குங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்

இதில், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான், அழகான குழந்தை என்பதை, கருத்தில் கொண்டே, குங்குமப்பூ சாப்பிட வலியுறுத்தப்பட்டது.

கருவுற்ற பெண்களுக்கு, ஐந்தாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை சாப்பிட கொடுக்கலாம். ரத்த சோகையைப் போக்கி, குழந்தையையும் தாயையும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும்.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலில் இட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து, குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும், குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும், தினமும் 1/2 கிராம் அளவு, 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது. குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி, படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால், ஜீரண சக்தி அதிகரித்து, நன்கு பசியைக் கொடுக்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால், தாது விருத்தியாகும்;

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ரத்தம் சுத்தமாகும்; ரத்தச் சோகை நீங்கும். கருவுற்ற பெண்களை சளி, இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்து. டாக்டரை கலந்தாலோசித்து பயன்படுத்துவது நல்லது.


Similar Threads: