பிரசவத்துக்குப் பின், இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிற மனக்குழப்பங்கள், மனச் சோர்வுகள்

'பிரசவம் முடிந்த உடன் தாய்மார்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை 'போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' (Post Partum Blues) என்று சொல்வார்கள்.

பிரசவத்தில் அனுபவித்த வேதனை, அதன் பிறகு எதிர்கொள்ளவிருக்கும் குடும்ப, பொருளாதார சூழ்நிலைகள் குறித்த பயம் போன்றவைதான் இந்த மன அழுத்தத்துக்கான காரணங்கள். இதனால் அடிக்கடி சோர்வு, கோபம், எரிச்சல் போன்றவை ஏற்படும்.


இரவெல்லாம் அழுகிற குழந்தை, காலையில்தான் தூங்கும். அப்போதுதான் குழந்தை-யின் தாயும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். ஆனால், பகற்பொழுது முழுவதும் குழந்தையைப் பார்க்க அடிக்கடி யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதனால் தொடர்ச்சி-யான தூக்கமின்மை ஏற்படும். இதுவும் மன அழுத்தத்துக்குக் காரணமாகலாம்.

சில வீடுகளில் பெண் குழந்தை பிறந்து விட்டால், சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் துக்கம் விசாரிப்பது போல ஏதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனாலும் மன உளைச்சல் அதிகமாகலாம்.


எனவேதான் அந்தக் காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களுக்கு, அவர்கள் வீட்டுக்கு யாரும் செல்லக் கூடாது என்று சம்பிரதாயமே இருந்தது.

குழந்தையின் தொடர்ச்சியான அழுகைகூட, தாய்மார்களை கலவரமடையச் செய்துவிடும். குழந்தை எதற்காக அழுகிறது என்ற சரியான காரணம் புரியாமல், அதை எப்படிக் கையாள வேண்டும் என்ற பக்குவமும் இல்லாமல் படுகிற அவதி.. அந்த நேரத்தில் அனுசரணையாக கணவனோ, தாயோ அருகில் இல்லாத தனிமை.. இவையெல்லாம் எரிச்சலை, கோபத்தை ஏற்படுத்தும்.


இளம் வயதில் தாயான பெண்களுக்கு இந்தவகை மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். காரணம், அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையடைந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் பெண்களுக்கு 21 வயதுக்கு முன் திருமணம் வேண்டாம் என்கிறார்கள்.
அடுத்த காரணம்.. ஹார்மோன். அனைவரது மூளையிலும் செரொடோனின் ஹார்மோன் சுரந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன்தான் நம்மை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. பிரசவ களைப்பின்போது மனதில் ஏற்படும் மாற்றத்தால், தற்காலிகமாக அந்த நேரத்தில் மட்டும் செரொடோனின் குறை வாக சுரக்கும். அதனால் இயல் பாக இருக்கக்கூடிய சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு ஏற்படும்.


பிரசவித்த தாய்மார்கள் அனை வருக்கும் 'போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' வரும் என்று சொல்ல முடியாது. சில பெண்களுக்கு இது ஏற்படலாம். பிரசவித்த பிறகு ஒரு மாதம் வரை கூட தொடரலாம். எனவே, இளம் தாய்மார்கள் போதுமான ஓய்வெடுப்பது அவசியம்.


பிரசவித்த தாயையும் சேயையும் அன்பாக, அக்கறையாக அருகில் இருந்து கவனித்துக் கொள்வதே இதற்கான அருமருந்து!''

Similar Threads: