Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree62Likes

Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!


Discussions on "Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!" in "Schooler" forum.


  1. #31
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    This is really very useful thread...thanks for sharing....


    Sponsored Links
    silentsounds and jv_66 like this.
    ​LOVE,LIVE,LAUGH

  2. #32
    cool.kavya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Southafrica
    Posts
    16

    Re: Educational tv channels for kids

    Very useful information in this forum. Thanks for all friends.

    silentsounds and jv_66 like this.

  3. #33
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Childrens இணையத் தேடல் இஞ்சின் கிட்ரெக்ஸ்

    குழந்தைகளுக்கான இணையத் தேடல் இஞ்சின் கிட்ரெக்ஸ்



    உங்கள் குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? ஏற்கனவே இந்த மலரில், இத்தகைய சூழலுக்கு சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் முறைகள் குறித்து, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்து பார்த்துள்ளோம்.


    அண்மையில், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய தேடுதல் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் இணைய முகவரி KidRex - Kid Safe Search Engine இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம். இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது. குழந்தைகள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. இதில் உள்ள Parents பிரிவில் நாம் இத்தளத்தின் இயங்கு தன்மை குறித்து அறியலாம். மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பல குறிப்புகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தினை ஹோம் பேஜாக மாற்றுவதற்கும் வழி தரப்பட்டுள்ளது. இதில் தந்துள்ள குறிப்புகள் மற்றும் வழி காட்டுதல்களைப் பின்பற்றி செட் செய்துவிட்டால், உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினைப் பயன்படுத்தி, அவர்கள் தேடலை மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.


    மற்ற பிற தேடுதலுக்கான தளங்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் dinosaurs குறித்து அறிய, அந்த சொல்லை, இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டியவுடன், குழந்தைகளை மனதில் கொண்டு டினோசார் குறித்து தகவல்களைத் தரும் தளங்களின் பட்டியல் மட்டுமே காட்டப்படும். இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.

    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  4. #34
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    wow...super thread ...MY HEARTY THANKS TO ALL ..!!

    Last edited by naliniselva; 14th Nov 2013 at 03:04 AM.


    நளினி



  5. #35
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    Thanks every1 for giving useful information..

    silentsounds and jv_66 like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  6. #36
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

    இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?


    இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய நீர்யானை பொம்மையை பார்க்கலாம். அந்த நீர்யானை படத்துக்கு கீழே தான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியனும் வைச்சுக்கங்க, அந்த வார்த்தையை நீர்யானை படத்துக்கு கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்தால் போதும் . அந்த வார்த்தைக்கான அர்த்தம் வந்து நிற்கும். அட, இதற்கு தான் ஆன்லைன் அகராதிகள் இருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இந்த தளம் அதுக்கு மேலே. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இந்த தளத்தில் என்ன எல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டால் அசந்து போவீங்க.


    இதில் வார்த்தையை டைப் செய்ததுமே , அந்த வார்த்தை தொடர்பாக உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கப்படும். அதாவது அந்த வார்த்தைக்கான எதிர் சொல் வேணுமா ? அல்லது அதற்கான இன்னொரு வார்த்தை வேணுமா? இல்லை அந்த சொல்லுடன் எதுகை மோனை நயத்துடன் சேர்ந்து ஒலிக்க கூடிய சொற்கள் தேவையா ? இப்படி பலவிதமான தேர்வுகள் கொடுகப்பட்டிருக்கும். இதற்காகவே தனியே ஒரு பட்டியல் இருக்கு. அவற்றில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்தால் , அதற்கான பதில் அடுத்த பக்கமாக வந்து நிற்கும்.
    நீங்கள் கேட்ட பதிலோடு இருக்கும் இந்த புதிய பக்கத்தை பார்த்தால் அப்படியே அசந்து போயிடுவீங்க ! ஏன்னா, நீங்க தேடிய பதிலும் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தேடாத பலவிஷயங்களுக்கான பரிந்துரைகளும் இருக்கும். இந்த பரிந்துரைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால் அந்த வார்த்தை தொடர்பான அநேக பயன்பாடுகள் அத்துபடியாகிவிடும்.


    உதாரணத்துக்கு ஒரு வார்த்தையை தேடிப்பார்ப்போமா ?

    இண்டரியேக்டிவ் ( interactive ) - ’இரண்டு நபர்கள் அல்லது பொருட்கள் பரஸ்பரம் பாதிப்பு கொண்டிருப்பது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம் சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பயன்படுத்தப்பும் சொல்லாகவும் இருப்பதால் அந்த பயன்பாடு பற்றிய பொருளும் இடம்பெற்றுள்ளது.
    சரி, இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைச்சாச்சு. அடுத்து என்ன ?
    இண்டரியேக்டிவ் போலவே வேறு வார்த்தைகள் என்ன என்ன ? இதற்கான எதிர் பதம் என்ன ? அவற்றையும் தேடிப்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போலவே இந்த பக்கத்திலேயே இவற்றுக்கான பரிந்துரைகள் இருக்கு. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் போதும். கம்யூனிகேட்டிங் ( communicating) கொலாப்ரேட்டிங் ( collaborating ) ஷேர்ட் ( shared ) . இவை எல்லாம்
    இண்டரியேக்டிவ் எனும் வார்த்தையின் தோழர்கள். சரி இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது ? அதற்கான உதாரணங்களையும் பார்க்கலாம். இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று சந்தேகமாக இருக்கிறதா ? அதையும் தீர்த்துக்கொள்ளலாம். இப்படி தேடும் சொற்களுக்கான பெயர்சொல் , வினைசொல் போன்றவை இருந்தால் அவற்றையும் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.


    அது மட்டுமா, இண்டரியேக்*ஷனல் , இண்டர்ரியேக்*ஷன்ஸ் போன்ற இண்டர் … என துவங்கும் பிற சொற்களுக்கான அர்த்தம் மற்றும் இதர பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தை தொடர்பான பரிந்துரைகளை பார்த்தாலே புதிய வார்ததைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம். பார்த்தீங்களா? நாம் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தான் தேடினோம், ஆனால் அந்த ஆங்கில வார்த்தை தொடர்பான பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டதுடன் , தொடர்புடைய வேறு வார்த்தைகளையும் தெரிஞ்சுக்க முடியுது. பொதுவா , அகராதிகளிலேயே இந்த வசதிகள் இருக்கும். ஆனா, இந்த இணையதளத்தில் அவை போரடிக்காத வகையில் ரொம்ப எளிமையாக தொகுத்து தந்து இருக்காங்க. ஒரு பொருளை தேடும் போது தொடர்புடைய பயன்பாடுகள் சங்கிலி தொடர் போல கொடுக்கப்பட்டுள்ளதால் , ஆர்வத்தோடு அவற்றை தேடிப்போக தோணும். எதோ வினைச்சொல், பெயர்சொல் தேடிப்போகிறோம் என்ற அலுப்போ , மலைப்போ ஏற்படாது.


    இன்னொரு விஷயம் , இந்த தளத்தின் மூலமே குறிப்பிட்ட வார்ததைகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் கொள்ளலாம். ஆக , ஆங்கில வார்த்தைக்கு இணையான ஜெர்மன் மொழி சொல்லையோ இத்தாலிய மொழி சொல்லையோ தெரிந்து கொள்ளலாம்.


    ஆங்கில பெயர்கள் ,அவற்றின் அர்த்தம், அவை உருவான விதம் என்று இன்னும் ஏகப்பட்ட விஷ்யங்கள் இந்த தளத்தில் இருக்கு. அவற்றை நீங்களே பயன்படுத்தி பாருங்கள் இது தான் தளத்தின் முகவரி; Find Similar or Opposite words at WordHippo.


    உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் இருந்தாலும் சரி , அல்லது ஆங்கிலம் தொடர்பாக அச்சம் இருந்தாலும் சரி இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வத்தை வளர்க்கும். அச்சத்தை போக்கும். சோ, யூஸ் செய்து பாருங்க!.
    சரி, ஆங்கிலம் கற்றுக்கொண்டு களைப்ப் ஏற்ப்பட்டதாக நினைத்தால் வேர்டுவேர்ல்டு (WordWorld | Where Words Come Alive ) தளத்தின் பக்கம் போய பாருங்கள் . ஆன்கில மொழி தொடர்பான பிரபல டீ.வி தொடருக்கான இந்த தளத்தில் வார்த்தைகள் தொடர்பான விளையாட்டுகள், செல்போன் செயலிகள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
    ஆங்கிலம் மட்டும் தானா ? இதோ இந்தி மொழி சொற்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளத்தை முயன்று பாருங்கள்;

    Kids One - eLearning, kids games, learn hindi , learn hindi, learn hindi, learn hindi, kids activities, children songs many more....

    தெலுங்கு ,தமிழும் கூட இந்த தளத்தில் இருக்கு. தமிழ் பகுதி இங்கே :

    Learn Tamil.
    ————-


    நன்றி சுட்டி விகடன்.


    —————-

    jv_66 and naliniselva like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  7. #37
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    மின்னல் அட்டைகள் உங்களுக்கு தெரியுமா?
    -cybersimman


    உங்களுக்கு மின்னல் அட்டைகள் பற்றித் தெரியுமா? அதென்ன மின்னல் அட்டைகள், புதிதாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலத்தில் பிளாஷ் கார்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் மின்னல் அட்டைகளை வாசிப்புத்தோழன் என்று சொல்லலாம். தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் போது சரி , புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது சரி, நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் அட்டைகளை தான் பிளாஷ் கார்ட்ஸ் அதாவது மின்னல் அட்டைகள் என்று சொல்கின்றனர்.

    மின்னல் அட்டைகள் என்பவை சின்ன அட்டைகள் தான். இந்த அட்டைகளில் படித்தவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.

    ஆங்கில பாடம் என்றால் கடினமான சொற்களுக்கான அர்த்தம், அறிவியல் பாடம் என்றால் சம்பாடுகள் , கணிதம் என்றால் சூத்திரங்கள் ஆகியவற்றை இப்படி அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்ளலாம். வரலாறு பாடத்தில் முக்கிய நிகழ்வுகளின் வருடங்களை எழுதி வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டைகள் எளிமையான ஐடியா தான். ஆனால் படித்தவற்றை நினைவில் கொள்ள இவை சிறந்த வழி என்று நினைவாற்றல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

    உங்களுக்கேத்தெரியும் படித்தால் மட்டும் போதாது. படித்தவை நினைவில் இருக்க வேண்டும். இல்லை என்றால் தேர்வு அறையில் அமர்ந்திருக்கும் போது குழம்பி விடுவோம். ஆக, படித்தவற்றை மறக்காமல் இருக்க அவற்றை அவ்வப்போது நினைவு படுத்திப்பார்க்க வேண்டும். இதற்கான எளிய வழி தான் , நினைவில் நிற்க வேண்டியவற்றை அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்வது.

    மின்னல் அட்டைகளின் பின்னே, இடைவெளி விட்டு தொடந்து நினைத்து பார்க்கும் உத்தி இருப்பதாக சொல்கின்றனர். அதாவது ஒரு விஷயத்தை கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது. உட்கார்ந்து மணிக்கணக்கில் மனனம் செய்து கொண்டிருப்பதை விட , இப்படி அழகாக அட்டைகளில் எழுதி வைத்துக்கொண்டு படித்து பார்ப்பதன் மூலம் படித்த விஷயங்கள் காலத்துக்கும் நினைவில் நிற்கும் என்றும் ஊக்கம் தருகின்றனர்.
    அட, நன்றாக இருக்கிறதே நாமும் கூட மின்னல் அட்டைகளை பயன்படுத்திப்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? மின்னல் அட்டைகளை தேடி எங்கும் போக வேண்டாம். இணையத்திலேயே தேவையான மின்னல் அட்டைகளை எளிதில் உருவாக்கி கொள்ளலாம். இதற்கு உதவும் அட்டகாசமான இணையதளங்களில் சிலவற்றை பார்ப்போம்.

    முதலில் கார்ட்விக்கி.காம் (CardKiwi | Create flashcards together with your friends and save a ton of time ! ) .மின்னல் அட்டை உருவாக்க உதவும் இணையதளங்களில் இது தான் மிகவும் எளிதானது. இந்த தளத்தை பயன்படுத்த முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அது எளிதானது தான். உறுப்பினரான பின், நீங்கள் படிக்க விரும்பும் தலைப்பு அல்லது பாடங்களில் இணைய அட்டைகளை உருவாக்கி கொள்ளலாம். அட்டைக்கான தலைப்பை கொடுத்து விட்டு , ஒரு பக்கத்தில் கேள்வி அல்லது குறிப்பை எழுது விட்டு மறு பக்கத்தில் அதற்கான பதிலை எழுத வேண்டும். இப்படி வரிசையாக எத்தனை கார்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். இந்த கார்டுகளை கொஞ்சம் இடைவெளி விட்டு கிளிக் செய்து பார்த்து ,குறித்து வைத்தவை நினைவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் இப்படி அட்டைகள் மூலம் பார்க்கும் போது தானாக மனதில் பதிந்து விடும் என்கின்றனர். நீங்களே பயன்படுத்திப்பாருங்கள் தெரியும்!

    மின்னல் அட்டைகளை பயன்படுத்தும் முறைப்பற்றி இந்த தளத்திலேயே அழகான வீடியோ விளக்கமும் இருக்கிறது. இந்த தளத்தில் கூடுதல் விஷேசம் என்ன என்றால் , நீங்கள் உருவாக்கிய அட்டைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது , அவை எந்த அளவுக்கு நினைவில் இருக்கிறது என்பதையும் நீங்கள் குறிப்பிடலாம். இதற்காகவே கட்டை விரலை உயர்த்தும் அல்லது கீழே காட்டும் வகையிலான செய்கை குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்யலாம். ஆக அடுத்த முறை நீங்கள் படிக்க வரும் போது , இந்த தளமே , உங்களுக்கு அதிகம் நினவில் இல்லாத அட்டைகளை முதலில் காட்டும்.

    நீங்கள் உருவாக்கி அட்டைகளை நண்பர்களோடும் இனையம் வழியே பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நண்பர்களிடையே கூட்டு வாசிப்பும் சாத்தியமாகும். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய இணையதளம் இது.
    கிராம்.காம் (Cram.com: Create and Share Online Flashcards ) இணையதளமும் இதே போலவே மின்னல் அட்டைகள் மூலம் படிக்க கைகொடுக்கிறது. ஆனால் கார்ட்விக்கிவியை விட இந்த தளம் விரிவான வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த தளத்தில் நீங்கள் மின்னல் அட்டைகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதோடு மற்ற உறுப்பினர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள அட்டைகளையும் பார்த்து பயன்படுத்துக்கொள்ளலாம். சும்மாயில்லை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னல் அட்டைகளை உருவாக்கி உள்ளனர். இந்த அட்டைகள் , மொழி, தேர்வு, கம்ப்யூட்டர், மருத்துவம், பொது அறிவு என பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தலைப்பை கிளிக் செய்து அதில் உள்ள அட்டைகளில் பிடித்தவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

    நாமே அட்டைகளை உருவாக்கும் போது விரிவான வசதிகள் இருக்கின்றன. தலைப்பு மற்றும் பாடத்தை தனியே குறிப்பிட்டு அவற்றுக்கான விளக்கத்தையும் எழுதலாம். புகைப்படங்கள் மற்றும் ஆடியோ கோப்பை சேர்க்கும் வசதியும் இருக்கிறது. மூன்று பக்க அட்டைகளையும் கூட உருவாக்கி கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் இந்த அட்டைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படும் செயலி வடிவமும் இருக்கிறது. பொது நுழைவுத்தேர்வு தொடர்பான இணைய அட்டைகள் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

    கிளாஸ்மிண்ட் ( https://www.classmint.com/) இணையதளமும் மின்னல் அட்டைகளை தயாரித்து கொள்ள உதவுகிறது. ஸ்டடி ஸ்டாக் (Free Flashcards) தளத்தையும் முயன்று பார்க்கலாம் . இந்த தளம் எண்ணற்ற தலைப்புகளில் மின்னல் அட்டைகளை வழங்குகிறது. பள்ளி தேர்வுக்கு தயாராகும் போதும் இந்த அட்டைகளை பயன்படுத்தலாம். தேர்வு முடிந்து விடுமுறையில் நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகவும் இவற்றை பயன்படுத்தலாம். புதிய மொழி போன்றவற்றை கற்றுக்கொள்ளவும் இவை கைகொடுக்கும். பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம், கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தலாம்.

    நன்றி;சுட்டி விகடன்

    Last edited by silentsounds; 7th Apr 2014 at 10:53 PM.
    naliniselva likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #38
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    very useful info anna ...Thanks for sharing



    நளினி



  9. #39
    pattuu's Avatar
    pattuu is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    134

    Re: Websites for Kids - குழந்தைகளுக்கான இணையதளங்கள்!

    dear all

    very informative share

    Mallee1974 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter