நாமெல்லாம் பல்வலி, பற்சிதைவு வந்தால்தான் பல் டாக்டரிடம் போய் சிகிச்சை பெறும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால் அது தவறு என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்!

குழந்தை பருவத்திலேயே... அதாவது பல் முளைக்கும்போதே, பல் டாக்டரிடம் காண்பித்து, ஆலோசனை பெற்றால் பற்கள் அழகாக வளரும் என்றும் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க ஆரம்பித்த 6 மாதத்தில் பல் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி வளரக்கூடிய பால் பற்கள்தான், பின்னால் வளரக்கூடிய அனைத்துப் பற்களுக்கும் அடிப்படை ஆதாரம்!

இந்த பால் பற்கள் எல்லாம் நெருக்கமாக வளர்ந்திருந்தால், பின்னால் முளைக்கும் பற்கள் வரிசைப் படி வளராது! குழந்தைகள் பால் குடிக்கும் போது, அந்தப் பால் வாயில் தேங்கினால் அது பற்களையும் பாதிக்கும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைகளை கைகளால் உயர்த்திப் பிடிப்பது நல்லது.

பால் குடித்தபின்பு, குழந்தைகளுக்கு சூடு படுத்தி ஆறிய நீரை இரண்டு தடவை குடிக்க கொடுக்கவும். இப்படி பண்ணினால், பற்களின் பாதிப்பு இருக்காது. குழந்தைகளுக்கு அதிகமாக புட்டிப்பால் கொடுப்பதால், பற்களின் வரிசை சரியாக அமையாது.

குழந்தைகளுக்கு முளைக்கும் பால் பற்கள் சீக்கிரமாக விழக் கூடாது. அப்படி விழுந்து, அடுத்து முளைக்கும் பற்கள் முன்னோக்கி வளரும். தற்போது இப்படி முன்னோக்கி வளரும் பற்களை சரிப்படுத்த நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன.

விரல் சூப்புதல், வாய் திறந்தபடி தூங்குதல், நாக்கை அடிக்கடி வெளியே தள்ளுதல் போன்ற பழக்கங்களும் பற்களை பாதிக்கும். விரல் சூப்புவதால் மேல் வரிசைப் பற்கள் வெளியேயும், கீழ் வரிசை பற்கள் உள்ளேயும் தள்ளிக் கொண்டு வளரும். 4வயது வரை விரல் சூப்பலாம். அதற்கப்புறம் விரல் சூப்புவது நல்லதல்ல. டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.

தூங்கும்போது வாய் திறந்தால் பற்கள் வெளிநோக்கி வளரும். இதற்கும் தற்போது நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. குழந்தைகளுக்கு பெற்றோர் எப்போதும் பல் தேய்த்து விடக் கூடாது. அவர்களாகவே நன்றாக பல் தேய்க்க கற்று கொடுத்தால் போதும். 3 வயது வரை எப்படி பல் தேய்ப்பது நல்லது என்பதை கற்று கொடுக்கலாம். காலை, இரவு என இரண்டு தடவை பல் தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும். குழந்தைகளுக்கு பல் தேய்ப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தால், டிசைன்கள், நிறங்களில் பல் தேய்க்கும் பிரஷ்களை வாங்கி கொடுத்தால் ஆர்வமாக பல் தேய்ப்பார்கள்.


-koodal

Similar Threads: