Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Breast Feeding - தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீத


Discussions on "Breast Feeding - தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீத" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Breast Feeding - தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீத

    தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமாக குறைவு

    சென்னை: குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில், கணிசமாகக் குறைந்துள்ளது. ஐ.நா., துணை அமைப்பான, "யுனிசெப்,' கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 சதவீத பெண்களே, 6 மாதங்கள் வரை, தாய்ப் பால் கொடுக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆறு மாதங்கள் வரை, துணை உணவு இல்லாமல், தாய்ப் பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் தான் என்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. "பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப் பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத் திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப் பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைகிறது' என, பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தாய்ப் பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை, பெண்களிடம், குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களிடம் வலியுறுத்த, ஆகஸ்ட் முதல் வாரத்தை, தாய்ப் பால் வாரமாக கொண்டாட, ஐ.நா., சபை வேண்டுகோள் விடுத்தது. அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா உள்ளிட்ட, 120 நாடுகளில், ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப் பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப் பால் கொடுக்க வலியுறுத்தி, இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் பயனாக, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், படிப்படியாக அதிகரித்தது. 1998ம் ஆண்டில் 50 சதவீதமாகவும், 2005ல் 55 சதவீதமாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, "யுனிசெப்' நடத்திய ஆய்வில், தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், 40 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன், இது குறித்து கூறும்போது,
    ""வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, கூட்டுக் குடும்பம் குறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகி வருவது ஆகியவையே, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணம்.
    ஆறு மாதங்கள் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் தான், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை, முதல்வர் ஜெயலலிதா 6 மாதமாக உயர்த்தியுள்ளார் ,'' என்றார்.

    அரசு குழந்தைகள் மருத்துவமனை கூடுதல் பேராசிரியர் ரமா சந்திரமோகன் கூறியதாவது: பெரும்பாலான பெண்கள், முதல் 3 மாதங்களுக்கு, தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்துவது கிடையாது. ஆனால், பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் சென்றதும் வீட்டு வேலைகள், கணவரை கவனிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், தாய்ப் பால் கொடுக்க நேரம் குறைந்து விடுகிறது. தாய்ப் பால் கொடுப்பதற்கு மாமியார், கணவரின் ஆதரவு அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், பல மணி நேரம் பால் கொடுக்காமல் இருப்பதால், பால் சுரப்பு குறைந்து விடும். இதனால் நாளடைவில் பால் கொடுப்பதும் நின்றுவிடும். அரசு ஊழியர்களைப் போன்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், 6 மாதங்கள், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ஸ்ரீகலா கூறியதாவது: குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது என, எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சரியாக வழிகாட்டுவதில்லை. குழந்தை பிறந்த முதல், 3 நாள்கள் மிக முக்கியம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் பால் அதிகம் சுரக்காது. இதனால், பல பெண்கள், குழந்தைக்குப் பால் போதாது என நினைத்து, புட்டிப் பாலை நாடுகின்றனர். துவக்கத்தில் பால் குறைவாக சுரந்தாலும் தொடர்ந்து கொடுக்கும்போது பால் சுரப்பது அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    - ராமசாமி -
    Mother milk feeding babies percentage is low | ?????????? ?????????? ??????? 40 ???????? ?????? Dinamalar

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது.

    குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.

    சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்

    பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.

    ப்ரிய தோழி

  3. #3
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    Ramasamy sir solrathelam unmai than .. ana yeantha private company's 6 month leave vittudu erupanga?

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  4. #4
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    தன் குழந்தையின் உயிர் ஆதாரமான , எல்லா நலனும் , சக்திகளும் கொண்ட தாய் பாலை தொடர்ந்து 6 மாதத்திற்கு கூட கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்து தான் அதை செய்ய வேண்டுமென்று மேற்கண்ட கட்டுரையில் சொல்ல வில்லை, குழந்தைகள் நலனை விட வேலை பெரியதாக நினைத்து கொள்பவர்கள் முன்கூட்டியே சேகரித்து வைத்து குளிர்பதனபடுதி கூட கொடுக்கலாம் . இங்கு சொல்லப்பட்டது தவறாமல் ஆறு மாதத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதே...மனமிருந்தால் மார்க்கமுண்டு ....

    ப்ரிய தோழி

  5. #5
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    Kandipppa Manam irunthal Markkam undu.. Etha nan marukkave ela.. Nan kettathu yeantha pvt concern 6 month leave kodukkumnu than? yeanna pvt concern porutha varai avangalukku avanga work mudiyanumnu than ninaipanga... atha than sonnen nan.. kulanthaigala vida work perusa ninaiama than mostly ladies kulantha piranthathum avanga workla erunthu relive akidarangale

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  6. #6
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    வீட்டில் இருந்து தான் அதை செய்ய வேண்டுமென்று மேற்கண்ட கட்டுரையில் சொல்ல வில்லை..
    privatela velai seyyaravanga alternative ways use senju 6 monthskku kodukalam...

    ப்ரிய தோழி

  7. #7
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    It is True.. but Practical life la athula niraya problems kavi.. athan sonnen..

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  8. #8
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    ungamela thapunu sollala pa, neraya per apdi kodukka kooda kastapadaranga, padichavangala neraya per andha thappa panranga, kudumba suzhnilayila velaikku poravanga , kuzhandhiyin nalanukaga alternative waysla store panni koduthukalam, bt 6 months kodukka yosikaravanga idha padithu therindhu kondu koduthal namakku sandhosham ilaya...

    ப்ரிய தோழி

  9. #9
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    etha nan accept pantren kavi

    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  10. #10
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமா&a

    தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!

    குழந்தைக்கு பாலூட்டுவதால் அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டுவது இன்னமும் தொடரத்தான் செய்கிறது. `தாய்ப்பாலில் இல்லாத சத்துகளே கிடையாது, அதைக் கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினாலும், புட்டிப்பாலை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.


    இதற்கிடையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சில வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

    பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

    ஒரு வருடம் வரை தொடர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பலன் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    source ; malaimalar



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter