Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree141Likes

Penmai eMagazine December 2015


Discussions on "Penmai eMagazine December 2015" in "Penmai eMagazine" forum.


 1. #1
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,878
  Blog Entries
  1

  Penmai eMagazine December 2015

  Dear friends,

  Download Penmai eMagazine here, Penmai eMagazine December 2015.

  உங்களோடு சில நிமிடங்கள்,

  நூறாண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம் என்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை சுழற்றியடித்துவிட்டது. விலைமதிப்பில்லா பல உயிர்கள் நீரில் மூழ்கின. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து, உணவிற்கும், உறைவிடத்திற்கும் அடுத்தவரை எதிர்ப்பார்த்து நிற்பது பலரையும் கலங்கச் செய்தது. அரசியல்வாதிகளுக்கும்,அரசாங்கத்திற்கும் லஞ்சம் கொடுத்த கைகள் அனைத்தும் இன்று இயற்கை தண்ணீர் மூலம் கைகாட்டி சென்றுவிட்டது.

  வீட்டையும், தன் உடைமைகளையும் இழந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் உதவி செய்தது பெரும் வியப்பே! இதில் நம் இளைய சமுதாயத்தின் பங்கு மிகவும் போற்றுதலுக்கு உரியது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பலரை காத்தனர். இக்கட்டான நிலையில் அரசாங்கத்தை மட்டும் சார்ந்து நிற்காமல் மக்கள் மத இன பாகுபாடின்றி ஒற்றுமையுடனும் தன்னம்பிக்கையுடன் உதவி செய்ததை உலகம் வியந்து பார்க்கிறது. இதோ ஒரே வாரத்தில் மீண்டுவிட்டது நம் தலைநகரம் சென்னை. முழுவதும் இயல்பு நிலை திரும்பாவிட்டாலும், தன் இருப்பை தக்கவைத்து கொண்டது.

  இயற்கை பேரிடர் என்றாலும் அரசாங்கத்திடம் ஒருங்கிணைப்பு இல்லாமல், பல லட்ச உயிர்களோடு விளையாடியது வருத்தத்திற்குரியது. இயற்கை பேரிடரைதான் எதிர்கொள்ள முடியாது. ஆனால், அது விட்டுச் சென்ற மனிதர்களுக்கான நிவாரணங்கள் செய்வதிலும், தேங்கி கிடக்கும் நீரில் இருந்து பெருகும் நோய் தொற்றுதலை தடுப்பதிலும் மெத்தனம் காட்டுவதிலும், பிறர் செய்யும் உதவியை தான் செய்ததாகக் கூறிக்கொள்வது அதனினும் கொடியது.

  நீர் பாதைகளை ஆக்கிர​மிப்பு செய்துவிட்டு, அதன் வழித்தடங்களை சீர் செய்யாமல் இயற்கையை குறை சொல்வதில் பயனில்லை. இயற்கைக்கு எதிராக நடந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவிற்கு மிக முக்கிய காரணம்,நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மிக அதிக plastic பயன்பாடுகள். நாமும் அரசாங்கத்தை மட்டும் நம்பி இல்லாமல் நம் பங்கிற்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, குப்பைகளை முறையான வழியில் அகற்றி இயற்கையை காப்போம்.

  இந்த மழை வெள்ளதிற்கே மக்களை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகள் நாளை கல்பாக்கம்,கூடங்குளத்தில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டால் மக்களைக் காப்பாற்றுவார்கள் என்பது கேள்விக்குறியே. போபாலில் நடந்த சோகமே இங்கும் நடக்கும்! ஜப்பானில் அணுஉலைகள் வெடித்ததால் மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது நாம் அறிந்ததே. ஜப்பான் நாட்டு பிரதமரால் போதுமான மீட்பு பணிகள் செய்ய முடியாமல் ராஜினாமா செய்தார். உயிர்சேதமும் உடனே முடிந்து விடப்போவதில்லை, அதன் தாக்கம் பல தலைமுறைகள் தாண்டி இருக்கும் அபாயத்தையும் நாம் உணர வேண்டும்.

  வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் நல்ல கல்வி, மருத்துவம், விவசாயத்துறை வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, தரமான சாலை வசதி, பேரிடர் மேலாண்மை போன்ற மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி அமைய வழிவகை செய்வோம். நீண்டகாலத் தீர்வுகள் கொடுக்கும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் தீங்கில்லா சூரிய மின்சக்தி, அனல்மின்சக்தி, நீர் மின்சக்தி போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டியும், நதிகளை இணைத்தும் இயற்கையை பாதுகாத்து விவசாயத்தைப் பெருக்கி,பஞ்சம் பட்டினியற்ற நல்லாட்சி கொடுக்கும் அரசு அமையட்டும். பிறக்கப்போகும் புதிய ஆண்டில் இளைய தமிழனின் வெற்றிப் பயணம் தொடங்கட்டும்!


  ...உங்கள் தோழி இளவரசி
  Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

  Read it and drop your comments here!!!


  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine December 2015-penmai-emagazine-december-2015.jpg  
  Attached Files Attached Files
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

 2. #2
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  Re: Penmai eMagazine December 2015

  Awesome Write Up Kaa..! INSPIRED

  And As usual, Design.. That Bells & Ball-Stars Create a Cheery Mood! Loved it..!

  Added to that, Ekadasi - Miladi Nabi - Xmas,, Whoa! Watta Sync

  Thanks to all the Contributors! Cheers

  Looking Forward!!! Hey Hey New Year la inum Sirappa Kalakkiduvom


 3. #3
  sriju's Avatar
  sriju is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  srija bharathi
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  coimbatore
  Posts
  6,781

  Re: Penmai eMagazine December 2015

  வணக்கம் பெண்மை மற்றும் இளவரசி அக்கா

  இதோ இந்த மாதம் தொட்டு நான் பெண்மை வந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டது எத்தனை சந்தோசங்கள், எத்தனை புதிய விஷயங்கள் எத்தனை பரிசுகள்! அனைத்துக்கும் மேல் இங்கு எனக்கு கிடைத்த தோழிகள்! இப்படி சிம்பிளா சொல்லி முடிக்க கூடாது எல்லாரும் அதுக்கும் மேல எனக்கு மழை எப்படி மக்களை இணைத்ததோ அதே மாதிரி தான் பெண்மை எனக்கு திறமையை வெளிய கொண்டு வந்தது இங்க தான், பல நல்ல நண்பர்கள் கிடைச்சதும் இங்க தான்

  தலையங்கம் ரொம்ப சிறப்பு அக்கா. வருங்கால இந்தியாவை இளைய சமுதாயம் எப்படி உருவாக்குறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கணும்

  இத்தனை வருஷம் e-mag வந்தாலும், நான் எல்லாத்தையும் படிச்சிருந்தாலும் இந்த மாசம் mag எனக்கு ரொம்பவே புதுசு. நான் எழுதுற தொடர்கதை ஆரம்பிக்குது... இதில என்ன எல்லாம் கதை தானே அப்படின்னு சாதாரணமா நினைச்சாலும் அழகா ஒரு புத்தக வடிவில் நம்ம கதையை பார்க்கும் போது வர சந்தோசம் சொல்லவே முடியாது.. பெண்மை team @Penmai இளவரசி அக்கா ரொம்ப நன்றி

  முதல் பக்கம் ஸ்ரீஜாவின் தொடர்கதை ன்னு பார்த்ததும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு உள்ளுக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குது...

  இது எல்லாத்துக்கும் கண்டிப்பா என் மக்கள்தான் காரணம். எவ்வளவு ஊக்கம் சில சமயம் உதை என்கிட்ட எப்படி வேலை வாங்கனும்ன்னு அவங்களுக்கு தெரியும் தங்கங்களே நீங்க இல்லாம இது எதுவுமே இல்லை.. நான் பேர் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை கண்டிப்பா இது எல்லாருக்கும் தெரியும். நன்றி சொன்னா அடி பின்னிருவாங்க அதனால சொல்லலை Love u gals :* I owe u a lot


 4. #4
  sriju's Avatar
  sriju is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  srija bharathi
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  coimbatore
  Posts
  6,781

  Re: Penmai eMagazine December 2015

  Quote Originally Posted by gkarti View Post
  Awesome Write Up Kaa..! INSPIRED

  And As usual, Design.. That Bells & Ball-Stars Create a Cheery Mood! Loved it..!

  Added to that, Ekadasi - Miladi Nabi - Xmas,, Whoa! Watta Sync

  Thanks to all the Contributors! Cheers

  Looking Forward!!! Hey Hey New Year la inum Sirappa Kalakkiduvom
  டேய் நானும் அதை தான் நெனச்சேன் செம்ம Sync இல்லை... வருசா வருஷம் இப்படி ஒண்ணு வந்திடும் டா ஆண்டவன் இருக்கான்...


 5. #5
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  Re: Penmai eMagazine December 2015

  Hahhaa... Way to go Silll @sriju


  Athaan Paaren
  Quote Originally Posted by sriju View Post
  டேய் நானும் அதை தான் நெனச்சேன் செம்ம Sync இல்லை... வருசா வருஷம் இப்படி ஒண்ணு வந்திடும் டா ஆண்டவன் இருக்கான்... 6. #6
  Subhasreemurali's Avatar
  Subhasreemurali is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  chennai
  Posts
  7,537
  Blog Entries
  1

  Re: Penmai eMagazine December 2015

  December month penmai emagazine miga arumai..vazthukal penmai team.

  Arise ! awake ! and stop not till the goal is reached

 7. #7
  Uma manoj is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  5,416

  Re: Penmai eMagazine December 2015

  வழக்கம்போல் மின் இதழ் இந்த மாதமும் மிக அருமை...கூடங்குளம்???சிந்திக்கவேண்டிய தலையங்கம்...


 8. #8
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Penmai eMagazine December 2015

  Nice thalayangam ilavarasi, romba arumaya soli irukkenga. As usual kallakals.

  Thanks for tagging me karti dear.


  KOTHAISURESH

 9. #9
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Penmai eMagazine December 2015

  சிந்திக்க வைக்கும் பதிவு இளவரசி.
  மக்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கமும் கடுமையான சட்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

  இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா @gkarti .


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 10. #10
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Penmai eMagazine December 2015

  Perfect Thalayangam ilavarasi sis...Arumaiyana karuthu...Ellarum sinthikka vendiya neram Ithu...youngster should step into politics now...Ini oru vidhi seivum...Congrats to all the contributors and Penmai team

  Thanks for tagging me Karthi..

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter