குழந்தைகளும் கல்வியும்
Discuss here on குழந்தைகளும் கல்வியும் within the Schooler forums, part of the Parenting forum; 1. பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. 2. பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க ...
-
27th Oct 2011, 08:19 PM #1
குழந்தைகளும் கல்வியும்
1. பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
2. பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.
3.பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
4. கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே,பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.
5."காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.
6.அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
7.பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், ஷ¥ எங்கே பாக்ஸ் எங்கே என்று பதட்டப்படத் தேவையில்லை.
8. மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.
9. நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.
10.குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.
சுமதி ஸ்ரீனி
Similar Threads
-
குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முற
By sumathisrini in forum New Born BabyReplies: 6Last Post: 14th Nov 2011, 10:31 PM -
குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்
By sumathisrini in forum Health and Kids FoodReplies: 0Last Post: 27th Oct 2011, 07:59 PM -
குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்ச
By silentsounds in forum SchoolerReplies: 5Last Post: 23rd Aug 2011, 12:58 PM -
குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான நேரம் எ
By Kavibhanu in forum PreschoolerReplies: 0Last Post: 28th Jul 2011, 02:41 PM -
குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் &
By silentsounds in forum PreschoolerReplies: 0Last Post: 23rd Jul 2011, 02:33 AM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks