமா ..........இல்லையே ?............அதே போல முதியவர்களை இல்லத்தில் வைத்து பாராமரிப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோணுது ............. கூடவே இருந்து ஒருத்தருக்குள் ஒருத்தர் வதைத்துக் கொள்வதை விட இல்லத்தில் சந்தோசமாக இருந்து ...........உறவை பேணலாம் ............இது தான் வருங்காலத்தில் நடக்க போகுது ...........அதையும் எதிர்த்து என்ன ஆக போகுது ..........வருவதை ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுவோம்.நானே என் பொண்ணுக்கு பாரமில்லாமல் விலகி இருக்கவே விரும்புகிறேன் ..........எனக்கு தெரிந்து சிலர் தாங்களே முதியோர் இல்லத்திலும் இப்பவே பதிவு செய்து பணம் போட்டு வாராங்களாம் .......ஆயுள் காப்பீடு போல .........



    ரொம்ப அழகா எல்லா கருத்துக்களையும் சொல்லிக்கிட்டே வந்தீங்க.... ஆனா கடைசியில இப்படி சொல்லிட்டிங்களே...!

    என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தைகள் காப்பகமும் சரியில்லை என்பதே என் கருத்து...! அதை யாரும் விவாதிக்கவில்லை என்று நீங்கள் சொல்லி இருந்தீங்க.... அப்படியில்லை க்கா...., இந்த திரியின் நோக்கமே, வளரும் குழந்தை... வளர்ந்துவிட்ட குழந்தை இரண்டுக்குமே காப்பகம் தேவையில்லை என்பது தான்...!! இரண்டுமே சரியில்லை ... தவறு தான்..!

    நீங்கள் சொல்வது போல முன்பதிவுகள் நடக்கிறது தான்.... ஆனா நாம் நினைத்தால் அதை மாற்றலாமே என்பது தான் என்னோட வாதம்...!!


  3. #73
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post












    Quote Originally Posted by Sriramajayam View Post














    அனைத்துமே முதியவர்களின் வேதனையை சொல்லும் கருத்துள்ள படங்கள்...! பார்க்கவே கஷ்டமாக தான் இருக்கிறது...!


  4. #74
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    மனமிருந்தால் மார்கமுண்டு என்ற பழமொழி உண்டு.


    ஆனால், பெரும்பாலும் மருமகள் பேசு கேட்டு (அடியேனை மன்னிக்கவும், பெண்களை குறிப்பிடுவதால்) பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இதுமட்டுமல்ல, அயல்நாட்டில் வசிக்கும் இந்திய குடும்பங்களும், தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இது ரொம்ப பாவம்.


    என்ன பொறுத்தவரை, யாருமே இல்லாதவர்கள் மட்டும் வயசானவர்களை மட்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும். குறைந்த பட்சம் நம் பெண்மை நண்பர்கள், இந்த மாதிரியான தவறுகள் செய்யாமல், நம் வீட்டில் வசிக்க செய்வோம்.


    (மேல சொன்ன வார்த்தைகளில், தங்கள் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.)





    நீங்கள் சொல்வது போல..., யாருமற்ற... பிள்ளைகள், உறவுகள் என யாருமே இல்லாமல் தனிமையில் தவித்து, எந்த வசதியும் இல்லாமல் கஷ்டத்தில் இருப்பவர்களை வேண்டுமானால் முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம்...

    எங்கள் ஊரில் ஒரு இல்லம் இருக்கிறது.... அங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்டு ரோட்டில் அனாதையாக திரிபவர்களை அழைத்து வந்து கவனித்துக் கொள்கிறார்கள்... அதற்கு சில நல்ல உள்ளங்கள் உதவியும் செய்கிறார்கள்...!

    முதியோர் இல்லங்களில் சேர்ப்பது போக..., இப்படி ரோட்டிலும் விட்டு செல்பவர்களை எப்படி திருத்துவது.....??

    அதேபோல நீங்க சொல்வது மாதிரி...,இங்குள்ள சிலர் தங்கள் பெற்றோரை இல்லங்களில் சேர்ப்பதும் நடக்கிறது தான்... இல்லையென மறுக்க முடியாது...! ஆனால் அவர்கள் எல்லாம் வசதி படைத்த இல்லங்களில், சொந்த வீடுகளில் இருப்பதை போல இருக்கிறார்கள்..., ஆறு மாதத்துக்கு ஒருமுறை இங்கு வந்து செல்கிறார்கள். இது ஓகே என்று நான் சொல்லவில்லை.... ஆனால் இவர்களிலும் கீழானவர்கள் நிலைமை தான் மோசம்...!


  5. #75
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    தேனு மிக நல்ல பதிவு .. எல்லோரும் அவங்க கருத்தை நல்லா சொல்லி இருக்காங்க ..

    ரதி (@RathideviDeva) மிக அழகா திருமணம் முன் மற்றும் பின் மனநிலையை சொல்லி இருக்கீங்க ..

    எனக்கு தோன்றுவது அனுசரிப்பு , அன்பு செய்வது என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டும் ...ஒருத்தர் மட்டும் அனுசரித்து ஒருத்தர் விட்டுகொடுக்க வேண்டும் என்றால் கஷ்டம் தான் ...

    மாமியார் - மருமகள் பாசம் மற்றும் உரிமை போராட்டம் கால காலமா நடக்குது ....ஒரு மகனுக்கு தன பெற்றோரை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் தடுத்தாலும் அவர் தன கடமையை நிறைவேற்றுவார் (இதை நான் நிறைய பார்த்திருக்கிறேன் )..அந்த மகனுக்கு மனமிருந்தால் உறுதியாக செய்ய முடியும் ..

    மகள் இதை செய்ய முடியுமா என்பது தெரியவில்லை ??? ஒரு பெண் சம்பாதித்தால் சாத்தியம் ..இல்லை என்றால் கேள்வி குறி தான் ...

    பெற்றோரருக்கு ஆண் பிள்ளை இல்லை மகள் மட்டும் என்றால் அவர்களின் நிலை ? அந்த பெற்றோர்கள் நிலையை எந்த இடத்திலும் விவாதித்தும் நான் பார்த்ததில்லை...



    மகனின் உறுதி இக்காலத்தில் குறைந்து வருகிறது உமா..., அதுதான் வேதனையாக இருக்கிறது.

    சரியான கேள்வி எழுப்பி இருக்கீங்க உமா.... மகன் இல்லாத வீடுகளில், அந்த பெற்றோரை மகள் ஆதரிக்க முடியுமா....? எத்தனை வீடுகளில் இது சாத்தியம்...!!

    மகள் சம்பாதித்தால் கூட சாத்தியம் இல்லை உமா... மனைவியின் வருமானத்தை முழுதாக தனக்கே என்று நினைக்கும் கணவர்கள் தான் அதிகம்.... கல்யாணத்திற்கு முன்பே அந்த வருமானத்திற்கும் சேர்த்து கணக்கு போட்டு வரவு-செலவு கணக்கை போட்டு விடுவார்கள். அப்படியிருக்கும் போது, எங்கே அவளின் பெற்றோருக்கு செய்வது...??

    அப்படியே ஆரம்பத்தில் உன் பெற்றோருக்கு செய்து கொள் என்று தாராள மனது காட்டும் ஆண்களும், போக போக இறுக்கி பிடிப்பார்கள்.... ஒன்றும் செய்ய முடியாது.


  6. #76
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சரியான கேள்வி தான் @Sriramajayam @shansun70.

    இதில் "பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்" என்பதை விட "எங்கு அவர்கள் நிம்மதி இருக்கிறது" என்பது தான் முக்கியம்.


    சரி வெளிப்படையாகவே பேசுவோமே.
    நாம் சகல வசதிகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறோமென்று , நாம் பெற்றோரை இங்கு நம்மோடு இருக்க செய்கிறோம் என்று வைத்துகொள்வோம். சில நாட்கள் அவர்களால் இருக்க முடியும். ஒரு மாதத்திற்கு பிறகு கேளுங்கள், "லேசா ஊர் ஞாபகம் வந்திருச்சு " என்று சொல்வார்கள். சரி அதை மறக்கடிக்க நீங்கள் வெளியே கூட்டி செல்வது, ஊரில் உள்ளவர்களோடு பேச வைப்பது, பொழுது போக்க தமிழ் சானல் , தமிழ் படங்கள், அவ்வப்போது நண்பர்கள் வீட்டுக்கு செல்வது என்று முயல்வீர்கள். இப்படி இன்னொரு மாதம் ஓடிய பிறகு, திரும்பவும் அவர்கள் "ஊர் ஞாபகம்" என்று சொல்வார்கள். மிஞ்சி போனால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அதற்கு மேல் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. காரணம் அவர்களின் வேர் அங்கு இல்லை. என்னதான் தன் பிள்ளை , பேரப்பிள்ளைகள் என்று இருந்தாலும், ஏதோ ஒன்று குறைவதுபோல் தங்களால் முழுதுமாக ஒன்ற முடியாது.


    "தன்னுடைய இடம் அதுவல்ல, தான் அங்கே வெறும் விருந்தினர் தான்" என்று எண்ணுபவர்களை நம் திருப்திக்காக அடைத்து வைத்தால் (ஆம் இது அடைத்து வைப்பதற்கு சமம்) கடைசியில் இருப்பக்கத்திலுமே மன நிம்மதி போய்விடும். நமக்கு " இவ்ளோ செய்தும் அவர்களை திருப்தி படுத்த முடியவில்லையே" என்றும் , அவர்களுக்கு "நம் பிள்ளை நம்மக்காக இவ்வளவு பார்த்து செய்கிறானே, அப்படியும் நமக்கு ஊருக்கு போகணும்னு சொன்னா அவன் மனசு சங்கட படுமே" என்றும் இருக்கும்.


    இதற்கு ஒரே வழி, மகனும் தன் வேர் அதுவல்ல என்று தாய்நாடு திரும்ப வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தன்னையும் தன் குடும்பத்தையும் தயார் படுத்தி இருக்க வேண்டும். இதற்கும் வழி இல்லை என்றால், இரு பக்கமும் சேர்ந்து பேசி பெற்றோர்களுக்கு சௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.


    வயதானவர்கள் (யாராக இருப்பினும்) விரும்புவது தங்கள் சொந்த பந்தங்களுடன்/ நலம் விரும்பிகளுடன் கூடிய தனிமையற்ற வாழ்க்கை. தங்களுடன் பேசி சிரிக்க, பொழுதை போக்க, கொஞ்சம் சுதந்திரமாக, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்பது நிதர்சனத்தில் அவர்களின் நியாயமான ஆசை. அதை ஏற்படுத்தி தருவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

    @ponschellam சொன்னது போல், கூட இருந்து தான் உறவை பேண வேண்டும் என்பது இல்லை. கொஞ்சம் விலகி இருந்து ஒருவர் நலனுக்காக மற்றவர் அக்கறை செலுத்துவதே போதும். அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போதாவது பேரப்பிள்ளைகள் கேட்கும் "எப்படி இருக்கீங்க தாத்தா/ பாட்டி?"என்ற நலன் விசாரிப்பு தரும் சந்தோஷத்தை நாம் எத்தகைய வசதி ஏற்படுத்தி கொடுத்தாலும் தராது. நம் மீது அன்பு செலுத்த ஆள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விட சொர்க்கம் அவர்களுக்கு வேறில்லை.

    பொறுமையாக யோசித்தால் நான் சொல்வதில் உள்ள நிதர்சனம் புரியும் !!




    சரியா சொல்லி இருக்கீங்க ரதி...
    அவர்களை இங்கு அழைத்து வருவதில் கூட எந்த ப்ரோப்லமும் இல்லை.... ஆனா வந்தபிறகு அவர்களால் இங்கு இருக்க முடியாமல்..., பேசுவதற்கு கூட ஆளில்லாமல், தனிமையில் அவர்கள் வாடுவது அவர்களுக்கும் கஷ்டம்..., அதைப் பார்க்கும் நமக்கும் கஷ்டம் தான்....!

    இது என்ன திருச்சியும் மதுரையுமா...?? நினைத்த நேரத்தில் டிக்கெட் போட்டு ஊருக்கு போவதற்கு...!! அங்கிருந்து அமெரிக்கா வருவதற்கு முன்பு அவர்களுக்கு இருக்கும் ஆர்வம்.., வந்த சில தினங்களில் வடிந்துவிடும்...!

    வந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு இந்த ஊர் போரடித்து போய்..., ஊருக்கு கிளம்ப நினைக்க..., அவர்கள் நினைத்தாலும் போக முடியாத சூழ்நிலை...! இதற்கு ஒரு முடிவே இல்லை...!!

    அவர்களுக்காக பிள்ளைகள் வேண்டுமானால், இந்த ஊரை விட்டு போய்..., இந்தியாவிலேயே செட்டில் ஆகலாம்..., ஆனால் அவர்களின் வருங்காலத்துக்கு என்று சில திட்டங்களை வைத்திருக்கும் அவர்களால் அங்கும் போக முடியாது..! பெற்றோர்களால் இங்கும்.... பிள்ளைகளால் அங்கும் இருக்க முடியாத நிலை...!!

    என்னதான் எல்லா பக்கமும் யோசித்து பார்த்தாலும்..., இந்த இல்லங்கள் தேவையற்றது என்பது தான் இன்னமும் என் எண்ணம்..!


  7. #77
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    சுருக்கமா சொன்னால், பெருபாலும் முதியோர் இல்லத்திற்கு சேர்க்க இரண்டு விதமான காரணங்கள். அவைகளில் ஒன்று, தாங்கள் (மகன் மற்றும் மருமகள்) வெளிநாட்டுக்கு போவது, இரண்டாவது மருமகளும் மாமியாரும் சண்டை நடை பெறுவதால் என்று எனது நண்பர் சொன்னார்.





    இதை நான் ஒத்துக்க மாட்டேன் அண்ணா.... @Sriramajayam
    ஊரில் தனியாக விட்டு வருகிறார்களே தவிர...., எனக்கு தெரிந்து இப்படி கேள்விப் பட்டது இல்லை...! ஒன்று இன்னொரு மகன் இருந்தால், அவருடனோ.... அல்லது மகள்களின் பொறுப்பிலோ தான் அவர்களை விடுகின்றனர். அதற்கு இங்கிருந்து கணிசமான தொகையும் கொடுக்கின்றனர்... அங்கிருக்கும் உடன்பிறப்புகளுக்கு, இங்கிருந்து அனுப்பும் பணம் தான் பிரதானம்...!! ஆனால் அவர்களும் அம்மா அப்பாவை கவனிக்க தவறி விடுகின்றனர். இங்கிருந்து போகும் பணத்தில் அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் சொகுசாக வாழ.... பெற்றோர் வறுமையில் வாட...!! இதுதான் நிறைய இடங்களில் நடக்கிறது...!

    வெளிநாட்டில் இருக்கும் எல்லாருமே மனசாட்சியை கழட்டி வைத்தவர்கள் இல்லை....! சந்தர்ப்ப சூழ்நிலை...! இவர்களின் பிழைப்புக்காக, வருங்காலத்திற்காக இங்கு வருகின்றனர். அதற்காக அவர்களை குறை சொல்வது சரியில்லை...!

    எனக்கு தெரிந்து குடும்பத்திற்காக.... கூட பிறந்தவர்களுக்காக.... பெற்றோர்கள்... சுற்றத்திற்காக வெளிநாட்டு வேலையை உதறியவர்களும் உண்டு...!

    வெளிநாடு போகிறோம் என்பதற்காக இல்லங்களில் சேர்க்கிறார்களா....?? இது நிஜம் என்றால்...., இதைவிட வேதனையான விஷயம் வேறு இல்லை...!!


  8. #78
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    @Sriramajayam

    முதியோர் இல்லம் பற்றிய உங்கள் பதிவுகள் அனைத்தும் நெத்தியடி....!! இதைப் படிக்கும் ஒன்றிரண்டு பேராவது மனம் மாறினால் சந்தோஷம்...!!

    இவ்வளவு செய்திகளையும் தொகுத்து அழகாக கொடுத்ததற்கு நன்றி அண்ணா...


  9. #79
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by selvipandiyan View Post

    திருட்டு பயம், முதுமை காரணமாக இப்படிப் பட்ட இல்லங்கள் பெருகுவதும் ஒரு காரணம்..உள்ளூரில் இருந்து ஒத்து வராது என்று சொல்பவர்களை பற்றிதான் நாம் பேச வேண்டியுள்ளது...நான் சொல்வது கொஞ்சம் ஆச்சரியமா கூட இருக்கலாம், இப்போ உள்ள பெரியவர்கள் தன பிள்ளைகள் கூட இருப்பதை தவிர்க்கிறார்கள். பேரன் பேத்தி வளர்க்க என்னால் முடியாது, நான் இப்போதான் ரெஸ்ட் எடுக்கும் வயது, இனிதான் ப்ரீயா இருக்கணும் அப்படின்னு சொல்றவங்களை நான் பார்க்கிறேன்...ஒரு விதத்தில் அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும், நம் பிள்ளைகளுக்கு நாம் உதவி செய்யளைன்னால் எப்படி?? முடிந்த உதவிகள் செய்யலாமே, இப்போது எல்லாம் இரண்டு பெரும் வேலைக்கு செல்லும் நிலைதான் அநேகம் வீடுகளில் உள்ளது. அவர்களும் யாரை நம்பி வெளியே செல்வார்கள்??

    அவர்கள் ரெஸ்ட் எடுக்கட்டும்னு நினைக்கிறது சரிதான்.... உழைத்து உழைத்தே ஓடாக போனவர்கள்.... ஆனாலும் பேரன் பேத்திகளுக்கு செய்வதில் அவர்களுக்கும் ஆசை இருக்க தானே செய்யும்... மனம் ஒத்துழைத்தாலும், உடல் ஒத்துழைக்காமல் போனால்.... அவர்களால் மட்டும் என்ன செய்துவிட முடியும்...??


    அதே நேரம் பிள்ளைகளும் வேலைக்கு மட்டும் பெற்றோர் என்று எண்ணத்தை வளர்க்க கூடாது, அவர்களுக்கு உரிய மதிப்பு அளித்து கொஞ்சம் விட்டு கொடுத்து போனால் ஏன் முதியோர் இல்லங்கள் வருகிறது?? இப்போ எல்லாம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான் எல்லோருக்கும்...அவர்களோடும் சுமுகமா இல்லாமல் என்ன சாதிக்க போறோம்?? 20 வருடங்களுக்கு முன்னர் எந்த பெற்றோரும் தனியா இருந்ததே இல்லை..பிள்ளைகலோடுதானே இருந்தார்கள்??? வீட்டில் இருக்கும் பெண்கள் , மாமியார், மருமகள் உறவை நன்கு சுமுகமா வைத்து இருந்தாலே பிரிவுகள் குறைவா இருக்கும்...இந்த தலை முறை மாமியார்கள் நிறைய மாறியிருக்கிறார்கள்.மருமகளை அன்பா பார்த்துக்கிட்டா நம் மகன் நம்மை நல்லா பார்த்துக்குவான்!!!! இதுதான் சூட்சுமம்!!! என் அனுபவமுங்கோ!!!!

    உண்மைதான் அக்கா.... ஒரு காலத்துல கூட்டுக் குடும்பமா அழகா இருந்த உறவுகள்.... நாளாவட்டத்தில் சிதறி போய்... தான், தன் கணவன், பிள்ளைகள் என சுருங்கிவிட்டது...! சுமூகம் என்ற வார்த்தை சமூகத்தில் காணாமல் போய்விட்டது...!

    மாமியார் மருமகளை அன்பா பார்த்துக்குறது மட்டுமில்லை.... கணவனும் மனைவியை மதித்து நடந்து..., மற்றவர்களின் முன் விட்டுக் கொடுக்காமல் இருந்தாலே... அவளின் மனதில் வன்மம் வராது...!!

    முக்கியமாக மருமகளின் குணம் மாறுவதற்கு முக்கிய காரணம்..., கணவனின் குணமும் ஒரு காரணம்.... அவனின் வீட்டு உறுப்பினருக்கு முன்பு..., தன் கெத்தை காமிக்க..., மனைவியை அடக்கியாள நினைப்பதும்..., அவளை விட்டுக்கொடுத்து பேசுவதும் கூட ஒரு காரணம்...!!


  10. #80
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Hi friends, முதலில் அம்மாமார்கள், தங்களின் மகள்கள் திருமணம் செய்த பிறகு, மாமனார் மற்றும் மாமியாரிடம் மனம் நோகமால் நடக்க சொல்லி அம்மாமார்கள் மகள்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடணும் என்பது என்னுடைய கருத்து.

    வருங்காலத்தில் நானும் என் மனைவியாரும் என் மகளுக்கு கண்டிப்பா சொல்வேன். அப்போதான் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தங்களின் பெற்றோர்கள் சேர்க்க குறையும்.




    மகள்களை பெற்ற எல்லா அம்மாக்களும் செய்ய வேண்டிய விஷயம் இது....!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter