Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    முதியோர் இல்லம் - Old Age Home!




    வெகுநாட்களாக சில விஷயங்கள் என்னை பாதித்து உறுத்திக்கொண்டே இருக்கும்.... நாம் தினம் தினம் எத்தனையோ பிரச்சனைகளை கடந்து செல்கிறோம்... ஆனால் எல்லாமே நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை... ஒருசில விஷயங்கள் தான் நம்மை மிகவும் யோசிக்க வைக்கும்...! அப்படி என்னை யோசிக்க வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று....!



    இங்கு சொல்லப்பட்டு இருக்கும் அனைத்து விஷயங்களும் எனது சொந்த கருத்துக்களே....!! இதெல்லாம் என் மனதில் இருக்கும் ஆதங்கத்தில் வந்தவை.... யார் மனதையும் புண்படுத்த இல்லை...!! என்னுடைய வார்த்தைகளை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...!



    இதுவரை எத்தனையோ செய்திகளை... நான் படித்து வியந்தவைகளை, மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை எல்லாம் இங்கு ஷேர் செய்து இருக்கிறேன்... நடுநடுவே என்னுடைய சொந்த பதிவுகளையும் கொடுத்து இருக்கிறேன்... இதுவும் என்னுடைய சொந்த கருத்தே...! இதன்மூலம் யார் மனதாவது புண்பட்டால்..., அதற்காக வருந்துகிறேன்.... அதை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர வேறொன்றும் செய்ய இயலாது... ஏனெனில் நான் ஒன்றும் இல்லாததை.....நடக்காததை சொல்லவில்லை.... இன்று நம் நாட்டில் வேரூன்றி கிடக்கும் ஒரு செயலை தான் சொல்லி இருக்கிறேன்...!




    மனிதா….!!
    கருவறையில் உன்னை சுமந்தவள்
    கல்லறைக்கு போகும்வரை
    உன் மனதறையில் இடமில்லா விட்டாலும் கூட
    உன் வீட்டறையில் ஓர் இடம் கொடு…!!



    முதியோர் இல்லங்கள் உருவாக காரணம் என்ன…?

    வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள்… பிரச்சனைகள் இல்லாத வீடே இல்லை எனலாம்… ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை…. அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவைகள்..

    கடன் குடிபடிப்பு, வேலை, பொருளாதாரம்



    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போனாலும், தீர்வே காணமுடியாத பிரச்னை மாமியார்- மருமகள் பிரச்னை…! இது உருவாக முக்கியமான காரணம், ஈகோ, பொசஸிவ் குணம், உரிமையை விட்டுக்கொடுக்க நடக்கும் போராட்டம்..! கல்வியறிவே இல்லாத காலம் தொட்டு, கம்ப்யூட்டர் காலம் வரை இதே நிலை தான்…!




    இதில் முதலில் தலை தூக்குவது பொசஸிவ் குணம்… நேற்றுவரை தனக்கு மட்டுமே உரிமையான மகனாக இருந்தவன், இன்று இன்னொருத்திக்கும் சொந்தம்.. அவனின் பாசத்தையும், அன்பையும் பங்கு போட்டு கொள்ள வேண்டிய நிர்பந்தம்…. இதை தாங்க முடியாத அம்மா.., மகளாக பார்க்க வேண்டிய மருமகளை விரோதியாக பார்க்க… சிறுசிறு ப்ரோப்ளேமாக உருவாவது பெரிய சண்டையில் முடிந்து, தாயா தாரமா என மகன் குழம்பி முடிவெடுக்க முடியாமல் திணற…, கடைசியில் தாரத்தின் தலையணை மந்திரம் ஜெயிக்கிறது.




    அதில் பாதிக்கப்படுவது தாயும், தகப்பனும்…! எல்லாமே பேசி தீர்க்க வேண்டியவை தான்… ஆனாலும் யாருக்கும் பேச தான் மனமில்லை…! பிறருக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்குவதில் அவ்வளவு கஞ்சத்தனம்…!




    பெற்ற தாய் தந்தையை தனியே விடுவதில் மகனுக்கும் அவ்வளவு பிடித்தமில்லை என்றாலும் கூட…, இங்கிருந்தால் அவர்களின் நிம்மதி கெடும், அதற்கு அவர்கள் அங்கு இருப்பதே மேல் என நினைக்கும் பிள்ளைகளும் உண்டு…! பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விடும் அனைத்து மகன்களும் சுயநலவாதிகள் என்றும், மனசாட்சி இல்லாதவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது என்பது என் கருத்து…!




    அதற்காக நான் முதியோர் இல்லங்களை ஆதரிப்பதாக அர்த்தமில்லை…! சொந்த குடும்பத்தில் வாழ முடியாத நிலை வரும்போது, வேறென்ன செய்துவிட முடியும்…??




    பிறந்த குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விடுவது போல…, இந்த வளர்ந்த குழந்தைகளை முதியோர் இல்லத்தில் விடுகின்றனர்.. இரண்டுமே ஒன்று தான்…! அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கே அந்த நிலைதான் எனும்போது, அவர்களை பெற்றவர்களுக்கு மட்டும் சொர்க்கபோக வாழ்வா கிடைத்துவிடும்…??




    இப்படி செய்பவர்களுக்கு ஒன்று புரியவில்லை… தாங்கள் பெற்ற குழந்தைகளை , தங்களை பெற்றவர்களிடம் ஒரே வீட்டில் / கூட்டில் பாதுக்காப்பாக விட்டுவிட்டு … நிம்மதியாக இவர்கள் உழைக்கலாம்… அதை விடுத்து, உடலால் குழந்தையான ஒன்றையும், மனத்தால் குழந்தையான மற்றொன்றையும் ஆளுக்கொரு காப்பகத்தில் விட்டுவிட்டு…, பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பதில் என்ன சுகம் இருக்கப் போகிறது….??




    சரி, ஏதோ அவர்கள் சூழ்நிலை, பெற்றோரை பேணிப் பாதுக்காக்க முடியவில்லை என்று முதியோர் இல்லங்களில் விடுகிறார்கள்… அங்கே அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கிறதா…? அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா….? எதையுமே கண்டுக் கொள்வதில்லை…




    சொல்லப் போனால் முதியோர் இல்லங்கள் பெருகிய அளவுக்கு…, அதன் தரம் உயரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை…!




    இன்னும் சில வசதியான…. வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் செய்யும் மாபெரும் வசதி…. ஆங்கிலத்தில் பெருமையாக “Old Age Home” என்று சொல்லிக்கொண்டு …. வில்லா வசதிகள் பெருகிவிட்டது…. இங்கு ஆளுக்கொரு வில்லா…, அதில் அவர்கள் வீடுகளில் இருப்பது போல சுதந்திரமாக இருக்கலாம்.. நிறைய வில்லாக்கள் சேர்ந்து ஒரு அமைப்பின் கீழ் வரும்… அதன் maintenance அனைத்தும் அந்த அமைப்பால் செய்யப்படும். அதற்கு மாதத்திற்கு இவ்வளவு என்று பணம் கட்டிவிட்டால் போதும்… அதுவும் இல்லையா…, அதே வில்லாவை சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம்..!




    ஏன் இப்படி ஒரு வசதி என்று கேட்கிறீர்களா….?? ஏற்கனவே இருக்கும் முதியோர் இல்லங்களில் கூடும் கூட்டம்… இடமின்மை, வசதியின்மை,கவனிப்பின்மை, இப்படி நிறைய இன்மைகளை கருத்தில் கொண்டும், கொஞ்சம் வசதியானவர்கள் தங்களின் தனி வீடுகளில் வசிக்க பயந்துக்கொண்டு, இது போன்ற வில்லாக்களை நாடுகின்றனர்.




    இதெல்லாம் சரியா….?? என்ற கேள்விகள் எழுந்தாலும்…, இதற்கு மாற்றுவழி என்ன என்பதை யாரும் சொல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சன உண்மை…!




    உள்ளூரில் வசிக்கும் பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோரை தங்களுடன் வைத்துக்கொள்ள மனமில்லை…. மனமிருந்தாலும் முடியவில்லை… சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு வீடு பிரச்னை… ஏற்கனவே புறாக்கூண்டு போல் இருக்கும் இடத்தில் இவர்களுமா என்ற எண்ணம் எல்லா மருமகள்களுக்கும்….!! வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள்…, தங்கள் வருங்காலத்தை மட்டுமே நினைத்து… பெற்றோரை தவிக்க விடுகின்றனர்.




    இதற்கெல்லாம் ஒரே முடிவு….. மாமியார் - மருமகள் ப்ரோப்லேம் தீர்வது தான்….! “மாமியார் உடைத்தால் மண்குடம்… மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற நிலை மாறி.., மருமகள்களை மகளாக மாமியாரும்…, மாமியாரை அம்மாவாக மருமகளும் நினைத்தால் ஓரளாவாவது இந்த முதியோர் இல்லங்களுக்கு வரும் முதியோரின் எண்ணிக்கை குறையும் என்பது என் நம்பிக்கை…!!




    இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது....பேரன் பேத்திகளின் அன்பும், பாசமும் கூட சில நேரங்களில் கிடைக்காமல் போய் விடுகிறது. தங்கள் விஷயங்களில் வயதானவர்களின் தலையீட்டை பிள்ளைகள் விரும்புவது இல்லை..... இதற்கு காரணம் தலைமுறை இடைவெளி என்றாலும் கூட..... முதியோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நடுவில் விழுந்த இடைவெளியை குறைத்து நெருக்கத்தை ஏற்படுத்தலாமே....!



    அதற்கு பிள்ளைகளும் முன்வர வேண்டும்..... வயசானது, கிழம் இப்போ இருக்குற generation பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் ஏளனம் பேசாமல்.... மெதுவாக சொல்லி இன்றைய சூழ்நிலையை புரிய வைக்கலாம்....!



    அதேபோல வயதானவர்களும் இன்றைய நடப்பை புரிந்துக்கொண்டும்.., தெரிந்துக்கொண்டும் சின்ன பிள்ளைகளுக்கு ஈடு கொடுக்கலாம். அவர்களுடன் ஒரு நட்புறவை வளர்த்துக்கொண்டு ஒரு நல்ல தோழனாக / தோழியாக இருக்கலாம்.



    எல்லா வீடுகளிலும் பிரச்னை ஆரம்பிக்கும் இடம் ஹாலாக தான் இருக்கும்.... ஆரம்பிக்கும் மையப்புள்ளி டிவி.... தாங்கள் நினைத்ததை தான் வீட்டில் உள்ள எல்லாரும் பார்க்க வேண்டும் என சில முதியவர்கள் நினைப்பார்கள்..... அவர்களுக்கு செய்திகள், பழைய பாடல்கள், படங்கள் பிடிக்கும்..... ஆனால் பிள்ளைகளுக்கோ இதெல்லாமே அலர்ஜி..... so ஒரு போராட்டம் நிகழும்..... மகனோ,மருமகளோ தங்கள் பிள்ளையை தான் அடக்க முடியும்..... பெற்றவர்களை ஒன்றும் சொல்ல முடியாது.....இதனை தவிர்க்க, பெற்றோரின் அறையில் ஒரு டிவி வைத்து விட்டால் ப்ரோப்லேம் சால்வ்ட்....!



    என்ன உளறுற....., அதுக்குன்னு எல்லாரும் டிவி வாங்க முடியுமா...? எத்தனை டிவி வாங்குறது....? என்று கேட்பீர்கள்....? இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் இதெல்லாம் நடக்குற காரியமா எனவும் நினைப்பீர்கள்....



    சரியான கேள்வி தான்..... ஆனால் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து மாதாமாதம் அவர்களுக்கு கொடுக்கும் தொகையை கணக்கில் கொண்டால்..... ஒரு டிவி வாங்குவது என்பது மிகவும் குறைவான செலவு தான்..... இங்கு பணக்கணக்கை விட பாசக்கணக்கை பாருங்க....!



    இதேமாதிரி தான் மற்ற விஷயங்களும் ....!! உணவு, உடை, வெளியிடங்களுக்கு செல்வது, நண்பர்கள்.. இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் சண்டை தான்..... தினம் ஒரு போராட்டம் தான்....!



    மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றாலும், பிள்ளைகளின் மனதை புரிந்துக்கொண்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நடந்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்....! எல்லா விஷயங்களிலுமே சில சில அட்ஜஸ்ட்மென்ட் செய்துக் கொண்டாலே முதியோர் இல்லங்கள் குறையும்..... மன வேதனைகளும் நீங்கும்....!



    பேசும் வார்த்தைகள் கொல்லும்…!
    பேசாத வார்த்தைகள் வெல்லும்….!


    இதை மாற்றி குடும்பமாக உட்கார்ந்து பேசினாலே பல பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம்…! அப்படியே வந்தாலும்


    மறப்போம்…. மன்னிப்போம்….!

    மன்னிப்பு கேட்பவன் மனிதன்…மன்னிப்பவன் மாமனிதன்….!



    இதையெல்லாம் மனதில் கொண்டு…., பெரியவர்களே தவறு செய்து இருந்தாலும், நாம் மன்னிப்பு கேட்டுவிட்டு போகலாமே…! அதில் ஒன்றும் தவறு இல்லையே…!




    அதை விடுத்து…, நான் மன்னிக்கவும் மாட்டேன்…. மறக்கவும் மாட்டேன்…. மன்னித்தாலும் மறக்க மாட்டேன் என வீம்புக்காக வீர வசனம் பேசினால்…, பாதிப்பு நமக்கு தான்…! அந்த பெரியவர்கள் விடும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் நாம் பதில் சொல்லியாக வேண்டும்…! வாய்விட்டு சொல்லா விட்டாலும் கூட…, அவர்களின் மனம் படும் பாடு…, நம் பிள்ளைகளை பாதிக்கும்…!




    இன்று நாம் நன்றாக தானே இருக்கிறோம் என்று நினைக்கலாம்… பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளின் மேல்.. இரத்த பந்தம் என்பார்களே.., அது என்ன…? வெறுமனே நம் வாரிசு என்று மார்தட்டி கொள்ளவா….!! இல்லை…. நாம் செய்யும் பாவத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு… நம் பாவக்கணக்கை நம் வாழ்நாளில் கழிக்க முடியாமல்…, அவர்களின் தலையில் சுமத்தி செல்கிறோம்…! இதெல்லாம் தேவையா….??




    குடும்பம் என்பது ஒரு ஆலமரம்.... அதன் வேராக இருந்து நம்மை தாங்குபவர்கள் பெற்றோர்.... அவர்களின் விழுதுகள் தான் நாம்...! அந்த வேரையே அழித்துவிட்டு..., விழுதுகள் இருந்து என்ன பயன்...???



    so அனைவரும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்….! இந்த பதிவு ஒருவரின் மனதையாவது மாற்றினால் சந்தோஷமே…!!



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by thenuraj; 16th Jul 2015 at 02:09 AM.

  2. #2
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    re: முதியோர் இல்லம் - Old Age Home!

    தேனு,
    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய தலைப்பை எடுத்திருக்கிறீர்கள். சூப்பர். அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.


    நீங்கள் பிரச்சனையின் ஏறக்குறைய எல்லா கோணங்களிலும் எழுதிவிட்டீர்கள். விடுப்பட்ட சிலவற்றுடன் என் கருத்துக்களை விரைவில் பதிவிடுகிறேன்.


  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    தேனு,
    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய தலைப்பை எடுத்திருக்கிறீர்கள். சூப்பர். அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.


    நீங்கள் பிரச்சனையின் ஏறக்குறைய எல்லா கோணங்களிலும் எழுதிவிட்டீர்கள். விடுப்பட்ட சிலவற்றுடன் என் கருத்துக்களை விரைவில் பதிவிடுகிறேன்.



    நீங்கள் சொல்வது போல இது என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த விஷயம் தான் ரதி .... நேரமின்மை, மனமின்மை காரணமாக இந்த பதிவு போடுவதில் தள்ளிக்கொண்டே போனது... இன்று போட்டுவிட்டேன்...!

    என்னைப் போன்றே பலரும் நினைக்கலாம்... அவர்களின் கருத்தையும் தெரிந்துக்கொள்ள எனக்கும் ஆசை தான்...!

    என்னைவிட நீங்கள் அழகாகவே சொல்வீர்கள்.... உங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.... ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடங்குவோம்.


  4. #4
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    இப்பிரச்சனை இது நம் வாழ்க்கை முறை + நம் அணுகுமறை + நாம் எந்தளவுக்கு நம் சுற்றத்துக்கு பொருந்தி போகிறோம் என்பதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்சனை.


    குழப்பமாக இருக்கிறதா? சரி இதை நாம் உடலில் வந்த ஒரு பெரிய வியாதியோடு ஒப்பிடலாம். பிள்ளைகள் பெற்றோரை நிராகரிப்பது என்பது வியாதி என்று எடுத்துக்கொண்டால், அந்த வியாதி வர பெரும் காரணம் நம் வாழ்க்கை முறை. அதாவது பெற்றோர்களின் பிள்ளை வளர்ப்பு முறை. என்ன விதைத்தார்களோ அதை தான் அறுக்க முடியும். அவர்கள் பிள்ளைகளை சரியாக வளர்த்திருந்து, அதோடு தாங்களும் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்திருந்தால் பிள்ளைகள் பிற்காலத்தில் தவற வாய்ப்பே இல்லை.


    என்னைப் பொருத்தவரை இப்பிரச்சனையின் மூல காரணகர்த்தா பெற்றோரே.
    அவர்கள் (ஆணின் பெற்றோர் +பெண்ணின் பெற்றோர் இருவருக்கும் இது பொருந்தும்) ஆரம்ப காலத்தில் செய்யும் தவறுகள்:
    - தங்கள் அன்பு, பரஸ்பர மரியாதை, விட்டு கொடுத்தல் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதை விட, தாங்கள் வாழ்ந்து காட்டுவதில் தவறி விடுகிறார்கள்
    - தங்கள் பெற்றோரை + தங்கள் துணையின் பெற்றோரை எப்படி நடத்தினார்கள்
    - தங்கள் வீட்டு பெரியவர்கள், சுற்றத்தாருடன் எப்படி நடந்து கொண்டார்கள்
    - கணவன் மனைவி தங்களுக்குள்ளே எப்படி நடந்து கொண்டார்கள்
    - குடும்பத்தில் பிரச்சனை வந்த சமயத்தில் எப்படி கை ஆண்டார்கள்
    - பிள்ளைகளை கையாண்ட விதம்( எந்த அளவு கண்டிப்பு + எந்த அளவு அன்பு)


    கல்யாணத்திக்கு முன் செய்யும் தவறுகள் :
    - படித்து முடித்து அவன் வேலைக்கு செல்லும் வேளையில் அவனுக்கு, பொருளீட்ட அவன் எங்கு சென்றாலும் அவன் வேர் இங்கு தான் உள்ளது என்று நினைவில் நிறுத்துமளவுக்கு சொல்வதில்லை. பிள்ளையின் வளர்ச்சியை கண்ட ஆனந்தத்தில் இதை கோட்டை விட்டு விடுகிறார்கள். இது தான் பிற்காலத்தில் அவன் தன் வளர்ச்சிக்காக/வாழ்க்கைக்காக இவர்களை பிரிவதில் கூட தயங்குவதில்லை
    - பணத்தின் தேவை + அதன் அளவுகோள் + நிம்மதி இதை பற்றி இரு பக்கத்திலும் அதை பற்றிய தெளிவாக பேசிக்கொள்வதில்லை
    - கல்யாணத்திற்கு, பிள்ளைகளும் சரி பெற்றவர்களும் சரி மனதளவில் தயாராவதில்லை.
    - வரன் தேடும் பொழுது வசதி + புறத்தோற்றம் போன்ற நிலை இல்லாதவற்றை தான் அளவு கோலாக வைத்திருக்கிறார்கள்

    Last edited by RathideviDeva; 16th Jul 2015 at 12:13 PM.

  5. #5
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    கல்யாணத்திக்கு பின் செய்யும் தவறுகள் :
    - பிள்ளைகள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதனால் நாம் கொஞ்சம் விலகி இருந்து தான் ஆக வேண்டும். மகன் மருமகள் புதிதாக வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். சிறு சரிவுகள், தவறுகள் நடக்கலாம். ஆனால் அதில் முடிந்தவரை தலையிடாமல் தேவை ஆன அளவுக்கு மட்டுமே வழி காட்ட வேண்டும். இதை மறந்து விடுகிறார்கள்.
    - அவர்களின் ப்ரைவசியை மற்றும் space மதிக்க மறந்து விடுவது
    - அடக்குமுறை,
    - தான் கண்ட, கேட்ட விஷயத்தை வைத்து மருமகள் மீது எதிர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது.
    - ஈகோ, possessiveness & insecured பீலிங்
    - மருமகளுக்கு புது சூழ்நிலையை பழகி கொள்ள அவகாசம் தேவை. அதோடு கொஞ்சம் பொறுமை + அன்பு தேவை. இதை மறந்து விடுகிறார்கள்
    - எதிர்பார்ப்பு
    - lack of empathy . மருமகளை தன் மகளின் நிலையில் நிறுத்திப்பார்க்க தவறுகிறார்கள்
    - தங்கள் வருங்கால வாழ்க்கை பாதுகாப்புக்கு தயார் நிலையில் இருப்பதில்லை (financial security)
    - மருமகள் அவள் வீட்டினரை மறந்து விட வேண்டும் என் எண்ணுவது . அவள் வீட்டினருக்கு சம்பந்தி என்ற நிலையை தாண்டி அன்பு + மரியாதை செலுத்த தவறுவது
    - மருமகள் தங்கள் வம்சத்தை விருத்தி பண்ண வந்தவள். அவள் நன்றாக இருந்தால் தான் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை நன்றாக வரும் என்பதை மறந்து விடுவது
    - தாங்கள் விட்டுகொடுப்பதை தோல்வி என நினைத்து விவேகமின்றி நடப்பது
    - தங்கள் அக்கம் பக்கத்தினர் கருத்துக்கு தேவை இன்றி அதிக முக்கியத்துவம் கொடுத்து பொய்யாக வாழ்வது

    இப்படி பல தவறுகளின் கர்ம பலன் தான் தனிமை வாழ்க்கை. இதற்காக பிள்ளைகள் மீது எந்த தவறும் இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களும் தன் கர்ம பலன்களை அடைந்தே தீருவார்கள்.


    இன்னும் கொஞ்சம் இருக்கிறது தேனு. தூக்கம் வருகிறது. பிள்ளைகள் செய்யும் தவறோடு நாளை வருகிறேன்.

    Last edited by RathideviDeva; 16th Jul 2015 at 12:18 PM.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    வீட்டிலுள்ள அனைவரும் , அவர்கள் யாராக இருப்பினும் , ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு , ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, அரவணைத்துச் சென்றால் , எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக வாழலாம் .

    மிக நன்றாக சொல்லி இருக்கீங்க தேனு மற்றும் ரதி .

    Jayanthy





  7. #7
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இப்பிரச்சனை இது நம் வாழ்க்கை முறை + நம் அணுகுமறை + நாம் எந்தளவுக்கு நம் சுற்றத்துக்கு பொருந்தி போகிறோம் என்பதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்சனை.


    குழப்பமாக இருக்கிறதா? சரி இதை நாம் உடலில் வந்த ஒரு பெரிய வியாதியோடு ஒப்பிடலாம். பிள்ளைகள் பெற்றோரை நிராகரிப்பது என்பது வியாதி என்று எடுத்துக்கொண்டால், அந்த வியாதி வர பெரும் காரணம் நம் வாழ்க்கை முறை. அதாவது பெற்றோர்களின் பிள்ளை வளர்ப்பு முறை. என்ன விதைத்தார்களோ அதை தான் அறுக்க முடியும். அவர்கள் பிள்ளைகளை சரியாக வளர்த்திருந்து, அதோடு தாங்களும் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்திருந்தால் பிள்ளைகள் பிற்காலத்தில் தவற வாய்ப்பே இல்லை.


    என்னைப் பொருத்தவரை இப்பிரச்சனையின் மூல காரணகர்த்தா பெற்றோரே.
    அவர்கள் (ஆணின் பெற்றோர் +பெண்ணின் பெற்றோர் இருவருக்கும் இது பொருந்தும்) ஆரம்ப காலத்தில் செய்யும் தவறுகள்:
    - தங்கள் அன்பு, பரஸ்பர மரியாதை, விட்டு கொடுத்தல் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதை விட, தாங்கள் வாழ்ந்து காட்டுவதில் தவறி விடுகிறார்கள்
    - தங்கள் பெற்றோரை + தங்கள் துணையின் பெற்றோரை எப்படி நடத்தினார்கள்
    - தங்கள் வீட்டு பெரியவர்கள், சுற்றத்தாருடன் எப்படி நடந்து கொண்டார்கள்
    - கணவன் மனைவி தங்களுக்குள்ளே எப்படி நடந்து கொண்டார்கள்
    - குடும்பத்தில் பிரச்சனை வந்த சமயத்தில் எப்படி கை ஆண்டார்கள்
    - பிள்ளைகளை கையாண்ட விதம்( எந்த அளவு கண்டிப்பு + எந்த அளவு அன்பு)


    கல்யாணத்திக்கு முன் செய்யும் தவறுகள் :
    - படித்து முடித்து அவன் வேலைக்கு செல்லும் வேளையில் அவனுக்கு, பொருளீட்ட அவன் எங்கு சென்றாலும் அவன் வேர் இங்கு தான் உள்ளது என்று நினைவில் நிறுத்துமளவுக்கு சொல்வதில்லை. பிள்ளையின் வளர்ச்சியை கண்ட ஆனந்தத்தில் இதை கோட்டை விட்டு விடுகிறார்கள். இது தான் பிற்காலத்தில் அவன் தன் வளர்ச்சிக்காக/வாழ்க்கைக்காக இவர்களை பிரிவதில் கூட தயங்குவதில்லை
    - பணத்தின் தேவை + அதன் அளவுகோள் + நிம்மதி இதை பற்றி இரு பக்கத்திலும் அதை பற்றிய தெளிவாக பேசிக்கொள்வதில்லை
    - கல்யாணத்திற்கு, பிள்ளைகளும் சரி பெற்றவர்களும் சரி மனதளவில் தயாராவதில்லை.
    - வரன் தேடும் பொழுது வசதி + புறத்தோற்றம் போன்ற நிலை இல்லாதவற்றை தான் அளவு கோலாக வைத்திருக்கிறார்கள்



    ரதி @RathideviDeva

    என்ன விதைத்தார்களோ.... அதைத்தான் அறுக்க முடியும் என்பது உண்மை தான்... ஆனால் இது எல்லாருக்கும் பொருந்தாது.... எத்தனையோ பேர் நல்ல விதைகளை தான் விதைக்கிறார்கள்.... ஆனால் வளர்வது என்னவோ வெறும் களைகள் தான்...!! இதற்கு யார் பொறுப்பு...?


    எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோரை தான் எடுத்து வெளியில் வீசி விடுகிறார்களே.... பிறகென்ன செய்ய முடியும்...?? இங்கு எல்லாமே சுயநலம் தான்.... நான் நன்றாக வாழ்ந்தால் போதும்...., அடுத்தவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என போகும் சமுதாயத்தில் தான் நாம் வாழ்கிறோம்...! என்று ஒரு மனிதனை சுயநலமும், பேராசையும் பிடித்து விட்டதோ..., அதன்பிறகு எத்தனை புத்தர் வந்தாலும் திருத்த முடியாது..!!


    ஆசையை விட ஆசைப்பட வேண்டும்...!!

    என்னடா லூசு மாதிரி பேசுறேன்னு பார்க்குறீங்களா...?
    ஆசைப்படுவதை விடுவதற்கு ஆசைப்பட வேண்டும்...! எல்லாம் எனக்கே..., நானே எதிலும், எங்கும்... எனக்கு போக மீதி தான் அடுத்தவருக்கு என்ற எண்ணம் இருக்கும் வரையில் இந்த நிலை மாறாது...!! மகன் தனக்கு மட்டுமே என்று பெற்றோரும்.... கணவன் தனக்கு மட்டுமே என மனைவியும் நினைக்கும் வரையில் நோ சேன்ஜ்...!!



    படித்து முடித்து அவன் வேலைக்கு செல்லும் வேளையில் அவனுக்கு, பொருளீட்ட அவன் எங்கு சென்றாலும் அவன் வேர் இங்கு தான் உள்ளது என்று நினைவில் நிறுத்துமளவுக்கு சொல்வதில்லை. பிள்ளையின் வளர்ச்சியை கண்ட ஆனந்தத்தில் இதை கோட்டை விட்டு விடுகிறார்கள்



    இதை ஒத்துக் கொள்கிறேன்.... பிள்ளை படித்து முடித்த அடுத்த நாளே.., லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தான் பெற்றோருக்கு...! உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் அப்போது அவனை விட்டு தனித்து இருக்கும் பெற்றோர்.... அவனுக்கு கல்யாணம் என்று வரும்போது மட்டும் ஏனோ பிரிய முடியாமல் தவிக்கின்றனர்... இது எதைக் காட்டுகிறது...??


    மகன் தனித்திருக்கும் போது தெரியாத புரியாத அனைத்தும் அப்போத்தான் புரியும்...! அன்பு, பாசம் எல்லாம் பொங்கும்...! ஏன்னா அவர்களின் பாசத்தை பங்கு போட இன்னொருத்தி வந்துவிட்டதால் தான்...! உரிமைப் போராட்டம் தான்...!



    இந்த போராட்டம் தான் கடைசி வரைக்கும் தொடர்ந்து.... இறுதியில் முதியோர் இல்லத்தில் போய் முடிகிறது...! இதில் யாரை குறை சொல்வது...?? இருவரின் மேலும் தப்பில்லை தான்னு தோணுது...!!

    Last edited by thenuraj; 17th Jul 2015 at 01:29 AM.

  8. #8
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    கல்யாணத்திக்கு பின் செய்யும் தவறுகள் :
    - பிள்ளைகள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதனால் நாம் கொஞ்சம் விலகி இருந்து தான் ஆக வேண்டும். மகன் மருமகள் புதிதாக வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். சிறு சரிவுகள், தவறுகள் நடக்கலாம். ஆனால் அதில் முடிந்தவரை தலையிடாமல் தேவை ஆன அளவுக்கு மட்டுமே வழி காட்ட வேண்டும். இதை மறந்து விடுகிறார்கள்.
    - அவர்களின் ப்ரைவசியை மற்றும் space மதிக்க மறந்து விடுவது
    - அடக்குமுறை,
    - தான் கண்ட, கேட்ட விஷயத்தை வைத்து மருமகள் மீது எதிர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது.
    - ஈகோ, possessiveness & insecured பீலிங்
    - மருமகளுக்கு புது சூழ்நிலையை பழகி கொள்ள அவகாசம் தேவை. அதோடு கொஞ்சம் பொறுமை + அன்பு தேவை. இதை மறந்து விடுகிறார்கள்
    - எதிர்பார்ப்பு
    - lack of empathy . மருமகளை தன் மகளின் நிலையில் நிறுத்திப்பார்க்க தவறுகிறார்கள்
    - தங்கள் வருங்கால வாழ்க்கை பாதுகாப்புக்கு தயார் நிலையில் இருப்பதில்லை (financial security)
    - மருமகள் அவள் வீட்டினரை மறந்து விட வேண்டும் என் எண்ணுவது . அவள் வீட்டினருக்கு சம்பந்தி என்ற நிலையை தாண்டி அன்பு + மரியாதை செலுத்த தவறுவது
    - மருமகள் தங்கள் வம்சத்தை விருத்தி பண்ண வந்தவள். அவள் நன்றாக இருந்தால் தான் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை நன்றாக வரும் என்பதை மறந்து விடுவது
    - தாங்கள் விட்டுகொடுப்பதை தோல்வி என நினைத்து விவேகமின்றி நடப்பது
    - தங்கள் அக்கம் பக்கத்தினர் கருத்துக்கு தேவை இன்றி அதிக முக்கியத்துவம் கொடுத்து பொய்யாக வாழ்வது

    இப்படி பல தவறுகளின் கர்ம பலன் தான் தனிமை வாழ்க்கை. இதற்காக பிள்ளைகள் மீது எந்த தவறும் இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களும் தன் கர்ம பலன்களை அடைந்தே தீருவார்கள்.


    இன்னும் கொஞ்சம் இருக்கிறது தேனு. தூக்கம் வருகிறது. பிள்ளைகள் செய்யும் தவறோடு நாளை வருகிறேன்.



    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ரதி...


    எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று, சிறியவர்களின் வாழ்வில்... எடுத்ததற்கெல்லாம் மூக்கை நுழைக்காமல்... தள்ளி நின்று அவனுக்கு அறிவுரை சொல்லி... வழிநடத்தி சென்றாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்...!


    மருமகளை மகளாக நினைத்தால் அடுத்த பிரச்னையும் ஒழியும்...!


    இதில் சொல்லாத இன்னொன்றை நான் சொல்ல நினைக்கிறேன்.... அது மகன்/ மகள் இருவருக்கும் இடையே காட்டும் பாரபட்சமான அன்பு...! பிள்ளைகளின் கல்யாணத்திற்கு முன்பு..., இருவரையும் சமமாக பாவித்த அதே மனது.... கல்யாணத்திற்கு பின்பு..., மகளை சிறிது மேலாகவும், மகனை கொஞ்சம் தாழ்த்தியும் பார்க்கும் பாசம்...!


    அதற்கு காரணம் கேட்டால்...., இன்னொரு வீட்டிற்கு வாழப் போன பெண்ணை நாமதானே நல்லா வச்சுக்கணும்.... அங்க அவளுக்கு என்ன கஷ்டமோ என்னவோ.... இங்க வந்தா தானே அவளால நிம்மதியா இருக்க முடியும் என்று உப்புசப்பில்லாத காரணங்கள்...!!


    அதேபோல தானே மருமகள்களுக்கும்....!! வாழ வந்த வீட்டில் எத்தனையோ இருக்கலாம்... அவளும் நிம்மதியை நாடலாம்... அம்மா வீட்டிற்கு போக நினைக்கலாம்... ஆனால் போக தடை....! அப்படி இருக்கும்போது, எப்படி அவளால் மனமொன்றி அந்த வீட்டில் அனுசரித்து வாழ முடியும்...?? இதை தவிர்க்க...., மகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் அங்கு இருக்குமோ என தவிக்கும் பெற்றோர்..., அதே பிரச்சனைகளை மருமகளுக்கு வராமல் பார்த்துக் கொள்ளலாமே...!!


    ஓகே ஓகே... மெதுவாக வந்து உங்களின் மீதி கருத்துகளையும் சொல்லுங்க...!


  9. #9
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ஹாய் ஃபிரெண்ட்ஸ்

    இந்த பதிவினை பற்றிய உங்களின் கருத்துக்களை அறிய ஆவல்... உங்களுக்கு நேரம் இருந்தால்..., முடிந்தால் ஒரு இரண்டு வரிகளை ... இதைப்பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கு வந்து பகிர்ந்துக் கொள்ளுங்களேன்...!!

    @Dangu, @gloria, @PriyagauthamH, @ponschellam, @Uma manoj, @Sriramajayam, @saveetha1982, @Vimalthegreat, @chan, @kkmathy, @jayakalaiselvi, @femila, @selvipandiyan, @shrimathivenkat, @repplyuma


    Tag பண்ணாதவங்க கோவிச்சிக்காதீங்க.... நீங்களும் வாங்க...!!

    Last edited by thenuraj; 17th Jul 2015 at 02:11 AM.

  10. #10
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by jv_66 View Post
    வீட்டிலுள்ள அனைவரும் , அவர்கள் யாராக இருப்பினும் , ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு , ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, அரவணைத்துச் சென்றால் , எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக வாழலாம் .

    மிக நன்றாக சொல்லி இருக்கீங்க தேனு மற்றும் ரதி .



    ஒரே வரியில அழகா சொல்லி இருக்கீங்க க்கா...
    இதை அனைவரும் புரிந்துக் கொண்டால் ஓகே...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter