Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்


Discussions on "Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்" in "Post Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்

    தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்
    தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.

    குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும்.

    தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது.

    தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.

    தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

    தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேறுக்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்க உதவுகிறது.

    குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும், தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 31st Jan 2015 at 10:37 AM.
    sumathisrini likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்

    சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.

    இவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை.

    இப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் பால் கொடுக்கலாம்.

    படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.


  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Benefits of Breastfeeding - தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்

    தாய்ப்பால் கொடுப்பது தப்பில்லை

    குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை பலர் தவிர்க்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பதால், அழகு கெட்டு விடும் என்ற மாயை எல்லாம் நகர்ப்புற பெண்களிடமிருந்து விடுபடவில்லை.

    தாய்ப்பால் தருவதால் பாதிப்பு ஏற்படுமா?.

    ஈரோடு சி.கே. மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் வானதி பாலச்சந்திரன் தரும் டிப்ஸ்:

    குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறவி. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால் நிறைய சாப்பிட சொல்கிறார்கள். ஆனால் இது தவறு. சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவைப்படுகிறது. குழந்தை வயிற்றில் வளரும்போது 400 கலோரிகள் அதிகம் இருந்தாலே போதுமானது.

    நிறைய சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. புரோட்டின், இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்த உணவு வகைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மிக முக்கியமானது நடைபயிற்சி. குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரை தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சுக பிரசவம் அமைய வாய்ப்புள்ளது.

    குழந்தை பிறந்த பிறகு ஓராண்டிற்காவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகும் தாய்மார்கள் இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் குழந்தைக்கும் நல்லது. குழந்தைக்கு சுகாதாரம் என்பது மிக முக்கியம். ஓராண்டிற்கு பிறகு குழந்தைக்கு அரிசி கஞ்சி, ராகி கஞ்சி கொடுக்கலாம்.

    பின்னர் படிப்படியாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளையே காரம் குறைவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டு ஓராண்டு வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது. மாட்டுப்பால் கொடுப்பதன் மூலமாக ரத்தசோகை ஏற்பட்டு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காமல் பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும். குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை என்றால் மருத்துவரின் உரிய ஆலோசனை பெற்று பால்பவுடர் கலக்கி கொடுக்கலாம்.

    Last edited by chan; 1st Feb 2015 at 12:53 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter