எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்
எண்ணெய்ப்பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு நிறைய பயன்கள் உள்ளன. பொதுவாக எண்ணெய் பசையுள்ள சருமமத்தில் முகப்பருப்பிளவு அதிகம் ஏற்படாது. எண்ணெய் பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு சருமத்தில் வறட்சி ஏற்படாது.

மற்றும் பொதுவாகவே எந்த காலநிலைகளிலும் முகம் பொலிவுற திகழும். இயற்கையாகவே அவர்கள் முகப்பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்..

• எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் எப்போதும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். அதனால் நீங்கள் உங்களது வயதைப் பற்றி கவலையடையவே வேண்டாம்.

• மேக்-கப் செய்யும் போது அதற்கு முன் அது அதிக நேரம் நிலைத்து இருக்க ஆயில் படிமம் இட வேண்டும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அது தேவையே இல்லை மேக்கப் வல்லுனர்களும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மேக்-கப் செய்யவே அதிகம் விரும்புவர்.

• எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடையும் இன்னொரு பயன், உங்களது முக சுருக்கங்களை இது மறைத்துவிடும். உங்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை நிரம்பியிருந்தால், தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். இது எண்ணெய் பசை மிகுதியை கட்டுப்படுத்தும்.

Similar Threads: