கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று:


பொதுவாக கர்ப்ப காலத்தில் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று வரக்கூடிய நோயாகும். ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது, அவரது உடலுக்குள் கர்ப்ப ஹார்மோன் உருவாகிறது, இது அந்த பெண்ணின் சிறுநீர் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பெண்ணின் கருப்பை வளரும் போது, இது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர்ப்பையில் இருந்து முழுமையாக சிறுநீர் வெளியேற்றுவதைத் இது தடுக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் தேங்கி நிற்கும் சிறுநீர், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஒரு நல்ல காரணியாகும்.

ஆரம்பத்திலே நீங்கள் இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால், இது சிறுநீரகத்தில் கூட நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே கர்ப்ப காலத்தில் இந்நோய் பற்றி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தின் போது, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுவற்கான காரணங்களை பார்க்கலாம்.

* மலம் கழித்தவுடன், யோனிக் குழாயினுள் மலம் கழுவப்படுதல்/துடைக்கப்படுதல்
* உடலுறவு
* கர்ப்பம் காரணமாக கருப்பை விரிவடைவதால், இது சிறுநீர்ப்பையில் பாதி அடைப்பை ஏற்படுத்துகிறது.

இதன் சில அறிகுறிகள் பின்வருமாறு:

* சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு
* சிறுநீர் கழிக்கும் போது அசெளகரியம் மற்றும் கஷ்டம்
* தெளிவற்ற சிறுநீர்/மங்கலான சிறுநீர்
* துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* சிறுநீர் கழிக்கும் போது அவசர உணர்வு
* கீழ் முதுகுப்பக்க அடிவயிற்றில் தசைப்பிடிப்பு

சிறுநீர்ப்பைத் நோய்தொற்றுக்கான அறிகுறிகள்:

சிறுநீர்ப்பை நோய்த்தொற்று காரணமாக, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் தோன்றும்.

சிறுநீர் நிறமாற்றம்

அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
சிறுநீர் கழிக்கும் போது வலி
துர்நாற்றம்

சிறுநீர்ப்பை நோய்தொற்றுக்கான வீட்டு வைத்தியங்கள்:

அன்னாசிப்பழத்தில் பாக்டீரியாவை எதிர்க்கும் சிறந்த பண்பு உள்ளதால், உண்மையில் இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் சிறந்தது. அன்னாசிப்பழத்தில் புரோமலைன் உள்ளது, இது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளது. காலை உணவுடன் அல்லது மதிய உணவிற்குப் பின்னர் நீங்கள் அன்னாசியை பழமாகவே சாப்பிடலாம். அதேப்போல் மிக்ஸியில் அடித்து ஜூஸ் வடிவிலும் ஒரு முழு டம்ளர் குடிக்கலாம்.

மீண்டும் மீண்டும், அடிக்கடி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படும் நோயாளிக்கு, டாக்டர்கள் 5000 மிகி வைட்டமின் சி சாப்பிடுமாறு பரிந்துரைப்பார்கள். சிறுநீரை அமிலப்படுத்தும் வைட்டாமின் சி-யின் பயன் காரணமாக உங்கள், சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு போதுமான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும்.


netsource

Similar Threads: