Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes

மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?


Discussions on "மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?" in "Psychological Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?

    மன அழுத்தத்தின்போது உடலில் என்ன நடக்கிறது?




    வீன வாழ்க்கை தரும் பெரிய சாபம்...
    மன அழுத்தம். குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். ஆனால், அது தொடர்பான நம்முடைய புரிதல்கள் மிகக் குறைவு. மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

    இனப்பெருக்க மண்டலம்
    அதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும். நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது முன்கூட்டியே கடுமையான வலி கொண்ட மாதவிலக்கு ஏற்படலாம். மேலும், உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் இது குறைக்கும்



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: மன அழுத்தத்தின்போது உடலில் என்ன நடக்கி

    நரம்பு மண்டலம்

    மன அழுத்தத்தின்போது நம்முடைய உடல் மிக விரைவாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்தும். மூளையில் இருந்து அட்ரினலுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, கார்டிசாலைச் சுரக்கச் செய்யும். இது இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். உணவுச் செரிமான மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம். பதற்றச் சூழல் மறையும் வரை நம்முடைய உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாது. தொடர் மன அழுத்தம் தூக்கத்துக்கும் உலை வைக்கும்.

    தசைகள்
    மன அழுத்தத்தின்போது உடல் தசைகள் கடினமாகும். இது நீடிக்கும்போது தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.

    சுவாச மண்டலம்
    மன அழுத்தம் மூச்சை அதிகமாக உள் இழுத்து வெளியே விடச் செய்யும். இது சிலருக்குப் படபடப்பு மற்றும் மாரடைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

    நாளமிள்ளாச் சுரப்பிகள் அமைப்பு
    மன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பியில் இருந்து அட்ரினல் சுரப்பிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. அது கார்டிசால் உள்ளிட்ட சில ரசாயனங்களைச் சுரக்கும். இந்த ரசாயனங்களை மன அழுத்த ஹார்மோன்கள் என்று கூறுவார்கள். இவை சுரக்க ஆரம்பித்ததும், கல்லீரல் அதிக அளவில் குளுகோஸை உற்பத்தி செய்யும்.

    இதயச் செயல்பாடு
    திடீரென ஏற்படும் மன அழுத்தமானது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைப் போன்றது. மன அழுத்தத்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயத் தசைகளும் ரத்த நாளங்களும் வேகமாகவும் அதிகமாகவும் செயல்படும். தொடர்ந்து இப்படி நிகழும்போது ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்; மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

    செரிமான மண்டலம்
    மன அழுத்தம் இருக்கும்போது வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடத் தூண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடும்போதோ அல்லது புகையிலை மற்றும் மது போன்ற பொருட்களை உட்கொள்ளும்போதோ அது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இறைப்பையின் செரிமானத் திறன் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும் வயிற்றில் உணவின் பயணத்தையும் பாதிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும்.


    தகவல் உதவி: பொது நல மருத்துவர் ஆர்.கருணாநிதி,
    மூளை நரம்பியல் நிபுணர் சவுண்டப்பன்


    jv_66 likes this.

  3. #3
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: மன அழுத்தத்தின்போது உடலில் என்ன நடக்கி

    Good info...........


  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தம் என்றால் என்ன? - What is stress?

    மன அழுத்தம் எனும் அமைதிக் கொலைகாரன்!
    டாக்டர் சித்ரா அரவிந்த் மனநல நிபுணர்

    மன அழுத்தம்

    எப்போதாவது குறுகிய கால அளவில் இருந்தால் அது குறித்து பயம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அழுத்தம் ஏற்படுத்தும் படிப்பு (Academic Pressure), பெற்றோர் அல்லது மேலாளரின் சாத்தியமற்ற எதிர்பார்ப்பு (Unrealistic expectations), ஒத்துவராத திருமணம், ஒவ்வாத வேலை போன்ற விஷயங்கள் ஏற்படுத்தும் நாட்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. இப்படி, அதிக முறை மன அழுத்தத்துக்கு (Chronic stress) ஆளாகின்றபோது, உடலை திரும்பவும் அமைதி நிலைக்கு கொண்டு வருவது மிகவும்
    கடினம்.

    அதோடு, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், எதிர்ப்பு சக்தி குறைதல், மனச்சோர்வு (Depression), வன்முறை செயல்களில் ஈடுபடுதல் போன்ற பாதிப்புகளும் அதிக அளவில் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. இப்படி மன அழுத்தத்தால் ஏற்படும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், உடல்/மனநல பாதிப்புகளும், விபத்து, தற்கொலை, ஸ்ட்ரோக், மாரடைப்பு, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், நுரையீரல் நோய் ஆகியவற்றை ஏற்படுத்தி இறப்பை அதிகரித்துள்ளன. இப்படித்தான் மறைமுக காரணியாக மன அழுத்தம் இறப்பை ஏற்படுத்துகிறது.

    அக்காலம் போல, இப்போது இறப்புக்கு முக்கிய காரணம் காலராவோ, மலேரியாவோ, தொற்றுநோய்களோ அல்ல. புள்ளி விவரங்களைப் பார்த்தால் பல இறப்புகளுக்கு ‘வாழ்வுமுறை நோய்களே’ (Lifestyle diseases) காரணமாக உள்ளன. அதாவது, நம் நாகரிக வாழ்வினால் ஏற்படும் நோய்களே மரணத்துக்கு முக்கிய காரணங்களாக அறியப்பட்டுள்ளன. அதீத குடிப்பழக்கம், போதை/சிகரெட் பழக்கங்கள், அதிகமாக உண்ணுதல் (Overeating), ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்யாதது போன்ற பழக்கவழக்கங்கள் மன அழுத்தத்தாலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றன.



    மருத்துவமனைக்கு வரும் 70-80 சதவிகி தத்தினரின் நோய்களுக்கு நேரடியாகவோ/மறைமுகமாகவோ மன அழுத்தமே காரணம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. பல வருடங்கள் பிடிக்காத வேலையில்/ திருமணத்தில் இருப்பவர்கள், தினசரி ஏற்படும் மன அழுத்தம் தங்களுக்குபழகி விட்டதாக நினைத்துக் கொள்வார்கள். நிஜத்தில், மன அழுத்தமானது அவர்களது ஆரோக்கியத்தை அவர்களை அறியாமலேயே சூறையாடிக் கொண்டிருக்கும்.

    1.அதிக அளவு மன அழுத்தத்தினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டிருக்கும் உடலானது பெப்டிக் அல்சர், பெருங்குடல் அழற்சி, புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற நோய்களின் தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாகிறது.

    2.ஒரே ஒரு முறை ஏற்படும் கடுமையான மன உளைச்சலோ மாரடைப்பு, டென்ஷன், தலைவலி, முதுகில் தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

    3.நாள்பட்ட / தீவிர மன அழுத்தம், ஏற்கனவே இருக்கும் நோய்களை (மார்புவலி, நீரிழிவு, மூட்டுவீக்கம், எடைப் பிரச்னைகள், ரத்தக்கொதிப்பு) மேலும் தீவிரமடையச் செய்கிறது.

    4.பொதுவாக அதீத மன அழுத்தத்தால் பாதிக்க ப்பட்டவர்கள், ஆரோக்கியம் சார்ந்த பழக்கவழக்கங்களான உடற்பயிற்சி, தூக்கம், நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், மாத்திரைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் போன்றவற்றை நிராகரிப்பர். இதனால், மறைமுகமாக நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    5.மன அழுத்தம் எதிர்ப்பு சக்தியைக் (Immunity) குறைப்பதால், அக்காலகட்டத்தில் பரவுகிற தொற்று நோய்கள் எளிதில் தாக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

    நோய்கள் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் ஏற்படுவதில்லை. ஊட்டச்சத்து குறைவு, வலுவிழந்த எதிர்ப்பு சக்தி, நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு / தொற்று ஏற்பட்டுள்ள பகுதியில் இருத்தல் போன்ற பல காரணிகளால் நோய் உருவாகிறது. மன அழுத்தமோ பொதுவாக ஒருவரின் உடலில் ஏற்கெனவே பாதித்த / வலுவற்ற பாகத்தையே பெரும்பாலும் தாக்கும் (உதாரணமாக) சிலருக்கு இரைப்பை கோளாற்றை ஏற்படுத்தும்.

    வேறு சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். வயிற்றுக்கும் மூளைக்கும் பொதுவாக நரம்பு தொடர்பிருப்பதால் மன அழுத்தம் வயிற்றுப்பகுதியை அதிகமாக தாக்கும். இதயம், தோல், பாலியல் செயல்பாடுகள், தசை மற்றும் எலும்பு என பல்வேறு பாகங்களையும் அதன் செயல்பாடுகளையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படுத்தும் பொதுவான உடல் / மனநல பிரச்னைகள்...

    1.உயர் ரத்த அழுத்தம்
    2.ஸ்ட்ரோக்
    3.கரோனரி இதய நோய், மாரடைப்பு
    4.வயிற்றுப்புண் (அல்சர்)
    5.ஒற்றைத் தலைவலி / டென்ஷன் தலைவலி
    6.அலர்ஜி
    7.மூட்டு வீக்கம் (Arthritis)
    8.முதுகுவலி
    9.எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் நோய் தொற்றுகள் (உதாரணமாக) சளி, காசநோய்.
    10.குடல் நோய் எரிச்சல் (Irritable Bowel Syndrome)
    11.பசியின்மை / அதிக பசி
    12.தோல் நோய்கள்
    13.பாலியலில் நாட்டமின்மை
    14.மனச்சோர்வு (Depression)
    15.மனப்பதற்றம், பயம் (Anxiety - Phobia)
    16.புற்றுநோய்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் சார்ந்த உடல் / மனநலப் பிரச்னைகள்
    பொதுவான பல உடல்/மனநல பிரச்னைகள் உட்பட, பெண்களுக்கு மன அழுத்தத்தால் சில கூடுதல் பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

    1.ஒழுங்கற்ற மாதவிடாய்
    2.மாதவிடாய் அறிகுறிகள் அதிகமாவது (premenstrual syndrome (pms))
    3.வயிற்றுவலி
    4.முடி உதிர்தல்
    5.முதுகு வலி
    6.பருக்கள் (குறிப்பாக தேர்வு நேரத்தில் அதிகரித்தல்)
    7.ஜீரணக் கோளாறு (குடல் எரிச்சல், அல்சர்)
    8.தூக்கமின்மை
    9.கர்ப்பமாக வாய்ப்பு குறைவது
    10.எடை அதிகரித்தல் (இனிப்பை நாடுதல்,
    அதிக பசி மூலமாக சதை போடுதல் - முக்கியமாக வயிற்றுப் பகுதி)
    11.ஃபைப்ராய்டு கட்டி (Fibroids), பாலிசிஸ்டிக் கருப்பைகள் (Polycystic ovaries Syndrome PCOS) மற்றும் பாலிப் (Polyp) பிரச்னைகள் தீவிரமடைவது.

    இப்படி அதிர்ச்சியூட்டும் பல்வேறு ஆபத்தான விளைவுகள் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. மன அழுத்தம் ஒரு மாணவனின் வாழ்க்கையில் எவ்வகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வரும் இதழில் பார்ப்போம்.

    மருத்துவமனைக்கு வரும் 70-80 சதவிகிதத்தினரின் நோய்களுக்கு நேரடியாகவோ/மறைமுகமாகவோ மன அழுத்தமே காரணம் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    மன அழுத்த அறிகுறிகள்

    அதீத மன அழுத்தம், கடுமையான உடல் மற்றும் மனநல பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும். மன அழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணரும் முன்பே இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    தினம் தினம் பழகிப் போவதால் மன அழுத்தத்தின் அறிகுறிகள் வித்தியாசமாக தெரியாது, நாம் அறியாமலேயே நம்முள் படர்ந்து விடும். மன அழுத்தத்தின் அளவு கட்டுப்பாடின்றி போகும்போது, அதை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவான அறிகுறிகள் இவை...

    அறிவுத் திறன் சார்ந்த அறிகுறிகள்

    1.ஞாபகமறதி
    2.கவனம் செலுத்த முடியாத நிலை
    3.முடிவெடுக்க முடியாத நிலை
    4.கெட்ட விஷயத்தை / எதிர்மறை விஷயத்தை மட்டுமே பார்ப்பது
    5.பதற்றமான / வேகமான எண்ணங்கள்
    6.எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதில் சிரமம்
    7.பிரச்னையை மறக்க முடியாத நிலை (திரும்பத் திரும்ப மனதில் சஞ்சலம் / குழப்பம்).

    உணர்வு சார்ந்த அறிகுறிகள்

    1.அதிக கவலை (அழ வேண்டும் போலிருத்தல்)
    2.எரிச்சல் / கோபம்
    3.ஓய்வெடுக்க இயலாமை
    4.அதிக உணர்ச்சிவசப்படுதல்... சம்பந்தமில்லாத உணர்வுகளை சம்பந்தமில்லாத இடத்தில் வெளிப்படுத்துதல் (காரணமற்ற கோபம்)
    5.தனிமையாக உணர்தல்
    6.மனச்சோர்வு (depression), பொதுவாக மகிழ்ச்சியின்மை.

    உடல் சார்ந்த அறிகுறிகள்

    1.வலிகள் (தலைவலி, கழுத்துவலி, மார்புவலி)
    2.வயிற்றுப்போக்கு/ மலச்சிக்கல்
    3.அதிக இதய துடிப்பு
    4.பாலியலில் நாட்டமின்மை
    5.அடிக்கடி சளி பிடித்தல்.

    செயல்பாடு சார்ந்த அறிகுறிகள்

    1.அதிகமாக / குறைவாக சாப்பிடுதல்
    2.அதிகமாக / குறைவாக தூங்குதல்
    3.தனிமையை நாடுதல்
    4.வேலையைத் தள்ளி
    போடுதல் / பொறுப்பை தட்டிக் கழித்தல்
    5.ரிலாக்ஸ் ஆவதற்கு குடி, சிகரெட் / போதை மருந்து உபயோகித்தல்
    6.நகத்தை கடிக்கும் பழக்கம்/ பற்களைக் கடிக்கும் பழக்கம்
    7.உறவுகளோடு தகராறு
    8.வழக்கத்தை விட வேகமாக பேசுதல்.

    பொதுவாக மனஅழுத்தத்துக்காக யாரும் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அது முற்றிப் போய், அதனால் ஏற்படும் உடல் / மன / குடும்ப உறவு சீர்கேடுகளுக்குப் பிறகே, மன அழுத்தம் திரையின் பின் உள்ளது வெளிச்சமாகிறது. இந்த ‘அமைதியான கொலைகார’னை (ஷிவீறீமீஸீt ரிவீறீறீமீக்ஷீ) கண்டறிவோம்... பின்னர் அதை
    வெற்றிகரமாக சமாளிப்போம்.

    (எச்சரிக்கை: தரப்பட்டுள்ள அறிகுறிகள் பல்வேறு உளவியல் / உடல்ரீதியான பிரச்னைகளாலும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரிடம் சென்று, தகுந்த ஆலோசனை பெற்ற பின்பே, ‘இது மன அழுத்தம் சார்ந்த அறிகுறி’ என்பதை உறுதி செய்ய முடியும். அறிகுறிகள் அதிக அளவில் இருந்தால் ஆலோசனை பெற வேண்டும். அல்லது மன அழுத்தத்தை குறைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


    Last edited by chan; 24th Mar 2015 at 02:15 PM.
    jv_66 likes this.

  5. #5
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: மன அழுத்தம் எனும் அமைதிக் கொலைகாரன்!

    Very good info, Latchmy.


  6. #6
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தம் என்றால் என்ன? - What is stress?

    மன அழுத்தம் என்றால் என்ன?


    நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ முகங்களைப் பார்க்கிறோம். அவற்றில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது? ஏன் முகங்களில் இத்தனை இறுக்கம்?

    ஒரு நாளில் எத்தனை முறை மகிழ்ச்சியாக மனம் விட்டு சிரிக்கிறீர்கள்? எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்?‘இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை’ எனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா?



    தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை. பள்ளி செல்லும் குழந்தைகளைக் கேட்டால் படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

    டீன் ஏஜ் குழந்தைகளோ, பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங் களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.

    வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, இணக்கமற்ற மேனேஜர், சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள். வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன?

    புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள்.

    முதியோர் களோ நலிந்து வரும் உடல்நலம், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை, வீட்டுச்சூழல், போதிய பணமின்மை, தனிமை, வெறுமை, கணவன்/மனைவியின் மரணம், எப்போதும் ‘சும்மா’வே இருக்க வேண்டிய நிர்பந்தம், தங்கள் கருத்தை யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல், கடைசி காலம் குறித்த பயம் போன்றவை தொந்தரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். பிரச்னைகளின் காரணிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்...

    ஆனால், அந்தப் பிரச்னை களைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை(STRESS) பார்ப்பது மிக அரிது. பெரும்பாலும் மனஅழுத்தம் என்றாலே அது மனதுக்கும் / உடலுக்கும் ஒவ்வாத விஷயங்களாலேயே ஏற்படும் என பலர் நம்புகின்றனர். அது தவறு.

    Eustress எனப்படும் மன அழுத்தமானது திருமணம், குழந்தைப் பிறப்பு, வேலை மாற்றம் என வாழ்வில் நல்ல தருணங்களில் ஏற்படக்கூடியது. Distress என்பது நெருங்கியவரின் மரணம், வேலை இழப்பு, காதல் தோல்வி எனப் பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படுவது.

    இக்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிய சவாலாக இருக்கும் மன அழுத்தம், நம் உயிரைக் காப்பாற்றவே உருவானது என சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்தானே?

    ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது, ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றினால், அவன் அதனை எதிர்த்து போரிட வேண்டும் (Fight) அல்லது ஓட வேண்டும் (Flight ). ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    நம் நரம்பு மண்டலம் புலியை பார்த்தவுடனேயே, பலவிதமான ஹார்மோன்களை (Adrenaline - Cortisol) சுரக்கச் செய்கிறது. இவை அவசர நடவடிக்கை எடுக்க வசதியாக மனிதனுக்குள் சில மாற்றங்களை செய்கின்றன.

    * இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
    * தசைகள் இறுகும்.
    * ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
    * மூச்சு இரைக்கும்.
    * புலன்கள் கூர்மையாகும்.
    இந்த உடல் ரீதியான மாற்றங்கள் நம்முடைய வலிமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்டி, கவனத்தை அதிகரிக்கச் செய்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும். மன அழுத்தத்தினால் ஏற்படும் இவ்வகை மாற்றங் கள் உடலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து(Physical threats மிருகங்கள்/திருடர்களின் தாக்குதல், இயற்கைப் பேரழிவு, விபத்து போன்ற நிகழ்வுகள்) ஒரு மனிதனைக் காப்பாற்றவே செயல்படுகின்றன. புலியிடமிருந்து தப்பித்தவுடன் மனஅழுத்தம் குறைந்து, உடல் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

    இன்றைய காலகட்டத்திலோ நம் உயிருக்கு ஏற்படும் இவ்வகை அச்சுறுத்தல்கள் குறைந்து நவீன கால பிரச்னைகளான பணத்தேவை, தேர்வு, நச்சரிக்கும் கணவன்/மனைவி, வேலைப்பளு, அலுவலகப் பிரச்னை, பிடிக்காத திருமணம்/வேலை போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

    பல நேரங்களில், உளவியல் அச்சுறுத்தல்களை (Psychological threats) ஏற்படுத்தும் காரணிகளை விட்டு ஒருவரால் தப்பிக்க இயலாது (திருமணம், தேர்வு போன்றவை...). இப்படி அன்றாடம் ஏற்படும் உளவியல் அச்சுறுத்தல்களால், மன அழுத்த ஹார்மோன்கள் தொடர்ந்து சுரந்து கொண்டி ருக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்படித் தொடர்ந்து ஏற்படும் ரசாயனம் மற்றும் நரம்பியல் மாற்றங்களால் பல்வேறு உடல் பாகங்கள் சேதம் அடைகின்றன.

    இது இன்னும் பல மோசமான விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும். ஏன் இவ்வளவு மன அழுத்தம் உங்களுக்கு? இப்படி யாரைக் கேட்டாலும், பல வெளிக்காரணிகளை பட்டியல் இடுவார்கள். உண்மையில், பல நேரங்களில் வெளிக் காரணங்களால் மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. ஒருவர் தமக்குத் தாமே அதிக அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. எப்படி?

    உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் குறுகிய கால மன அழுத்தமானது (மிருகம் / திருடன் தாக்குதல், இயற்கை சீற்றம்) எல்லா மனிதனுக்குமே ஒரே மாதிரி தாக்கத்தையே ஏற்படுத்தும். இதர வகை காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் எல்லா மனிதனையும் ஒரே விதமாகத் தாக்குவதில்லை.

    ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சம்பவம்/காரணி, மற்றொருவருக்கு சிறிய தாக்கத்தைக்கூட ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலர் சிறிய பிரச்னைக்கே மனம் தளர்ந்து போய் விடுவார்கள். சிலரோ, பெரிய பிரச்னைகளை சந்தித்தாலும், அதனை மன உறுதியோடு எதிர்கொண்டு மீண்டு வருவார்கள். பிரச்னை ஒன்றே என்றாலும், அதனை எதிர்கொள்பவரின் மனநிலைக்கேற்ப அதன் விளைவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    குமார் மற்றும் சேகர் ரயிலில் பிரயாணம் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இருவருக்குமே ஒரு பெரிய நிறுவனத்தில் காலை 10 மணிக்கு இன்டர்வியூ. திடீரென ரயில் ஏதோ காரணத்தினால் நின்று விடுகிறது. சரியாக 10 நிமிடம் கழித்து ரயில் நகர்ந்தது. இடைப்பட்ட 10 நிமிடத்தில் இருவரும் எப்படி இந்த பிரச்னையை அணுகினார்கள் எனப் பார்ப்போம்.

    ரயில் நின்றவுடன் குமார் ஏகத்துக்கும் டென்ஷன் அடைந்து, ‘ரயில்வே துறையே இப்படித்தான்... இவர்களெல்லாம் ஒழுங்கா வேலை செய்றதே இல்ல... இதே வேலையாப் போச்சு’ என அருகில் இருப்பவர்களிடம் புலம்பித் தள்ளினான். படபடப்புடன் காணப்பட்டான். ‘எனக்கு மட்டும் இப்படி நடக்கிறதே’ என மனம் வெறுத்தான்.

    ‘இந்த வேலையும் கண்டிப்பாகக் கிடைக் காது’ என நினைத்தான். வீட்டிலிருந்து அந்நேரம் போன் வரவே, ‘உன்னால்தான் லேட்’ என மனைவியிடம் எரிந்து விழுந்தான். மீண்டும் ரயில் நகர்ந்தால், அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் போய் சேர்ந்தான். கோபமும் படபடப்பும் இன்னும் குறையாத குமார், இன்டர்வியூவில் தேர்வாகவில்லை.

    தன் தோல்விக்கு தன் மனைவியும் தன் நேரமும் காரணமென மேலும் வருத்தமடைந்து தன் டென்ஷனைக் குறைக்க மது அருந்தினான். பின்னர் வீட்டுக்குத் தாமதமாக சென்று மனைவியுடன் மேலும் சண்டையிட்டு, தன் வாழ்க்கையை நொந்து கொண்டான்.

    சேகர் ரயில் நின்றவுடன் வெளியே எட்டிப் பார்த்து நிலவரத்தைப் புரிந்து கொண்டான். இறங்கி நடந்து போக வழி உள்ளதா எனப் பார்த்தான்... வழி ஏதுமில்லை என தெரிந்தவுடன், வீட்டுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தான். இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவனாக, ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

    ‘வருத்தப்படுவதால் மட்டுமே வண்டி நகராது’ என்பதை உணர்ந்து, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ரயில் நகர்ந்ததால், அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் போய் சேர்ந்த சேகர், கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்ததால் வேலையும் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் இனிப்பு வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

    இக்கட்டான தருணத்தில் ரயில் நின்றது என்பது, இருவருக்குமே பெரிய அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம். இருவரும் அதை அணுகிய விதம்தான் வேறு. இதற்குக் காரணம் இவர்களின் ஆளுமை (Personality). பொதுவாக மனிதர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அவர்களது உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள்தானே? பிரச்னைகளை அணுகும் போது அதை எந்தளவு வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள் என்பதை, அவர்களின் ஆளுமை நிர்ணயிக்கிறது.

    சேகரைப் போல சரியான விதத்தில் மன அழுத்தத்தை சமாளித்தால் (Adaptive Coping Mechanism), அது உடலை பாதிக்காமல் காப்பாற்றலாம். குமாரைப் போல, தவறான வழியில் (maladaptive coping mechanism) அதைச் சமாளிக்க முற்பட்டால், அதுவே உடல் / மன ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவித்து விடும்.

    இந்த உதாரணத்தில், குமாருக்கு மன அழுத்தம் அதிகமாவதற்கு அவரின் ஆளுமை முக்கிய காரணம். மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய மற்றும் மன அழுத்தத்தை தங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற சில ஆளுமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

    கல்பனாவுக்கு என்ன கவலை?


    6 மாத காலமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருப்பதாக கூறினார் கல்பனா. ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்’ என கேட்டபோது, ‘இதுதான்’ என அவரால் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி, பணம், ஆரோக்கியம், வேலை, குடும்பம் என ஒன்றன் பின் மற்றொன்றாக அவரை கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.

    நடுக்கம், தலைவலி, எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை அடிக்கடி ஏற்படுவதால், நிறைய விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தப்பட்டார். எந்த நேரமும் எதையேனும் நினைத்துக் கவலையடைவதாகவும் கூறினார்.

    அலுவலகத்தில் யாரேனும் சாதாரணமாகக் கோபப்பட்டால் கூட, அதையே நினைத்து பல மணி நேரம் வருத்தப்படுவதாகவும் இதனால் தன் வேலை பறிபோய் விடுமோ என பதற்றமாவதாகவும் சொன்னார்.

    எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவும் ‘ஏதோ ஆபத்து நேர்ந்து விடுமோ’ என மனம் படபடப்பாக உள்ளதாகவும் பயந்தபடியே கூறினார். இவை காரணமற்ற கவலைகள் என உணர்ந்தாலும், கவலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிக் கொண்டே குலுங்கி அழ ஆரம்பித்தார்.

    கல்பனா பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என அறிந்த பிறகே, என்னிடம் வந்தார். சில உளவியல் பரிசோதனைக்கு பின்னர், கல்பனாவுக்கு ஏற்பட்டது ஒருவித மனப்பதற்ற நோய் (Generalized Anxiety Disorder) என்பது தெரிய வந்தது. இந்த மனநலக் கோளாறு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

    மரபணு ஓரளவு பங்கு வகித்தாலும் பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படும் தருணத்தில் இம்மாதிரியான உளநோயின் அறிகுறிகள் வெளிப்படையாக உணரப்படும். கல்பனா சிறு வயதிலிருந்தே அவர் அம்மாவைப் போன்று பயந்த சுபாவம் கொண்டவர்.

    அவரது தாயார், தன் கணவனின் குடி மற்றும் சந்தேக புத்தியால் விவாகரத்து பெற்று கல்பனாவை தனியே வளர்த்து வந்துள்ளார். சென்ற ஆண்டி லிருந்து மாப்பிள்ளை தேடுவதாக அவர் அம்மா சொன்னதிலிருந்து, கல்பனாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. திருமணம் பற்றிய பயம், அவநம்பிக்கை, ஆண்கள் மேலுள்ள வெறுப்பு ஆகியவை இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தியுள்ளன. பல வாரங்கள் மனநல ஆலோசனைக்குப் பின்னர் கல்பனாவின் உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறைந்தன. சில மாதங்களில், கல்பனா வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளி க்கும் பக்குவம் பெற்றார்.

    திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பதையும் உணர்ந்தார். இப்போது, வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, மனநிறைவுடன்திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கல்பனா.கல்பனா மற்ற இளம் பெண்களைப் போலத்தான் தோற்றம் கொண்டுள்ளார். ஆனால், அவர் அனுபவிக்கும் மன உளைச்சலை, அவராலும் ஒரு மனநல ஆலோசகராலும் மட்டுமே உணர முடியும்.

    மனநலம் குன்றியவர்களைத் தோற்றத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடலாம் என்பது தவறான எண்ணம். அப்படியோர் கருத்து ஊடகத்தினாலும் சாலையோரம் பார்க்கும் மனச்சிதைவு நோயினால் (Schizophrenia) பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதாலும் ஏற்படுகிறது. பெரும்பாலான மனநலம் குன்றியவர்கள், நாம் தினசரி வாழ்வில் பார்க்கும் பத்து பேரில் ஒருவராகவும் இருக்கலாம். மனநோய் குறித்த தவறான கண்ணோட்டம் மாறினால்தான் பலரும் விழிப்புணர்வுடன் கல்பனாவைப் போல தங்கள் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க முன் வந்து, நிம்மதியாக வாழ்வை ரசிக்க முடியும்.


    jv_66 and Dangu like this.

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?

    Thanks for sharing.

    chan likes this.
    Jayanthy





  8. #8
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது

    மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது

    மனநோய்..... மருத்துவத்தால் சரியான விடை சொல்ல முடியாத நோய். எல்லா நோய்களையும், அந்த நோய் தாக்கிய நபரால் விவரித்து விட முடியும். ஆனால் மன நோய் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியாது. இதனால் உறவினர்கள் சொல்லும் யூகங்களின் அடிப்படையிலும், டாக்டர்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் மருத்துவம் பார்க்கின்றனர்.
    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பத்து கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.


    என்ன காரணம்:
    இதற்கு என்ன அடிப்படை காரணம்? சிதைந்து போன உறவு முறைகள், கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானது, நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, யாரும் இல்லையோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு, குடிபழக்கம் இப்படி பல காரணங்களை கூற முடியும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலோனோருக்கு குடி பழக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் அதிகமாகி கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான் மனநோய் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் போது டாக்டரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை மேற்கொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும். மருத்துவத்தின் வளர்ச்சி மூலம் இந்த நோயை ஆரம்ப கட்டத்தில் 100 சதவீதம் குணமாக்க முடியும்.

    வாழவே ஆசை இல்லை:
    பல்வேறு பிரச்சனைகளுக்காக மனநல ஆலோசனை பெற வரும் மக்கள் மத்தியில் தனக்கு வாழவே ஆசை இல்லை என்று வந்த ஒரு நோயாளியைப் பற்றிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நடுத்தர வயதில் உள்ள குடும்பத் தலைவி. அவரது கணவர் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தார். இரண்டு குழந்தைகள் எட்டு, ஐந்தாம் வகுப்பில் படிக்கிறார்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக போய் கொண்டிருந்த கால கட்டத்தில் கணவருக்கு திடீரென்று விபத்து ஏற்பட்டு, அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வருமானம் குறைந்தது. கணவரின் படுக்கை ஒரு புறம். மறுபுறம் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பொருளாதார நெருக்கடி. இதனால் இந்த பெண்ணிற்கு தூக்கம் குறைய ஆரம்பித்தது. ஒரு சில மணி நேரம்கூட தூங்க முடியாமல் அதிகாலையிலேயே கொட்ட கொட்ட விழித்திருப்பார். மனதில் தாங்க முடியாத துயரத்தோடு அடிக்கடி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். வெளியில் எங்கும் செல்வது இல்லை. வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது போல் எண்ண ஆரம்பித்தார். தனக்கு வாழவே ஆசை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த அவர் திடீரென்று ஒரு நாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்தார். நல்ல வேளையாக தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது. சில நேரங்களில் தன் வலது கை காணாமல் போய்விட்டதாகவும் கூறிக்கொண்டிருப்பார். இந்த நிலையில் என்னிடம் அழைத்து வந்தார்கள்.

    மன அழுத்த அறிகுறி:

    அந்த பெண்மணியை பரிசோதித்த போது அவருக்கு தூக்க குறைவு, மனக்கவலை, எந்த ஒரு நிகழ்விலும் மகிழ்ச்சி இல்லாமல், மகிழ்ச்சியை உணர முடியாத நிலை இருந்தது. தற்கொலை எண்ணங்களும், உடலின் ஏதோ ஒரு பாகம் இல்லாதது போன்ற சிந்தனையில் ஏற்படும் தவறான நம்பிக்கையும் இருப்பது தெரிந்தது. இவை யாவும் மன அழுத்த நோயின் அறிகுறிகள். இதை உணர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த போது மீண்டு வந்து இன்று நலமாக இருக்கிறார். மன அழுத்த நோய் மனம் சார்ந்த பிரச்னை. ஆண்களைவிட பெண்களிடம் இரண்டு மடங்கு அதிகமாக வெளிப்படுகிறது. பொதுவாக 20 முதல் 50 வயது வரை மன அழுத்தம் அதிகமாக வெளிப்படுகிறது. தனியாக இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள் அதிகம் மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயர சம்பவங்கள் பொருளாதார பின்னடைவுகள், தோல்விகள் போன்றவை மன அழுத்த நோய் உடனடியாக வெளிப்பட காரணமாக அமைகின்றன. ஒரு சிலருக்கு, எந்தவித காரணமும் இல்லாமலும் மன அழுத்த நோய் ஏற்படலாம். தன்னம்பிக்கையற்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பது, அதிக ஒழுங்கு எதிர் பார்ப்பது போன்ற ஆளுமை குணம் கொண்டவர்களுக்கும் மன அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அது மூளை நரம்புகளில் சலனத்தை ஏற்படுத்தி பின்னர் அது பழைய நிலைக்கு வராத போது அந்த பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். ஆதரவற்ற வயோதிகர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது.

    யாருக்கு அதிகம்:
    மாரடைப்பு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், பல நீண்ட கால வியாதி உள்ளவர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அவருக்கு நோய் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குற்ற உணர்வுகள், தன்னைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எதிர்மறையான எண்ணங்கள், பேச்சு, செயல் மற்றும் எல்லாவற்றிலும் வேகம் குறைதல் போன்றவை மன அழுத்தநோயின் அறிகுறிகள். வளர் இளம் பருவத்தினர் போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியில் பின்தங்கல், வீட்டைவிட்டு ஓடிப்போதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் மன அழுத்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்வது அவசியம். இன்று நவீன மருந்துகள் மன அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்த வல்லவை. மருந்துகளோடு, ஆற்றுப்படுத்துதலும் (அமைதிப்படுத்துதல்) இணைந்து சிகிச்சை செய்தால், மன அழுத்த நோயிலிருந்து பூரணமாக குணமடையலாம்.

    - டாக்டர் அருள்பிரகாஷ், மனநலத்துறை இணை பேராசிரியர், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி


    Last edited by chan; 18th May 2015 at 07:47 PM.
    jv_66 likes this.

  9. #9
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தத்தை விரட்ட என்ன செய்ய வேண்டும்

    மன அழுத்தத்தை விரட்ட என்ன செய்ய வேண்டும்?
    தற்போது சமூகத்தில் பள்ளி செல்லும் குழந்தையிடமிருந்து, நாட்டை ஆளும் அதிகாரிகள் வரை பரவலாக பேசப்படும் ஒரே வார்த்தை “மன அழுத்தம்”. இது வரக் காரணங்கள் என்ன, நாம் எங்கே தவறு செய்கிறோம்?! இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு…

    சத்குரு:
    இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு வார்த்தைகள் stress Management. நிர்வாகம் பற்றி பேசும் எல்லா இடங்களிலும், மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி சொல்லித் தர, மனவியல் நிபுணர்கள்
    தலையெடுத்துவிட்டார்கள்.

    வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல! உங்கள் தொழிலை, குடும்பத்தை, செல்வத்தையெல்லாம் நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. மன அழுத்தம் என்பது விட்டுத் தொலைக்க வேண்டிய விஷயம் அல்லவா? அதைக் கூடவே வைத்துக் கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும்?

    வளர்ச்சி… பணம்…

    நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்கவே முடியாதது என்றாகிவிட்டது. காரணம், வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்துவிட்டதால் வந்த குழப்பம் இது. வாழ்வின் மற்ற பல முக்கிய அம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது. நிர்வாகம் என்றாலே, அதைப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தும் அவலத்தால் வந்த நிலை இது. யார் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? ஒரு வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று முதலில் உங்களுக்குத் தெரிந்திருந்தால்தானே, அதை நீங்கள் அடுத்தவருக்குச் சொல்லித் தர முடியும்?

    சங்கரன்பிள்ளையின் நிர்வாக யுக்தி

    சங்கரன்பிள்ளை தன் மகனை அழைத்தார். “நீ மேஜராகப் போகிறாய். எனக்குப் பிறகு நிர்வாகத்தை நீதான் கவனிக்க வேண்டும். ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்!” என்றார். அன்று மாலை, மகனை கிளப்புக்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோரும் மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

    சங்கரன் பிள்ளையும் ஒரு மதுக் கோப்பையை எடுத்துக் கொண்டார். “நீயும் எடுத்துக் கொள்” என்று மகன் கையிலும் ஒரு கோப்பையைக் கொடுத்தார். சிலரை அறிமுகம் செய்து வைத்தார். “பெரிய மனிதர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ளும் இடம் இதுதான்.

    மற்றவர்களைக் குடிக்கவிடு. நீ நிதானம் இழப்பதற்கு முன்னால் குடிப்பதை நிறுத்திவிடு. இதுதான் முதல் பாடம்” என்றார். அதற்கு முன் குடித்துப் பழக்கம் இல்லாததால், மகன் சற்றுப் பதற்றமாக இருந்தான்.

    சங்கரன் பிள்ளையோ, கோப்பைக்குப் பிறகு கோப்பை என்று நிறுத்தாமல் குடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மகன் அவரை நிறுத்தினான். “அப்பா…” “என்ன மகனே?” “நிதானம் இழந்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது?”

    சங்கரன்பிள்ளை பக்கத்து மேஜையைக் காட்டினார். “அங்கே உட்கார்ந்திருக்கும் நான்கு பேர் உனக்கு எட்டுப் பேராகத் தெரிந்தால், நிதானம் இழந்துவிட்டாய் என்று அர்த்தம்.

    அதற்கு மேல் ஒரு சொட்டுகூட குடிக்காதே!” மகன் பதறினான்… “ஆனால், அங்கே இரண்டு பேர்தானே இருக்கிறார்கள் அப்பா?” சங்கரன்பிள்ளையின் நிர்வாகம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்.

    யாரை நிர்வகிக்க வேண்டும்?

    மற்றவர்களை நிர்வகிக்கும் திறனை நீங்கள் முழுமையாகப் பெற வேண்டுமென்றால், அடிப்படையில் உங்களை அல்லவா முதலில் நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் உடலை, மனதை, உணர்ச்சிகளை எல்லாம் திறமையாகக் கையாளக் கற்றுக் கொண்ட பின்தானே,

    நீங்கள் மற்றவர்களை நிர்வகிக்க முனையலாம்? ஓய்வாக இருந்தபோது, வேலை கிடைக்காதா என்று ஏங்கினீர்கள். கிடைத்தவுடன் சந்தோஷத்தையெல்லாம் இழந்து, படபடப்புடன் ரத்த அழுத்த நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்!

    பதவி உயர்வு கிடைக்கும்வரை, அதற்காகப் போராடினீர்கள். இப்போது நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள்.

    இன்னும் உயரத்துக்குப் போனால், என்ன சொல்வீர்களோ? ‘முன்னால் நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று’ என்பீர்களா? வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல!

    தோல்வியால் உண்டான துன்பத்துக்காவது அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், வெற்றி என்பது நீங்கள் வியர்வை சிந்தி, கடுமையாகப் போராடி உங்களால் எவ்வளவு கடினமாக ஈட்டப்பட்டது?

    அந்த வெற்றியாலும் துன்பம் வந்தால், உங்கள் அடிப்படையிலேயே தவறு இருக்கிறதே! உங்களால் கையாள முடியாததை எதற்காக விரும்பினீர்கள்? நீங்கள் கடைநிலைத் தொழிலாளியானால் என்ன, கட்டுப்படுத்தும் முதலாளியானால் என்ன?

    உங்களை நிர்வகித்துக் கொள்ளும் முழுமையான திறனின்றி, நீங்கள் மேல்நிலைக்கு வர முனைந்தால், அது ஒரு விபத்தாகவே முடியும். வெளிச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல், உங்கள் உள்தன்மையை நிர்வகிக்க முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    சுற்றியிருப்பது சகதியாக இருந்தாலும் அதையே தன் உரமாகக் கொண்டு, தாமரை தன் பூரண அழகை வெளிப்படுத்துகிறது அல்லவா! நறுமணத்தை பரப்புகிறது அல்லவா? உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் அமைய வேண்டும்.

    சுற்றுப்புறம் எப்படி இருந்தாலும், உறுதியோடு செயல்பட்டு, அதிலிருந்து உங்களுக்கான உரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல், உங்களை ஆனந்தமாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், நம்ப முடியாதவற்றைக் கூட நிகழ்த்திக் காட்டலாம்.


    வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல!




    Last edited by chan; 15th Oct 2015 at 01:37 PM.

  10. #10
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to reduce stress? - மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

    மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

    இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உரு வாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதி யாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள்.

    என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல் லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள்.

    புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டி னுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய் வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம்.

    அது போலவே மன அழுத் தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக் கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த் துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

    தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

    அமைதியான குடும்பச் சூழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

    ஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதி யான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி.

    அது தாயை யும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக் காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படு பவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது.

    எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை "முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசி யம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க் காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

    அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்."இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

    கனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.

    இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள்.

    இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.

    ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

    இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சு??ழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

    உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சு??ழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

    குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள்.

    குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது "உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் "நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

    மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

    அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

    * காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

    * காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    * வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

    * முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

    * வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

    * சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

    *கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

    * சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

    * இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

    * தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

    * செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

    *சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

    * செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.

    * உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

    எளிமையாக வாழுங்கள்.

    * உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

    நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

    * ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

    * எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

    * குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

    * தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

    * பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

    * என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

    * உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

    * நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

    * வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

    * இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    * பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

    * மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter