Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By smahi

Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல


Discussions on "Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல


    கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடலாமா?

    Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல-asian_style_italian_pasta.jpg



    தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா.


    தற்போது இந்த பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதனை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    அதிலும் பாஸ்தாக்களை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்த சமைத்து சாப்பிட்டால், அது வயிற்றை நிரப்பிவிடும்.

    ஆனால் இந்த பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும்.

    பாஸ்தாக்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் பாஸ்தாக்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி மற்றும் போலிக் ஆசிட் போன்றவை நல்ல அளவில் உள்ளன.

    இருப்பினும் கடைகளில் விற்கப்படும் பாஸ்தாக்கள் ஆரோக்கியமற்றது. மாறாக வீட்டில் தயாரிக்கப்படும் பாஸ்தாக்களை சாப்பிடுவது நல்லது.

    கர்ப்பமாக இருக்கும் போது உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்வது நல்லதா? மேலும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதால், உண்ணும் உணவுகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    அதற்காக பாஸ்தா கெட்டதா என்று கேட்கலாம். ஆனால் அதற்கான சரியான விடை, எந்த பாஸ்தாவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் மற்றும் எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.

    பாஸ்தாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அளவாக உட்கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    இருப்பினும் அதிகமாக சாப்பிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    பாஸ்தாவில் ஜிங்க் மற்றும் மக்னீசியத்தை உடலானது உறிஞ்சுவதைத் தடுக்கும் பொருளான பைடேட்ஸ் உள்ளது.

    அதுமட்டுமின்றி, அதில் ஜங்க் உணவுகளில் உள்ள பொருட்கள் இரத்தத்தில் எளிதில் கலக்குமாறான லெக்டின்ஸ் என்னும் பொருளும் உள்ளது. அதற்காக இது முழுவதும் ஆரோக்கியமற்றதாக, அறவே தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை.

    கர்ப்பிணிகள் ஆசைப்பட்டால், அளவாக ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.

    பாஸ்தாவானது உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    எனவே இதனை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இதனை சமைக்கும் போது, அத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பாஸ்தா மிகவும் பிடிக்குமானால், இதனை கர்ப்ப காலத்தில் அளவாக சாப்பிடுங்கள்.

    பாஸ்தாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இது வயிற்றில் வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66 and sumitra like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல

    Very important information ! Thank you!


  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    Re: Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல

    Thanks for sharing this useful info Mahi.


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Can a pregnant woman eat pasta? - கர்ப்பிணி பெண்கள் பாஸ்தா சாப்பிடல

    மிகவும் உபயோகமான பகிர்வு மஹி . மிக்க நன்றி

    Jayanthy





loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter