Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By chan
  • 2 Post By Alagumaniilango
  • 1 Post By vaishu2405

கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?


Discussions on "கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?" in "Psychological Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    கோபத்தை சமாளிப்பது எப்படி?

    நன்றி - இராம. கார்த்திக் லெட்சுமணன், உளவியல் ஆலோசகர்


    தன்னை காயப்படுத்தும் சொற்கள் அல்லது நடத்தைகளை மற்றவரோ அல்லது தானோ செய்யும் போது கோபம் ஏற்படுகிறது. கோபம் என்பது ஓர் உணர்ச்சி. உணர்ச்சிகளை நேர்மறை, எதிர்மறை என்று உளவியல் பிரிப்பதில்லை. கோபத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நேர்மறை, எதிர்மறை என்ற பாகுபாடு வருகிறது.


    தங்களது கோபத்தை சிலர் வெளிப்படுத்துவார்கள், சிலர் வெளிப்படுத்தமாட்டார்கள். வெளிப்படுத்துவதில் சிலர் மற்றவர்களை திட்டுவார்கள், சிலர் கையில் கிடைக்கும் பொருட்களை உடைப்பார்கள், சிலர் புலம்புவார்கள். சிலர் தன் மீதே அந்த கோபத்தை காட்டிக்கொள்ளும் விதத்தில் சாப்பிடாமல் இருப்பது, சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போன்றவற்றை செய்வார்கள். வெளிப்படுத்தாமல் இருப்பவர்களில் சிலர் எப்போதுமே தனது கோபத்தை வெளிப்படுத்தாது இருப்பார்கள். வேறு சிலர் சமயம் பார்த்து வெளிப்படுத்த காத்திருப்பார்கள்.

    நாம் கோபப்படும்போது நம் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன மூளையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் அமிக்டலாவின் கட்டளைப்படி, கேட்டகாலமைன் எனும் இரசாயனம் சுரக்கத் தொடங்குகிறது. இதன் மூலம் அதிவேக ஆற்றல் உங்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு கிடைக்கிறது. இந்த இரசாயனம் மூச்சின் வேகத்தை அதிகரித்தும், இதயத்தை வேகமாக துடிக்க வைத்தும், உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழக்கத்தை விட அதிகமாகவும், அதிவேகத்திலும் சப்ளை செய்கிறது. மேலும் அட்ரீனலின், நான்-அட்ரீனலின் ஹார்மோன்களும் கோபத்தின் போது சுரந்து உங்களை சண்டையிடும் நிலைக்கு தயார்படுத்திவிடுகிறது.

    கோபத்தை நேர்மறையாக கையாள முயல்வதன் மூலம், மூளையின் ப்ரி-ஃபிரான்ட்டல் கார்டெக்ஸ் பகுதியை செயல்பட வைத்து, சமூக விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் நடக்க நாம் முற்படுகிறோம்.
    சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மற்றவரை துன்புறுத்தி விடுகிறோம். வேறு சில நேரங்களில் கோபத்தை தங்கள்மீதே வெளிப்படுத்திக்கொண்டோ அல்லது நெடுநாட்கள் மனதிற்குள் வைத்து வைத்து புழுங்கியோ நம்மை நாமே துன்புறுத்தி விடுகிறோம். துன்புறுத்துதல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. தனக்கு நேர்ந்தாலும் சரி, மற்றவர்களுக்கு நேர்ந்தாலும் சரி, துன்பம் தவிர்க்கப்பட வேண்டியது. ஆகவே கோபத்தை நேர்மறையாக வெளிப்படுத்தி விடுவதே சிறந்தது.

    கோபத்தை எப்படி நேர்மறையாக வெளிப்படுத்துவது?

    நாம் கோபமாக இருக்கிறோம் என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பின்வருபவனவற்றில் ஒன்றிரண்டை செய்து பார்த்து, எது உங்களுக்கு பொருத்தமாய் இருக்கிறது என்று அறிந்து கொண்டு அவற்றை கோபம் வரும்போதெல்லாம் செய்து வாருங்கள்.

    • நான் கோபமாக இருக்கிறேன் என்றும், கோபத்துக்கான காரணம் இதுதான் என்பதையும் குரலை உயர்த்தாமல் உரியவருக்கு தெரிவித்து, பிரச்சனையை தீர்க்க என்ன வழி என்பது பற்றி யோசிக்கத் தொடங்கலாம்
    • கோபம் வந்தவுடனேயே அந்த இடத்தை விட்டு அகன்று சென்று, கோபம் குறைந்தவுடன் அது பற்றி பேசத் தொடங்கலாம்.

    • கோபம் வந்தவுடன், தண்ணீர் குடிப்பதோ அல்லது மூச்சை மெதுவாக இழுத்து விடுவதையோ செய்யலாம். கோபம் குறைந்த பின்னர், அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கலாம்.

    • கோபத்தை ஒரு இடத்தில் வெளிக்காட்டவே முடியாது எனில், டைரியிலோ, ஒரு காகிதத்திலோ அல்லது உங்களது செல்ஃபோனிலோ அல்லது கணிணியிலோ உங்களுக்கு தோன்றுபவனவற்றையெல்லாம் எழுதலாம். பின்னர் அவற்றை அழித்துவிட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம்.

    • கோபம் வந்தவுடன், கோபம் வராதது போல் சிறிது நேரம் நடித்து/சிரித்து, உரிய வேலையை முடித்தவுடன் அதனைப் பற்றி பேசத்தொடங்கலாம்.
    மேற்கூறியவைகளில் சிறந்த முறை, அவ்வளவு சிறந்த முறை இல்லை என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. உங்களுக்கு எது/எவை ஒத்துவருகிறதோ அது/அவை சிறந்த முறை(கள்) அவ்வளவுதான்! ஏனெனில் உளவியல் சொல்கிறது – நாம் ஒவ்வொருவரும் வேவ்வேறு மாதிரியானவர்கள், தனித்தன்மை கொண்டவர்கள்!

    மேலும் அடிக்கடி கோபம் வந்தால், எப்போதுமே டென்ஷனாய் இருப்பது போன்றும், ரிலாக்ஸ் செய்ய எதுவுமே இல்லை என்பது போன்றும் பலருக்கு தோன்ற அது புகையிலை, மது போன்ற போதைப்பழக்கங்களுக்கு அவர்களை இட்டுச்செல்கிறது. இரத்த அழுத்த நோய், இதய நோய்கள், மனப்பதற்ற நோய்கள், மனச்சோர்வு, தீராத தலைவலி, உடல் வலி என பற்பல நோய்களுக்கு கோபம் ஒருவரை ஆளாக்கி விடும் வாய்ப்பு உண்டு.

    அதற்காக கோபமே படக்கூடாது என்று சொல்லமுடியாது. கோபம் அடிக்கடி வருகிறதா?

    அது உங்கள் தினசரி வாழ்க்கையை/செய்ய வேண்டிய வேலைகளை/உங்களை/ உங்களைச் சுற்றி இருப்பவர்களை பாதிக்கிறதா?

    , மிக அதிக நேரத்திற்கு அந்த கோபம் குறையாமல் அப்படியே இருக்கிறதா?

    கோபத்தின் தீவிரம் அதிகமாக இருக்கிறதா?


    இந்த கேள்விகளில் ஒன்றுக்கு ‘ஆமாம்’ என்பது உங்களது பதிலாய் இருந்தால் நீங்கள் அதுபற்றி முறையான நடவடிக்கைகள எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள். இங்கு கூறியுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க முடியாமல் போனாலோ அல்லது அவற்றை கடைபிடிப்பதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக ஓர் உளவியல் ஆலோசகரை சந்தித்து தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது!


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 20th Apr 2015 at 02:44 PM.

  2. #2
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    Nalla update chan..ena tha padichalum itha tha pannanumnu nenaichalum antha time panna mudilaiye yean..

    chan and RathideviDeva like this.
    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu


    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

  3. #3
    vaishu2405 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Coimbatore
    Posts
    152

    Re: கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    i once thought about tattooing myself with words 'peace' or a 'lotus' because it symbolises peace and calmness..i didnt know whether it was a solution...but why i opted for it was because i needed a constant reminder i need to be calm.it may sound ridiculous..but i was driven to that extent...just felt like sharing with you all.thanks

    RathideviDeva likes this.

  4. #4
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    Thanks for the share


  5. #5
    nusrath's Avatar
    nusrath is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Nusrath
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    srilanka
    Posts
    319
    Blog Entries
    4

    Re: கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    thank you for sharing...


  6. #6
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: கோபத்தை சமாளிப்பது எப்படி? - How to Control Anger?

    Nice friend.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter