அதிக அக்கறையால் அபாயம்!
Discuss here on அதிக அக்கறையால் அபாயம்! within the Schooler forums, part of the Parenting forum; குழந்தைகளை கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொள்ளும் `அதிக அக்கறை' பெற்றோரால் அக்குழந்தைகளுக்கு அபாயம்தான் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் ...
-
7th Oct 2011, 10:53 PM #1
அதிக அக்கறையால் அபாயம்!
குழந்தைகளை கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொள்ளும் `அதிக அக்கறை' பெற்றோரால் அக்குழந்தைகளுக்கு அபாயம்தான் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் கருதி விளையாடாமல் தடுப்பதால், அவர்களின் எடை கூடும் அபாயம் அதிகரிக்கிறதாம்.
இதுதொடர்பான ஆய்வை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள், பூங்காவுக்கு வரும் குடும்பங்களைக் கவனித்தனர். அப்போது, அதிஅக்கறை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதிகம் ஓடியாடாமல், விளையாட்டு அமைப்புகளில் ஏறி விளையாடாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைகள் இயல்பாக விளையாடுவதைத் தடுத்த இந்தப் பெற்றோர், அவர்களை பெஞ்சுகளில் உட்கார வைப்பதில் கவனமாக இருந்தனர். இத்தகைய தாய்- தந்தையரை `ஹெலிகாப்டர் பெற்றோர்' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
``இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகக் கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தைகள் தங்கள் சமவயது நண்பர்கள், அண்டை அயலாருடன் விளையாடும் வாய்ப்புக் குறைகிறது. தொலைக்காட்சி அல்லது கணினி முன்னிலையிலேயே உட்கார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கிறது'' என்கிறார், ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேசன் பொக்காரோ.
இவர்கள் அமெரிக்காவில் 20 பூங்காக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். அங்கு வந்துள்ள குழந்தைகளை, விளையாடாமல் `தேமே' என்று உட்கார்ந்திருப்பவை, ஓரளவு ஓடியாடுபவை, ரொம்பத் தீவிரமாக விளையாடுபவை என்று பிரித்தார்கள்.
தங்கள் ஆய்வின் அடிப்படையில், பொதுப் பூங்கா அமைப்பை வடிவமைக்கலாம், அதன் மூலம் பெற்றோரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் குழந்தைகளை நெருங்க முடியாமல், அமர்ந்து கண்காணிக்கும் வகையில் செய்யலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
-senthilvayal
with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
-
7th Oct 2011, 11:27 PM #2
Re: அதிக அக்கறையால் அபாயம்!
அதிக அன்பும் ஆபத்து தான் என்று கூறும் நல்ல கருத்துள்ள கட்டுரை
With Regards
Yamini
Expectation is the only devil which smiles at you when you feed it daily!
http://www.penmai.com/forums/poems/6567-a.html
Similar Threads
-
இணைய பக்கங்களை ஓர் அழகிய pdf பைலாக மாற்றி...
By silentsounds in forum ComputerReplies: 6Last Post: 25th Jan 2012, 11:27 AM -
தாஜ்மஹாலின் அறியப்படாத உண்மை கதை
By Nishahameetha in forum Stories & NovelsReplies: 12Last Post: 14th Nov 2011, 07:13 PM -
மயக்கம் வந்தால் ஏற்படும் அறிகுறிகள்!
By silentsounds in forum General DiscussionsReplies: 1Last Post: 24th Sep 2011, 03:57 PM -
ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 19th Aug 2011, 09:14 AM -
அன்றாட வாழ்க்கையில் ஆரவாரங்கள் அதிகரிக
By silentsounds in forum PoemsReplies: 1Last Post: 18th Jun 2011, 10:19 PM


2Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks