கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில் அருந்த வேண்டிய இளநீர்
இளநீரை கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும். இளநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல பொருட்களைக் கொண்டுள்ளது. கர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் இளநீர் அருந்துவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.

கர்ப்பமாக இருக்கும் போது இளநீர் அருந்துவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும்.

Similar Threads: