Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Reason for breast feeding - குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொட&#


Discussions on "Reason for breast feeding - குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொட&#" in "Post Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Reason for breast feeding - குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொட&#

    குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பத்ற்கான காரணங்கள்

    குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பத்ற்கு
    நான்கு முதன்மைக் காரணங்களுண்டு.

    குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுறுசுறுப்பாக இருக்கும்.
    இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.
    சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்குத் தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டத்தட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.

    தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.


    சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம்.

    இவ்வகை அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை.

    இப்படிப்பட்டவர் குழந்தைப் பிறந்த (அறுவை சிகிச்சைக்குப்பின்) 4 மணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் பால் கொடுக்கலாம்.

    படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 31st Jan 2015 at 10:39 AM.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்Ī

    பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி

    பொது இடங்களில் பாலூட்டுவது என்பது முரண்பாடான ஒன்று. சில நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக யாரேனும் வந்து இங்கு அமரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி என விளக்கம் தர நேரிடும்.

    நீங்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் போது மறைவான இடம் எது என்று தேடி பாலூட்ட வேண்டும். பெரும்பாலான தாய்மார்களுக்கு வெளியிடங்களில் எப்படி பாலூட்ட முடியும் என்ற கலக்கத்திலேயே வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். சிலர் குழந்தைகளுக்காக பாலை பாட்டிலில் அடைத்து கொண்டு செல்கின்றனர்.

    நீங்கள் வெளியிடங்களுக்கு வாகனங்களில் சென்றால் காரில் இருந்தே பாலூட்டலாம். ஏதேனும் வேலைக்காக சென்றிருப்பின் அங்கு உள்ள நிர்வாகிகளிடம் ஏதேனும் தனி அறை இருப்பின் அங்கு சென்று குழந்தைக்கு பாலூட்டலாம். பெரும்பாலான டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கடைகளில் ந்ர்சிங் அறை என்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு சென்று பாலூட்டி வரலாம். பொது இடங்களில் அமர்ந்து பாலூட்டும் போது துணி விலகி இருக்க நேரலாம் அல்லது உங்கள் ஆடை குழந்தையையும் உங்களையும் சரியாக கவராமல் இருக்கலாம்.

    தீடீரென பால் அதிகமாக வெளியேறும். அதனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது ப்ரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து பாட்டிலில் அடைத்து கொண்டு செல்லலாம். ப்ரஸ்ட் பேடுகளை எடுத்து செல்ல வேண்டும்.

    ஏனெனில் பால் அதிகம் சுரக்கும் நேரத்தில் ப்ரஸ்ட் பேடுகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் கூச்சத்தை தவிர்க்கலாம்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter