Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மனநலம் நாட்டின் பொருளாதாரத்தையே மாற்று&a


Discussions on "மனநலம் நாட்டின் பொருளாதாரத்தையே மாற்று&a" in "Psychological Problems" forum.


 1. #1
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  மனநலம் நாட்டின் பொருளாதாரத்தையே மாற்று&a

  மனநலம் நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றும்!


  உடல்நலம் பற்றி விழிப்புணர்வு இருக்கிற அளவுகூட மனநலம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. கடந்த அக்டோபர் 10ம் தேதி ‘உலக மனநல தினம்’ என்று அறிவிக்கப்பட்டு இருந்தும், மன நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையோ, கருத்தரங்கங்களையோ பெரிதாக எங்கும் பார்க்க முடியவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை என்பதில் மனதை மட்டும் தவிர்த்து விட முடியுமா? மனநலம் மட்டும் ஏன் இப்படி ஒதுக்கப்பட்ட துறையாக இருக்கிறது?’’ - கோபமும் ஆதங்கமும் கலந்த குரலில் கேட்கிறார் மனநல மருத்துவரான மோகன் வெங்கடாசலபதி.

  இந்தப் புறக்கணிப்புக்கு அடிப்படையான காரணம் என்ன?

  ‘‘மனநல மருத்துவம் என்பது கடந்த 60 ஆண்டுகளாகத்தான் கவனிக்கப்பட்டு வளர்ந்து வருகிறது. அதற்கு முன், ‘பேய் பிடித்திருக்கிறது... பூஜை செய்தால் சரியாகிவிடும்’ என்றுதான் நினைத்தார்கள். இதனால், இயல்பிலேயே மற்ற நோய்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மன நோய்களுக்கு கொடுக்காமல் விட்டுவிட்டோம்.’’

  மனம் ஏன் பாதிக்கப்படுகிறது?

  ‘‘மூளையின் செயல்பாட்டைக் குறிக்கும் ஒரு சொல்தான் மனம். மூளையிலிருந்து உருவாகும் சிந்தனைகள் ஓர் ஒழுங்கில்லாமல் போவதையே மனநோய் என்கிறோம். மூளையில் Dopamine, Serotonin, Norepinephrine என்று பல நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் உண்டு. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுதான் மனநோயை உருவாக்குகிறது. இதைத் தவிர, மரபியல் காரணங்களாலும், வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும், மந்த புத்தியுடன் பிறந்த குழந்தைகளுக்கும் மனநலப் பாதிப்புகள் வருகிறது. சமீப காலமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மனநலக் கோளாறுகளும் அதிகமாகி வருகின்றன...’’

  மனநலப் பாதிப்புகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன?

  ‘‘Minor mental illness, Major mental illness என இரு வகைகள் உள்ளன. மனச்சோர்வு, மனப்பதற்றம், எண்ணச்சுழற்சி நோய் போன்றவை Minor mental illness. இந்தச் சிறிய மனக் குறைபாடுகள் சமாளிக்கக்கூடியவைதான். மனச்சிதைவு, இருதுருவக் கோளாறு (மன எழுச்சி, மனத்தாழ்ச்சி) போன்றவை Major mental illness வகையைச் சேர்ந்தவை. சிக்கலானவையும் கூட. மருந்து, மாத்திரை, ஊசி என்ற முறையில் அளிக்கப்படும் பார்மக்காலஜிக்கல் வகை சிகிச்சை, சைக்கோ தெரபி என்கிற பேச்சு வழி சிகிச்சை, பிஹேவியர் தெரபி என்கிற நடத்தை வழி சிகிச்சை, காக்னிட்டிவ் பிஹேவியர் என்கிற எண்ணங்களை மாற்றி, அதன்மூலம் நடத்தையை மாற்றும் சிகிச்சை, ஷாக் ட்ரீட்மென்ட் என்கிற ஈ.சி.டி. என பலவகை சிகிச்சைகள் இருக்கின்றன...’’

  மனநோய்களைக் குணப்படுத்த முடியுமா?

  ‘‘பெரும்பாலான மனநோய்களுக்கு மருந்து, மாத்திரைகளோடு, சைக்கோ தெரபியும் கொடுத்தால் குணமாகிவிடும். மனச்சிதைவு, இருதுருவக் கோளாறு போன்ற நோய்களுக்குத் தொடர்ச்சியான சிகிச்சைகளும் ஆலோசனைகளும் அவசியம். இந்த நோய்கள் நிரந்தரமாகக் குணமாகுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் இல்லை. நீரிழிவுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடுவதுபோல, இந்த நோய்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தேவை...’’

  தூக்கமின்மைக்கும் மனநலப் பாதிப்புகளுக்கும் தொடர்பு உண்டா?

  ‘‘தூக்கமின்மை பரவலான பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனநலத்தைத் தீர்மானிப்பதில் தூக்கமின்மை பெரிய பங்கு வகிக்கப் போகிறது. காரணம், தூக்கமின்மை என்பது உளவியல் கோளாறுகளின் ஆரம்ப நிலையாக இருக்கிறது. படுத்த உடனே தூக்கம் வராமல் இருப்பது, இடையிடையே தூக்கம் கலைவது, முக்கால்வாசி தூங்கிவிட்டு அதிகாலை 3 மணிக்கு எழுந்து விடியும் வரை தூக்கம் வராமல் தவிப்பது என்று பல வகைகள் இதில் உள்ளன. தூக்கமின்மை இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும்...’’

  மனநலத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

  ‘படிக்கிற காலமாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்லும் காலமாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடன் சுமுக உறவு இருக்க வேண்டுமல்லவா? மனநலம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக வாழ முடியும். தனிநபர் ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால்தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். இது வீட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல... நாட்டின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் சக்தி கொண்டது. ஆனால், மனநலத்துக்கு சிகிச்சை அளிக்கக் கூட போதுமான மருத்துவர்களோ, அதற்கான திட்டங்களோ இல்லாததும் பெரும் குறையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் தேவை பலமடங்கு அதிகமாகும் என்பதைப் புரிந்து, இந்த நிலைமையை எமர்ஜென்சியாக கவனத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்...’’

  எமர்ஜென்சி என்று சொல்கிற அளவு சிக்கலான நிலைமையா?

  ‘‘கோபம், தூக்கமின்மை, உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் தவிப்பது, தீய பழக்கங்களுக்கு ஆளாவது, குடும்ப வாழ்க்கையில் சிக்கல் என எல்லாவற்றிலும் மனநலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அவசர யுகத்தில் போதுமான ஓய்வில்லை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை அரிதாகிவிட்டது, திருமண முறிவுகள் அதிகரித்துவிட்டது, இளவயது மரணங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நம் மக்கள் மனநலத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் குறையை போக்குவதற்கு ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். அதனால்தான் இதை எமர்ஜென்சி என்கிறேன்...’’

  மனநலத்துக்கு சக மருத்துவர்களின் உதவி எந்த விதத்தில் தேவை?

  ‘‘ரத்த அழுத்தம், இதய நோய்கள், பருமன் போன்றவற்றுக்கெல்லாம் மனமும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இதயம் படபடப்பாக இருக்கிறது என்கிற ஒருவருக்கு ஈ.சி.ஜி. பரிசோதனையை செய்து பார்த்தால், அவருக்கு இதயம் ஆரோக்கியமானதாகவே இருக்கும். ஆனால், மனப்பதற்ற நோய் இருக்கும். அதனால், பொது நல மருத்துவரோ, இதய சிகிச்சை மருத்துவரோ தங்களுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மனம் சார்ந்த பிரச்னைகளும் அவர்களுக்கு இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கும் பரிந்துரைக்க வேண்டும்.’’

  "இந்த அவசர யுகத்தில் போதுமான ஓய்வில்லை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை அரிதாகிவிட்டது, திருமண முறிவுகள் அதிகரித்துவிட்டது, இளவயது மரணங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நம் மக்கள் மனநலத்தை இழந்து
  கொண்டிருக்கிறார்கள்."

  மாற்றம் வேண்டும்!

  மனநலம் பாதிக்கப்பட்டவர் நம்மைப் போன்ற ஒருவரே என்பதையும், அந்த நோய்க்கு அவர் காரணமல்ல என்பதையும் முதலில் நினைக்க வேண்டும். அவர் வேண்டும் என்று செய்யவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தான் யார் என்றே தெரியாத நிலையில் இருப்பவர்களிடம்தான் நாம் அன்போடும் கருணையோடும் நடந்துகொள்ள வேண்டும். அன்புடன் அணுகினாலே பாதி நோய் குணமாகிவிடும். இதில் இன்னொரு விஷயம், ‘பேய்க்கும் பாரு... நோய்க்கும் பாரு’ என்று மருத்துவ வட்டாரத்தில் சொல்வோம். மக்கள் தங்களுடைய திருப்திக்கு பூஜைகள், பரிகாரங்கள் செய்வதில் தவறில்லை.

  ஆனால், மருத்துவ சிகிச்சையை தவிர்த்துவிடக் கூடாது. உடல் நலப் பாதிப்பைப் போலவே மனநலப் பாதிப்புக்கும் சிகிச்சை அவசியம் என்பதை உணர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதில் உதவ வேண்டும். பைத்தியம், மெண்டல் போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கிண்டல் செய்யக் கூடாது. பல நோயாளிகளை மனநல மருத்துவ மனையிலேயே உறவினர்கள் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிற அவலமும் இருக்கிறது. இதுவும் மாற வேண்டும். முக்கியமாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடிப்பது, துன்புறுத்துவது, இரும்புச் சங்கிலிகளால் கட்டிப்போடுவது என்று சில வீடுகளில் நடத்துவதைப் போலவே சில மனநல காப்பகங்களிலும் நடப்பதாகக் கேள்விப்படுகிறோம். மனநல மருத்துவமனைகளையும் மனநோயாளிகளையும் அரசாங்கம் கவனித்துக் காப்பாற்ற வேண்டியது அவசியம்!


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 30th Nov 2015 at 08:21 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter