Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By saidevi

Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!


Discussions on "Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!" in "Skin Care" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!

    தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!

    சாம்பார், ரசம் என்று நம் சமையலில் ஆட்சி செய்யும் தக்காளி, அழகு விஷயத்திலும் சளைத்ததல்ல.. தன்னுடைய நிறத்தையும் பளபளப்பையும் தன்னை உபயோகிக்கிறவர்களுக்கும் அள்ளித் தரும் அற்புதப் பழம் அது!

    வெயில் காலத்தில், முகத்தில் எண்ணெய் வழியும். அதைத் தவிர்த்து, முகத்தைப் பளிச்சென்று வைத்திருக்கும் மேஜிக் தக்காளியில் உண்டு.

    ஒரு தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்து, மெல்லிய துணியால் வடிகட்டுங்கள். தக்காளி சாறின் அளவுக்கு, காய்ச்சிய ஏடில்லாத பாலை எடுத்து, இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை ஒரு சிறிய கப்பில் எடுத்து, அதில் 3 துளி எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி, குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் கெட்டுப் போகாது. தினமும் பஞ்சில் இந்தக் கலவையைத் தொட்டு, முகத்தில் தடவி கழுவுங்கள். முகம் சூப்பர் சுத்தமாவதுடன் மினுமினுப்பையும் கொடுக்கும்.

    பருக்களால் முகத்தில் குழிகள் விழுந்து கரடு முரடாகக் காட்சியளிக்கிறதா?

    தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ்.. இரண்டையும் சம அளவு கலந்து, முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். மேடு பள்ளங்கள் இல்லாத மென்மையான முகம் உங்கள் வசமாகும்.

    மூக்கின் நுனி மற்றும் ஓரங்களில் கரும்புள்ளிகள் தோன்றி கவலை தருகிறதா? டேக் இட் ஈஸி!

    ஒரு தக்காளியை நறுக்கி, மூக்கின் மேல் நன்றாகத் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து, மிதமான வெந்நீரில் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, தோல் மிருதுவாகி கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

    வெயிலால் கறுத்துப் போன உங்கள் மேனியின் நிறத்தை மீட்க வேண்டுமா?

    ஒரு தக்காளி எடுத்து, தோல் நீக்கி மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சம அளவு வெள்ளரி விதை பவுடரை கலந்து கொள்ளுங்கள். இதை கை, முகம், முதுகு.. என நிறம் மாறிய பகுதிகளில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்து வர.. இழந்த நிறத்தைத் திரும்பவும் பெறலாம்.

    சுட்டெரிக்கும் சூரியனால் கறுத்துப் போன கழுத்துப் பகுதிக்கு தனி சிகிச்சை உண்டு.

    தக்காளி ஜூஸ், வெள்ளரி ஜூஸ்.. இரண்டையும் தலா 2 டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இதைக் கழுத்துப் பகுதியில் நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து பயத்தமாவு (அ) கடலைமாவால் கழுவி வர.. கருமை, கரும்புள்ளிகள் மறைந்து, சங்குக் கழுத்தாக பிரகாசிக்கும் உங்கள் கழுத்து!

    வெயில் காலத்திலும் உங்கள் சருமம் ''குளிர்ச்சி.. குளிர்ச்சி.. கூல்.. கூல்..'' சொல்ல வேண்டுமா?

    தக்காளி ஜூஸ் 6 டீஸ்பூனுடன், 12 டீஸ்பூன் தயிர் கலந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் வைத்திருங்கள். பிறகு, சோப்பு (அ) பயத்தமாவால் தேய்த்துக் குளித்தால் உங்கள் மேனி சொல் லும் ''கூல்.. கூல்..'' என்று.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!-p74b.jpg  
    Mary Daisy and saidevi like this.

  2. #2
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!

    Useful sharing.

    chan likes this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!

    romba useful ah irukum. . . .. .
    summar vara pora time.. useful tip share panirukinga... good. . .


  4. #4
    preetlove is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    India
    Posts
    19

    Re: Beauty benefits of Tomato - தங்கமென மின்ன தக்காளி மேஜிக்!

    Tomato is very beneficial for the open pores of your facial skin. you can apply a tomato mash on your face it will helpful for open pores.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter