சிசேரியனும் தாய்பால் பற்றாக்குறையும் - உண்மை என்ன?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்காகவே இந்த பதிவு!

பொதுவாகவே சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது : இது முற்றிலும் தவறான கருத்து.

இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். நான் அப்படிலாம் இல்லைங்க... மயக்க மருந்து கொடுத்தாலும் குழந்தையை பார்க்க விழித்தே இருந்தேன் அறுவை சிகிச்சையின் போது கூட சரி என் மொக்கை வேண்டாம் மேட்டருக்கு வருவோம்... அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை.. இங்கு தான் துவங்குகிறது பால் பஞ்சம்.

சீம்பால் என்ப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்... குழந்தை வெளியே வந்ததும் வரும் முதல் பால் குழந்தை ஆயுட்கால நோய் எதிர்ப்பு கேரண்டி மாதிரி... தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட இருக்கும் பெண் எப்படியாவது அந்த குழந்தை பால் குடிக்க வழி செய்ய வேண்டும்... பிறகு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் நன்கு பால் கிடைக்கும்... அதை விடுத்து பால் குரைவாக தான் இருக்கிறது, குழந்தைக்கு குடிக்கத் தெரியவில்லை என்றெல்லாம் சாக்கு சொல்லி புட்டி பால் கொடுத்து குழந்தையின் எதிர்கால உடல்நிலை குறைகளுக்கு வித்திடக்கூடாது! உயிரையே கொடுத்து செத்து பிழைத்து நம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நாம் பால் கொடுப்பதற்கு யோசிக்கலாமா?

தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்! உங்களுக்கு கற்றுப் பழகாமல் எதையும் எடுத்தவுடன் திறமையாக செய்யமுடியுமா? அப்படித்தான் பிறந்த குழந்தையும்... அப்போது பிறந்த குழந்தைக்கு பால் குடித்து குடித்துப் பழகினால் தான் சரியாக குடிக்கத் தெரியும்... நீங்களும் பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகும்.

ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துகள் மற்றும் விட்டமின்கள் மாறிக் கொண்டே இருக்கும்... அதனால் 6மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே கொடுக்கலாம்... குழந்தைக்கு பிடித்த எளிதில் செரிக்கக் கூடிய தூய்மையான உணவு இது! 7வது மாதத்தில் இருந்து மற்ற உணவுகளை சிறிது சிறிதாக துவங்கி பழக்கப் படுத்தலாம்! குறைந்தபட்சம் 1வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இரு விதமான சிக்கல் ஏற்படும்; எடை அதிகரித்தல் அல்லது குறைதல்... இரண்டுமே பால் கொடுப்பது முடிந்ததும் சரியாகிவிடும். பால் கொடுப்பது தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது, எலும்பு தேய்வது போன்றவற்றைத் தவிர்க்கும்.

சிசேரியன் அதனால் பால் போதலை என்று மட்டும் சொல்லாதீர்கள்! போன பதிவில் கவிதா அவர்கள் கூறிய உணவு மற்றும் நான் கூறும் இந்த உணவுகளை சேர்த்து பாருங்கள்...

1. பூண்டு
2. கீரைகள்
3. கத்திரிக்காய்
( கவிதா அவர்களின் கருத்தினை ஏற்று கத்தரிக்காய் வேண்டாம் அவர் கூறுவது சரிதான்)
4. கேரட்
5. டபுள் பீன்ஸ்
6. ஓட்ஸ்( உடனடிப் பலனுக்கு)
7. பிரட்/ரஸ்க் (உடனடிப் பலனுக்கு)
8. தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்
9. பால் அதிகம் குடிக்க வேண்டும்
10.சுறா மீன் மற்றும் அனைத்து மீன் வகைகள்
11.தயிர்

இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்.
தயவு செய்து புட்டிபால் கொடுக்காதீர்கள்.


Similar Threads: