முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட
Discuss here on முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட within the Schooler forums, part of the Parenting forum; முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள் தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ ...
-
2nd Jan 2012, 12:26 PM #1
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,794
- Blog Entries
- 16
முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட
முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள், சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல், கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன், 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.
குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
Similar Threads
-
உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா..
By lathabaiju in forum ParentsReplies: 2Last Post: 14th Dec 2011, 01:12 PM -
உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள
By Nishahameetha in forum Skin CareReplies: 0Last Post: 1st Dec 2011, 10:36 AM -
நகங்களில் சிதைவு ஏற்படாமல் இருக்க ...
By a_hat in forum Hand, Foot & Nail CareReplies: 0Last Post: 30th Nov 2011, 03:50 PM -
காலையில் எழுந்திருக்க கஷ்டமா ? இது உங்கள
By revamanian in forum Interesting FactsReplies: 2Last Post: 4th Sep 2011, 10:11 PM -
பாதுகாக்கப்படுமா இயற்கை சின்னங்கள்
By Parasakthi in forum Sugg. to Govt & SocietyReplies: 12Last Post: 19th Aug 2011, 10:32 AM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks