Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree161Likes

Penmai eMagazine October 2015


Discussions on "Penmai eMagazine October 2015" in "Penmai eMagazine" forum.


  1. #21
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Penmai eMagazine October 2015

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Download Penmai eMagazine here, Penmai eMagazine October 2015.

    உங்களோடு சில நிமிடங்கள்,

    டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரியாமலே பலரின் ஆதரவுகள்! உலகம் அதி நவீன தொழில் நுட்பத்தால் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதன் பலன்கள் எல்லா மக்களுக்கும் கிடைப்பதில்லை. இதனை களைவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், தகவல் தொழில் நுட்பத் துறையை முறையே மேம்படுத்துவது, அரசு வழங்குகிற சேவைகள் அனைத்தையும் ஆன்லைனுக்கு மாற்றுவது, கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி (கிராமங்களுக்கு பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள்), வயர்லெஸ் இணைய வசதி, இணையம் மூலம் அரசு சேவைகள், இணையக் கல்வி, இணையம் வழி மருத்துவம், டிஜிட்டல் லாக்கர், அனைவருக்கும் தொலைபேசி, அதிக அளவில் வேலை வாய்ப்புகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய சமூகத்தில் உள்ள கடைகோடி மனிதனுக்கும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதாகும். ஆமாம்! கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழி இல்லாமல் இருப்பவனுக்கும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு சேர்ப்பது. சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள் அமைப்பது. ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாத ஊர்களில் பிரசவங்களுக்கு பெண்களைக் கயிற்றுக்கட்டிலில் வைத்து பொடிநடையாக அருகில் உள்ள டவுன்களுக்கு சுமந்து செல்லும் மக்களுக்கு இணைய வழியில் மருத்துவம் செய்வது என்பது முரண்களாகவே உள்ளது. கருத்தளவில் பார்க்கும் போது மட்டும் இந்தத் திட்டம் தேசத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதாக உள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் கடை கோடியில் உண்ண உணவு இன்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி வசிப்பவர்களுக்கு!?

    இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் வறட்சி ஏற்படும், நாம் உணவுக்காக பல அந்நிய நாடுகளை நாடும் அவல நிலையில் உள்ளோம். மரங்கள் பெருகுவதற்கான திட்டங்களையும், இயற்கை வளங்களைக் காப்பதற்கான திட்டங்களையும், நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், நாளும் தற்கொலை செய்து வறண்ட பூமியில் விடியா உறக்கம் கொள்ளும் விவசாயிகளின் மரணத்தை தடுக்கும் திட்டங்களையும் எதிர்கொண்டு இருக்கும் மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் கனவாக மட்டும் இருந்துவிட்டால் நன்மையே!

    சமூக இணையதளங்கள் உபயோகிப்பதில் இந்தியா தான் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையப்பயன்பாட்டில் மூன்றாவது இடம். இங்கு நாம் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் இருப்பது சீனா விலகியதால்தான்! ஆம் சீனாவில் முகநூல் (facebook)தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பயனீட்டாளர்களை பயன்படுத்திக்-கொண்டு முகநூல் போன்ற பெரிய நிறுவனங்கள் மக்களை எப்போதும் அதன் அடிமைகளாகவே வைக்க "net neutrality" போன்றவற்றிற்கு எதிர்ப்பாக உள்ளது. மற்ற மனிதனும் மனிதன் கண்டுபிடித்த சாதனங்களும் நாட்டை ஆளலாம், நம்மை ஆள நாம் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது. ஏற்கனவே குனிந்த தலை நிமிராமல் எப்போதும் அலைபேசியின் திரைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைய சமூகம் எங்கும் எப்போதும் இலவச இணையம் என்றால்!

    இந்தியா டிஜிட்டல் மயம் ஆகும் முன், மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும்! உணவின்றி உறங்கச் செல்லும் 20 கோடி மக்களுக்கு உணவு, சுத்தமான குடிநீர், மின் இணைப்பு, தடையில்லாத மின்சாரம், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இல்லா கிராமங்களுக்கு பள்ளிக்கூடம் போன்ற இன்றியமையாத வசதிகளைச் செய்த பின் நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை வரவேற்கிறோம். நாம் இணையத்தில் பசியாற முடியாது, மரம் வளர்க்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும்!

    ...உங்கள் தோழி இளவரசி




    Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

    Read it and drop your comments here!!!

    அருமையான தலையங்கம் இளவரசி..

    நீங்க சொல்லி இருப்பதில் ஒரு உண்மை டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரியாமல் ஆதரிக்கும் நிறைய பேர்.. உண்மையில் எனக்கும் அதை பற்றி ஒன்றும் தெரியவில்லை... இந்த மாத நீயா நானாவிற்கு சுமதி அக்கா tag பண்ணியதில் அதை பற்றி தெரிந்து கொள்ள நிறைய முயற்சி எடுத்தேன் உங்கள் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே ... நாம் இணையத்தில் பசியாற முடியாது, மரம் வளர்க்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது என்ற வரிகள் டிஜிட்டல் இந்தியாவினால எதிர் காலத்தில் விவசாயம் என்னவாகும் என்பதை உணர முடிகிறது...


    என்னோட ரெசிப்பி ebookயில் வந்து இருக்கு நன்றி...

    tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி



    Sponsored Links
    Last edited by gloria; 20th Oct 2015 at 03:02 AM.

  2. #22
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine October 2015

    Dear friends, @durgasakthi @naanathithi @selvipandiyan @thenuraj @gkarti @ponschellam @kkmathy @ishitha @Uma manoj @kvsuresh @Sriramajayam @jayanthibalakrishnan @Vimalthegreat @sujivsp @girija chandru @kasri66 @sriju @hani13 @gloria.

    Thanks for all your valuable comments and wishes Sorry for bit delayed reply i was in short vacation.



    The above image is Maslow's law which depict the law of hierarchy of needs. This is suitable for both individual and country. we cannot skip a level and jump to another level.

    சில வருடங்களுக்கு முன்பு நம் நாட்டு பெண்களை தான் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகிகளாக (Miss World & Miss Universe) தேர்ந்தெடுத்தார்கள் ஏன் என்றால் அழகு சாதன பொருட்களை இந்தியாவிற்குள் விற்க அவர்களின் சந்தைக்கான இடமாக இந்தியாவை மாற்ற அவர்களின் உக்திகளே அழகிப்போட்டி. டிஜிட்டல் இந்தியா திட்டமும் அதேபோல் தான்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #23
    kanagavarshini is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    coimbatore
    Posts
    332

    Re: Penmai eMagazine October 2015

    Sadarna makala irukum naama enna seiya mudiyum


  4. #24
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai eMagazine October 2015

    Quote Originally Posted by Penmai View Post




    The above image is Maslow's law which depict the law of hierarchy of needs. This is suitable for both individual and country. we cannot skip a level and jump to another level.
    இதுவரை கேள்விப்பட்டதில்லை . அருமையான பிரமிட். மனிதனின் தேவைகளை அடிப்படையிலிருந்து அழகாக வரிசைப்படுத்தி உள்ளது. ஒரு சமூகம் ஆரோக்கியமாக விளங்க அதன் குடிமக்களின் மேல் கூறிய தேவைகள் சரியாக பூர்த்தியாகி இருக்க வேண்டும். சரி இது நிதர்சனத்தில் சாத்தியமா? நிச்சயமில்லை. ஒரு அரசால் தன்னுடைய அனைத்து குடிமக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது. அதுவும் அதிக மக்கள் தொகை வைத்துள்ள நம் நாட்டின் அரசால் முடியவே முடியாது.

    இயற்கை என்பது ஒவ்வொருவரின் தேவையையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்காது. ஆனால் ஒவ்வொரு உயிரின் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள தேவையான அனைத்தையும் தன்னுள் அடக்கி உள்ளது. அவரவர் தான் தங்களுக்கு தேவையானதை தேடி நியாயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே போல் தான், ஒரு நாட்டின் அரசும், அதன் வளமும்.
    சில வருடங்களுக்கு முன்பு நம் நாட்டு பெண்களை தான் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகிகளாக (Miss World & Miss Universe) தேர்ந்தெடுத்தார்கள் ஏன் என்றால் அழகு சாதன பொருட்களை இந்தியாவிற்குள் விற்க அவர்களின் சந்தைக்கான இடமாக இந்தியாவை மாற்ற அவர்களின் உக்திகளே அழகிப்போட்டி. டிஜிட்டல் இந்தியா திட்டமும் அதேபோல் தான்.
    உலக அழகிப் போட்டி பற்றி நீங்கள் குறிப்பிட்டது உண்மையாக இருக்கலாம் . நீங்கள் சொல்வது போல் அந்நிய நாட்டு corporate முதலைகளுக்கு, நம் நாடு , அதிக மீன்கள் உள்ள பெரிய குளம். அவர்கள் பொருட்களை விற்க மிகப் பெரிய சந்தை தான்.

    இதுவும் டிஜிட்டல் இந்தியாவும் ஒரே மாதிரியா ....?
    டிஜிட்டல் இந்தியா திட்டம் கண்டிப்பாக மேல் மட்டத்தில் உள்ள சில corporate முதலைகள் பணத்தில் கொழிக்க தான் என்றாலும், நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாயும் என்று நம்பிக்கை வைப்போம். அழிந்து வரும் விவசாயம், பெரிய corporate கைகளுக்கு போவதற்குள், நம் துடிப்பான இளைஞர்கள் கைகளுக்கு செல்ல வேண்டும். இதற்கு, அதிவேக இன்டர்நெட் + இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம், எடுத்து செல்லும் என்று எனக்கு சிறிதளவு நம்பிக்கை வந்துள்ளது. அங்கங்கே விவசாயிகள் சிதறி இருப்பதால் தான் அவர்கள் அவலக்குரல் எட்ட வேண்டியவர்களுக்கு எட்ட வில்லை. அவர்களை இணையத்தால் இணைத்துப்பார்ப்போம் , ஒரு பெரிய மாற்றம் வரும் என்று நம்புவோம்.


    Only way a nation can move forward is by making its citizens self-empowered through knowledge sharing and awareness. Lets make this happen, and hope that our country will soon be a super power, not only economically but also culturally.

    இளவரசி சிஸ் @Penmai ,
    உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொன்னதை தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் தான் பதிவு செய்தேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

    Last edited by RathideviDeva; 29th Oct 2015 at 05:52 AM.

  5. #25
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine October 2015

    தோழி @RathideviDeva தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. நாம் பார்க்கும் கண்ணோட்டங்கள் வேறு வேறு.

    ஒரு அரசால் குடிமகன்களின் அணைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியாது உண்மையே, ஆனால் அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர், கல்வி போன்றவை நிறைவேற்றுவது அவர்களின் கடமை. இவைகள் பெறாத எண்ணற்ற கோடி மக்களுக்கு எதற்கு இலவச இணைய வசதி.

    அந்நிய முதலீடுகள் தேவை ஆனால் அவை உள்ளூர் சிறு வியாபாரிகள் மற்றும் அவர்கள் உற்பத்தி தொழில்களை பாதிக்க கூடாது. Nokia, Hyundai போன்ற Special Economic Zone (SEZ) உள்ளவர்களுக்கு 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கொடுத்துவிட்டு உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம். இதானால் முடங்கியது எண்ணற்ற குறுந்தொழில்கள். இது போன்ற சமன்படுத்தப் படாத திட்டங்கள் ஒரு சாரரை மட்டுமே முன்னேற்றும்.

    டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கி வைத்தது, July 1 2015. ஆனால் அதற்கான எதிர்ப்பு பலமானது, facebook போன்ற நிறுவனங்களின் ஆதரவிற்கு பிறகே. கீழே கொடுக்கப்பட்டுள்ள முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை பாருங்கள், இதில் அவர்களின் ஆதாயத்தை மட்டுமே அவர்கள் பார்கின்றனர்.

    புதுடெல்லி, அக்.27-

    இன்று டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பதில் அளித்து வருகிறார்.

    மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மார்க் ஸக்கர்பெர்க் இணைய சமத்துவ கொள்கைக்கு பேஸ்புக் முழு ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார். அதேசமயம் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக வழக்கும் (zero-rating plans) திட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து பேசினார்.

    இணைய சேவையை உலகம் முழுவது இலவசமாக வழங்குவது அதிக செலவு பிடிக்கும் திட்டம். அதனால், இணைய சேவை வழங்கிவரும் நிறுவனங்களுடன் இணைந்து குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்குவது அனைவருக்கும் பலன் அளிக்கும். ஆனால் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே இணைய வசதி பெற்றவர்கள்தான். நாம், இணைய வசதி அற்றவர்களின் நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இந்தியாவை இணையத்துடன் இணைக்காமல் உலகத்தை இணைக்க முடியாது” என்று தெரிவித்தார்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter