கர்ப்பக் கால மூட நம்பிக்கைகள்

கர்ப்பக் கால மூட நம்பிக்கைகள் என்பது நமது நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் பொதுவானதாக உள்ளது.

அவ்வாறு எந்தெந்த நாடுகளில் என்னெ*ன்ன மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம் :

தொப்புளைச் சுற்றி வளையம் மாதிரி கோடுகள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், தொப்புளின் அருகே வரிக்கோடுகள் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அமெரிக்காவில் நம்பிக்கை உண்டு.

மேலும், நீண்ட நேரம் தூங்கும் பெண்ணின் கருப்பையில் குழந்தை ஒட்டிக்கொள்ளும் எனவும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கையுண்டு.

ஆஸ்ட்ரேலியாவின் திவி இனப் பெண்கள் இளம் நண்டுகள், கேட்பிஷ் மீன்கள் போன்றவற்றை சாப்பிட்டால் குழந்தை பாதிக்கப்படும் என்றும், நியூகினியாவில் உள்ள அராபேஷ் இனப் பெண்கள் ஈல், தவளைகளை சாப்பிட்டால் குழந்தை பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

கர்ப்பிணி முடிச்சு போட்டால், வலை பின்னால் செய்தால் குழந்தை கொடி சுற்றி பிறக்கும், உறுப்புக் குறைகளோடு பிறக்கும் என் நம்பிக்கை இந்தியாவில் மட்டுமல்ல, சில அயல்நாடுகளில் உள்ளது.

இரு கர்ப்பிணிகள் ஒரே இடத்தில் இருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாலோ இருவரில் ஒருவர் இறந்து விடுவார் என்பது இந்தியாவிலும், ஜப்பானிலும் உள்ள நம்பிக்கையாகும்.

குளிர்ச்சியான இடங்களில் நின்றாலும், குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவினாலும் கருச்சிதைவு ஏற்படும் என்பது சில அயல்நாடுகளில் உள்ள நம்பிக்கை.

பனிக்குடம் உடையாமல் குழந்தை பிறந்தால் அது நல்ல சகுனம் என்றும், அந்தக் குழந்தைக்கு நீரில் மரணம் கிடையாது என்றும் இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள்.

கர்ப்பிணிகள் கைகளை தலைக்கு மேல் தூக்கினால் குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளும் என்பது ஆஸ்ட்ரேலியர்களின் நம்பிக்கை.

இதுமட்டுமல்லாமல், காய்கறிகளை சாப்பிடுவதால் குழந்தைக்கு பிறவியில் வடுக்கள் தோன்றும், புகைத்தால் குழந்தை சிறிதாக, சிரமமின்றி பிறக்கும் என்றும் கூட ஆஸ்ட்ரேலியாவில் நம்புகிறார்கள்.

Similar Threads: