குழந்தைகளின் வெற்றி-தோல்வி
Discuss here on குழந்தைகளின் வெற்றி-தோல்வி within the Schooler forums, part of the Parenting forum; 1.பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள்.அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள். 2.பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் ...
-
27th Oct 2011, 08:22 PM #1
குழந்தைகளின் வெற்றி-தோல்வி
1.பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள்.அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.
2.பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.
3.பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்ளுவார்கள்.
4.வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
5.பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6.பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.
7.குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.
8. ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.
9. நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
10. குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டும்.
சுமதி ஸ்ரீனி
Similar Threads
-
குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை:
By sumathisrini in forum Infertility & TreatmentsReplies: 2Last Post: 8th Oct 2011, 07:46 PM -
சிறந்த 100 வர்த்தக நிறுவனங்களில் கோ*கோ கோலா
By sudhar in forum General DiscussionsReplies: 0Last Post: 5th Oct 2011, 04:28 PM -
வெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 26th Aug 2011, 11:30 PM -
வெற்றிக்கு ஒரு புத்தகம் - சந்தோஷ வழி...
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 25th Aug 2011, 08:53 AM -
காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!
By gulf.rajesh in forum SpiritualityReplies: 2Last Post: 16th Aug 2011, 01:10 PM


2Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks