Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree186Likes

Penmai eMagazine February 2016


Discussions on "Penmai eMagazine February 2016" in "Penmai eMagazine" forum.


 1. #1
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,879
  Blog Entries
  1

  Penmai eMagazine February 2016

  Dear friends,

  Download Penmai eMagazine here, Penmai eMagazine February 2016
  .

  உங்களோடு சில நிமிடங்கள்,
  கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை / கொலை செய்யப்பட்டது பெற்றோர்களிடைய பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏழை மக்களை ஏமாற்றி இப்படி பணம் பறிக்கும் கூட்டம் பறித்துக் கொண்டே இருக்கும்!

  கல்லூரியில் மிக முக்கியமான கட்டிடங்கள் கூட ஒழுங்காக இல்லாமல், எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் இவர்கள் மருத்துவராகி மக்களுக்கு என்ன செய்ய முடியும்? மாணவிகள் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல், பின் அவர்களின் உயிர் பிரிந்த பின் கல்லூரிகளுக்கு இடுக்குப்பிடி போடுவதும் நம் நாட்டில் நடந்துவரும் நாடகங்களில் ஒன்றே. இதுபோன்ற இன்னும் பல பள்ளிகள், கல்லூரிகள், தரமான கட்டிடங்கள் இல்லாமலும், கழிவறைகள் இல்லாமலும், லேப் வசதிகள் இல்லாமலும், ஆசிரியர்கள் இல்லாமலும் என்று பல இல்லாமைகளுடனேயே நடந்து வருகின்றன.

  கும்பகோணப் பள்ளி எரிந்து பல குழந்தைகளை பலி வாங்கிய பின் அரசு சட்டம் இயற்றி நடவடிக்கை எடுத்தது. அதேபோல் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான பிறகு அவற்றிற்கான நடவடிக்கை எடுத்தது என்று எப்போதும் பல இன்னுயிர்களை இழந்து அனுபவித்த பின் தான் இங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அது போன்ற நடவடிக்கைகளும் சில மாதத்திலோ, வருடத்திலோ மறந்து மறுபடியும் உயிர்பலி இழப்புகள் என்று தொடர்கதையாகவே உள்ளது!

  எப்போது அரசாங்கம் கல்வியினை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறதோ அப்போது தான் இது போன்ற மாணவர்களின் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வரும். ஆனால் இங்கு தான் அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டிய கல்விக் கூடத்தை போதைப்பொருள் விற்பவர்களும், போதைப்பொருள்களான மதுபானத்தை அரசாங்கமும் நடத்தி வருகிறது.

  தலை நிமிர்ந்து பதில் சொல்லக்கூடிய அதிகாரிகள் பெற்றோர், மக்கள் மற்றும் பத்திரிகையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி மறைகின்றனர். துணிந்து ஆணை பிறக்கும் அமைச்சர்கள் கைக்கட்டியும் மேலவர்களின் காலில் விழுந்தும் கிடக்கின்றனர். இது நம் நாட்டின் சாபக்கேடு! விடியலை நோக்கி பல பெற்றோர்களும், எதிர்காலத்தை இழந்து பல இளைய தலைமுறையினர்களும் இருக்கின்றனர்!

  போட்டிபோட்டுக் கொண்டு பள்ளி கல்வி புத்தகங்களில் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் சாதனைகள் இடம்பெறவும், அவர்களின் எதிர்கட்சிகளின் சாதனைகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதுமாக இருப்பது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம். நன்மை செய்தால் பெயரும் புகழும் தன்னாலேயே வரும் என்ற நிதர்சனத்தை உணராத அறிவீலிகளாக இருப்பது நம் துரதிர்ஷ்டமே!
  ...உங்கள் தோழி இளவரசி  Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

  Read it and drop your comments here!!!


  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine February 2016-penmai-emagazine-january-2016.jpg  
  Attached Files Attached Files
  Last edited by sumathisrini; 15th Feb 2016 at 11:19 AM.
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

 2. #2
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,135

  Re: Penmai eMagazine February 2016

  அருமையான தலையங்கம் கா.. இந்த பிரச்சனையின் ஆணிவேர் எதுவென்று இன்னும் தெரியலைங்கறது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மாணவிகளின் உடலைக் கூடவா Post Mortemல் forgery பண்ணனும்? இறந்த பின்னும் கூறு போடுவதை என்ன சொல்ல... Grrr CBI விசாரணையில் உண்மை வெளிவந்தால் நல்லது.. இதையும் DSP விஷ்ணுப்ரியா விவகாரம் போல் மூடாமல் இருக்கட்டும்..

  பக்கா Point கா
  //
  அவர்களின் எதிர்கட்சிகளின் சாதனைகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதுமாக இருப்பது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம்.//

  And Coming to Mag, Wow I Just loved that design.. Cute love birds, Antha Colorful Tree um.. Amazing! Came out very Well Kaa.. Thanks for it..

  And Thanks to all the Contributors.. Cheers Makka

  Looking Forward


 3. #3
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Penmai eMagazine February 2016

  லக்ஷ்மியின் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு மட்டுமே சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்ற இழிநிலைக்கு நம் சமூகம் தரம் தாழ்ந்துவிட்டதை நினைக்கும் போது நெஞ்சு குமுறுகிறது அக்கா.
  செழுமைக்கு தாங்கள் தான் காரணம் என்று பெருமை பேசும் அரசியல் தலைவர்கள் மக்களின் சிறுமைக்கு பொறுப்பேற்க மறுத்து தட்டி கழிப்பதை பார்த்து நமக்கு பழகிவிட்டது.

  எப்போதும் போல் இந்த மாதத்தின் தலையங்கமும் விழிப்புணர்வை தூண்டுவதாக இருக்கிறது.

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 4. #4
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Penmai eMagazine February 2016

  அருமையான தலையங்கம் இளவரசி.........பெண்களின் போராட்டத்துக்கு இதான் முடிவு என்று சொல்லாமல் சொல்லியது போல் அரசாங்கமும் நீதி மன்றங்களின் தீர்ப்பும் இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறதே...மனுவை தள்ளுபடி செய்த நீதி மன்றம்..கல்லூரி நிர்வாகம் ஊமையா இருக்கு...ஏழை பெற்றோர்கள்...என்னதான் நடந்தது என்று இன்னும் நமக்கு தெரியவில்லை...ஒரு புறம் துதி பாடும் மந்திரிகள்...பேசாத முதல் அமைச்சர்..யாரிடம் முறையிடுவது???


 5. #5
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Penmai eMagazine February 2016

  arumayana thalayangam illavarasi,vizhipunarvai erpaduthuvadhu pola irukku.thirudana [arthu thirundha vitta thiruttai ozhikka mudiyadhu enpadhai pola inthe madhiri gunam padaithavargal thirundhinal than nam nattai kappatra mudiyum.panam pathum seiyum enbadhu pola needhiyaye vills\ai koduthu vangi vidugirargal. endru marum indha nilai?????


  KOTHAISURESH

 6. #6
  ishitha's Avatar
  ishitha is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2014
  Location
  tirunelveli
  Posts
  2,088

  Re: Penmai eMagazine February 2016

  அருமையான தலையங்கம்

  கற்றது கையளவு

  கல்லாதது உலகளவு தான்

  கல்வி விற்பனை பொருளாக இருக்கும் வரையில்  அன்புடன்...
  இஷிதா


  என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

 7. #7
  salma's Avatar
  salma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  u.s
  Posts
  5,997

  Re: Penmai eMagazine February 2016

  Thanx da Karti.

  Sal

 8. #8
  SinduLakshmi Jagan's Avatar
  SinduLakshmi Jagan is offline Penman of Penmai
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  Sinduja
  Gender
  Female
  Join Date
  Aug 2015
  Location
  Chennai
  Posts
  820

  Re: Penmai eMagazine February 2016

  Hey hey adutha magazine out...

  Super writeing ka... elarudaiya manadhilum irukira kelvingal avai..!! Edhu elam epo marumo theriyala!!

  Wowieee... Enoda review um vandhuruku.. adhuku special thanks... Karti sonna mdiri cover pic arumai... Adhoda ella page layum BG color n images attagasama irunduchu... Congrats to other contributors too...

  TGT karti ponne!

  உங்கள்அன்பிற்குரிய,
  சிந்துலட்சுமி ஜெகன்


  My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
  My stories

 9. #9
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Penmai eMagazine February 2016

  வழக்கம்போல அருமையான நெத்தியடி தலையங்கம்... சூப்பர் இளவரசி க்கா....
  Tag செய்ததற்கும் நன்றி கார்த்தி...

  நம் நாட்டில் கல்வி நிலையங்களை விட, டாஸ்மாக் கடைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சொல்லி மாளாது...! பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இடிந்து போன கட்டிடங்களோடு சரியான மின்வசதி, இன்னபிற வசதிகள் இன்றி இருட்டில் தவிக்க... டாஸ்மாக் கடைகளோ பட்டொளி வீசி பாரினில் ஜொலிக்கிறது...! இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது...! அதுசரி, அறிவை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் என்றைக்கு தனியார் வசம் வந்ததோ, அன்றே அதன் பெருமையை இழந்து மண்ணாகி விட்டது. இன்று அது படிப்பின் அருமையும் பெருமையும் தெரியாத அமைச்சர்களின் கையிலும், மதுபானஆலை உரிமையாளர்களின் கையில் தான் உள்ளது... அதனால் தான் அந்த தள்ளாட்டம்...!

  தருமபுரியில் மாணவிகள் மூன்று பேர் பேருந்தில் வைத்து கொளுத்தப்பட்டார்களே ... கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பல குழந்தைகள் மாண்டார்களே...! அதெல்லாம் ஒரு கனவை போல நாம் மறந்து விடவில்லையா...!! அதை போல இந்த சித்த மருத்துவ கல்லூரி மாணவிகளையும் மறந்து விடுவோம்... நமக்கு தேவை நீதியா என்ன...?? தேர்தலின் போது, அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் ஐந்நூறோ ஆயிரமோ தானே..! அது கிடைக்கும் வரையில் நம் மக்களுக்கு பிடித்த அம்னீஷியா நோய் குணமே ஆகாது...!

  ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கட்சியிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு, நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க முடியாமல் வாய்மூடி இருப்பதே மக்களின் வாடிக்கையாகி போன பின்பு, கல்வி நிறுவங்களின் தரம் எப்படி இருந்தால் தான் என்ன...? எத்தனை மாணவிகள்/மாணவர்கள் இறந்தால் தான் என்ன..?

  இந்த மாத eMagazineம் கலக்கல்... எல்லா பகுதிகளுமே நன்றாக இருக்கிறது....


 10. #10
  Durgaramesh's Avatar
  Durgaramesh is offline Minister's of Penmai
  Real Name
  Durga Devi
  Gender
  Female
  Join Date
  Sep 2015
  Location
  Puducherry
  Posts
  2,974

  Re: Penmai eMagazine February 2016

  Thank u soooooo much to Penmai for selecting my daughter's Drawing. I am very happy. All things are useful.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter