கர்ப்பகாலத்தில் உண்ணும் உணவானது குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருவதோடு பிரசவத்தை எளிதாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பிணிகள் பொறித்த உணவுகளை உட்கொள்வதாலும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் அவர்களுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு பிரசவத்தையே சிக்கலாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே கர்ப்பகாலத்தில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதை கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


கர்ப்பிணிகள் குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும், கீரைகள், பச்சைக்காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


கர்ப்பிணிகள் கொழுப்பு சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை தவிக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால், நறுமண தயிர் , பனீர் ஆகிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நல்ல கொழுப்புக்கள்தான் அதிகம் உள்ளன. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் புரதச் சத்து மற்றும் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது.


காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு வைட்டமின்களும், தாதுஉப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே கர்ப்பகாலத்தில் அதிகஅளவில் காய்கறிகள் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகமான பழச்சாறு குடிக்கலாம்,நீர் அதிகம் அருந்த வேண்டும். அதேசமயம் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழரசங்கள், உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் அவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதால் அவற்றை உண்ணும் போது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் கொண்டைக்கடலை,பாசி பயறு , காரமணி, பட்டாணி,ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் இவற்றை உண்ணுவது உடல் நலத்திற்கு நல்லது. அதிகமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும், முட்டை,ஆட்டுகறி,கோழிக்கறி மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது கர்ப்பிணித்தாய்க்கும், சேய்க்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே நெய், வெண்ணெய்,தேங்காய் பால், டால்டா ஆகியவற்றை உணவுகளில் தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவற்றில் அதிகம் கொழுப்பு உள்ளது. அதற்குப் பதிலாக தாவர எண்ணெய்களில் சமைத்து சாப்பிடலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

Similar Threads: