குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகை
Discuss here on குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகை within the Preschooler forums, part of the Parenting forum; குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகளோடு வளரும்? எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை உளவியல் அறிஞர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதைப்பார்ப்போமா... 1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் ...
-
5th Jan 2012, 09:49 AM #1
குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகை
குழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகளோடு வளரும்?

எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை உளவியல் அறிஞர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதைப்பார்ப்போமா...
1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.
2. பகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.
3. பயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.
4. பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.
5. பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.
6. பாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.
7. புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
8. சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.
9. பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.
10. உற்சாகப்படுத்தப்படும் சூழýல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது.
11. முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.
12. பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.
13. நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.
14. பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.
தங்கள் குழந்தைகளின் எதிர்கால லட்சியத்திற்கு ஏற்புடைய எண்ணங்களும் பழக்க வழக்கங்களும் பதிவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது பெற்றோரது கடமையாகும். தன்னுடைய குழந்தைகளை நம்பும் பொற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. குறிப்பாக முடிவுகள் எடுப்பது, எல்லாவற்றிக்கும் மற்றவர்களை சாராதிருத்தல் முதலியன தகுதிகள் உள்ளனவாக வளர்கின்றன.With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
Similar Threads
-
முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட
By Parasakthi in forum SchoolerReplies: 0Last Post: 2nd Jan 2012, 12:26 PM -
அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் ச
By sudhar in forum Media TalkReplies: 1Last Post: 30th Dec 2011, 05:38 PM -
700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர்?
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 4th Nov 2011, 09:07 AM -
குழந்தையை காண செல்பவர்கள் யோசிக்கலாமே!!!
By nlakshmi in forum New Born BabyReplies: 4Last Post: 17th Oct 2011, 09:00 AM -
எத்தனை மலர்கள் - கொண்டுவந்தது & சாற்றியது?
By sumathisrini in forum Interesting FactsReplies: 142Last Post: 26th Aug 2011, 05:39 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks