Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 7 Post By jayakalaiselvi
  • 3 Post By Vimalthegreat
  • 2 Post By jayakalaiselvi
  • 1 Post By Mals
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By thenuraj
  • 1 Post By jayakalaiselvi

super ego


Discussions on "super ego" in "Psychological Problems" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    super ego

    ஈட் – ஈகோ – சூபர் ஈகோ:

    மனித மனம் 3 இணைந்து செயல்படும் உறுப்புகளாக இருக்கிறது என்று ஃப்ராயட் சொல்வார். அதில் ஈட் என்பது நமது உடல் தேவைகளைக் குறிக்கும். பசி, தாகம், பாலுணர்ச்சி போன்ற உள்ளுணர்வுகள் மனிதனுக்குள் மிருகங்களைப் போலவே இருக்கின்றன. வையகத்தில் பிராணிகள் மிகச் சிறிய உயிரினங்களாகத் தோன்றி படிப்படியாக உயிர் மலர்ச்சியின் விளைவாக பலவித உயிரினங்கள் உருவாயின என்றும் அந்த உயிர் மலர்ச்சியின் பலனாகவே மனிதன் தோன்றினான் என்றும் சார்லஸ் டார்வின் விளக்கினார். மனிதன் மிருகங்களின் முன்னேற்றமடைந்த உருவம் என்பதால் மிருங்களுக்கு உள்ள உள்ளுணர்வுகள் மனிதனையும் இயக்குகின்றன. இந்த உள்ளுணர்வுகளையே ஒட்டு மொத்தமாக ஃப்ராயட் ஈட் என்ற பெயர் கொடுக்கிறார்.


    ஒரு மிருகம் எவ்வாறு தன் பசி, தாகம், பாலுணர்ச்சி ஆகியவையை உடனே திருப்திபடுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அதே போல மனித மனதிற்குள் ஈட் விரும்புகிறது.


    மிக சின்ன வயதில் ஒரு மனித குழந்தையும் பசி, தாகம், தூக்கம் ஆகிய தேவைகள் உடனே திருப்திப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் பெற்றோர்கள மற்றும் குடுமபத்திலுள்ள உள்ள மற்ற உறுப்பினர்கள் அக்குழந்தைக்கு சுயக்கட்டுப்பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்.


    குழந்தை பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு செயல் செய்யும்போது “வேண்டாம்! வேண்டாம்!” என்று பெற்றோர்கள் சொல்ல, குழந்தையும் அதே மாதிரி ஒரு செயல் செய்யும்போது தன்னையே ஞாபகப்படுத்துவதுபோல் “வேண்டாம்! வேண்டாம்!” என்று சில சமயம் சொல்வதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். இதுதான் இந்த உலகத்திற்கு புதிதாக வந்த குழந்தை தான் வாழப் போகும் சமுதாயத்தில் சில செயல்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், சமுதாயத்தில் வாழ சில நெறிமுறைகள் இருக்கின்றன என்றும் கற்றுக்கொள்ளூம் தருணம். நெறிமுறைகள் குழந்தையின் மனதில் ஒரு பாகமாக பதியவிடுகின்றன. நெறிமுறைகள் பதிந்திருக்கும் மனதின் இந்த பாகத்தை ஃப்ராயட் ஸுப்பர் ஈகோ என்ற பெயர் சூட்டுகிறார்.


    ஆகவே, ஒருபுறம் ஈகோ உடனடியாக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று விரும்பும்போது ஸுப்பர் ஈகோ ஆசைகளை நெறிமுறைகளை பின்பற்றித்தான் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிடுகிறது. அதாவது ஈகோவின் தேவைகளும் (ஆசைகளை உடனே பூர்த்தி செய்!) ஸுப்பர் ஈகோவின் தேவைகளும் (நெறிமுறைகள் அனுமதிக்கும்வரை காத்திரு!) முரண்படுகின்றன. இந்த முரண்பாட்டை சமாளித்து எது செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது ஈகோ.

    நாம் ஒரு கடைச்சந்தைக்குப் போகிறோம். ஐஸ்கிரீம் பார்த்து அதை உடனே சாப்பிட ஈடுக்கு ஆசை வருகிறது. ஸுப்பர் ஈகோ “வேண்டாம்! அது உன்னுடையது அல்ல. சமுதாய நெதிமுறைகளின்படி நீ இன்னொருவருக்கு சொந்தமான பொருளை உபயோகிக்கக் கூடாது” என்று தடுக்கிறது. இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஈகோ ஒரு நடுநிலை பாதையை கண்டுபிடிக்கிறது, அதாவது வீட்டுக்குச் சென்று காசு கொண்டுவந்து ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவது.


    இவ்வாறு ஈகோ எப்பொழுதும் ஈட்-யின் “உடனடி-திருப்தி” என்ற வரபுறுத்தலையும் ஸுப்பர் ஈகோவின் “சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆசை-பூர்த்தி கூடாது” என்ற வர்புறுத்தலையும் திருப்திபடுத்த ஒரு வழி தேடுகிறது.


    சில உதாரணங்கள் ஈட்-ஸுப்பர் ஈகோ – ஈகோ ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவும்:
    உதாரணம் 1:

    ஈட்: எனக்கு அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வேண்டும்

    ஸுப்பர் ஈகோ: கூடாது. அவள் உன் மனைவி அல்ல

    ஈகோவின் முடிவு: நான் நன்றாக உழைத்து ஒரு நல்ல பதவிக்கு வருவேன். அப்பொழுது அந்த பெண்ணைக் கல்யாணம் செய்து அவளை பாலியல் உறவு கொள்வென்.


    இவ்வாறு, ஈகோ இரண்டையும் திருப்திப்படுத்த ஒரு நடுநிலை பாதை கண்டுபிடிக்கிறது.
    உதாரணம் 2:

    ஈட்: எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே, எனக்கு உடனே நிறைய பணம் கொடு.

    ஸுப்பர் ஈகோ: இன்னொருவரின் பணத்தை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே!

    ஈகோவின் முடிவு: நான் உழைத்து சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணம் சம்பாதிப்பேன்.

    இந்த உதாரணங்களில் நமக்கு மிக பொறுத்தமான ஒரு அம்சத்தைப் பார்க்கிறோம். அதாவது, சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஈகோவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது நாம் அந்த பூர்த்தியை தள்ளி வைக்க வேண்டி வருகிறது. இதை உளவியலாளர்கள் postponement of gratification அதாவது திருப்தி-தள்ளி- வைப்பு என்று வர்ணிக்கிறார்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: super ego

    So ego character kuda super ego va nama change panita namaku nalathu pola,
    ,ninaivula vachikanum, postponement of gratification - beautiful terminology j


    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: super ego

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    So ego character kuda super ego va nama change panita namaku nalathu pola,
    ,ninaivula vachikanum, postponement of gratification - beautiful terminology j
    Already ego super...... Koodavey super egovum vachukkuvom.......

    Vimalthegreat and thenuraj like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: super ego

    Quote Originally Posted by Mals View Post
    thanks for the share
    My pleasure mam.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: super ego

    Nice sharing...

    jayakalaiselvi likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: super ego

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Nice sharing...
    Thank u sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: super ego

    Quote Originally Posted by thenuraj View Post
    Nice Sharing... தெளிவாக புரியவைத்த பதிவு ... நன்றி ஜெயா
    Welcome sis.....

    thenuraj likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter