Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Foods to increase breastmilk supply - தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லĬ


Discussions on "Foods to increase breastmilk supply - தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லĬ" in "Post Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Foods to increase breastmilk supply - தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லĬ

    தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லாம் சாப்பிடலாம்

    குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்பால். தாய்பால் பருகும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க செய்வதும் தாய்பால் தான். நம் செல்ல குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால், சில நேரங்களில் போதுமான அளவு இருக்காது. அவ்வாறு தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மனஅழுத்தம், தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை முக்கியமானவை.

    ஒரு சில உணவுகளை உண்பதன் மூலம் தாய்பால் அதிகமாகச் சுரக்கும் அவை என்னென்ன உணவுகள் என பார்க்கலாம்.

    துளசி : துளசியை அனைத்து நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். துளசி ஒரு சிறந்த மூலிகைப் செடி. அதை அனைத்து மருந்துகளிலும் பயன்படுத்தலாம். அத்தகைய துளசியை சாப்பிட்டால் தாய்ப்பாலும் அதிகரிக்கும். மேலும் துளசியில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. வேண்டுமென்றால் இத்தகைய துளசியை சூப் சாப்பிடும் போது சிறிது துளசி இலையை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் அதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    வெந்தயம் : வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டுவிடும். இதனை அப்படியே சாப்பிடுவதை விட, சமைக்கும் போது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

    காய்கள் : காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும். ஏனெனில் அதில் வைட்டமின், கனிமச்சத்து போன்றவை உள்ளது. அதுவும் இதனை சமைத்து சாப்பிடும் போது, குறைந்த அளவு காரத்தை சேர்த்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது எளிதில் செரிமானமடையாமல் இருக்கும்.

    கொழுப்பு பொருட்கள் : கொழுப்பு நிறைந்துள்ள பொருட்களான நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், தாய்ப்பால் அதிகரிக்கும். இவை உணவில் சேர்த்தால் உடலுக்கு நிறைய எனர்ஜிகள் கிடைக்கும். மேலும் அந்த பொருட்களை தோசை, சப்பாத்தி மற்றும் பல உணவுகளில் சிறிது சேர்த்து உண்ணலாம்.

    பூண்டு : நமது முன்னோர்கள் சொல்வது போல் பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிமாக சுரக்கும். மேலும் அதனை அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள், தினமும் உண்ணும் உணவுகளில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    நட்ஸ் : பாதாம் மற்றும் முந்திரி போன்றவைகளும் தாப்பாலை அதிகரிப்பவை. ஏனென்றால் அதில் புரோட்டீன், வைட்டமின் மற்றம் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. ஆகவே அதனை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.

    நார்ச்சத்துள்ள உணவுகள் :
    கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். அதிலும் பசலைக்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதற்கு தான் மருத்துவர்கள் தினமும் ஒரு காய்களையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தாயிடம் சொல்கின்றனர்.

    எனவே இந்த உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், தாய்ப்பால் எளிதில் அதிகரிக்கும். மேலும் அந்த பாலைக் குடிக்கும் குழந்தைக்கு எந்த ஒரு நோயும் வராமல் நன்கு ஆரோக்கியத்தோடு இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லாம் சா

    குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகளை உணவின் மூலம் தவிர்ப்பது எப்படி

    குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகளை உணவின் மூலம் தவிர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதன் மூலம் ஓரளவு ரெஸ்ட் கிடைக்கும். குழந்தைக்கு ஏற்படும் கக்குதல், வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சிறு மாற்றங்களை செய்யலாம். முற்றிலுமாக பத்திய உணவுகள் வேண்டியதில்லை. தாயின் உடல் இழந்த சத்துகளை திரும்பப் பெற வேண்டியிருப்பதால் புரத உணவுகள் அவசியம்.

    சோர்வை நீக்கவும், அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கவும் தினம் ஏதேனும் ஒரு பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான கால்சியம், தாது உப்புகள் ஆகியவை தாய்ப்பாலில் கிடைப்பதால் இந்தக் காலகட்டத்தில் தாயின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தானிய உணவு, முளைக்கட்டிய பயறு, காய்கறி மற்றும் கீரைகள் உணவில் சேர்க்கவும்.

    காபி, டீக்கு பதிலாக பால் அருந்தலாம். பாலுடன் இரண்டு பிரெட் துண்டுகள் சாப்பிடுவதன் மூலம் பால் ஊறுவது அதிகரிக்கும். மட்டன், மீன், முட்டை ஆகியவற்றில் விருப்பம் இருந்தால், எண்ணெயில் பொரிக்காமல் குழம்பாக எடுத்துக்கொள்ளலாம்.

    மாலை நேர சிற்றுண்டிக்கு காய்கறி சூப், ஃபுரூட் சாலட் நல்லது. பால், பால் சார்ந்த பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும். மலச்சிக்கல்தான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இதற்கு நார்ச்சத்து உணவுகள்தான் தீர்வு.

    உடலால் ஏற்படும் சோர்வை உணவின் மூலம்தான் சரிக்கட்ட முடியும். ஒரு மாதம் வரை உடல் எடை கூடுமே என கவலைப்பட வேண்டியதில்லை.
    தாய்ப்பால் சுரப்புக்கான ஹார்மோனை தூண்டும் வேலையை பூண்டு செய்கிறது. முடிந்த அளவு உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது.


  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: தாய் பால் அதிகம் சுரக்க என்னவெல்லாம் சா

    பாலூட்டும் தாய்மார்கள் ஏதேனும் மருந்துகள் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா

    பாலூட்டும் தாய்மார்கள் ஏதேனும் மருந்துகள் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால், தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டலாமா, நிறுத்த வேண்டுமா என்பதைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்:

    தாய்ப்பாலில் கலக்கக்கூடிய மருந்தின் அளவு
    மருந்தின் வீரியத்தை குழந்தை பெறக்கூடிய அளவு
    மருந்து குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு
    குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பாலின் அளவு, குழந்தையின் வயது மற்றும் பிற திட, திரவ உணவுகளைக் குழந்தை உட்கொள்ளும் அளவு


    எப்நெப்ரின், ஹிப்பாரின், இன்சுலின் போன்ற சில மருந்துகள் தாயிடமிருந்து தாய்ப்பாலில் கலப்பதில்லை. எனவே, இம்மருந்துகள் உட்கொள்ள பாதுகாப்பானவை. சில மருந்துகள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மையுள்ளவை, இருப்பினும் இந்தகுறைந்த அளவு கூட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் தாய்பாலில் கலக்கப்படும். ஆனால் மிகக்குறைந்த அளவே குழந்தையின் உடலில் சென்றடைவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

    உதாரணமாக, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஜெண்டமைசின், கானாமைசின், ஸ்டெப்ரோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின்.
    மருத்துவரால பரிந்துரைக்கப்படாத சாதாரண இருமல் மருந்துகள், ஜீரணக் கோளாறுகளுக்கான மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்வதால் குழந்தைக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து, பெரிய அளவில் ஆஸ்ப்பிரின், சாலிசைலேட் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

    தோலின் மேற்புறத்தில் தடவப்படும் மருந்துகள், கண்களில் போடப்படும் மருந்துகள், மூக்கால் உறிஞ்சப்படும் மருந்துகள் ஆகியன பாதுகாப்பான மருந்துகளே. உயர் இரத்த அழுத்த்த்திற்கான மாத்திரைகள், பீட்டா தடுப்பான்களும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளே. ஆனால், கோக்குமாடின் போன்ற மருந்துகள் மருத்துவரின் கண்காணிப்போடு உட்கொள்ளவேண்டும். காஃபின், தியோபில்லின் போன்ற மருந்துகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் குழந்தைகளுக்கு எளிதில் எரிச்சலூட்டக் கூடியவை.

    குழந்தையின் இதயத்துடிப்பு, மூச்சு இரைப்பு ஆகியன அதிகமாகக் கூடும். பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடிய பல மருந்துகள் குழந்தைக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்காதவை என்ற போதிலும், மருத்துவரின் ஆலோசனையும், பரிந்துரையும் இன்றி மருந்து மாத்திரைகளையோ, பச்சிலை மருந்துகளையோ உட்கொள்ளாமல் இருப்பதே நல்லதாகும். மருந்துகளின் மேற்குறிப்பு அட்டையை முழுமையாகப் படித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter