தொண்டையில் சதை வளர்வது டான்சில்

மேல் தொண்டை, நடுத் தொண்டை, கீழ்த் தொண்டை போன்ற இடங்களில்சதைத் துண்டுகள் இருக்கின்றன. மேல் தொண்டையின் சதைத் துண்டு அடினாய்டு என்றும், நடுத் தொண்டையின் ஜோடி சதைத் துண்டுகள் டான்சில் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்த் தொண்டைப் பகுதியிலிருந்து மூச்சுக் குழல் ஆரம்பமாகிறது.

இதில் தொண்டைக்குள் இறங்கும் உணவுப் பொருட்கள், டான்சில் வழியாகத்தான் உணவுக்குழலை சென்றடைகின்றன. அதில் கிருமிகள் இருப்பின் அதன் தாக்குதலாலேயே இந்த சதைத்துண்டுகள் வீக்கமும் வலியும் காணுகின்றன.

இப்படி சதை வீக்கம் ஏற்பட்ட குழந்தைகள் மூச்சு விடத் திணறுவதும் அதனால் வாயைத் திறந்தபடி தூங்குவதும்தவிர்க்க முடியாதவை. வாயைத் திறந்து தூங்குவதால் பல் சீரமைப்பு கெடுவது, மூக்கடைப்பு, காதடைப்பு, காது கேளாமை போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

துவக்க நிலை டான்சிலை கட்டுப்படுத்த மாத்திரைகள் போதும். தொடரும் தொண்டைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளோடு உணவை விழுங்கவே திணறும் அளவுக்கு வீக்கம் முற்றி விட்டால், அறுவை சிகிச்சை மட்டுமே கைகொடுக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு டான்சில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால் போதும். தொடர்ந்து வேறு மாத்திரைகளுக்கு வேலையில்லை. தற்போது கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் சகஜமாகிவிட்டன.

. ஐஸ்கிரீம், சாக்லேட் இல்லாத குழந்தைப் பருவத்தை கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல், குழந்தைகளுக்கு தரமான தயாரிப்புகளை மட்டுமே அளவோடு கொடுங்கள்.

இது சாதாரண பிரச்னைதான். ஆனால், இதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகளை இது தாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Similar Threads: