Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes

Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!


Discussions on "Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை



    கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை மெலனின் எனப்படும் நிறமிகளே!

    கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

    கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

    பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

    கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

    கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

    sumathisrini and jv_66 like this.

  3. #3
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

    பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

    சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

    குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

    sumathisrini and jv_66 like this.

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

    தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

    குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

    குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

    இணையம்


    Last edited by saidevi; 3rd Sep 2014 at 07:11 PM.
    sumathisrini and jv_66 like this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    Thanks Sarala for sharing Pregnancy caring tips.

    saidevi likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சரளா

    saidevi likes this.
    Jayanthy





  7. #7
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    welcome friends.


  8. #8
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்

    குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.



    இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.



    இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும்.



  9. #9
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்


    உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.

    ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

    மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

    உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


    Last edited by saidevi; 5th Sep 2014 at 03:00 PM.

  10. #10
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Pregnancy Caring Tips - கர்ப்பக் கால கவனிப்பு!

    முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும்.

    4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter