Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree286Likes

இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha


Discussions on "இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha" in "Serial Stories" forum.


  1. #11
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha

    "நடிக்க வேண்டாம் தீபன். உன்னைப் பழி வாங்கவே அவனை வளர்த்தேன் .. உனக்கு தெரியாதா என்ன? சொன்னதை கச்சிதமா செய்து இருக்கிறான் எத்தனை சமர்த்தியமா காயை நகர்த்தி இருக்கான் பார்த்தாயா ? உனக்கு மட்டும் தான் நகமும் சதையுமாக பழகி ஏமாற்ற தெரியுமா? எல்லாம் உன்னிடம் கத்துக் கொண்ட வித்தை தான்.

    இத்தனை வருடம் கழித்து பழி வாங்கும் படலம் நிறைவடைந்து இருக்கு. நீ தொடங்கி வைத்தாய்! உன் மகளை வைத்து முடித்து இருக்கேன். நான் அனுப்பும் புகைப்படம் தெளிவா இருக்கா, ஆடியோ கிளியரா இருக்கா பார்த்து சொல்லு

    அமித் விஷ்வா இப்படி என்று அவரால் துளி கூட நம்ப முடியவில்லை. சீனி மீது கோபம் போய் அமித் மீது திரும்பியது.

    தீபன் சீனிவாசனிடம் பேசியபடி அடுத்த லைனில் யாருக்கோ அவசரமா மெசஜ் அனுப்பினார்..

    தீபன் கோபமாக உன்னுடன் பழகிய தோஷத்துக்காக என்றாவது நீ திருந்த மாட்டீயா காத்துக் கொண்டு இருந்தேன். அது தப்பு இப்ப உணர்ந்துவிட்டேன். என் சம்யுக்கு எதாவது ஒன்று என்றால். உன் சாவும் ,உன் மகன் சாவும் என் கையில் தான். இத்தனை வருடமாக நான் செய்யாத பாவத்துக்கு எங்களை கொள்ளாமல் கொன்றாய்! உன்னால் ரொம்ப அனுபவித்துவிட்டேன். இனி, உன்னை வெட்டி புதைத்து விட்டு சந்தோஷமாக ஜெயிலுக்கு போக கூட தயங்கமாட்டேன்.

    சீனிவாசன் சொன்னதை கேட்டதில் இருந்து உள்ளம் நடுங்கினாலும் மகள் எங்கயோ நலமாக இருக்கிறாள் அசைக்க முடியாத நம்பிக்கை. சம்யுக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை.

    அமித்துக்கு அழைக்க ரிங் போக அவனும் எடுக்கவில்லை.

    கயல், நாங்க மட்டும் இருக்கிறோம். எங்களுடன் அவள் வரவில்லை சொல்லிட்டா அங்கிள் .. நான் திரும்பறேன் . இப்பவே பார்த்துவிட்டு கூப்பிடறேன் சொல்ல அவருக்கு பயம் பிடிக்க தொடங்கியது . உடனே தாமதிக்கமால் கிளம்பிவிட்டார்.


    சீனிவாசனின் ஒவ்வொரு அசைவையும் அமித் விஷ்வா கண்காணித்துக் கொண்டு இருக்க, சினேகாவை பற்றி , அவளுடைய குறுக்கு புத்தியை பற்றி யோசிக்க தவறினான். அவளால் சம்யுக்தாவிற்கு ஆபத்து வரும் துளி கூட நினைக்கவில்லை.

    அங்கு இருந்த ஒரு சிலர் கூறியதை அடுத்து, அமித் விஷ்வா சந்தேகத்தின் அடிப்படையில், போலீஸ் போர்ஸ் மூலம் துரிதமாக செயல் படத் தொடங்கினான் . எதுக்கு, ஏன் அந்த இடத்திற்கு சென்றால் என்ற கேள்வியே அவன் தலையை வெடிக்கச் செய்தது.

    மீட்டிங் ஹாலில் தீபனுடன் இருந்த மகன் விநோதனுக்கு, தங்கை சம்யுக்தா ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் மட்டும் புரிந்தது. அவன் தோண்டி துருவ அவர் கூறியதைக் கேட்டு ரத்தம் கொதித்தது. இப்போதைக்கு ஆத்திரப்படுவது புத்திசாலித்தனம் இல்லை எதையும் பொறுமையாக தான் கையாளனும் அவன் அப்பாவை சமாதானப்படுத்தினான்.

    தீபன் சக்கரவர்த்தி தொடர்ந்து அழைக்க அமித் எடுத்தவுடன் அடப்பாவி, ஒன்றும் அறியாத என் மகளை கொன்னுடீங்களே! நீ அந்த எஸ். வி பையன் எனக்கு தெரியாமல் போய்டுச்சே! நடித்து ஏமாற்றிவிட்டீர்களே! திருடன் கையிலே சாவி கொடுத்ததை போல ஆசையாக வளர்த்த மகளை உன்னிடமே ஒப்படைத்து இருக்கிறேனே! நேரில் வந்து



    Sponsored Links

  2. #12
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha



    உங்களை கண்டம் துண்டம் ஆக்கிறேன். என் மக எனக்கு உயிரோட கிடைக்கவில்லை நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாதுநம்ப வைத்து கழுத்தறுத்த துரோகி ! தைரியம் இருந்தா உண்மையை சொல்லி நேருக்கு நேர் மோதி இருக்கனும். அதை விட்டு நல்லவன் போல நடித்து, சூழ்ச்சி செய்து ஏமாற்றிவிட்டாயே! நானே என் மகளை புதைகுழியில் தள்ளிவிட்டேனே! அச்சோ சம்யு , என்னை மன்னிச்சுடு டா

    தீபன் கத்த விஷ்வாக்கு ஒன்றும் புரியவில்லை. 'சம்யுக்கு என்ன ஆச்சு? எதற்கு இப்படி பதறுகிறார் . இவருக்கு நான் சீனிவாசன் மகன் எப்படி தெரிந்தது அவன் பெரிய தந்தை சீனிவாசன் குள்ளநரித்தனம் அவனுக்கு தெளிவா தெரியும். கண்டிப்பா அவர் இவருக்கு சொல்ல வாய்ப்பு இல்லை நம்பினான். வெங்கி எதாவது உளறிவிட்டாரா? எங்க கல்யாணம் முடியும் வரை உண்மை தெரியக்கூடாது நினைத்து இருந்தேனே! '

    அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி நீங்க நினைப்பது போல எல்லாம் ஒன்றும் இல்லை, என்னை விட்டு எங்கேயும் போக மாட்டா, அவளை கண்டு பிடித்து உடனே அழைக்கிறேன் . அவ என் உயிர் மாமா. இங்க தான் இருப்பா? " என்று அவருக்கு சொல்வது போல அவனுக்கு சொல்லிக் கொண்டான்.

    என் மகளை சொந்தம் கொண்டாடுவதை நிறுத்து . என் மக சம்யு எனக்கு கிடைத்தாலும் உனக்கு கிடைக்கமாட்டா .... உலகமே ஒன்று கூடி வந்தாலும் உங்க திருமணம் நடக்காது. ஒத்துக் கொள்ளவே மாட்டேன் . இத்தனை தூரம் ஆன பிறகு அந்த சீனியை ஒரு போதும் ஜெயிக்க விட போவது இல்லை. என் மக துடிப்பதை பார்த்து நல்லா சந்தோஷப்படு. அப்பவாது உங்க மனம் சாந்தி அடையுதா பாருங்க.... அவர் குரல் உடைந்தது.

    இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த விநோதன் உள்ளுக்குள் கலங்கினாலும் அதை மறைத்து, தந்தைக்கு தைரியம் கொடுக்கும் படி அவர் கையை அழுத்தி 'ஒன்றும் நடந்து இருக்காது அப்பா, கொஞ்சம் தைரியமா இருங்க. நல்லதே நினைப்போம்' சமாதானம் செய்தான்.

    ஊரில் இருக்கும் தீபன், எதை வைத்து இப்படி பேசறாரு குழப்பம் அடைந்தாலும், போலீஸ் மூளை பல கோணத்தில் செயல் பட கொஞ்சம் நடுங்கித்தான் போனான் . என் சம்யுக்தாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை பல தடவை சொல்லிக் கொண்டான்.

    மாமா ப்ளீஸ் ,கொஞ்சம் பொறுமையா...... என்று அமித் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் போதும் நிறுத்து, என்னை ஏமாற்றியது போதும், அப்பனும் மகனும் என் கண் முன்னால் வந்தீங்க என்றால் என் துப்பாக்கி பேசும் ஆத்திரத்தில் கத்த

    அவரிடம் இருந்து போனை வாங்கிய விநோதன் அழுத்தமாக வாக்குவாதம் வேண்டாம் விஷ்வா, ப்ளீஸ், இப்போதைக்கு என் தங்கை தான் முக்கியம். எங்களுக்கு எங்க சம்யு உயிரோட வேண்டும். சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்க.

    எங்களுக்கு நிச்சயம் முடிந்ததை அடுத்து , சம்யு எனக்கு மட்டுமே சொந்தமானவள் , உங்களை விட எனக்கு தான் உரிமை அதிகம் கத்த வேண்டும் தோன்றினாலும் அதை அடக்கி அமைதி காத்தான்.

    தீபன் அனுப்பின வீடியோவில் சம்யுக்தா கதறலை கேட்க விஷ்வா உடல் நடுங்கியது. எத்தனை ஜாக்கிரதையாக இருக்க சொன்னேன் கண்ணம்மா... கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தோட அப்படியே சரிந்து அமர்ந்தான் . அவன் அவளை உயிராக காதலித்ததை தவிர வேற எதுவும் செய்யவில்லையே!

    ********



    அன்புடன்
    மதி பிரபா.


    Nothing is impossible, the word itself says 'I'm possible'!

  3. #13
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha



    சினேகா மிகவும் சந்தோஷமாக இருக்க, அவள் அண்ணன் ராகுல் நீ நினைத்ததை முடித்து விட்டாய் போல! இனி உன் ரூட் கிளியர் தான? அடுத்த மாதத்திலே கல்யாணம் . பத்திரிகை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தாச்சு. நிறையா வேலை இருக்கு. உனக்கு புடவை எடுக்கணும் , வேண்டும் என்கிறதை எல்லாம் வாங்கணும். அம்மாவும் நீயும் லிஸ்ட் போடு, எல்லாத்தையும் வாங்கிடலாம்.


    துர்கா, சம்மந்தி என்ற முறையில் தேனியில் இருக்கும் காயத்ரியிடம் பேச காயத்ரி, இவங்களுக்கு எல்லாம் நாம இருக்கிறது இப்ப தான் கண்ணனுக்கு தெரியுது நொடித்துக் கொண்டாள்.

    உங்க மருமகளிடம் பேசுங்க சொல்லி சினேகா கையில் போனை திணிக்க

    என்ன அம்மா இது? நான் எப்படியும் அங்கு போய் வாழ போறது இல்லை, அப்புறம் என்ன? பேசணும் அவசியமே இல்லை


    எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்லறேன்! பேசு துர்கா பல்லைக் கடிக்க அந்த பட்டிக்காட்டு மனிதர்களிடம் என்ன பேச? என்னால் முடியாது அம்மா! கல்யாணமே இங்க வைக்க சொல்லறேன், அங்க தான் அங்கிள் பிடிவாதமா இருக்கிறாரு! அந்த ஊரில் பை ஸ்டார் ஹோட்டல் கூட இல்லை..

    போன முறை கோகிலா அத்தை வீட்டுக்கு வந்திருந்த போது அவர்களை எல்லாம் பார்த்தேனே! அந்த அம்மா காயத்ரி நான் போட்டு இருந்த டிரஸ் பார்த்து இது எல்லாம் துனியா மேலும் கீழும் பார்வை. முடியை முடிந்தால் என்ன?

    பிடாரி போல விரித்து விட்டு என்ன கோலம் நக்கலா கேட்குது. கண்ட்ரி பெல்லோஸ் .... அந்த பெண் ராதிகா, பெரிய அழகி என்று என் அண்ணாவை வேண்டாம் சொன்னவ தான ... என் கல்யாணம் பிறகு பார்த்துக்கிறேன்...

    காயத்ரி , சம்யுக்தா எதுக்கு அங்க போனா குழம்பி, ஒரு வேளை அமித், கோகிலா அக்காவை பார்க்க அழைத்து சென்று இருப்பானோ? அப்படி தான் முடிவுக்கு வந்தாள்.

    துர்கா மியூட் பட்டனை ஒழுங்கா அழுத்தாமல் போக, சினேகா பேசின அனைத்தையும் காயத்ரி கேட்டுவிட்டாள்.

    அவர்களை பேசிவிட்டால் என்ற கோபத்தில் காயத்ரி கனன்று கொண்டு இருக்க, சினேகா பேசின மற்ற எல்லாம் பின்னுக்கு போனது .

    சினேகா பேச பேச காயத்ரி மனதில் எரிமலை வெடித்துக் கொண்டு இருந்தது.

    இந்த சம்யுக்தா சரியான அடங்கா பிடாரியா இருப்பா போல! யாரை பார்த்து பட்டிக்காடு சொல்லறா? எனக்கு மட்டும் இவ மருமகளா வரட்டும், நாக்கை இழுத்து வைத்து அறுத்து , கை, காலை உடைத்து அடுப்பில் போடறேன், குடலை உருவி மாலையா போட்டுக்கிறேன் மனதில் கருவிக் கொண்டாள்.

    சினேகா எடுத்தவுடன் தேனியில் இருக்கும் சொத்து, வருமானம், அங்குள்ள கார், நிலம், வீடு பற்றி கேட்க, வாடி அம்மா மகராசி , இதுக்கு தான் ஆள் இல்லை நினைத்தேன். உனக்கு கொடுக்க தான் என் புருஷன் சம்பாதித்து மூட்டை கட்டி வைத்து இருக்கிறார் நினைத்தை சொல்லாமல் திட்டி தீர்த்தாள்.

    துர்கா, மகளை பற்றி தெரிந்தும் ஏன் போனை கொடுத்தேன் நொந்து கொண்டாள். பேசாமல் அமைதியா இரு செய்கை செய்ததை கண்டுகொள்ளாமல்
    என்ன தான் அமித்தை நீங்க தத்து கொடுத்தாலும் உங்க சொத்தில் அவனுக்கு பங்கு கொடுப்பீங்க தான?அது எப்படி கொடுக்காமல் போவீங்க! சொத்து எல்லாம் பூர்வீக, பரம்பரை சொத்து தான? மூன்று பங்கு தான?

    உங்க மகளுக்கு சிறப்பா கல்யாணம் முடித்து, நகை , அது, இது என்று செய்து இருப்பீங்க ...அதுக்கு எல்லாம் கணக்கு சரியாகிவிடும். எல்லாத்திலேயும் தெளிவா இருப்பது தப்பு இல்லை சொல்ல காயத்ரி கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.






  4. #14
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha

    இந்த பெண் சம்யுக்தா பணப்பேயா இருப்பா போல ! நாளைக்கு இவளிடம் நோய் என்று போகிறவர்களிடம் சொத்தை வாங்கிவிட்டு தான் வைத்தியம் பார்ப்ப போல?

    அவ அப்பாக்கு எத்தனை சொத்து இருந்தும் என்ன பிரயோஜனம். இப்படி பட்ட மருமக வேண்டாம் தான சாமியை வேண்டிக் கொண்டு இருந்தேன் . வீட்டுக்கு வருவதற்கு முன்பே சொத்தை பிரிக்க திட்டம் போடுறாளே! என் மகளுக்கு செய்வது எங்க இஷ்டம். இவ யார் அதில் தலையிட?

    சினேகா பேசிய பேச்சில் , தேவையில்லாமல் சம்யுக்தா மீது கோபம் வளர தொடங்கியது.

    சினேகா பேசிக் கொண்டே போக "அடியே வித்தாரக்கள்ளி, இப்ப சொல்லறேன் நல்லா கேட்டுக்கோ, நீ தலை கீழா தொங்கினாலும் என் மகன் உனக்கு கிடையாது. உன்னால் முடிந்ததை செய்துக் கொள்! என்ன கொழுப்பு இருந்தா என்னிடமே இப்படி பேசுவ? யார் வீட்டு சொத்தை யாரு பங்கு போட? தப்பி தவறி கண் முன்னாள் வந்திடாத? கொலை காரி ஆகிடுவேன்.

    நடுத்தெருவுவில் நிற்க வைத்து நாலு சாத்து சாத்தினால் தான் என் மனம் ஆறும் " பேச சினேகா கொதிப்பாக "என்னை தவிர உன் மகன் யார் கழுத்திலாவது தாலி கட்டட்டும், முதலில் உன்னை போடறேன்.. நீயா நானா பார்த்துடலாம்."


    சினேகா பேசியதை அடுத்து, காயத்ரி கல்யாணத்தை நிறுத்துங்க, என் மகனிடம் நான் பேசிக்கிறேன் என்று கொஞ்ச நாளா நிறுத்தி இருந்த புலம்பலை மறுபடியும் தொடங்கிவிட்டாள். இப்பவே இந்த பேச்சு பேசறாளே, நாளைக்கு குடும்பத்திற்குள் நுழைந்து விட்டால்? விஷ்வா போன்ற பையனுக்கு இப்படி பட்ட பெண் மனைவியா வருவதா ? கல்யாணத்தை எப்படி தடுத்து நிறுத்த தான் காயத்ரி முழு நேர யோசனையே!


    ராதிகாவிடம் புலம்ப 'கண்டிப்பா நம்ம சம்யு அண்ணி அப்படி பேசி இருக்க மாட்டாங்க' அடித்துக் கூறினாள். முதலில் பிடிக்காமல் போனாலும் அண்ணனுக்காக ஓரிரு முறை பேசி இருக்காளே!

    காயத்ரி அழுகுரலில் நான் பொய் சொல்வேனா ! நான் சொல்வது எல்லாம் சாத்தியமான உண்மை' சொல்ல அவள் அன்னையை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை .


    *********

    சம்யுக்தா வகுப்பு தோழன் ராஜன், சினேகாவை தேடி ரிசார்டுக்கு வர , அவளை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. அவள் வெளியே கிளம்பும் வரை காத்துக் கொண்டு இருக்க சினேகா அவனை எடை போட்ட படி, எனக்கு பார்ட்டிக்கு டைம் ஆச்சு ,வண்டியில் ஏறு! போகும் போது பேசிக்கலாம்.


    வண்டியில் நீ யார் என்றே எனக்கு தெரியாது! என்ன விஷயமா வந்த? பத்திரிகை ஆளா ,டொனேஷனா ...

    ராஜன் நன்றாக சாய்ந்து அமர்ந்து கூலர்ஸை கழட்டி டொனேஷனா? எனக்கா? நக்கலாக சிரித்து எனக்கு உன் சொத்து முழுதும் வேண்டும்.

    வாட்.. என் சொத்தா? நல்ல ஜோக்! மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்து நேரா வந்துவிட்டாயா ? சிரிக்க தொடங்க ராஜன் எரிச்சலுற்றான்.







  5. #15
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha




    அவனை கிண்டல் செய்த அவளை பார்த்து கோபமாக நிறுத்து... சொத்து கொடுக்க மாட்டேன் என்றால் என்னை கட்டிக்கோ ! அப்ப அந்த சொத்து என்னுடையதாகுமே..

    சம்யுக்தாவை தள்ளி விட்ட காட்சியை அவன் செல் போனில் பார்க்க அவளுக்கு அதிர்ச்சி.

    இதை எல்லாம் அமித் விஷ்வாவிடம் காட்டினா உன் கல்யாண கனவு என்ன ஆகும் யோசித்து பாரு ! நீயே முடிவு செய்துக்கோ?

    அவன் காட்டிய பதிவைக் கண்டு கொஞ்சம் திணறித்தான் போனாள்.

    ... நானே என் தந்தை அலுவலகத்தில் வேலை செய்கிறேன். இதில் சொத்துக்கு எங்க போக?

    என்னை அத்தனை ஏமாளி என்றா நினைத்தாய் மனதில் சிரித்து உன் பாட்டி சொத்து முழுதும் உன் பேரில் தான் இருக்கு எனக்கு தெரியும்...


    இவன் எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு தான் மிரட்டறான். இவனை அத்தனை சீக்கிரம் ஏமாற்ற முடியாது போல உணர்ந்து, அத்தனை நேரம் இருந்த விளையாட்டுத்தனம் மாறி அவனிடம் பேரம் பேச ஆரம்பித்தாள்.



    ********



    அமித் விஷ்வா கல்யாண முன்தினம் அவன் ஊர் தேனியில் பெண் வீட்டுக்காரங்க, கல்யாண பெண் எல்லாரும் வந்தாச்சு, ஆரத்தி எடுத்திட்டு வாங்க குரல் வர காயத்ரி அதை எல்லாம் கண்டும் காணாமல் அமர்ந்து கொண்டு இருந்தாள்.

    இதை பார்த்த கோகிலாக்கு கோபம் வர யார் வரவில்லை என்றாலும் என் மகனுக்கு நான் இருக்கேன், மருமகளுக்கு நானே முன் நின்று ஆர்த்தி எடுக்கிறேன் என்று அவர்களை சந்தோஷமாக வரவேற்றாள் .

    மணப்பெண் முகத்தை தவிர ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் என்பதே இல்லை வெங்கி கண்டு கொண்டார். நாம நினைத்தது எல்லாம் நடந்துவிடுகிறதா பெருமூச்சு விட்டபடி அவர்களுக்கான இடத்தில் தங்க வைத்தார்.

    கல்யாண தினத்தன்று எட்டுப்பட்டி சனங்களும் அங்கு தான் . வெங்கி அவர் மகன்கள் தேவேந்திரன் , ராஜேந்திரன் அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டு வேலை செய்து கொண்டு இருக்க, காயத்ரியும் ,ராதிகாவும் எதிலேயும் கலந்து கொள்ளாமல் அழுத்தமாக இருந்தார்கள்.


    காயத்ரி வெங்கியிடம் நான் சொன்னதை மீறி அந்த வீட்டில் தான் பெண் எடுக்கணுமா? உங்க அண்ணி நினைத்ததை சாதித்துக் கொண்டாங்க. என் சனத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவங்க தான் முன் நின்று எல்லாத்தையும் செய்யறாங்க! இதற்கா பத்து மாதம் சுமந்து பெற்றேன்

    சொல்ல வெங்கி முறைத்தபடி உன்னுடைய உரிமையை யாரும் தட்டி பறிக்கவில்லை, நீயே தட்டிவிடுகிறாய்.

    இது விஷயமா மனைவியிடம் பலமுறை பேசி அலுத்துவிட்ட வெங்கி, மகள் ராதிகாவிடம் ராதிகா, நீ செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை. என்ன இருந்தாலும் உன் அண்ணன் கல்யாணம், நீயும் இப்படி இருந்தா அவன் மனம் வருதப்படாதா அதட்ட மனம் இல்லாமல் நகர்ந்தாள் .






  6. #16
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha



    ராதுவை எதுக்கு மிரட்டறீங்க ? என் மகன் முகத்தில் கொஞ்சமாவது சந்தோசம் இருக்கா? அவனுக்கு பிடிக்காத கல்யாண பந்தத்தில் எதற்கு சிக்கி தவிக்கணும். எல்லாரும் விவரமானவங்க தான் . அவங்கவங்க நினைத்ததை சாதித்துக் கொள்ளறாங்க!

    அவனுக்கு பிடிக்கவில்லை உன்னிடம் சொன்னானா? இப்ப அப்படி தான் இருக்கும், எல்லாம் போக போக சரியாகிவிடும். அண்ணிக்காக ஒத்துக் கொண்டு தான் ஆகணும்.


    முகூர்த்த வேளையில் ஐயர் " நாழி ஆகுது ,பெண்ணை அழைத்து வாங்கோ" சொல்ல விஷ்வா உடல் இறுகி சிலை என அமர்ந்து இருந்தான்.

    மணப்பெண் அழகோவியமாக, வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல அடி மேல் அடி வைத்து அன்ன நடை நடந்து வர, சுற்றி இருந்தவர்கள் அவள் அழகை புகழ் பாட, அவள் ஆசையாக விஷ்வா முகத்தை ஏறிட அவன் உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்து அவள் சிரிப்பும் மறைந்தது.


    அவள் புருவத்தை உயர்த்தி கண்களில் திமிராக நான் நினைத்தது தான் நடந்து இருக்கு பார்த்தாயா? உன்னால் என்ன செய்ய முடிந்தது . ஆயுசுக்கும் உனக்கு இந்த தண்டனை அவசியம்" முகத்தை சந்தோஷமாக வைத்து அவனருகே சென்றாள்.


    தொடரும்.






  7. #17
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha

    Hi friends

    வணக்கம் மக்களே

    "இதயத்தை ஏதோ ஒன்று.........!!! 6"By மதிபிரபா.

    அடுத்த அத்தியாயம் போஸ்ட் செய்தாச்சு மக்களே ! போன பதிவுக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி..... நன்றி ....


    சீக்கிரம் உங்கள் கமெண்ட்ஸ் பதில் அளிக்க வருகிறேன். அதே போல நீங்க கதையை படித்து கருத்தை சொல்ல ஓடி வாங்க பார்க்கலாம் .......


    Please drop your valuable comments in link below

    இதயத்தை ஏதோ ஒன்று….!!! Comments


    Aini, sucharitha, sv_pn and 5 others like this.

    அன்புடன்
    மதி பிரபா.


    Nothing is impossible, the word itself says 'I'm possible'!

  8. #18
    Prabha_Chandru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    chennai
    Posts
    2,560

    Re: இதயத்தை ஏதோ ஒன்று......!!! Idayathai Yetho Ondru By Mathi Prabha

    Hi friends

    வணக்கம் மக்களே

    "இதயத்தை ஏதோ ஒன்று.........!!! 7"By மதிபிரபா.


    அடுத்த அத்தியாயம் போஸ்ட் செய்தாச்சு மக்களே ! போன பதிவுக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி..... நன்றி ....

    சத்தம் இல்லாமல் படித்துச் செல்லும் மக்களே லைக் பட்டனை லைட்டா தட்டி விடுங்க பாஸ் ....

    உங்கள் கருத்தை ஒரு வரியில்.... வேண்டாமா! ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போனா சந்தோஷப்படுவேன் .



    Please drop your valuable comments in link below

    இதயத்தை ஏதோ ஒன்று….!!! Comments









    kala_sv, Aini, laxmipriya and 17 others like this.

    அன்புடன்
    மதி பிரபா.


    Nothing is impossible, the word itself says 'I'm possible'!

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter