Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 2 Post By chan
 • 1 Post By chan

Post Partum Blues after delivery-பிரசவத்துக்கு பின் வரும் 'போஸ்ட்பா&#


Discussions on "Post Partum Blues after delivery-பிரசவத்துக்கு பின் வரும் 'போஸ்ட்பா&#" in "Post Pregnancy" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Post Partum Blues after delivery-பிரசவத்துக்கு பின் வரும் 'போஸ்ட்பா&#

  பிரசவத்துக்கு பின் வரும் 'சைக்கோஸிஸ் பிரளயம்...


  .


  மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள். பிறகு, தானாகவே சரியாகிவிட்டாள். தற்போது பிரசவ நாட்கள் நெருங்கும் இந்த தருணத்தில், 'இந்த முறையும் இயல்பு மாறிவிடுவாளோ...’ என்று கவலையாக இருக்கிறது. இதற்காக முன்னெச்சரிக்கையாக நான் என்ன செய்ய வேண்டும்?''

  டாக்டர் எம்.ராஜாராம், மனநல சிறப்பு மருத்துவர், திருச்சி:

  ''பிரசவத்தை சரியாக எதிர்கொள்வதற்காக பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் சிலவற்றின் எதிர்வினையால் உடல் மற்றும் மனநலத்தில் சிலருக்கு பாதிப்புகள் உண்டாவது இயல்பான விஷயமே. மனநலத்தைப் பொறுத்தவரை பிரசவத்துக்கு முந்தைய பாதிப்பை 'ஆன்டிநேடல் சைக்கோஸிஸ்' (Antenatal Psychosis)என்றும், பிரசவத்தை அடுத்து வரும் மனநல பிறழ்வை 'போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ்' (Postpartum Psychosis) என்றும் அழைப்பார்கள். இரண்டில் அதிகம் பேருக்கு ஏற்படுவது பிரசவத்துக்குப் பிந்தைய 'போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ்’தான். உங்கள் மனைவியின் பிரச்னையும், அதுபோலத்தான் இருக்கிறது.

  குழந்தை பராமரிப்பு, பாலூட்டல் போன்றவற்றில் ஒரு தாய்க்கான அக்கறையின்றி இருப்பது, எல்லோரிடமும் விரோதம் காட்டுவது, 'இது என் குழந்தையே இல்லை’ என்பது, 'ஆஸ்பத்திரியில் குழந்தையை மாற்றிவிட்டார்கள்’ என்று தகராறு செய்வது, யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது புதுப் பழிபோடுவது... இப்படியான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறங்கலாம். பிரசவித்த நாளில் துவங்கி ஆறு மாதம் வரை இம்மாதிரி பாதிப்புகள் நீடிக்கலாம். இதற்கான சிகிச்சை... குடும்பத்தாரின் அணுகுமுறை, அரவணைப்பு, அன்பு உள்ளிட்டவைதான்.

  முதலில் மனைவியை பரிவுடன் புரிந்து கொள்வதையும், பராமரிப்பதையும் மேற்கொள்ளலாம். அவரது செயல்களை விமர்சிப்பது, குறை காண்பது கூடாது. சுட்டிக்காட்டுவதையும் நயமாக சொல்லலாம். சில வீடுகளில் பால் பாகுபாடு பார்த்து, 'பெண் குழந்தை பிறந்தால் போச்சு’ என்று மூடநம்பிக்கையான பேச்சுக்களை எழுப்புவார்கள். இந்த நெருக்கடியும் பிரவசத்தை ஒட்டிய மனநலன் பாதிப்பாகலாம். சிலசமயம் குழந்தையேகூட இந்த வெறுப்புக்கு இலக்காகலாம் என்பதால், நம்பிக்கை வரும் வரை தாயை நம்பி குழந்தையைத் தனியே விடக்கூடாது.


  இப்பாதிப்பு ஒரு சில வாரங்களில் சரியாகவில்லை என்றாலோ, வீட்டை விட்டு ஓடுவது, தனக்கோ குழந்தைக்கோ ஊறு செய்வது போன்றவை தென்பட்டாலோ... உடனடி மனநல மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். சம்பந்தப்பட்டவர் 'சைக்கோஸிஸ்’ பாதிப்பில் இருக்கும்போது, சுற்றி உள்ளவர்கள் அவரை புரிந்து கொள்ளாமல் 'பேய் பிடித்துவிட்டது’ என்பது போலவெல்லாம் பேச ஆரம்பித்தால், தானாகவே சரியாகவிட வேண்டிய பாதிப்பு இன்னும் மூர்க்கமாகிவிடும் என்பதால், கவனம் தேவை. உங்கள் மனைவிக்கு முதல் டெலிவரி சமயத்தில் இந்த 'சைக்கோஸிஸ்’ பாதிப்பு தலைகாட்டியிருப்பதால், தற்போது இரண்டாவது பிரசவத்துக்கு முன்பிருந்தே மனநல நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.

  கருவுற்ற பெண்கள் அனைவருக்குமே பிரசவத்துக்கு முன்போ, பின்போ தங்களுக்கு 'சைக்கோஸிஸ்’ வர வாய்ப்பு உண்டு என்ற விழிப்பு உணர்வு இருப்பின், அதுவே பின்னாளில் வரவிருக்கும் இதுபோன்ற பாதிப்பைக் குறைத்துவிடும்!''

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 13th May 2015 at 08:46 PM.
  jv_66 and kkmathy like this.

 2. #2
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: பிரசவத்துக்கு பின் வரும் 'போஸ்ட்பார்டம

  Very good info, Latchmy.


 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Post Partum Disorder - பிரசவத்திற்கு பின்வரும் மனஅழுத்தத்&

  பிரசவத்திற்கு பின்வரும் மனஅழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்

  கருவுறுதல் என்பது பெண்களின் உடலில் பெரும் மாற்றங்களை கொண்டு வருகின்றது. இதனால் மன அழுத்தம் மற்றும் கவலைகளும் ஏற்படுகின்றன. ஒரு சில சமயங்களில் குழந்தை பெற்ற பின்பும் அந்த மன அழுத்தம் நம்மை விட்டு அகல்வதில்லை. குழந்தையுடன் இருப்பது பெரும் சந்தோஷத்தையும் இதுவரை நீங்கள் சந்திக்காத பரவசத்தையும் தரக்கூடும்.

  ஆனால் எப்போதும் செய்யும் காரியங்களை தவிர்த்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது பதற்றம், விரக்தி, சக்தியெல்லாம் தீர்ந்தது போல் உணர்வீர்கள். பொதுவாக குழந்தை பெற்ற முதல் சில மாதங்களுக்கு இருக்கத்தான் செய்யும். இத்தகைய அழுத்தத்திலிருந்து தப்பிக்க நாம் முன் யோசனையாக சில முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை தவிர்ப்பது பிறக்கப் போகும் குழந்தையின் மன நிலையை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்.

  குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்ப்பது குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள உதவும். குழந்தை பராமரிப்பு செய்யும் போது நாம் சாப்பிட வேண்டிய உணவை சரியான நேரத்தில் உண்ண முடியாமல் போகின்றது. அந்த நேரத்தையும் குழந்தைக்காவே செலவு செய்கின்றோம். இது போன்ற தருணங்களில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நமது உடம்பை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியமானதாகும்.

  இதுவும் குழந்தைப் பேறுக்கு பின் வரும் மன அழுத்தத்தை தடுக்க உதவும். குழந்தையுடன் அதிக நேரத்தை செலவு செய்யும் போது மகப்பேறுக்கு பின்வரும் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது. குழந்தை பெறுவது பெண்களின் உடலின் அமைப்பை மாற்றி விடுகிறது. முதலில் ஒரு அழகு நிலையத்திற்கு சென்று சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு புத்துணர்வூட்டும். உங்களுக்கு தேவையான ஆடைகளையும், மற்ற அணிகலன்களை வாங்கி அணிவ மகப்பேறுக்கு பின்வரும் மன அழுத்தம் உங்களுடைய நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.

  உங்கள் சுய மரியாதையையும் அதிகப்படுத்தும். இந்த வழி மிகவும் சிறந்த வழியாக அமைகின்றது. உங்கள் கணவருடன் சில வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு இரவு உங்கள் கணவரை பார்த்துக் கொள்ள வைப்பது அல்லது குழந்தைக்கு டையாபர்களை மாற்றுவது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்லாம். இவ்வாறு செய்வதால் உங்களிருவரின் உறவில் அன்பு மிகுதியாகும் மற்றும் மன அழுத்தமும் குறையும். குழந்தை பிறந்த பின் உடல் ஆரோக்கிய நிலையை அடைந்ததும் தியானம் அல்லது யோகாசனம ஆகிய பயிற்சிகளை செய்யலாம்.

  இது குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து சரும பொலிவையும் கொடுக்கும். இதுவே அழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக அமைகின்றது. உங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இது உங்களை மகிழ்ச்சியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வைக்கும். உங்கள குழந்தையின் புகைப்படங்களை ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழுங்கள்.

  அவர்களை சந்தித்து சிறிது நேரம் செலவிடுதல் புத்துணர்வூட்டும். இந்த வழிகளை எல்லாம் பின்பற்றி குழந்தை பெற்ற பின் ஏற்படும் மன அழுத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றி தன்னம்பிக்கையும் பெறலாம்.

  jv_66 likes this.

 4. #4
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: பிரசவத்துக்கு பின் வரும் 'போஸ்ட்பார்டம

  Thanks for the important details.

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter