Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree189Likes

Penmai eMagazine August 2015

Discussions on "Penmai eMagazine August 2015" in "Penmai eMagazine" forum.

  1. #41
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by chan View Post
    தோழி இளவரசி @Penmai அவர்களே

    இந்த மாத இதழ் எப்பொதும் போல் நிறைவாக வந்து இருக்கிறது.

    என் மனதில் பட்டது

    முடிந்தால் இன்னும் சில pages அதிகரித்து, health realted article ஆர்வமாக படிப்போர் அதிகரித்து உள்ளதால் health realted article எண்ணிக்கை அதிகப்படுத்தலாம் , தளத்தில் பல forum உள்ளது,சில forum இல் உள்ள article நாம் மாத இதழில் உபயோக படுத்துகிறோம்.

    இந்த standard format மாற்றம் செய்யாமல்,பக்கங்கள் அதிகரித்தால் ,மற்ற forum இல் இருக்கும் நல்ல article சுழற்சி முறையில் ஒவொவ்வொரு மாதம் தேர்வு செய்யலாம்.

    நாம் தளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை பார்க்கும் போது,இதழை டவுன்லோட் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இன்னும் நம் உறுப்பினர் இடம் சரியாக சென்று அடையவில்லை என்று நினைக்கிறன்.

    பல உறுப்பினர் இடம் சென்று அடைய,நாம் இதழின் லிங்க் ஸ்டோரீஸ் நோவேல் forum இல் Latest Novel Board or தனியாக sticky thread ஆக Stories & Novels, இல் போடலாம்

    நன்றி
    I fully agree with Lakshmi @chan

    நானும் ரொம்ப நாட்களாக memberஆ இருந்தும் magazine பக்கமே போனதில்லை, இப்பவும் பல threads எனக்கு புதுசுதான். ஆனா முக்கியமான articles எல்லாம் magazinesல வருவதால் அதை Latest Novel Boardல் போட்டால் எல்லாருக்கும் தெரிய வரும்.

    Sponsored Links
    Penmai, sumathisrini, chan and 1 others like this.
    - Chitra

  2. #42
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழி லக்ஷ்மி. பெண்மை மின் இதழிற்கு பெரும்பாலும் இங்கு இருக்கும் உறுபினர்களின் சொந்த கருத்துகள் அடங்கிய பதிவுகளே தேர்ந்தெடுக்கப்படும், ஒரு சில தலைப்புகள் தவிர. பெண்மை உறுப்பினர்களின் own content இருந்தால் கண்டிப்பாக எடுத்துக்கொள்வோம் தோழி.

    பெண்மை இதழின் அணைத்து இதழ்களின் தொகுப்புகள் அடங்கிய பதிவு stories and novels பிரிவிலும் பதியப்படும் தோழி, உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி.

    sumathisrini, chan and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #43
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by kasri66 View Post
    I fully agree with Lakshmi @chan

    நானும் ரொம்ப நாட்களாக memberஆ இருந்தும் magazine பக்கமே போனதில்லை, இப்பவும் பல threads எனக்கு புதுசுதான். ஆனா முக்கியமான articles எல்லாம் magazinesல வருவதால் அதை Latest Novel Boardல் போட்டால் எல்லாருக்கும் தெரிய வரும்.
    உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி சித்ரா.

    பெண்மை இதழின் அனைத்து இதழ்களின் தொகுப்புகள் அடங்கிய பதிவு stories and novels பிரிவில் Penmai eMagazine All Issues!!! என்ற தலைப்பில் உள்ளது தோழி.

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #44
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    chennai
    Posts
    4

    Re: Penmai eMagazine August 2015

    well said madam.

    Quote Originally Posted by Penmai View Post

    Yes @RathideviDeva, peoples compassion, love and respect is getting lowered in both familes and societies. This is a sad truth, but it is not the end. Teaching our moral values to our kids is needed. Then only there will be meaningful in our life and more than all we have self-satisfaction.

    இப்போது கல்வி முறையில் நிறைய மாற்றம். நீங்கள் எந்த கல்விமுறையை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை தோழி.

    சற்றே பெரிய பதிவு, விளக்கங்களுக்காக.

    சமீபத்தில் சமச்சீர்கல்வி 6ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் கடைசிவரை நம்பிக்கை என்ற தலைப்பில், அரவிந்த் குப்தா எழுதிய Ten Little Fingers என்ற புத்தகத்தின் ஒரு சிறு பகுதி பாடமாக கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சடகோ என்ற ஜப்பானிய சிறுமி ஹிரோஷிமா& நாகசாகியில் நடந்த அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகு அதன் தாக்கத்தில் அவளுக்கு புற்றுநோய் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாள். அவளைக் காண வந்த தோழி, ஜப்பானிய நம்பிக்கை படி, காகிதத்தில் 1000கொக்கு செய் (origami) உனது நோய் குணமாகும், இது நம் நாட்டு நம்பிக்கை என்று அவளுக்கு ஊக்கம் கொடுத்தாள் (கொக்கு ஜப்பானியர்கள் வணங்கும் பறவை). சடகோவிற்கு நம்பிக்கை பிறந்தது, காகிதத்தில் கொக்கு செய்ய முயன்றாள், ஆனால் நோயின் தாக்கம் அதிகமாக அதிகமாக அவளால் 1000கொக்குகள் செய்ய முடியவில்லை, முக்கால்வாசி அளவே செய்திருந்தாள்.ஆனால் கொக்கு செய்யும் நேரத்தில் அவள் கவலையை மறந்திருந்தாள். சில நாட்களில் இறந்தும் விட்டாள். ஆனால் அவளுடைய தோழிகள் சேர்ந்து 1000எண்ணிக்கையை முடித்து அவள் விருப்பத்தை நிறைவு செய்தனர். அவளுக்காக குழந்தைகள் நிதி திரட்டி ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் "குழந்தைகள் அமைதி நினைவாலயம்" ஒன்று கட்டி சடகோவின் சிலை வைத்தனர். அங்கு தற்போதும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வந்து காகிதக் கொக்கு செய்து சமர்ப்பிகின்றனர்.

    இந்த பாடம் கற்பிக்கும் நல்ல விடயங்கள் நிறைய உள்ளது.
    • அணுகுண்டினால் மனிதகுலத்திற்கு ஏற்படும் தாக்கங்கள். அவை இரண்டு நாட்டோடு முடியவில்லை அங்கிருக்கும் ஒன்றும் அறியாச் சிறு பிள்ளைகளுக்கும் அதன் விளைவுகளின் தாக்கங்கள் பல ஆண்டுகள் இருக்கிறது.
    • தோழியின் தோழமை மற்றும் நம்பிக்கை வளர்க்கும் திறன்.
    • சடகோவின் விடாமுயற்சி இறுதிவரை நம்பிக்கையுடன் போராடியது (வெற்றி பெற மட்டுமே நாம் போராடக் கூடாது, தோல்வி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடைசி வரை முயற்சித்தல் (போராடுதல்) என்பதே இங்கு பெருமை, வெற்றி பெற்றதல்ல).
    • அவளின் இறப்பிற்கு பிறகும் சடகோவின் ஆத்ம திருப்திக்காக குழந்தைகள்1000 கொக்குகள் செய்தது.
    • சிறு பிள்ளைகள் அதோடு நின்றுவிடாமல், அமைதியை உலகிற்கு உணர்த்த குழந்தைகள் அமைதி நினைவாலயம் ஒன்றை உருவாகியது.

    இந்தப் பாடம் நம் வாழ்விற்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. ஆனால் இதனை தெளிவாக உள்வாங்கி கற்பிக்கும் முறை மிகவும் முக்கியம். மேலே சொன்ன வாழ்வியல் பாடங்களை கற்பிக்காமல், சடகோவிற்கு கட்டப்பட்ட நினைவாலயம் பெயர் என்ன? எங்கு கட்டப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடி மட்டும் நம் கல்வி முறை இருந்தால் எப்போதும் வாழ்வியல் பாடத்தை கற்க முடியாது. கல்விக்கூடம் கற்றுகொடுக்காத வாழ்க்கை பாடத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்

    நம் வாழ்க்கை இயந்திரமானது தான் தோழி, ஆனால் இந்த மனித இயந்திரத்திற்கென்று சில கோட்பாடுகளுடனே தான் நாம் பிறந்திருக்கின்றோம். அன்பு, பாசம், ஒழுக்கம், குடும்பம், மகிழ்ச்சி, துக்கம், அழுகை, மரணம் என்று அவை பல. அனைத்தையும் ஓடும்போதே நாம் அனுபவித்துக் கொள்ள வேண்டும். காலம் சென்று நாம் ஏங்கக்கூடாது. வாழ்ந்து முடிக்கும்போது பொன்,பொருளை விட ஆத்ம திருப்தி வேண்டும் தானே.

    Penmai and gkarti like this.

  5. #45
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by Penmai View Post
    Download Penmai eMagazine here, Penmai eMagazine August 2015.

    உங்களோடு சில நிமிடங்கள்,

    உலகம் நன்மை மற்றும் தீமையின் கலவையே! இங்கு நல்லவர்களும் உள்ளனர், தீயவர்களும் உள்ளனர் என்பதற்குச் சான்றாக சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள்!

    மடிந்துபோன மனிதாபிமானம்! என்ற தலைப்பில் சில மாதங்களுக்குமுன் நாளிதழ்களில் வந்த செய்தி, கேரள மாநிலம் கோட்டயம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி விழுந்தவிட்டார், அவரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக சில இளைஞர்கள் அவர் மீது ரயில் வண்டி ஏறுவதை கைபேசியில் போட்டோவாகவும் வீடியோவாகவும் படம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை!! என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் வந்த செய்தி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண் படிப்பில் சேர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். இதனை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த சில நல்ல உள்ளங்கள் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் அவரின் நிலைமையை அறிந்து, கோவைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களின் நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் உதவியோடு சரியான நேரத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

    தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை படம் பிடித்தவர்களும் படித்தவர்கள்தான். கோவை அண்ணா கலையரங்கிற்கு செல்வதற்கு பதில் சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு வழிமாறி வந்த பெண்ணும் படித்தவர் தான். வழிமாறி வந்த பெண்ணிற்கு வலிய சென்று உதவி செய்தவர்களும் படித்தவர்கள்தான். வழிமாறி வந்த சுவாதிக்கு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் வழிகாட்டி உள்ளார், ஆனால் இன்னும் எத்தனையோ சுவாதிக்கள் வழி தெரியாமல், திசைமாறி சென்றுகொண்டு இருக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல்வாதிகளின் தூண்டுதளினால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்குபெற்று சிறை செல்வது. தன் பிள்ளைகள் மதுபானம் மற்றும் புகையிலை தயாரிக்கும் மற்றும் வாணிகம் செய்வார்கள். ஊரான் பிள்ளைகள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்று தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போரட்டத்தில் மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது நவநாகரீக அரசியல். இவர்களின் சூழ்சிகளை புரியாதவர்களாகவே கல்வி கற்ற மாணவ சமுதாயம் போராடுகிறது.

    நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.
    ...உங்கள் தோழி இளவரசி

    Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

    Read it and drop your comments here!!!

    அருமையான தலையங்கம் இளவரசி க்கா....

    நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.

    கற்றப்படி யாரும் நிற்கவில்லை... அதனால் தான் ஒருவரின் மீது ரயில்வண்டி ஏறுவதை கூட படமாக்கி ரசிக்கின்றனர்.... அதை பார்த்து பதறாத நெஞ்சம்... படித்து என்ன பயன்...??

    இன்றைய கல்விமுறை என்ன...?? எதைக் கற்று தருகிறது...?? "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.." கதை தான்...!!

    ஏதோ ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு ராஜா ஆண்டார்... அவர் அதை செய்தார்... இதை செய்தார்னு வரலாறிலும்.... கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ்ல் ஏதோ ஈக்குவேஷனும், இப்படி ஒவ்வொரு சப்ஜெக்டிலும் என்னவோ படிக்கிறோம்... பிள்ளைகள் படிக்கிறாங்க என்று சொல்வதை விட..., மக்கப் பண்ணுகிறார்கள் என்பது தான் நிஜம்..!! பிராக்டிகல் லைப்கு இந்த கல்வி என்ன கற்று தருகிறது...??

    அதேபோல தான் அரசியலும்...!! அவர்கள் வாழ... மாணவர்களை அழிக்கிறார்கள்...!! மதுபான ஆலை வைத்து இருப்பவனும்..., சிகரெட் விற்கும் மொத்த ஏஜென்சி வைத்து இருப்பவனும்... அதை இரண்டையும் எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்... நாமும்..., ஆகா நமக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு சொல்லி.., அடுத்த தேர்தலில் ஓட்டை போடுவோம்.. இதில் நடுவே, மாணவர்களையும் போராட்டத்தில் ஈடுப்படுத்தி, அவர்களின் வளமான வருங்கால வாழ்க்கையை அழிப்பார்கள்..!

    ஒன்றும் சொல்வதற்கில்லை..!! சும்மா நச் பதிவு உங்களுடையது....!!

    Penmai, kasri66 and gkarti like this.

  6. #46
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by anadhi kalidas View Post
    well said madam.
    Welcome @anadhi kalidas. Thank for your comments too.

    gkarti likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #47
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by thenuraj View Post
    அருமையான தலையங்கம் இளவரசி க்கா....

    நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.

    கற்றப்படி யாரும் நிற்கவில்லை... அதனால் தான் ஒருவரின் மீது ரயில்வண்டி ஏறுவதை கூட படமாக்கி ரசிக்கின்றனர்.... அதை பார்த்து பதறாத நெஞ்சம்... படித்து என்ன பயன்...??

    இன்றைய கல்விமுறை என்ன...?? எதைக் கற்று தருகிறது...?? "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.." கதை தான்...!!

    ஏதோ ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு ராஜா ஆண்டார்... அவர் அதை செய்தார்... இதை செய்தார்னு வரலாறிலும்.... கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ்ல் ஏதோ ஈக்குவேஷனும், இப்படி ஒவ்வொரு சப்ஜெக்டிலும் என்னவோ படிக்கிறோம்... பிள்ளைகள் படிக்கிறாங்க என்று சொல்வதை விட..., மக்கப் பண்ணுகிறார்கள் என்பது தான் நிஜம்..!! பிராக்டிகல் லைப்கு இந்த கல்வி என்ன கற்று தருகிறது...??

    அதேபோல தான் அரசியலும்...!! அவர்கள் வாழ... மாணவர்களை அழிக்கிறார்கள்...!! மதுபான ஆலை வைத்து இருப்பவனும்..., சிகரெட் விற்கும் மொத்த ஏஜென்சி வைத்து இருப்பவனும்... அதை இரண்டையும் எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள்... நாமும்..., ஆகா நமக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு சொல்லி.., அடுத்த தேர்தலில் ஓட்டை போடுவோம்.. இதில் நடுவே, மாணவர்களையும் போராட்டத்தில் ஈடுப்படுத்தி, அவர்களின் வளமான வருங்கால வாழ்க்கையை அழிப்பார்கள்..!

    ஒன்றும் சொல்வதற்கில்லை..!! சும்மா நச் பதிவு உங்களுடையது....!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி தேன்மொழி.

    சிலவற்றை சரியாக கற்பிக்க மறந்துவிட்டது என்றே சொல்லலாம். கஜினி முஹமதின் விடாமுயற்சியை குறிப்பிட 17 முறை போர் தொடுத்தான் 18வது முறை வென்றான் என்று வெளிநாட்டவரை தான் புகழ்ந்து நம் பாடநூலில் தந்தனர். ஆனால் 17முறை அவரை தொல்வியுற செய்த நம் இந்திய மன்னர்களின் வீரத்தை நம்மில் விதைக்க மறந்துவிட்டனர். அவர் இங்கிருக்கும் விலைமதிப்பில்லா பொருட்களை கொள்ளையடிக்க தான் வந்தார் என்பதையும் அழுத்தமாக சொல்ல மறந்துவிட்டனர்.

    செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் இல்லை (Practical class ) இப்போது கொஞ்சம் காலம் மாறிவிட்டது என்று சொல்லலாம் KG படிக்கும் குழந்தைகளுக்கு project work கொடுக்கின்றனர். அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார் என்று
    நூறு முறையாவது சிறுவயதில் கற்றோம் (மனனம் என்றும் சொல்லலாம்), மனனம் செய்யவைத்த கல்வியால் ஒரு மரசெடி கூட நடவைத்திருக்காது. ஆனால் உணர்ந்து கற்ற கல்வியால் செய்ய வைத்திருக்க முடியும். அவரின் வரலாறும் தெரிந்திருக்கும் நாம் செய்ய வேண்டிய கடமையும் நமக்கு புரிந்திருக்கும் (இதில் உண்மை வெறும் என்று சமீபத்தில்தான் படித்தேன், அவர் சால மரம் என்ற ஒரு மர வகையை நடச்செய்தார், சால மரத்தின் அடியில் தான் புத்தர் பிறந்தார் மற்றும் இறந்தார், இதன் அடிப்படையில் தான் அவர் சால மரம் நடச்செய்தார்).

    இனி வரும் காலமாவது மாறட்டும்! அவர் இதை செய்தார் அதை செய்தார் என்று மனனம் செய்விக்கும் கல்வியை விட நம்மை செய்யத்தூண்டும் கல்வியே நமக்கு வேண்டும்.

    kasri66, thenuraj and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter