Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By chan
  • 1 Post By jv_66

Handling Chicken pox and others during Pregnancy-கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்&#


Discussions on "Handling Chicken pox and others during Pregnancy-கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்&#" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Handling Chicken pox and others during Pregnancy-கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்&#

    கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்தால் என்ன செய்வது?

    அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம்.

    தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?

    சின்னம்மை என்றழைக்கப்படும் (Chickenpox) சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வரும்)

    மணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் (Measles) மீசில்ஸ்
    பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் (mumps) மம்ப்ஸ்

    அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?
    அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன.

    அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினை என்கிறார்களே?
    கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது.

    ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.

    அம்மை நோய்க்குத் தடுப்பூசிகள் இருக்கிறதா?
    சின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.

    எம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.

    குழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் “மீசல்ஸ் வேசின்” என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது. இந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.

    அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
    சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.

    சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், பூச்சு மருந்துகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

    சிகிச்சை சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.

    மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி. இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, “பொன்னுக்கு வீங்கி” அம்மை.

    தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Handling Chicken pox and others during Pregnancy-கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்&#-pregnant-woman2.jpg  
    jv_66 likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்தால் என&

    அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?
    உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

    நன்றி: டாக்டர்.வெ.சீதாராமன்

    அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள்:

    1. சின்னம்மை (Chickenpox)
    2. தட்டம்மை (Measles)
    3. புட்டாலம்மை (mumps)
    4. உமியம்மை (Rubella)

    சின்னம்மை
    சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்
    காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

    இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

    நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

    ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

    வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

    எல்லா கொப்புளங்களும் மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

    உடலில் எப்படி பரவுகிறது?
    ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

    தடுப்பு மருந்து
    1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்

    jv_66 likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்தால் என

    தட்டம்மை

    குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:
    தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.
    ப்ளு போன்ற அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

    உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும்.

    கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

    பரவும் முறை:
    விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

    இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

    இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

    புட்டாளம்மை:
    குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

    காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

    வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

    உமியம்மை:
    குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
    இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த
    கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

    பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

    அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்.

    அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

    நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.

    அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

    தடுப்பு ஊசி
    நோய் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

    சித்த மருத்துவத்தின் பங்கு
    நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

    மருந்து
    சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

    சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

    மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

    jv_66 likes this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வந்தால் என

    கொப்பளிப்பானா? (Chickenpox)

    எம்.கே.முருகானந்தன் – குடும்ப வைத்திய நிபுணர்

    அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்!.

    அதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல! அருவருப்பினால்! பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.
    அவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தது.

    மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது. கட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.

    “ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.

    “பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”
    “ஏனாம்?;”

    “அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”

    ‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.

    கொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virusஎன்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல!. தெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன என நாம் பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகவில்லை.

    சூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.

    கொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.

    கிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.

    அந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது. கொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.
    18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும். இரண்டாவது தவறு குளிக்காதது ஆகும்.

    கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.

    “குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா? மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.

    இந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.

    12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.

    12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

    தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.


    jv_66 likes this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Handling Chicken pox and others during Pregnancy-கர்ப்பிணிகளுக்கு அம்மை நோய் வநĮ

    Thanks for these very useful details.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter